இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


புத்தர்

Go down

புத்தர் Empty புத்தர்

Post by ராகவன் Thu Aug 05, 2010 10:14 am

இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார்.

மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.கௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார். கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.

வாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் " அறவொளி பெற்ற " ஒரு புத்தர் என்றும் உறுதியாக உணர்ந்தார். அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின. புத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் " நான்கு உயர் உண்மைகள்" எனச் சுருக்கமாகக் கூறுவர்.

முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது.
இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும்.
மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (" அணைதல் அல்லது அவிதல்" எனப் பொருள்படும்) " நிர்வாணம்" எனப்படும்.
நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் " எட்டு வகைப் பாதை" எனப்படும்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

புத்தர் Empty Re: புத்தர்

Post by ராகவன் Thu Aug 05, 2010 10:15 am

அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். இதில் சாதி வேறுபாடு இல்லை. கௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது. இந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 - க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 - க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது.

புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது. உலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது.

பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன. கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை. ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது.

புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. நான் புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum