Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்

Go down

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்  Empty மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்

Post by ஆனந்தபைரவர் on Sat Dec 18, 2010 3:57 pm

இந்தியத் திருநாடு பண்பாடு, கலாச்சாரத்தின் சிகரம் என புகழப்படுகிறது. ஆனால், கலாச்சாரம், மரபு, தொன்மை, புராதனங்களை கட்டிக்காப் பதில் நாம் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை. எஞ்சியுள்ள புராதன சின்னங்களையாவது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பணியை, நாம் செய்ய வேண்டும்.

எண்ணற்ற மொழிகள் பேசப் படும் நாடு, நமது தேசம்; ஆற் றங்கரை நாகரிகத்தில் எகிப்தும், சிந்து சமவெளியும் போன்றதே நமது தமிழர் மரபும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரிகத்தின் உச்சத்தை அறிந்தவர்கள்; கலாச்சாரத்தின் பிறப் பிடம் என அறியப்பட்டாலும், அந்த எச்சங்களை நாம் முறையாக பாதுகாக்கவில்லை.தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில்கள், கோட்டைகள் எதையும் நாம் கண்டுகொள்வதில்லை. கோவில் வழிபடும் இடமாக மட்டுமே கருதப்படுகிறது. சமூகம் கூடிக் கொண்டாடிய இடமாகவும், அன்றைய சமூக வாழ்வியலின் பிரதிபலிப்பாகவும் அவை மதிக்கப்படவில்லை.

நமக்கு அருகிலேயே பல நூற்றாண்டுகள் கடந்த கோவில்கள், புராதன சின்னங்கள் உள்ளன. நமது முந்தைய தலைமுறைகள் நமக்காக விட்டுச் சென்ற அற்புதம் கோவில்கள். சமயம், மொழி வளம், ஆட்சி முறை, சிற்பக் கலை, ஆன்மிக நெறி, வாழ் வியல் நெறிமுறைகள், அன்றைய சமூகச்சூழல், இலக்கியங்களும், நடன, இசைக்கலைகளும் அரங்கேறிய மேடைகள் என பலமுகங்களை கோவில் மூலம் அறிய முடியும்.கோவில்கள் குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டு மையம் என்ற அளவில் மட்டுமே அறியப்படுவது வேதனைக்கு உரிய ஒன்று. நம்மிடம் இருக்கும் புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை நேற்றைய தலைமுறையும் அறியவில்லை; மதிப்பை இன்றைய தலைமுறையும் அறிந்து கொள்ளவில்லை. அடுத்த தலைமுறையாவது அவற்றைக் கொண்டாடட்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி மலை சமணப்படுக்கைகள் புராதன சின் னங்களில் குறிப்பிடத்தக்கவை.

* திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில் ஒன்பதாம் நூற்றாண் டில் கட்டப்பட்டது. பிரதான கடவுள் சிவன். சண்முகநாதன் என்ற பெயரின் முருகன் எழுந்தருளியுள்ளார். முருகன் சூரசம்ஹாரம் செய்த பின், பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்டதால், பூண்டியில் லிங்கம் அமைத்து வழிபட்டார். அதனால், மனநோய்க்கு இத்தலம் பரிகாரதலமாக கருதப்படுகிறது. நிலமட்டத்தில் இருந்து கீழ் நோக்கிச் செல்லும்படி கோவில் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு. சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம்; தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

* சுந்தரபாண்டியனால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில். முதலையுண்ட பிள் ளையை மீட்க, சுந்தரர் திருப்பதிகம் பாடி மீட்டது இத்தலத்தில் தான். அவிநாசி தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேர் என்ற பெருமையும் உடையது. திருப்புக்கொளியூர் என பழங் காலத்தில் இத்தலம் அழைக் கப்பட்டது.

* சுக்ரீவன் லிங்கம் அமைத்து வழிபட்டதால், சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்ற திருத்தலம், திருப் பூர் எஸ்.பெரியபாளையத்தில் உள்ளது. ஒன்பதாம் நூற்றாண் டுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. பாண்டியர்களாலும், மைசூர் உடையாராலும் புதுப் பிக்கப்பட்டது. இரண்டு நந்திகளும், மிகச்சிறந்த கட்டடக் கலையும் கோவிலின் சிறப்பம் சங்கள். மூலவர் மிளகீசர் எனவும் அழைக்கப்படுகிறார்.

* திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியில் சமணர்கள் வசித்ததற்கான சான்றுகள், படுக்கைள் உள்ளன.இவையெல்லாம் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையானவை. நம்மை கால காலத் துக்கும் பெருமை கொள்ளச் செய்யும் புராதன சின்னங்கள் பற்றி அறியாமல் இருந்து விடக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வது, இன்றைய தலைமுறையின் இன்றிமையாக் கடமை. இதுபோன்ற இடங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்துச் செல்வது அவசியம்!
நன்றி தினமலர்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 34
Location : இந்திய திருநாடு

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum