இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா-B.R.ஹரன்

Go down

பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா-B.R.ஹரன் Empty பிருங்கி மலை கார்த்திகை தீபத் திருவிழா-B.R.ஹரன்

Post by ஆனந்தபைரவர் Tue Jan 04, 2011 9:53 pm

சிவ பெருமானை “ஜோதி ஸ்வரூபம்” ஆகக்கண்டு வழிபாடு செய்து கொண்டாடுவதே கார்த்திகை தீபத் திருவிழா. மஹாவிஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் இடையே ‘தங்களில் யார் சக்தி வாய்ந்தவர்’ என்கிற வாக்குவாதம் ஏற்பட்டபோது, அப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும், அவர்களுடைய அகங்காரத்தை அகற்றுவதற்காகவும், தன்னுடைய அடி-முடியைக் கண்டுபிடிக்குமாறு அவர்களிடம் சொன்னார் சிவபெருமான். பிரம்மா “அன்ன பக்‌ஷி” உருவம் கொண்டு சிவ பெருமானின் முடியைக் காணப் பறந்தார். மஹாவிஷ்ணு “வராஹம்” போன்று உருவம் தரித்து சிவபெருமானின் பாதங்களைக் கண்டுபிடிக்க பூமியைத் தோண்டிச் சென்றார். இறுதியில் இருவராலும் இயலாமல் போகவே, சிவபெருமான் தன் ஜோதி ஸ்வரூபத்தைக் காண்பிக்க, இருவரும் தங்களுடைய நிலையுணர்ந்து அகங்காரம் நீங்கப் பெற்றனர். கார்த்திகை நட்சத்திர தினமான அன்று தன்னுடைய ஜோதியை சிவபெருமான் ஒரு குன்றாக மாற்ற, அதுவே “திருவண்ணாமலை” என்கிற பெயர் பெற்று மக்கள் வழிபடும் அக்னி லிங்க ஸ்தலமாக விளங்கி வருகிறது. இது புராணம்.

புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு சம்பவமானது, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து, கார்த்திகை நட்சத்திரம் கூடிய திருநாளில் முருகப்பெருமான் பிறந்ததாகும். இவ்விரு சம்பவங்களையும் முன்னிட்டு, கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் ”கார்த்திகை தீபத் திருவிழா” கொண்டாடுவது இந்துக்களின், குறிப்பாக தமிழ் இந்துக்களின் ஆன்மீகக் கலாசரப் பாரம்பரியம்.தமிழ் மொழி சிவபெருமானின் இரண்டு கண்களில் (மற்றது ஸம்ஸ்க்ருதம்) ஒன்றாகக் கருதப்படுவதாலும், அவருடைய மூன்றாவது கண்ணான நெற்றிக் கண்ணிலிருந்து “தமிழ்க் கடவுள்” என்று போற்றப்படும் முருகப்பெருமான் தோன்றியதாலும், தமிழ் இந்துக்கள் கார்த்திகைத் தீபத் திருவிழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலுள்ள அனைத்து குன்றங்களிலும் நெய்தீபம் ஏற்றி, சிவபெருமான், பார்வதி தேவி, விநாயகப் பெருமான், முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களை அமைதியும், நல்வாழ்வும் வேண்டி வழிபடுவது தமிழ் இந்துக்களின் பண்பாடு.

“பிருங்கி மலை” – பிருங்கி மஹரிஷி தவம் செய்த குன்று

இஸ்லாமியர்களும், கிறுத்துவர்களும் நம் பாரத தேசத்தின் மீது படையெடுத்து நம்மை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைப்படுத்தி ஆட்சி செய்தபோது, லட்சக்கணக்கான கோவில்களை அடியோடு அழித்தனர். பல மலைக்கோயில்களையும், குன்றுகளில் உள்ள கோயில்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றை அழித்து அவ்விடத்தில் சர்ச்சுகளும் மசூதிகளும் கட்டித் தங்களின் வழிபாட்டுத் தலங்களாகவும் மாற்றினர். அம்மாதிரி சென்னைப்பகுதியில் மாற்றப்பட்ட இடங்களுள் ஒன்று தான் தற்போது “புனித தோமையர் மலை” என்று அழைக்கப்படுகிற “பிருங்கி மலை”. 1910-ஆம் ஆண்டு வரை கூட அது பிருங்கி மலை என்றே அழைக்கப்பட்டு வதுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. மிகவும் போற்றத் தகுந்த சரித்திரம் வாய்ந்தது பிருங்கி மலை.

சிவபெருமானின் மீது பெரும் பக்தி கொண்டவர் பிருங்கி மஹரிஷி. எப்பேர்பட்ட பக்தியென்றால், சிவனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். சிவனின் மறுபாகமான சக்தியைக் கூட வணங்கமாட்டார் அந்த அளவிற்கு சிவபெருமானின் மீது மட்டுமே பக்தி செலுத்திவந்தவர். ஒருமுறை சிவபெருமானை வழிபட கைலாயம் சென்ற பிருங்கி மஹரிஷி, அங்கே சிவன்-சக்தி இருவரையும் முனிவர் பெருமக்கள் வலம் வந்து வணங்குவதைக் கண்டார். சக்தி தேவியை வணங்க விரும்பாத பிருங்கி மஹரிஷி வண்டின் உருவம் கொண்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கித் தன் வழிபாட்டை முடித்துக் கொண்டார்.

அவமானப் பட்ட சக்தி தேவியின் சாபத்தால் மஹரிஷி தன் சக்தியனைத்தையும் இழந்து வெறும் எலும்புக்கூடு போன்ற தோற்றத்தைப் பெற்று கீழே விழப்போகும் தருவாயில் தன் கோலைக் கொடுத்து அவரைத் தடுத்தாட்கொண்டார் சிவபெருமான். சிவனும் சக்தியும் ஒன்றேயாதலால் சிவ வழிபாடே சக்தி வழிபாடாகிவிடுகிறது என்கிற உண்மை கூடத் தெரியாமல் சக்தி தன் பக்தனை சபித்த காரணத்தால் கோபம் கொண்ட சிவபெருமான், பார்வதி தேவியை பூலோகம் சென்று கடும் தவம் செய்து பின்னர் வந்து தன்னை அடையுமாறு பணித்தார்.

அதன்படி பார்வதி தேவியும் செண்பக மலர்கள் பூத்துக் குலுங்கிய செண்பக வனத்தில் வந்து இறைவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அந்தத் தலமே இன்று “திரு நாகேஸ்வரம்” என்று புகழ் பெற்று விளங்குகிறது. அங்குள்ள ஈசன் “செண்பகவனேஸ்வரர்” என்றும் தவம் செய்யும் தேவி “கிரிஜ குஜாம்பாள்” என்றும் போற்றி வணங்கப் படுகின்றனர். தேவியின் தவம் கலையக்கூடாது என்பதால், கிரிஜ குஜாம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவதில்லை. மேலும் இத்தலம் நவக்ரஹ ஸ்தலங்களில் “ராகு” ஸ்தலமாகவும் விளங்குகிறது.
பிருங்கி மஹரிஷி சக்தியை அவமானப் படுத்தியதையும் பொறுக்க மாட்டாத சிவபெருமான், அவரையும் பூவுலகு சென்று கடும் தவம் புரிந்து பின்னர் தன்னை வந்தடையுமாறு பணித்தார். பிருங்கி மஹரிஷி பூவுலகு வந்தமர்ந்து தவம் புரிந்த மலையே “பிருங்கி மலை” ஆகும். அம்மலையின் அடிவாரத்திலிருந்து சிவபெருமான் “நந்தி” உருவம் கொண்டு மஹரிஷிக்குத் தரிசனம் தந்து அருள் பாலிக்கிறார். அவ்விடமே பின்னர் “நந்தீஸ்வரர் ஆலயம்” என ஆக்கப்பட்டது. அவ்வாலயத்தின் தேவி “ஆவுடை நாயகி” என்று போற்றப்படுகிறாள். தற்போது ‘புனித தோமையர் மலை’ இரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் நந்தீஸ்வரர் கோவிலிலிருந்து பார்த்தால் ‘பிருங்கி மலை’ அழகாகத் தெரியும். மேற்கண்ட வரலாறும் இக்கோவிலின் கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டுள்ளது. காஞ்சி முனிவர் மஹா பெரியவர் பரமாசார்ய ஸ்வாமிகள் இந்தக் கோவிலிற்கு வருகை தந்து இங்குள்ள மக்களுக்கு மேற்கண்ட தலபுராணத்தைக் கூறி அருளியிருக்கிறார்கள்.விஜயநகர மன்னர்களால் பின்னாளில் பிருங்கி மலை மீது கட்டப்பட்ட கோவிலை, பதிநான்காம் நூற்றாண்டில் வந்த போர்ச்சுகீசியர்கள் இடித்துத் தரைமட்டாமாக்கி, இப்போதுள்ள புனித தோமையர் சர்ச்சைக் கட்டினர். மயிலைக் கடற்கரையில் அப்போதிருந்த கபாலீஸ்வரர் ஆலயத்தையும் போர்ச்சுகீசியர் இடித்து அதே இடத்தில் தற்போதுள்ள புனித தோமையர் தேவாலயத்தை எழுப்பியது குறிப்பிடத் தக்கது. பிற்காலச் சோழர்களின் கல்வெட்டுகள் பல அந்த சர்ச்சின் சுவர்களில் இருந்து பின்னர் அழிக்கப்பட்டன. திருஞான சம்பந்தரும், அருணகிரிநாதரும் பாடியுள்ள பதிகங்களிலிருந்து மயிலைக் கடற்கரையில் அற்புதமான சிவ ஆலயம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. மேலும் போர்ச்சுகீசியர் மயிலைக் கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் ஆலயத்தை அழித்த வரலாறு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப் பட்டுள்ளது. தற்போது திருமயிலை ஊரின் உள்ளே மாற்றியமைக்கப்பட்ட கபாலீஸ்வரர் கோவிலின் கல்வெட்டுகளிலும் இவ்வுண்மை பொறிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு பல ஆதாரங்கள் கொண்ட ஒரு அற்புதமான வரலாறு மறைக்கப்பட்டு, ஒரு சிறுதுளி கூட உண்மையே இல்லாத, இந்தியாவிற்கு அவர் செல்லவில்லை என்று வாடிகனின் போப் பெனடிக்ட் அவர்களே ஒப்புக்கொண்ட, பொய்யான கதாபாத்திரமான தோமையர் என்பவர் பெயரில் மாபெரும் புளுகு மூட்டையான ஒரு வரலாறு புனையப்பட்டு, அவ்வரலாறு பள்ளிப் பாடங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது மிகவும் வேதனை தரும் ஒரு விஷயமாகும்.

கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டங்கள்

சென்னை நகருக்கு அருகிலேயே தாம்பரம் என்னும் இடத்தில் உள்ள “பச்சை மலை”யிலும், பல்லாவரம் என்னும் இடத்தில் உள்ள ‘திரிசூலம்’ என்று அழைக்கப்படும் “பெரிய மலை”யிலும் சிவன் மற்றும் முருகன் கோவில்கள் உள்ளன. ஆயினும் இக்கோவில்களைச் சுற்றி கிறுத்துவ மிஷனரிகள் சூழ்ச்சிகள் மூலம் மதமாற்றம் செய்து ‘ஆன்ம அறுவடை’ செய்து வருகின்றனர். திரிசூலம் மற்றும் பச்சை மலைகளில் கடந்த சில ஆண்டுகளாக கார்த்திகைத் தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. விஸ்வ ஹிந்து பரிஷத்தினர் மற்றும் இந்து முன்னணியினர் ஆகியோரின் விடாமுயற்ச்சியினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிருங்கி மலையிலும் தீப வழிபாடு நடைபெறுகிறது. அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு, பின்னர் தீபங்கள் ஏந்தியபடியே மலையின் மறுபக்கத்தில் உள்ள மாசாளியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, அங்கே அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர் அப்பகுதியில் உள்ள மக்கள். அமைதியான இந்த வழிபாட்டிற்கு காவல் துறையினரும் பாதுகாப்பு தருகின்றனர். பிருங்கி மலையில் ஒரு சித்தரின் சமாதி இருப்பதாகவும் அறியப்படுகிறது.

“இந்த பிருங்கி மலையானது தொன்மையான புராண வரலாறு கொண்டுள்ளமையால், இதன் புராதன முக்கியத்துவத்தை கார்த்திகை தீபத் திருவிழா மூலம் மீட்பதே எங்கள் நோக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இத்திருவிழா இனி ஒவ்வொரு ஆண்டும் தொடரும். காவல் துறையினரிடம் சொல்லி அவர்கள் அனுமதியுடன் மற்றவர்களுக்கு எவ்வித தொல்லைகளும் கொடுக்காமல் அமைதியான முறையில் தீபத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். காவல் துறையும் பாதுகாப்பு தந்து எங்களுக்கு பரிபூரண ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். இந்தப் புனிதமான பிருங்கி மலையின் உன்னத தல வரலாறு பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாது. பிருங்கி மலையின் உண்மைகள் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தி அவர்கள் பெரும்பான்மையாக தீபத் திருவிழாவில் பங்கேற்குமாறு செய்வதே எங்கள் குறிக்கோள்” என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சேவகர்களுள் ஒருவரான பிருங்கி சரவணன் கூறினார்.

கிறுத்துவ சூழ்ச்சி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தின் அருகில் உள்ள அச்சிறுபாக்கம் எனும் ஊரில் உள்ள குன்றில் சட்டத்திற்குப் புறம்பாக நிலத்தைக் கைவசப்படுத்தி பிரும்மாண்டமாக ஒரு ஏசுவின் சிலையையும் நிர்மாணித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே மேரி மாதா சர்ச்சு ஒன்றைக்கட்டி வருகின்றது கத்தோலிக்க கிறுத்துவ சபை. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு பாத யாத்திரையாக வருகின்ற பக்தர்களை “இம்மலையின் மீது இருக்கும் மேரி மாதா தான் உண்மையான மாரியம்மன்; இம்மலையில் ஏறி அவளை தரிசனம் செய்துவிட்டு அவளின் அருள் பெற்றுப் பின்னர் மேல்மருவத்தூர் செல்லுங்கள்” என்றெல்லாம் சொல்லி அப்பக்தர்களைக் குழப்பி ஏமாற்றி வருகின்றனர் கிறுத்துவர்கள். அம்மலையில் பௌர்ணமி ‘கிரிவலம்’ கூட ஏற்பாடு செய்துள்ளது கிறுத்துவ சபை! அவ்வேற்பாடுகளை முன்னின்று செய்த அதே பாதிரியார் தான் தற்போது புனித தோமையர் மலையின் சர்ச்சிற்குப் பொறுப்பேற்றுள்ளார். அவர் அங்கேயும் “பௌர்ணமி கிரிவலம்” ஏற்பாடு செய்ய முயலுவதாக செய்திகள் வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக ஹிந்துக்கள் பிருங்கி மலையில் தீபத் திருவிழா கொண்டாடி வருவதனால், அக்கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதைத் தடுப்பதற்காகவே அவர் இவ்வாறு சூழ்ச்சி செய்கிறாரோ என்று இந்துக்கள் சார்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

அச்சந்தேகத்தை உறுதி செய்த சரவணன், “இந்துக்களைப் பயங்கரவாதம், மதமாற்றம் ஆகிய ஆபத்துகளிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றும், நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டுமென்றும், கார்த்திகைத் தீபத் திருநாளில் சிவபெருமான், சக்தி தேவி, விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களிடம் வேண்டி வழிபாடு நடத்துகின்றோம்” என்று கூறினார்.

முடிவுரை

திருவண்ணாமலை, திருப்பறங்குன்றம் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து மலைக் கோவில்களிலும் கார்த்திகைத் தீபப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகின்ற போது, ஆறே கிலோமீட்டர் தொலைவில் மூன்று குன்றுகளைத் தன்னிடத்தே கொண்டுள்ள சென்னை நகரம் மட்டும் விதிவிலக்காக இருக்கலாமா? நம் புராணத்திலும் முக்கியமான இடம் பெற்றுள்ள சென்னை நகரத்தில் வாழும் ஹிந்துக்கள், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணியினர் விடா முயற்ச்சியுடன் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வரும் திரிசூலம், பச்சை மலை, பிருங்கி மலை ஆகிய குன்றங்களின் தீபத் திருவிழாவில் பெருவாரியாகக் கலந்து கொண்டு அவ்வியக்கத்தினருக்குத் தங்கள் ஆதரவை நல்கி பாராட்டையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளனர்.

நன்றி தமிழ்ஹிந்து .காம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum