இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமத் பகவத்கீதை-க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்

Go down

ஸ்ரீமத் பகவத்கீதை-க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம் Empty ஸ்ரீமத் பகவத்கீதை-க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 10:56 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத த்ரயோதஷோ அத்யாய:।

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்



அர்ஜுந உவாச।
ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச।
ஏதத்வேதிதுமிச்சாமி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஷவ॥ 13.1 ॥



ஸ்ரீபகவாநுவாச।
இதம் ஷரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே।
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:॥ 13.2 ॥



க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத।
க்ஷேத்ரக்ஷேத்ரயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம॥ 13.3 ॥



தத்க்ஷேத்ரம் யச்ச யாத்ருக்ச யத்விகாரி யதஷ்ச யத்।
ஸ ச யோ யத்ப்ரபாவஷ்ச தத்ஸமாஸேந மே ஷ்ருணு॥ 13.4 ॥



க்ருஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ருதக்।
ப்ரஹ்மஸூத்ரபதைஷ்சைவ ஹேதுமத்பிர்விநிஷ்சிதை:॥ 13.5 ॥



மஹாபூதாந்யஹம்காரோ புத்திரவ்யக்தமேவ ச।
இந்த்ரியாணி தஷைகம் ச பம்ச சேந்த்ரியகோசரா:॥ 13.6 ॥



இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸம்காதஷ்சேதநா த்ருதி:।
ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ருதம்॥ 13.7 ॥



அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்।
ஆசார்யோபாஸநம் ஷௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ:॥ 13.8 ॥



இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹம்கார ஏவ ச।
ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:கதோஷாநுதர்ஷநம்॥ 13.9 ॥



அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு।
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு॥ 13.10 ॥



மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ।
விவிக்ததேஷஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி॥ 13.11 ॥



அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஷநம்।
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோ அந்யதா॥ 13.12 ॥



ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா அம்ருதமஷ்நுதே।
அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே॥ 13.13 ॥



ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ அக்ஷிஷிரோமுகம்।
ஸர்வத: ஷ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி॥ 13.14 ॥



ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்।
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச॥ 13.15 ॥



பஹிரந்தஷ்ச பூதாநாமசரம் சரமேவ ச।
ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்॥ 13.16 ॥



அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்।
பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச॥ 13.17 ॥



ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே।
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்॥ 13.18 ॥



இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸநாஸத:।
மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே॥ 13.19 ॥



ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்யநாதி உபாவபி।
விகாராம்ஷ்ச குணாம்ஷ்சைவ வித்தி ப்ரக்ருதிஸம்பவாந்॥ 13.20 ॥



கார்யகாரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே।
புருஷ: ஸுகது:காநாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே॥ 13.21 ॥



புருஷ: ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதிஜாந்குணாந்।
காரணம் குணஸங்கோ அஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு॥ 13.22 ॥



உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர:।
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே அஸ்மிந்புருஷ: பர:॥ 13.23 ॥



ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ।
ஸர்வதா வர்தமாநோ அபி ந ஸ பூயோ அபிஜாயதே॥ 13.24 ॥



த்யாநேநாத்மநி பஷ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா।
அந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே॥ 13.25 ॥



அந்யே த்வேவமஜாநந்த: ஷ்ருத்வாந்யேப்ய உபாஸதே।
தே அபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஷ்ருதிபராயணா:॥ 13.26 ॥



யாவத்ஸம்ஜாயதே கிம்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம்।
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப॥ 13.27 ॥



ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஷ்வரம்।
விநஷ்யத்ஸ்வவிநஷ்யந்தம் ய: பஷ்யதி ஸ பஷ்யதி॥ 13.28 ॥



ஸமம் பஷ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஷ்வரம்।
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்॥ 13.29 ॥



ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஷ:।
ய: பஷ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஷ்யதி॥ 13.30 ॥



யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமநுபஷ்யதி।
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா॥ 13.31 ॥



அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய:।
ஷரீரஸ்தோ அபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே॥ 13.32 ॥



யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே।
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே॥ 13.33 ॥



யதா ப்ரகாஷயத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி:।
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாஷயதி பாரத॥ 13.34 ॥



க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா।
பூதப்ரக்ருதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்॥ 13.35 ॥



ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாகயோகோ நாம த்ரயோதஷோ அத்யாய:॥ 13 ॥



ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதின்மூன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.

அர்ஜூனன்: பகவானே, இயற்கை (ப்ரக்ருதி), அனுபவிப்பவர் (புருஷர்), க்ஷேத்ரம் (களம்), க்ஷேத்ரக்ஞன் (களம் அறிபவன்), ஞானம், ஞானத்தின் இறுதி இவைகளை நான் அறிய விரும்புகிறேன்.

பகவான்: குந்தி மைந்தா, இவ்வுடலே க்ஷேத்ரம். இதை அறிபவன் க்ஷேத்ரக்ஞன். எல்லா உடல்களிலும் நானே அறிபவனாக இருக்கிறேன். உடல், அதன் உரிமையாளர் இதனைப் புரிந்து கொள்வதே ஞானம். இதுவே என் அபிப்பிராயம்.

(உடலே க்ஷேத்ரம். அதனுள் உடலை அறியும் உரிமையாளனும் (ஜீவன்), உரிமையாளனை அறியும் எல்லாமறிந்த பரமான்மாவும் வாழ்கின்றனர். இதில் ஜீவன், பரம புருஷ பகவானின் சக்தி அல்லது பகவானின் ஆன்மீக சரீரத்தின் அங்கத் துணுக்காவான். பரமான்மாவோ, பகவானின் பிரதிநிதி அல்லது அவரது சுயவிரிவு ஆவார்.

இனி க்ஷேத்ரம், அதன் மாற்றங்கள் - க்ஷேத்ரஞன், அவனது தன்மைகள் பற்றி சுருக்கமாக கூறுகிறேன். இவை முனிவர்களால் ஆய்ந்து சொல்லப்பட்டவை.

ஐந்து பூதங்கள், அகங்காரம், அறிவு, குணங்களின் தோன்றா நிலை, பத்து புலன்கள், மனம், ஐந்து புலன் விஷயங்கள் மற்றும் விருப்பு, வெறுப்பு, இன்பதுன்பம், உடலமைப்பு, உணர்வு, திட நம்பிக்கை இவைகளே க்ஷேத்ரமும், அதன் தோற்றமும் ஆகும்.

அடக்கம், பெருமை கொள்ளாமை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, சத்குருவை ஏற்றல், தூய்மை, நிலைபிறழாமை, புலனடக்கம், புலனுகர்வில் துறவு, பொய் அகங்காரமின்மை, தீமைகளை கவனித்தல் (பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி போன்றவை), மனைவி, மைந்தர், இல்லம் மற்றும் பிறரிடம் பற்றின்மை, இன்ப துன்பங்களில் நடுநிலை, என்னிடம் மாறாத தூய பக்தி, தனியிடத்தை நாடுதல், கூட்டத்திலிருந்து விலகியிருத்தல், ஆன்மீக விஞ்ஞானத்திற்கு முக்கியத்துவம் தருதல், பூரண உண்மைக்காக ஆன்ம விசாரணைகள் செய்தல் - இவைகளே ஞானம் எனப்படும். இவைகளுக்கு எதிரானவை அஞ்ஞானமாகும்.

எதையறிவதால் நித்திய அமுதத்தை சுவைப்பாயோ, அறிய வேண்டிய அதனைக் கூறுகிறேன். துவக்கமற்றது அது. எனக்கு கீழ்ப்பட்டது. பிரம்மம் அல்லது ஆன்மா எனப்படுவது; ஜடவுலகின் காரண விளைவுகளுக்கு அப்பாற்பட்டது.

(மூன்று விதமான பிரம்ம ஞானங்கள் - செயற்களமான இயற்கையும் பிரம்மமே. இட இயற்கையை ஆண்டு அனுபவிக்க விரும்பும் ஜீவான்மாவும் பிரம்மமே. இவையிரண்டின் உண்மை ஆளுனராக உள்ள பரமான்மாவும் பிரம்மமே.

மேலும் எல்லா இடங்களிலும் கரங்கள், கால்கள், முகங்கள், கண்கள் இவற்றுடன் பரமான்மா இருக்கிறார். அவர் எல்லாவற்றையும் கேட்கிறார். அவரே புலன்களின் மூலமாயிருந்தாலும் புலன்களற்று இருக்கிறார். அனைவரையும் காப்பவராயினும் பற்றற்றவர். குணங்களுக்கு இறைவனாய் இருந்தும் குணங்களற்றவர். அசையும், அசையா அனைத்திலும் உள்ளும் புறமும் உள்ளார். தூரத்திலும் இருக்கிறார், அருகிலும் இருக்கிறார், எனினும், ஜடப் புலன்களால் அவரைக் காணவோ, அறியவோ இயலாது.

அவர் ஜீவர்களில் பிரிந்திருப்பதாய் தோன்றினாலும், பிரிவற்றவர். உயிரினங்க்களைப் பாதுகாவலனாயும், அழிப்பவராயும், அபிவிருத்தி செய்பவராயும், பிரகாசங்களுக்கு மூலமாயும் இருக்கிறார். இருளுக்கு அப்பாற்பட்டவராயினும், தோன்றாதவராய் இருக்கிறார். ஞானம், ஞானத்தின் லட்சியமான அவர், அனைவரின் இதயத்திலும் இருக்கிறார்.

இவ்வாறாக க்ஷேத்ரம், அதை அறிபவன், ஞானம் அனைத்தும் சுருக்கமாக என்னால் விவரிக்கப்பட்டன. என் பக்தர்கள் மட்டுமே இவைகளைத் தெளிவாய் அறிந்து, எனது இயற்கையை அடைய இயலும்.

இந்த ஜட இயற்கையும், உயிரினங்களும் துவக்கமற்றவை. ஆனால் அவை இரண்டின் மாற்றங்களும் (ஆரம்பம், வளர்ச்சி, தேய்வு, முடிவு), குணங்களும் - ஜட இயற்கையிலிருந்தே உண்டாகின்றன, ஆன்மாவிற்கு சம்பந்தமில்லை.

செயல்கள், விளைவுகளுக்கு காரணம் ஜட இயற்கையாகும். ஆனால் இன்பதுன்பங்களுக்கு காரணம் உயிரினங்கள் மட்டுமே. அவன் இயற்கையின் தொடர்பால் முக்குணங்களின்படி பல சரீரங்களில் வாழ்ந்து, நன்மை தீமைகளைத் துய்க்கிறான்.

இருப்பினும் இவ்வுடலில் உன்னதமான ஓர் அனுபவிப்பாளர் இருக்கிறார். அவரே பரம புருஷர், உரிமையாளர், அனுமதிப்பவர், மேற்பார்வையிடுபவர், பரமான்மா ஆவார்.

இயற்கை, உயிர்வாழி - இரண்டுக்கும் இடையேயான இயற்கைக் குணங்களின் விளைவுகள் இவை தொடர்பான உண்மைகளைப் புரிந்து கொள்பவன் நிச்சயமாக விடுதலை பெறுகிறான். எந்த நிலையிலும் அவன் மீண்டும் பிறப்பதில்லை.

தியானத்தால் சிலரும், ஞான விருத்தியால் சிலரும், பலனோக்காத செயல்பாட்டினால் சிலரும் பரமாத்வாவை உணர்கின்றனர்.

ஆன்மீக அனுபவங்கள் இல்லாவிடிலும், பிறரிடம் கேட்டறிந்து இறைவனை வழிபடுகின்றனர். அவர்கள் கேட்பதற்கான ஆவலால் மாத்திரம் பிறப்பு, இறப்பெனும் சுழலில் சிக்காது உயர்கின்றனர்.

பாரதர்களின் தலைவா, சராசரங்களில் நீ காண்பவை எல்லாம் க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் இரண்டின் கலவையே.

எல்லா உயிர்களிலும் ஜீவான்மாவைத் தொடர்பவராக பரமான்மாவைக் காண்பவனும், அவர்கள் அழிவற்றவர்கள் என்பதை அறிந்து கொள்பவனுமே உண்மையில் காண்பவனாவான். அவன் மனத்தால் தன்னை தரமிழக்கச் செய்து கொள்வதில்லை, தெய்வீக இலக்கை அடைகிறான்.

செயல்களுக்கெல்லாம் காரணம் ஜட இயற்கையால் ஆன உடலே, ஆன்மா அல்ல என அறிபவன் உண்மையைக் கண்டவனாகிறான்.

பரமாத்வாவிற்கு சொந்தமில்லாத, ஜடத்தோற்ற வேறுபாடுகளைக் காணும் நிலையைக் கடந்து விடும்போது ஒருவன் பிரம்ம நிலையை அடைகிறான். உயிரினங்கள் பரந்து இருப்பதையும் காண்கிறான்.

அர்ஜூனா, நித்தியமான, தெய்வீகமான, குணங்களுக்கு அப்பாற்பட்டதான ஆன்மா, ஜடத்தொடர்பால் உடல் பெற்றாலும் அது எதையும் செய்வதோ, சிக்குவதோ இல்லை.

எங்கும் நிறைந்துள்ள ஆகாயம் தனது நுட்பமான இயற்கையால் களங்கமற்று இருப்பது போல, பிரம்ம உணர்வில் திளைக்கும் ஆன்மாவும் ஜட தேகத்தால் களங்கமடைவதில்லை.

பரத மைந்தா, கதிரவன் அகிலமெல்லாம் பிரகாசிப்பது போல், ஆன்மா உணர்வால் உடலெங்கும் பிரகாசிக்கிறது.

உடலுக்கும், அதன் உரிமையாளனுக்கும் இடையேயான இந்த வேறுபாட்டினை அறிந்து கொண்டவனும், விடுபடும் முறையை அறிபவனுமான ஒருவன் பரம இலக்கை அடைகிறான்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum