இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!

3 posters

Go down

best ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!

Post by sriramanandaguruji Sun Aug 14, 2011 9:17 am

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Home+boy+tamil+nadu
விஞ்ஞானியாக
மாறுவதற்கு வழியிருக்கிறது விமானியாக ஆவதற்கும் மார்க்கம் இருக்கிறது
கணிப்பொறி வல்லுனராக கட்டிட பொறியாளராக மாறுவதற்கும் வழியிருக்கிறது அந்த
வழி எது என எல்லோருக்கும் தெரியும்

ஆனால் நல்லவனாக நாடு போற்றும் உத்தமனாக மனிதர்களில் மாணிக்கமாக வாழ்வதற்கு வழியிருக்கிறதா?


அப்படி இருந்தால் அது நிறைய பேருக்கு தெரியவில்லையே ஏன்? நிறைய பேர் அதை விரும்பி தேடவில்லையே ஏன்?


காரணம் இருக்கிறது ஒரு நீதிபதியாக தொழில் செய்வது வெகு சுலபம் ஆனால்
நீதிபதியாக வாழ்வது மிகவும் கடினம் அதாவது மனிதன் சுலபமானவற்றை சுகமானவற்றை
விரும்புகிறானே தவிர கடினமானவற்றை விரும்புவது இல்லை


நல்லவனாக வாழ்வது மிகவும்
சிரமம் அப்படி வாழ மனதில் துணிச்சலும் வீரமும் எதையும் தாங்கும் தன்மையும்
தேவை இது நிறைய பேரிடம் துளி கூட இல்லை அதனால் தான் நாட்டில் நல்லவர்களை
காண்பது அறிதாக இருக்கிறது

பலர் நல்லவர்களாக இல்லை என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? நான்
நல்லவனாக வாழ வேண்டும் அதற்கு என்ன வழி இருக்கிறது என்று சிலருக்கு கேள்வி
கேட்க தோன்றும்



நல்லவனாக வாழ்வதற்கு மாறுவதற்கு பல வழிகள் இல்லை ஒரே ஒரு வழிதான்
இருக்கிறது நமது இதயத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் அல்லது தூய்மை
படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்


இன்றைய மனித இதயங்கள் பல அழுக்கடைந்து கிடக்கின்றது இப்படி சொல்லுவது கூட
தவறுதலாக இருக்கலாம் இன்று மட்டும் அல்ல என்றுமே மனித இதயங்களில் பல
அழுக்காக தான் இருந்திருக்கிறது இருந்தும் வருகிறது


உள்ளத்தில் தூய்மை இல்லாதது தான் ஒவ்வொரு மனிதனும் சோகத்தை அனுபவிக்க காரணமாக இருக்கிறது



இந்த மன அழுக்கே சமூதாயத்தில் பல தீங்குகள் நடைபெற மூலமாகவும் உள்ளது


மனித மனம் எப்போதும் துயரமே இல்லாத இன்பத்தை நாடுகிறது அந்த இன்ப கடலில் விழுந்து நீந்தி கழிக்க ஏங்கி கொண்டிருக்கிறது

இந்த இன்ப வேட்கையால் தான் பதவி சண்டை வருகிறது கள்ளக்கடத்தல் நடக்கிறது கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் நடை பெறுகிறது


மனித மனமானது தூய்மை பெற்று விட்டால் எல்லாமே அன்பு மயமாகி விடும் அன்பு கொண்ட மனிதன் அராஜக பாதையை தேர்வு செய்ய மாட்டன்


பொறாமை போட்டி கோப தாபங்கள் எல்லாவற்றையும் கால்களில் போட்டு நசுக்கி புதிய சாம்ராஜ்யம் உருவாக காரண கர்த்தாவாக மாறிவிடுவான்



உள்ளத்தை தூய்மை படுத்த வேண்டும் என்றால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்



கடிவாளம் இல்லாத குதிரை இலக்கில்லாமல் நாலா திசையும் ஓடி தனது உடல் சக்தியை
விறையமாக்கி கொள்ளும் அதை போலவே தான் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விட்ட
மனது நிலையற்ற பலகீனங்களை நிரந்தரமானது என்று கருதி நம்மை எப்போதும் படு
குழியில் தள்ளி மேலே வர முடியாமல் அழுத்தி வைத்து கொள்ளும்


எனவே உணர்ச்சி வழி செல்வதை சிறிது சிறிதாக குறைத்து கொண்டு வருவோமானால் இருண்ட இதயத்திற்குள் ஒரு சிறிய ஒளி மெதுவாக தோன்றும்

நிதானமாக வருகின்ற வெளிச்சம் மன இருட்டை முற்றிலுமாக அகற்றி விடும்



தட்டுமுட்டு சாமான்கள் உடைந்து சுவரெல்லாம் காரை பெயர்ந்து எங்கு
பார்த்தாலும் சிலந்தி வலை பின்னி வவ்வாலும் ஆந்தையும் கரும்பூனையும்
உலவுகின்ற வீட்டில் நிம்மதியாக வாழ முடியுமா?



ஏறகுறைய நமது இதயமும் ஆசைகள் சூழ்ந்து இந்த பாளடைந்த வீட்டை போல தான்
இருக்கிறது இப்படி பட்ட இதயத்தை சுமந்து கொண்டு ஒரு போதும் நல்லவனாக வாழ
முடியாது



எனவே நல்லவனாக வாழ விரும்புகின்ற எவனும் இதயத்தை நல்ல எண்ணங்களால் நல்ல செயல்களால் தூய்மையாக்குங்கள்



சரித்திர புருஷர்கள் மட்டும் அல்ல சாமான்யரான நாமும் நல்லவன் என்ற பட்டத்தை பெறலாம்


இவ்வளவு கஷ்டப்பட்டு இதயத்தை
தூய்மையாக்கி நல்லவனாக மாற வேண்டிய அவசியம் என்ன? நல்லவனாக இருந்தால்
கிடைக்க கூடிய சன்மானம் என்ன? என்று சிலர் கேட்கலாம்

அவர்களுக்கு நாம் சொல்லுகின்ற பதில் ஒன்றே ஒன்று தான்



ஒவ்வொரு மனிதனும் பிறவி தோறும் தேடிக்கொண்டிருப்பது மனசாந்தியைதான்



அந்த சாந்தியை பெற தான் வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு ஜீவனும் ஓடி கொண்டே இருக்கிறது



நீ நல்லவனாக மாற முயற்சி செய்! நாளை காலையே உன் வீட்டு வாசலில் வந்து அமைதியும் சந்தோசமும் கதவை தட்டும்


soruce http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_14.html

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 23834-xp-and-mac-style-icons-free சுய முன்னேற்ற கட்டுரை படிக்க இங்கு செல்லவும்



ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Sri+ramananda+guruj+3



sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 63

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

best Re: ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!

Post by Venkatesh A.S Mon Aug 15, 2011 9:17 pm

அய்யா, தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. மனித பிறவியின் அடிப்படை இந்த பிறவி கட்டுலிருந்து விடுபட வேண்டும், அதற்கு தகுதியாக நல்லஎண்ணங்கள் பெற்று நல்லவனாக வேண்டும். ஆனால் இந்த யுகத்தில் (கலி) இது சுலபமில்லையே. நாம் வாழ்க்கை வண்டியை நல்லபடி ஒட்டி சென்றாலும் சில/ பல நேரங்களில் அடுத்தவருடைய வண்டி வேண்டுமென்றே மோதுகிறதே/ மோதுவது போல் வருகிறதே. இந்த சமயத்தில் எனக்கு நினைவுக்கு வருவது, பகவத் கீதையின் சாரமாக கிருஷ்ணா பக்தி இயக்கத்தின் நிறுவனர் ஸ்ரீ பிரபு பாதா எழுதியது போல் எவன் ஒருவன் வாழ்கையில் (ஆன்மீக) முன்னேற முழு மனதார விரும்புகிராரோ அவருக்கு அத்ற்கான சந்தர்ப்பத்தை பகவான் ஸ்ரீ கிரிஷ்ணர் அருள்கிறார். அதன் படி அவனுக்கு இப்பிறவியிலோ / அடுத்த பிறவியிலோ/ அடுத்தடுத்த பிறவியிலோ இந்த பிறவியிலிருந்து விடுபட்டு கண்ணனின் காலடியில் அடைக்கலம் கொள்ளும் பாக்கியம் கிட்டும். எனவே இது குறித்து எல்லோரும் சிந்திக்க (கேள்விபடாதவர்கள்) ஆரம்பித்தால் தான் இனி எந்த பிறவியிலாவது விடுதலை கிட்டும்.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

best Re: ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!

Post by ந.கார்த்தி Fri Feb 17, 2012 6:10 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

best Re: ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum