இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பக்திப் பாடல்கள்!

Go down

பக்திப் பாடல்கள்!  Empty பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:43 am

பாடல் : சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


ஓரானைக் கன்றை, உமையாள் திருமகனை, போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும், வித்தை வரும் உத்திர சம்பட்டு வரும் சக்தி தரும் சித்தி தரும் தான்.

சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் - பிள்ளையார்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:44 am

பாடல்: விநாயகனே வினை தீர்ப்பவனே
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ராகம்: கீரவாணி


விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:45 am

பாடல்: காக்கும் கடவுள் கணேசனை நினை
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே

காக்கும் கடவுள் கணேசனை நினை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை

யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்

காக்கும் கடவுள் கணேசனை நினை

நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்

காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:47 am

பாடல்: நீயல்லால் தெய்வமில்லை
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்



நீயல்லால் தெய்வமில்லை
எனது நெஞ்சே நீவாழும் எல்லை முருகா

(நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுதிடலே
இங்கு யான் பெற்ற இன்பம்

(நீயல்லால்)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:47 am

பாடல்: தங்க மயம் முருகன் சந்நிதானம்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

எங்கும் மனம் பரப்பும் மாலைகளே
அவன் ஈராறு கைகளாம் தாமரையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்

கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:48 am

முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே
முன்னின்று காக்கும் இறைவனுக்கே
புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால்
பூச் சொரிந்தே மனம் பாடி வரும்
(முதல்)

சிம்மாசனம் போன்ற மயிலாசனம்
செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல்
அடியார் தம் இதயங்கள் குடி மக்களே
அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே
(முதல்)

முதல் சங்கம் உருவாக மொழியானவன்
இடைச் சங்கம் கவிபாட புகழானவன்
கடைச் சங்க வாழ்வுக்கும் வழியானவன்
கடல் கொண்டும் அழியாத தமிழானவன்
(முதல்)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:48 am

திருசெந் தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்

அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தை காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கும் முகம் ஒன்று
சாதிமத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டி வரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா ... முருகா...வருவாய் .... அருள்வாய்...முருகா...
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:48 am

அறுபடை வீடு கொண்ட திரு முருகா
திருமுருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா
(அறுபடை)
பாட்டுடைத் தலைவன் என்றே உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா
(அறுபடை)

வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு அந்த
வெள்ளிப் பனித்தலையர் கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது நீ
அமர்ந்த பழனி ஒரு படை வீடு
(அறுபடை)

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல
ஓமெனும் மந்திரத்தின் பொருளுரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள்
தமிழ் திருநாடு கண்ட சுவாமி மலை
(அறுபடை)

தேவர் படை தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்ட அமர்ந்த ஒரு வீடு கடல்
கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
(அறுபடை)

குறுநகை தெய்வானை மலரோடு உந்தன்
குலமகளாக வரும் நினைவோடு
திருமணம் கொண்ட ஒரு வீடு வண்ண
திருப்பரங்குன்றமென்னும் படை வீடு
(அறுபடை)

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி
தெள்ளு தமிழ் குறத்தி தனை மறந்து
காவல் புரிய வென்று அமர்ந்த மலை எங்கள்
கன்னித் தமிழர் திரு தணிகை மலை
(அறுபடை)

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல
காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை தங்க
மயில் விளையாடும் பழமுதிர் சோலை
(அறுபடை)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:50 am

திருத்தணி முருகன்

(ராகம் - ஷண்முகப்ரியா, ஆ: ஸரி க ப த நி ஸ - அவ: ஸ நி த ப மக ரி ஸ)
(தாளம் - ஆதி)

பல்லவி

வடிவேல் முருகா திருமால் மருகா
வள்ளி தெய்வயானையுடன் புள்ளி மயில் ஏறிவரும் (வடி)

அனுபல்லவி

மாசு மறுவுமில்லா நேசத்துடனே உன்னை
ஆசையுடன் பணிவோர் பாசத்தை விலக்கிடும் (வடி)

சரணம் 1

குறைவில்லா உமையவள் மகிழ்ந்திடத்தவழ்ந்தாய்
மறையவன் தந்தைக்கோர் நல்மொழி நவின்றாய்
குறமகள் வள்ளியைக் கடி மணம் புரிந்தாய்
அறுபடை வீட்டினில் உறைவிடம் கொண்டாய் (வடி)

சரணம் 2

இகபர சுகந்தனை அளிப்பவன் நீயே
பகர்ந்திடும் அன்பர்தம் குறை கேட்டிலையோ
நிகரற்ற ஜோதியாய் பொலிவுற்ற மேனியாய்

மத்யம காலம்

கலியுகந்தனில் அருள் திகழ்ந்திட (இந்த)
ஜகந்தனை உரியதாக்கிடும் (வடி)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:50 am

அருள்மிகு திருச்செந்தூர் முருகன்

(ராகம் - கானடா, ஆ: ஸ ரி க ம த நி ஸ - அவ: ஸ நி ப ம ப த நி த ப ம க ம ரி ஸ)
(தாளம் - ஜம்ப (தக தகி ட))

பல்லவி

சோதனைகள் புரியவும் தகுமோ ஏழை என்
வாதனைகள் புகலவும் தரமோ அலைகடல் வளர் திரு முருகா (சோதனை)

அனுபல்லவி

உனையன்றி வேறு துணை காணேனே - உன்னை
நினைந்து நினைந்து உள்ளம் தினம் தினம் உருகினேன் (சோதனை)

சரணம் 1

உருண்டோடி வரும் அலைகள் ஓங்கியெழும் கடற்கரையில்
திரண்டதோர் மலை மீது தங்கியருள் பெம்மானே
எண்ணத்தில் பல மலைகள் மொதிடும்போதுந்தன்
வண்ணத்திருமேனி கண்டேன் மனந்தெளிந்தேன் மனமகிழ்ந்தேன் (சோதனை)

சரணம் 2

கருணைக்கடல் பொங்கும் அருணகிரி தந்த கனி
அருட்சோதி வடிவான வள்ளலார் தந்த கனி
மக்களையே மகிழ்விக்கும் அவ்வையும் தந்த கனி
முக்கனியின் சாறு பிழிந்துண்டேன் மனந்தெளிந்தேன் உளமகிழ்ந்தேன் (சோதனை)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:50 am

அருள்மிகு பழனி முருகன்

(ராகம் - குந்தலவராளி, ஆ: ஸ ம ப த நி த ஸ - அவ: ஸ நி த ப ம ஸ)
(தாளம் - ஆதி)

பல்லவி

பதம் பணிந்தேன் - மகிழ்ந்தேன்
பழனி ஆண்டவா உந்தன் (பதம்)

அனுபல்லவி

நிதம் நிதம் உனதடி நினைந்தேன் - உன்
பதமலர்களை என்றும் பணிந்திட விரைந்தேன் (பதம்)

சரணம்

பழனித்திருப்பதியின் பெருங்கருணை நினைந்தேன்
பழம் நீ என நான் பகர்ந்திட த்தெளிந்தேன்
மழையெனவே அருள் பொழியவும் உணர்ந்தேன்
தழைத்திடும் உயிர்களை
தரணி தன்னில் - பெருமை கொள்ளும் - புகலிடம் உன் (பதம்)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:51 am

அருள்மிகு ஸ்வாமிமலை முருகன்

(ராகம் - ஆரபி (ஒருகால் சிவ சிதம்பரம் .. மெட்டில்), ஆ: ஸ ரி ம ப த ஸ - அவ: ஸ நி த ப ம க ரி ஸ)
(தாளம் - ஆதி)

பல்லவி

வெற்றிவேலன் தன் அடியிணைதனையே
பற்றி நீ மகிழ்ந்திடுவாய் - மனமே (வெற்றி)

அனுபல்லவி

நாற்றிசையும் புகழ் சாற்றிடும் நாவலன்
போற்றிடுவோர் தமைக்காத்திடும் காவலன் (வெற்றி)

சரணம் 1

கண்ணுக்கு விருந்தளிக்கும் கண்ணனும் அவனே
புண்ணுக்கு மருந்தளிக்கும் புண்ணியன் அவனே
பண்ணுக்கு உயிர் அளிக்கும் புலவனும் அவனே
விண்ணவர் வணங்கிடும் வடிவேலனும் அவனே (வெற்றி)

சரணம் 2

ஏரகந்தனிலே இலங்கிடும் அழகன்
ஓரெழுத்து மந்திரம் அப்பனுக்கே உரைத்தான்
ஊரகத்தே நின்ற கோலத்தில் உணர்த்திடும்
சீரகத்தே நின்ற செல்வன் குருநாதன் (வெற்றி)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:51 am

அருள்மிகு நட்டக்கல் (கோத்தகிரி) முருகன்

(ராகமாலிகை)
(தாளம் - ஆதி)

பல்லவி

ராகம்: வலஜி (கைவிடமாட்டான் .. மெட்டில்)

பாலமுருகன் கழல் பணிந்திடுவோம் - இன்பக்
கோலக்குமரன் கழல் நினைந்திடுவோம் சக்தி (பால)

அனுபல்லவி

காலமெல்லாம் அவன் கனிவுடன் பார்த்திடுவான்
ஞாலம் புகழ் மயில் வேலுடன் காத்திடுவான் (பால)

சரணம் 1

சாந்தம் தவழ்ந்திட ச்சிரித்திடும் சீலன்
காந்தம் கொள் பார்வையுடன் களித்திடும் பாலன்
காந்தமென நம்மைக்கூட்டிடும் வேலன்
தீந்தமிழை த்தன்னுள் காட்டும் தயாளன் (பால)

சரணம் 3

ராகம்: சாமா

பால் வடியும் முகம் பால் பொழியச் சிரிக்கும்
வேல் பிடிக்கும் கரம் வெற்றியைக்கொடுக்கும்
மால் மருகன் மேனி மணம் கமழக்களிக்கும்
வால் அறிவன் நட்டக்கல்லில் உறையும் சக்தி (பால)

சரணம் 3

ராகம்: காபி

கலிதன்னில் கிலிதனை நீக்கிடும் நேயன்
நலிவுறும் மனந்தனை ஊக்கிடும் சேயன்
களி மிகு மணவாழ்வைக்கூட்டிடும் மாயன்
ஒலித்திடும் ப்ரணவத்தை ஓதும் ராமன் சகாயன் (பால)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:51 am

அருள்மிகு சிக்கில் சிங்காரவேலன்

(ராகம் - காம்போதி, ஆ: ஸ ரி க ம பத ஸ - அவ: ஸ நி த ப ம க ரி ஸ)
(தாளம் - ரூபகம் (தாங்கிடு தகதிந்தின்ன))

பல்லவி

சிக்கல் மேவிய சிங்கார வேலவா - என்
பக்கலில் நின்றே பரிவுடன் ஆளவா (சிக்கல்)

அனுபல்லவி

துள்ளிக்குதித்தோடும் தோகை மயில் மீது
வள்ளிதெய்வயானையுடன் வந்தெனக்கருளும் (சிக்கல்)

சரணம்

ஒங்காரமாகியே உணர்த்திட வந்தவா
சங்காரமூர்த்தியாய் சூரனை மாய்த்தவா
ரீங்கார அன்னை உமையிடம் வேல் பெற்றவா
பாங்காக வலம் வந்தேன் பேரருள் சுரக்கவா

மத்யம காலம்

பதமலரிணை கதியெனவே
நிதநிதமுனைத்தொழுதிடவா
இதந்தரு நெடுங்கண்ணி நவ
நீதேச்வரர் அருள் ராமன் மகிழ (சிக்கல்)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:52 am

அருள்மிகு ஆறுபடைவீடு முருகன்

(ராகம் - நீலமணி)
(தாளம் - ஆதி)

பல்லவி

உனையன்றி நினைவுமுண்டோ முருகா - உன்
நினைவின்றி வாழ்வுமுண்டோ குன்றுதோறாடிடும் (உனையன்றி)

அனுபல்லவி

வினை தீர்த்து எனையாள வேல் கொண்டனையோ என்
மனை வாழ்வில் மகிழ்வளிக்க மயில் கொண்டனையோ (உனையன்றி)

சரணம்

நினைந்திடில் நீ என் முன் வரவேண்டும் - நான்
முனைந்திடும் செயலில் பலம் தரவேண்டும் - மனம்
கனிந்துருகித்துதித்தேன் கணநாதன் இளையோனே
இனித்திடும் பார்வையுடன் ராமனைக் காப்போனே

மத்யம காலம்

அலைவாய் தனிலே அமர்ந்திடும் அழகா
ஆவினங்குடிவாழ் உளங்கவர் பாலா
ஏரகந்தனிலே ஏற்றம்கொள் சீலா
தணிகைவளர் - பழமுதிரும் - குன்றிலுறை (உனையன்றி)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:53 am

அருள்மிகு அழகுத்தெய்வம் முருகன்

(ராகம் - காவடிச்சிந்து)
(தாளம் - ரூபகம்) )

அழகுத்தெய்வம் என அன்புடன் போற்றிடும் ஆண்டவா -
பழனி ஆண்டவா - எனை ஆண்டவா -
உந்தன் பழனிப்பதி பரவும் அருள்மழையை நிதம் நினைந்தே
சிந்து பாடினேன் உனை நாடினேன்

குன்றம் தனில் குடி கொண்டவா - எந்தன்
வேலவா சக்தி வேலவா என்னை ஆளவா - எந்தன்
பந்தம்தனை த்துண்டித்திட சொந்தமுடன் வந்தாய் - உன்னைத்
தேடினேன் புகழ் பாடினேன்

கோலமயில் மீது கோழிக்கொடி தாங்கும்
ஷண்முகா செந்தில் ஷண்முகா எந்தன் இன்முகா - உந்தன்
சீலம் மிகு கோலத்துடன் ஞாலம் புகழ் வேலைத்தினம்
சிந்தித்தேன் என்றும் வந்தித்தேன்

உருகா உள்ளத்தையும் உருக்கிடும் சக்திகொள்
திரு முருகா திரு மால் மருகா வடி வேல் முருகா
குருவே உனை மறவாதிட த்தருவாய் வரம் விரைவாய் உனைப்
போற்றினேன் புகழ் சாற்றினேன்

ஒப்பில்லா மொழி உந்தன் அப்பனுக்கே தந்த குரு மணியே -
நல்ல தவ மணியே - சக்தி சிவ மணியே -
எந்தன் அன்பில் வளர் கந்தா உமை மைந்தா
உந்தன் பாதந்தனைப் பற்றினேன் மனம் தேற்றினேன்.

கலியுகந்தனில் எங்கும் கிலிதனைப்போக்கிடும்
குருபரனே தணிகை வளர் குகனே - ஞானத்தவ மகனே -
ஒரு நினைவாய் அனுதினமும் நல்மனமோடுனைப் பணிந்தால்
இன்னல் போகுமே இன்பம் ஆகுமே

முருகா --- முருகா --- முருகா --- முருகா --- முருகா --- முருகா
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:53 am

அருள்மிகு பழனி முருகன்

(ராகம் - பாகேஸ்ரீ )
(தாளம் - ஜம்ப (தகதகிட))

பல்லவி

அஞ்சும் முகம் மலர என்னப்பன் ஆறுமுகம் கண்டேன்
கொஞ்சும் மொழி புகலும் கந்தன் பிஞ்சு முகம் கண்டேன் (அஞ்சும்)

அனுபல்லவி

அஞ்சுகரனுக்கிளையோன்
ஆறுபடை வீடுடையோன்
வெஞ்சமரில் திறனுடையோன்
வீறுகொள் வேலுடையோன் (அஞ்சும்)

சரணம்

ஆறு பொறி தெறித்து விழ பொய்கையுமே பொங்கியெழ
ஆறு மங்கையர் மகிழ மெய்யாறும் கொண்டெழுந்தான்
ஆறுதல் அடைந்த அம்மை ஆர்வமுடன் அணைத்திடவே
ஆறுதலை அளிக்க வல்ல ஆறுதலையுடன் எழுந்தான் (அஞ்சும்)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by ராகவன் Sun Aug 01, 2010 11:53 am

அழகென்ற சொல்லுக்கு முருகா

முருகா... முருகா...
அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

பக்திப் பாடல்கள்!  Empty Re: பக்திப் பாடல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum