இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஒலிக்கு மகிமை உண்டா?

Go down

ஒலிக்கு மகிமை உண்டா? Empty ஒலிக்கு மகிமை உண்டா?

Post by ஆனந்தபைரவர் Tue Dec 28, 2010 10:29 pm

ஒலிக்கு மகிமை உண்டா? 452362896_4521a60476
ஒலிக்கும் அதன் அதிர்வுகளுக்கும் மனித உடல் மற்றும் மனதுடன் சம்பந்தம் உண்டா? ஒலியும் அதிர்வுகளும் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்தவையா?

மனித உடல், மனம் ஏன் ஆன்மாவுக்கே நலம் அளிக்க வல்லவை மந்திரங்கள் என்று ஹிந்து மதம் கூறுகிறது. மந்திரங்களின் மகத்துவத்தை விஞ்ஞானபூர்வமாக அறிய விழையும் ஆர்வம் 1787 ஆம் ஆண்டே துவங்கி விட்டது என்றால் வியாப்பாக இல்லை?

க்ளாட்னிப்ளேட்ஸ் ஜெர்மானியரான எர்னஸ்ட் ஃப்ளோரன்ஸ் ஃப்ரடரிக்ளாட்னி (தோற்றம் 30.11.1756

மறைவு 3.4.1827) ஒரு சிறந்த இசை வல்லுநர். அவர் ஒரு சிறந்த இயற்பியல் விஞ்ஞானியும் கூட 1787 ஆம் ஆண்டு அவர் தனது கண்டுபிடிப்புகளை இசை கொள்கை சம்பந்தமான கண்டுபிடிப்புகள் என்ற நூலில் எழுதி வெளியிட உலகமே பரபரப்புக்குள்ளானது. இவரது பிறப்பிலும் இறப்பிலும் கூட இசை ஒரு தற்செயல் ஒற்றுமையை ஏற்படுத்தி இருப்பதும் ஒரு அதிசயம் தான். பிரபல இசை மேதை மொஜார்ட் பிறந்த அதே ஆண்டுதான் இவர் பிறந்தார். பிரபல இசை மேதை பீத்தோவன் மறைந்த அதே ஆண்டுதான் இவர் மறைந்தார்.

க்ளாட்னிதான் ஒலியியல் என்ற புதிய இயலை வகுத்தார்.

ஒலி அலைகள் என்ன செய்யும் என்பதை அவர் சோதனைகள் மூலம் நிரூபித்தார்! நுண் மணல் பரப்பிய ஒரு தகடின் ஓரத்தில் செங்குத்தாக ஒரு வயலின் வில்லை அவர் வாசிக்க ஆரம்பித்தவுடன் ஒலிக்குத் தகுந்தவாறு வெவ்வேறு வடிவங்களாக அந்த மணல் துகள்கள் பிரிந்து தோற்றமளிக்க ஆரம்பித்தன.

இவற்றை அவர் தொகுத்தார். கால்டினி ப்ளேட்ஸ் என்று இவை உலகப் புகழ் பெற்றன.

உலகில் உள்ள ‘இயற்பியல் பொருளை’ ஒலி பாதிக்கிறது என்பதே அவரது ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு. அது பல்வேறு ஜாமட்ரி வடிவங்களை உருவாக்குவதைப் பார்த்த அனைவரும் அதிசயித்தனர்.

நெப்போலியன் அளிக்க முன் வந்த பரிசு

மாமன்னன் நெப்போலியனின் அரசவைக்கு க்ளாட்னி அழைக்கப்பட்டார். தனது சோதனைகளை மன்னர் முன் அவர் நிகழ்த்திக் காண்பித்தார். நெப்போலியன் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று அசந்து போனார்.

இப்படி ஒலி அலைகளால் மணல் துகள்களில் வெவ்வேறு வடிவங்கள் ஏன் ஏற்படுகிறது என்பதை விளக்கிக் கூறுபவர்களுக்கு 3000 ஃப்ராங்க் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தார்.

இந்தப் பரிசை 1816 இல் சோபி ஜெர்மெய்ன் என்ற பெண்மணி பெற்றார்! நெப்போனியன் க்ளாட்னிக்கு 6000 ப்ராங்க் கொடுத்து அவரைப் பாராட்டினார்.

காவராண்ட் ஆராய்ச்சி

இதைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான விஞ்ஞானிகள் ஒலி அலைகளின் சக்தியைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினர். வியன்னாவில் மார்ஷல்ஸ் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த காவாராண்ட் என்ற எஞ்சினியருக்கு திடீரென ஒரு புதுத் தொல்லை ஏற்பட்டது. எப்போதெல்லாம் அவர் தனது வகுப்பறைக்குப் போகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு இயல்பான அமைதி போய் மனக்கலக்கமும் உடல் தளர்ச்சியும் ஏற்பட்டது. அவரால் எந்தச் செயலையும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணம் ஏதுவாக இருக்க முடியும் என்று தீவிரமாக ஆராய ஆரம்பித்தார்.

மத்திரங்களைக் கண்ட மகரிஷிகள்

இந்த ஒலி நுட்ப விஞ்ஞானத்தில் நமது ரிஷிகள் மிகவும் முன்னேறி அதன் சூட்சும ஆற்றலையும் அறிந்தனர். வானில் இருந்து சூட்சும ஒலிகளைக் கண்டதால் அவர்கள் மர்ந்த்ர த்ருஷ்டா என அழைக்கப்பட்டனர்.

எந்த ஒலியை எப்படி ஒலித்தால் என்னென்ன விளையும் என்பதை அவர்கள் நேர்முகமாகக் கண்டதால் வேத மந்திரங்களை வகை வாரியாகத் தொகுத்து அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை குரு சிஷ்ய பாரம்பரியம் மூலமாகக் கற்பித்தனர். தவறானவர்கள் கையில் இது சேரக் கூடாது என்பதாலும் மந்திரங்களை பிரயோகிக்க குறிப்பிட்ட ஆன்மீக, உள, உடல் வலிமை தேவை என்பதாலும் அவர்கள் இதை குரு குல முறையில் மட்டுமே கற்பித்தனர். மந்திரங்கள் பலிக்க அவர்கள்

1) உச்சரிப்பு

2) நியமும் கட்டுப்பாடும்

3) உபகரணம்

4) நம்பிக்கை ஆகிய நான்கையும் அடிப்படைத் தேவைகளாகக் குறிப்பிட்டனர்.

நன்றி தினகரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஒலிக்கு மகிமை உண்டா? Empty Re: ஒலிக்கு மகிமை உண்டா?

Post by ஆனந்தபைரவர் Wed Dec 29, 2010 4:14 pm

அனைவருக்கும் வணக்கம்
ஒலிக்கு மகிமை உண்டா - நல்ல பதிவு. க்லாட்டினி எஃபெக்ட் காணொளி தளம் கொடுத்திருக்கிறேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

https://www.youtube.com/results?search_query=chladni+patterns&aq=1
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum