இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2

Go down

ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Empty ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2

Post by ஆனந்தபைரவர் Sun Feb 13, 2011 2:02 pm

வார்தாவுக்கு 2004 இல் ஒரு கிறிஸ்தவ சகோதரருடன் சென்றிருந்தேன். ஒரு நாள் காலை அருகிலுள்ள பொனார் எனுமிடத்தில் உள்ள ஆச்சார்ய வினோபா பாவேயின் ஆசிரமத்துக்கு
செல்வது என முடிவு செய்து சென்றோம். அவர்களது தியான அறையில் பல தெய்வ உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த ஒரு சிலையைக் காட்டி நண்பரிடம் 'இது யார்
தெரிகிறதா?' என்றேன். கூர்ந்து பார்த்த நண்பர் தெரியவில்லை என்றார். 'ஏசு' என்றேன். மீண்டும் பார்த்த அவர் கடுப்பாகிவிட்டார். நிச்சயமாக ஏசு கிடையாது. என்ன சொல்கிறீர்கள்!
இஷ்டத்துக்கு ஏசு கையில் எதை வேணுமானாலும் கொடுத்து பொம்மை செய்து இதுதான் ஏசு என்பது நன்றாக இல்லை. எங்கள் மத நம்பிக்கையை கிண்டல் செய்கிற மாதிரி
இருக்கிறது. என பொரிந்து தள்ளிவிட்டார். வினோபா ஆசிரம சர்வ தரும பிரார்த்தனையில் 'யஹோவ சக்தி நீ ஏசு பிதா பிரபு நீ' என வருகிற வரிகளையும் அவர் விமர்சித்தார். இந்த ஏசு உண்மையான ஏசு கிடையாது என்றார். அதற்கு பிறகு வேறு ஏதேதோ பேசினோம். பிறகு ஊர் திரும்பிய பின்னர் அவரிடம் மற்றொரு ஏசு படத்தை காட்டினேன். இது யார் என்றேன். ரொம்ப அன்போடு 'ஏசப்பா' என்றார். விசயம் என்னவென்றால் அவர் வினோபா ஆசிரமத்தில் பார்த்த ஏசுவுக்கும் இந்த ஏசுவுக்கும் வேறுபாடு அதிகமில்லை. இதோ கீழே பாருங்கள். இது பிறகு நான் அந்த கிறிஸ்தவ சகோதரரிடம் காட்டிய ஏசு படத்தை ஒட்டிய படம்.
ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Goodshepherd
காலண்டர் கலையில் நல்ல மேய்ப்பராக ஏசு கிறிஸ்து

கீழே இருப்பது வினோபா ஆசிரமத்தில் உள்ள ஏசு உருவம்.
ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Vinoba_jesus
இரண்டிலும் ஏசு 'நல்ல இடையன்' என காட்டப்படுகிறார். ஆனால் ஒன்றில் ஆடு மேய்க்கும் கோல் மற்றதில் புல்லாங்குழல். இந்த வேறுபாடு முக்கியமான ஒன்றாகும். இடையனின்
இசைக்கருவி இழந்து ஏசு இடையன் கை கோலேந்திய இறை அரசனாக மாறியது கிறிஸ்தவ இறையியலின் முக்கிய மாற்றம் என்று கூறலாம். இதன் வரலாற்று பின்னணியை
அறிந்து கொள்ளும் போது இதனை நாம் இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.


ஏசு குறித்த சித்திரங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்த போது அவை பிற புனைவு புராண நாயகர்களின் அம்சங்களை உள்வாங்கியே வளர்ந்தது.


ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Orph1
ஓர்பியஸ்-மண்டல அமைப்பின்/ சக்கரத்தின் நடுவில் ஓர்பியஸ்: விலங்குகள் மெய்மறக்கும் இசை கலைஞனும் ஆன்மீக குருவும். மித்ரா இறை தெய்வ தலையணியை கவனியுங்கள்
கிறிஸ்தவத்தின் தொடக்க கால கட்டத்தில் ரோமானியத்தில் ஒரு முக்கிய மறை-சமய இயக்கமாக ஓர்பியஸ் மதம் விளங்கியது. ஒரு விதத்தில் ஓர்பியஸ் சமயம் அதற்கு முந்தைய டயனோசியஸ் சமயத்துடன் ஒட்டுறவு கொண்டதாக விளங்கியது. அதன் நீட்சியாக அதே நேரத்தில் டயனோனிஸியஸ் சமயத்தினை மறுதலிக்காதவாறு விளங்கியது. தத்துவம், புராணம், ஒழுக்க முறைகள், மறை-ஞானம் ஆகிய அனைத்தும் கொண்ட ஆர்பியஸ் சமயத்தின் மையத்தில் விளங்கியவர் ஆர்பியஸே ஆவார். ஆர்பியஸ் ஞானி கூடவே இசை மேதை. அவரது இசை மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் ஈர்த்து மெய்மறந்திட வைக்கக் கூடியதாகும். எனவே அவர் நல்ல மேய்ப்பன் என அறியப்பட்டார்.

ஆர்பியஸும் மரண உலகு சென்று திரும்பியவர். கொலை செய்யப்பட்டவர். மேலோட்டமான வேற்றுமைகளுக்கு அப்பால் ஏசு காதைக்கும் ஓர்பியஸூக்கும் பல இணைகள் உண்டு. ஏசு யாருக்காக இறந்தார்? கிறிஸ்தவர்கள் உலகின் பாவங்களுக்காக ஏசு இறந்ததாக கூறிடுவர். ஆனால் இந்த பாவத்தை இரத்தத்தால் துடைத்தல் என்பது ஏசுவை ஏற்பது மூலமே செயல்படுகிறது. ஏசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் பாவங்களே அவரது இரத்தத்தால் துடைக்கப்படுகின்றன. நம்பிக்கையாளர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கமாவார்கள். இச்சபை ஏசுவின் மணவாட்டி ஆகும்.


சுருக்கமாக சொன்னால் ஏசு தன் மணவாட்டியினை மீட்கவே சிலுவையில் மரித்தார் எனலாம். இதையே ஆர்பியஸும் செய்தார். அவர் தம் மனைவியான யூரிடைஸுக்காக மரித்தார். மீள்கையில் அவரை கண்டவர்கள் பெண்கள் ஆவர். ஏசுகாதையிலும் மரணத்திலிருந்து மீண்ட ஏசுவை கண்டவர் மகதலேனே ஆவார். ஏசு மகதலேனிடம் தன்னை தொடாதிருக்கக் கூறுகிறார். யோவான் சுவிசேசத்தில் வரும் 'Noli me tangere' (என்னைத் தொடாதே) எனும் இலத்தீன் வாசகங்கள் பிரசித்தியானவை. பல மத்தியகால ஓவியங்களின் கருவும் கூட. இந்த ஓவியங்களில் ஏசு ஒருவித வெறுப்பு அல்லது அச்ச உணர்ச்சியுடன் மேரி மெகதலேனிடம் இருந்து விலகுவதைக் காணமுடியும். ஓர்பியஸ் காதையில் பெண்கள் ஓர்பியஸை கொல்கின்றனர். இங்கோ ஏசுவை தொடாமலே ஏசுவின் மண்ணுலக நீத்தலை அறிவிப்பவளாக மேரி மெகத்லேன் ஆகிறார். யோவான் சுவிசேசத்தின் இந்த இடம் ஓர்பியஸ் தொன்மத்தின் அழுத்தத்தையேக் காட்டுகிறது என்பதில் ஐயமில்லை.
ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Orpheus_killed
பெண்களால் கொல்லப்படும் ஓர்பியஸ்
ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  1525
'என்னைத் தொடாதே' மேரி மகதலேனை விலக்கும் ஏசு : ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  1537
'என்னைத் தொடாதே' மேரி மகதலேனை விலக்கும் ஏசு : 1537
எனவே ஏற்கனவே ரோமானிய உலகில் நல்ல மேய்ப்பனாக அறியப்பட்ட ஓர்பியஸின் சித்திரத்தில் ஏசுவாக கிறிஸ்தவர்கள் வழிபட்டனர் என்பதனை அக்கால கிறிஸ்தவ மண்ணடியிலுள்ள அடக்க அறை சித்திரங்களில் (catacombs) காண முடிகிறது. கிபி இரண்டாம் நூற்றாண்டில் எந்த ஓவியம் ரோம பிரக்ஞையில் ஓர்பியஸைக் காட்டியதோ அதே போன்ற ஓவியம் நாலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சமூகத்துக்குள் வரையப்பட்ட போது அது கிறிஸ்துவை நல்ல மேய்ப்பனாக காட்டுவதாக ஆகியது.

ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Christ-as-orpheus-catacombs-of-pete
நான்காம் நூற்றாண்டு கிறிஸ்தவ அடக்க அறை சித்திரத்தில் ஓர்பியஸாக ஏசு - மித்ரா தலையணியுடன்:ஏசுவின் கையில் இடைக்கோல் இல்லை இசைக்கருவியே உள்ளது என்பதனை கவனியுங்கள்
ஓர்பியஸின் இடத்தில் ஏசு வந்த போது ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. டயனோசியஸ்-ஓர்பியஸ்-மித்ரா ஆகிய தெய்வச் சடங்குகளின் சுழல்தன்மை கிறிஸ்தவத்தில் இல்லாது போயிற்று, முந்தைய தெய்வ சம்பிரதாயங்களை நிராகரிக்காமல் உள்வாங்கிய தன்மை போய், அவற்றின் தன்மைகளை மட்டும் உட்கொண்டு அவற்றினை அழித்தொழித்து எழுந்தது கிறிஸ்தவ நல்லமேய்ப்பன் பிம்பம். ஆறாம் நூற்றாண்டில் 'நல்ல மேய்ப்பர்' ஏசு சிலுவையை ஆட்டிடையனின் கோலாக தாங்கி அமர்கிறார். அத்துடன் இசைக்கருவிகள் மறைந்துவிட்டன.ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Image_062_1

ஆறாம் நூற்றாண்டில் நல்ல மேய்ப்பனாக ஏசு: இசைகருவிகள், மித்ரா தலையலங்காரம் ஆகியவை மறைந்து விட்டன. மாறாக கோல் வந்துவிட்டது.ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  570_bc
பழம் கிரேக்க ஆடு சுமக்கும் மேய்ப்பனின் சித்திரம்: கிறிஸ்தவத்திற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கும் முந்தைய இந்த சிற்பம் பிற்கால ஏசு சித்திரங்களின் வடிவமைப்பில் முக்கிய இடம் வகித்தது.(கிமு 570)
ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Christ_1
ஆடு சுமக்கும் மேய்ப்பனாக ஏசு - தொடக்ககால சித்திரங்களில் மேய்க்கும் கோல் இல்லாமல்
ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Later_shepherd
ஆடு சுமக்கும் மேய்ப்பனாக ஏசு - பிற்கால இரசிய கிறிஸ்தவ சித்திரத்தில் மேய்க்கும் கோலுடன்
மெசபடோமிய தொன்மங்களிலும் எகிப்திய சித்திகரிப்புகளிலும் 'அரசன் மக்களின் மேய்ப்பன்' எனும் அரசதிகார பிம்பத்துக்கு ஏசு மாறிவிட்டார். பிற்கால காலண்டர் பட பிம்பங்கள் வரை ஏசுவின் இடை-செங்கோல் மாறிடவே இல்லை.


ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Krishna_cows
இதற்கு நேர் எதிரானதோர் பரிணாம வளர்ச்சியை நாம் பாரதத்தின் கிருஷ்ண உருவில் காணமுடியும். துவாரகையின் அதிபதியாகவும் மதுராதிபதியாகவும் அறியப்பட்டாலும் கூட ஸ்ரீ
கிருஷ்ணரின் இடையன் பிம்பம் அவர் புல்லாங்குழல் ஊதி கால்நடைகளையும் கோபிகளையும் மெய்மறக்க செய்பவராகவே உள்ளார். கிருஷ்ணரின் வேணு பாரத இலக்கியத்திலும் கலையிலும் முக்கிய குறியீடாகிவிட்டது. 'சாதாரண' நாடோ டி பாடல்களாகட்டும், கண்ணதாசனின் 'புல்லாங்குழல் ஊதும் மூங்கில்கள்' ஆகட்டும், கபீரின் பாடல்களை விளக்கும் ஓஷோ உரை ஆகட்டும் இறைவன் இதழ் பொருந்திய புல்லாங்குழல் பாரதத்தின் கூட்டு தெய்வீக பிரக்ஞையில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. பின் தொடரும் நிழலின் குரலில் கெ.கெ.மாதவன் நாயர் அருணாச்சலத்துக்கு எழுதுகிறார்:
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Empty Re: ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2

Post by ஆனந்தபைரவர் Sun Feb 13, 2011 2:22 pm

ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  0
"என் பேரப்பையனை தொட்டு அணைக்கும் போதெல்லாம் எனக்கு மனம் முழுக்க கிருஷ்ணனின் புல்லாங்குழல் நாதம்தான் கேட்கும். பிரசங்கம் செய்து புத்தகம் படித்து, கிருஷ்ணனின் முரளியின் தேனை இழந்துவிடாதே. அதைத் தவிர அர்த்தம் எதுவும் மானுட வாழ்வுக்கு இல்லை." ஒருவேளை கிறிஸ்தவத்தின் பெரும் சோகமே அதுவாக இருக்கக் கூடும் - தெய்வீக இடையனின் வேணு கானத்தை இழந்தது. ஆனால் கிறிஸ்து தன் ஓர்பியஸ் தன்மையை அடைய தன் ஆட்டிடைய செங்கோலை இழக்க வேண்டியிருக்கும். வரலாற்றுத்தன்மை, மதமாற்றம், விரிவாதிக்க மனப்பான்மை என்பவற்றால் ஆகிய செங்கோல் அது. காலனிய விஸ்தீகரணம், இனப்படுகொலைகள், புனித விசாரணைகள் ஆகியவற்றினை நடத்திய அதிகாரத்துவத்தின் செங்கோல் அது. ஏசுவினை எங்கும் பரவிய தெய்வீக உணர்வாக உள்ளுணர்ந்த ஞானிகளுக்கு அந்த செங்கோலினை துறந்திடுவது எளிதான இயற்கையான விஷயம்தான். தெயில் டி சார்டின்களில் ஆந்தோனி தி மெல்லாக்களில், அசிசியின் பிரான்ஸிஸ்களில் கேட்கும் ஓர்பியஸின் இசை கோவா இன்க்விசிஷன் புகழ் சேவியர்களிலும் பெனிடிக்ட்களிலும் இல்லாமல் போவதைப் போல இயற்கையான விசயம்.

ஏசு வரலாற்று அடிப்படையும் அப்பாலும்:2  Lord_krishna_puskar-paintings-1
ஓடக்குழல் ஊதும் ஓங்கார பிரம்மம்

நன்றி அரவிந்த நீலகண்டன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum