Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்.
Page 1 of 1
பிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்.
நன்றுடையானைத் தீயதிலானை நாரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே.
கைம்மகவேந்தி கடுவனொடு ஊடிச்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத்து ஈருரி போர்த்த விகிர்தாநீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே
மந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல்
செந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூறும்
எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே
துறை மல்கு சாற்சுனை மல்கு நீலத்திடை வைகிச்
சிறை மல்கு வண்டுந்தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன் கனலெரியாடுங் கடவுள் எம்
பிறை மல்க சென்னி யுடையவன் எங்கள் பெருமானே.
கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைரை நாளுந் தலைவரல்லாமையுரைப் பீர்காள்
நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே.
வெய்யதன் சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய பொன் சேருஞ் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையலோர் பாகம்மகிழ்வர் நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே
வேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர் கோயிற் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கை விளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே
மலைமல்கு தோளன் வலிகெடவூன்றி, மலரோன்தன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர், பழியோரார்
சொலவல வேதஞ் சொலவல கீதஞ் சொல்லுங்கால்
சிலவல போலுஞ் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.
அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளீ நாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர் உம்மை யேதிலர் கண்டால் இகாழரே
நாணாது உடை நீத்தோர்களுங் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவார்கள் உரைக்குஞ்சொல்
பேணாது உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே.
தேனயம் பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரை சூழ்ந்த
கானல் சங்கேறுங் கழுகலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவைவல்லார்
வானசம்பந்தத் தவரோடு மன்னி வாழ்வாரே
குறிப்பு : மஹா பிரதோஷ வரலாறும் வழிபாட்டு முறைகளும் என்ற தலைப்பில் “சித்ரா பப்ளிகேஷன்ஸ்” வெளியிட்டிருந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த பதிகம் தான் இவைகள்.... இயற்றியவரின் பெயர் அச்சிடப்படவில்லை..
தெரிந்தவர்கள் இந்த பாடலுக்கு தெளிவரை வழங்கலாம்.
அன்புடன்,
தோழி மஞ்சு.
நன்றி: http://muthamilmantram.com/viewtopic.php?f=159&t=9636

Permissions in this forum:
You cannot reply to topics in this forum