இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


என் மகனை பேச வைத்த ஐயப்பன்!' - மனம் உருகும் அண்ணாமலை குருசாமி ஐயன் செய்த அற்புதம்!

Go down

என் மகனை பேச வைத்த ஐயப்பன்!' - மனம் உருகும் அண்ணாமலை குருசாமி ஐயன் செய்த அற்புதம்! Empty என் மகனை பேச வைத்த ஐயப்பன்!' - மனம் உருகும் அண்ணாமலை குருசாமி ஐயன் செய்த அற்புதம்!

Post by ஆனந்தபைரவர் Fri Nov 18, 2011 9:50 pm

என் மகனை பேச வைத்த ஐயப்பன்!' - மனம் உருகும் அண்ணாமலை குருசாமி ஐயன் செய்த அற்புதம்! P8
'ஐப்பசி வரைக்கும் எப்படியோ... கார்த்திகை மாதம் வந்துருச்சுன்னா, ஒரு முப்பது நாப்பது வயசு குறைஞ்சிரும் எனக்கு! ஏன்னா... எங்க அப்பன் ஐயப்பனைப் பார்க்க விரதம் துவங்கற மாசமாச்சே...'' என்று குதூகலத்துடன் சொல்கிறார் அண்ணாமலை குருசாமி.
ஈரோடு மாவட்டம் பவானி - அம்மாபேட்டைக்கு அருகில் உள்ள சென்னம்பட்டியில் வசிக்கிறார் அண்ணாமலை. அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருக்கு வயது 70.
''76-ஆம் வருஷத்துல முதன்முதலா சபரிமலைக்கு மாலை போட்டேன். அன்னிலேருந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் கண்கண்ட தெய்வம், ஸ்ரீஐயப்ப சுவாமிதான்!
மலையேறுதலும், அங்கேயுள்ள மூலிகைச் செடிகொடி களின் நறுமணமும், எல்லாத்துக்கும் மேலே, ஐயன் ஐயப்ப சுவாமியின் பேரருளும், நம்மோட வாழ்க்கையை நல்ல விதமா திசை திருப்பிரும். தொடர்ந்து இதுவரை, 35 வருஷமா சபரிமலைக்குப் போயிக்கிட்டிருக் கேன்'' என நெக்குருகிச் சொல்லும் அண்ணா மலை குருசாமி, முதல் முறை சபரிமலைக்கு விரதமிருந்த காரணத்தை விவரிக்கிறார்.
என் மகனை பேச வைத்த ஐயப்பன்!' - மனம் உருகும் அண்ணாமலை குருசாமி ஐயன் செய்த அற்புதம்! P8a
''என் இரண்டாவது பையன், அந்த வருஷம் குழந்தையா இருந்தான். மூணு வயசு இருக்கும்போது, திடீர்னு ஜுரம் வந்து, அவனுக்கு சரியா பேச்சு வரலை. பேசுற திறன் குறைஞ்சிருச்சு. என்ன செஞ்சும் குணமாகலை. மனம் நொந்து கிடந்தப்பத்தான், 'ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு எல்லாரும் விரதம் இருக்காங்க. நாமளும் விரதம் இருப் போம்; மலைக்குப் போவோம். மகனுக்கு நல்லது நடந்தா சந்தோஷம்’னு முடிவு பண்ணி, கடும் விரதம் இருந்து, நித்தியப்படி அனுஷ்டானங்களைத் தவறாம கடைப்பிடிச்சு, சபரிமலைக்குப் போயிட்டு வந்தேன்.
என்ன ஆச்சரியம்... கொஞ்சம் கொஞ்சமா பையனுக்குப் பேச்சு வந்துச்சு. அவனோட அஞ்சாவது வயசுல, எந்தத் திக்குத் திணறலும் இல்லாம, சரளமா பேசினப்போ, எங்க கண்கண்ட தெய்வம் அந்த மணிகண்டனோட சபரிமலை இருக்கிற திசையை நானும் என் மனைவியும் விழுந்து நமஸ்கரிச்சோம்!'' எனக் கண்ணீரும் ஆனந்தமும் பொங்கத் தெரிவிக்கிறார் அண்ணாமலை குருசாமி.
''இந்த உடம்புல, இந்த வயசுலயும் தெம்பைக் கொடுத்திருக் கான் ஐயப்பன். அந்தத் தெம்பு இருக்கறவரைக்கும், அவனோட சந்நிதிக்குப் போயிக்கிட்டே இருப்பேன். இது என் இந்த ஜென்மத்துக் கொடுப்பினை!'' - நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் அண்ணாமலை குருசாமி.
கட்டுரை, படங்கள்: மு.கார்த்திகேயன்
நன்றி விகடன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum