இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அனைத்து வளங்களும் தரும் ஆதித்ய ஹ்ருதயம்-தமிழில்

Go down

அனைத்து வளங்களும் தரும் ஆதித்ய ஹ்ருதயம்-தமிழில் Empty அனைத்து வளங்களும் தரும் ஆதித்ய ஹ்ருதயம்-தமிழில்

Post by ஆனந்தபைரவர் Tue Aug 03, 2010 8:51 pm

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என்கின்றது சிலப்பதிகாரம். சூரிய வழிபாடு பண்டைக்காலத்திலிருந்தே நமது பாரத நாட்டில் இருந்துள்ளது. கிழக்கிலே கொனார்க்கிலும், மேற்கிலே மொட்டேராவிலும் தெற்கிலே சூரியனார் கோவிலும் அமைந்துள்ள சூரியர் கோவில்களே இதற்கு சான்றுகள் . சனாதன தர்மமான இந்து மதத்தை அறு சமயங்களாக வகுத்துக் கொடுத்த ஆதி சங்கர பகவத் பாதாளும் சூரிய வழிபாட்டை சௌரமாக வகுத்துக் கொடுத்தார்.


இன்றும் சிவாலயங்கள் அனைத்திலும் நவ கிரக வழிபாடு உள்ளது. நவகோள்களின் நாயகனாக விளங்குபவர் சூரியன். இவர் ஆதித்யன், பாஸ்கரன், திவாகரன், பானு, ரவி, பிரபாகரன், பரிதி, கதிரோன், வெய்யோன், என்று பல திருநாமங்களால் அழைக்கப்படுகின்றார். உஷா மற்றும் பிரதியுஷா(சாயா) தேவிகளுடன் சூரியன் வணங்கப்படுகின்றார். தமிழ் நாட்டிலே பொங்கல் பண்டிகை நல்ல விளைச்சலுக்கு காரணமான சூரிய தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே கொண்டாடப்படுகின்றது.

பௌதீக சாஸ்திரப்படி சூரியன் மஹா கொதி நிலையில் உள்ள வாயுக்கள் நிரம்பிய கோளமாகும். நமக்கு உணவும், உயிரும் தர தினமும் உதயமாவதாகவும் கருதப்படுகின்றது. சூரியன் இல்லையென்றால் தாவரங்கள் photosynthesis என்று சொல்லப்படும் உணவு தயாரிப்பது இல்லை, தாவரங்கள் இலையென்றால் மான், மாடு முதலிய மிருகங்கள் இல்லை, இம்மிருகங்கள் இல்லையென்றால் சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இல்லை எனவே சூரிய ஒளியே உலகில் உயிர்களுக்கு ஆதாரம்.

ஆயிரம் கிரணங்களுடன் நம்மை உதய நேரத்தில் பிரம்மா ரூபத்திலும், உச்சிப் போதில் பரமேஸ்வர ரூபத்திலும், அஸ்தமன மாலை நேரத்தில் விஷ்ணு ரூபமாகவும் காப்பதாக ஐதீகம், காலை மற்றும் மாலை சூரியக் கதிரில் விட்டமின்- D இருப்பதாக விஞ்ஞானமும் கூறுகின்றது.

மஹா பாரதத்தில் தர்மர் சூரிய பகவானை ஆராதித்து அக்ஷய பாத்திரம் பெற்றார். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு அந்த காயத்ரியின் சாராம்சம் " தியானத்திற்குரிய சூரிய பகவானுடைய ஒளி எங்கள் உள்ளத்தில் புகுந்து சிந்தனைகளை தூண்டி விடுவதாக என்பதாகும்.

ஸ்ரீ யாக்ஞவல்க்ய மஹரிஷி தான் அருளிச் செய்த ஸ்ரீசூர்ய கவச தோத்திரத்தில் ’தினமணியானவன்’, இரட்சிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன், சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரஹங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர் இவர். இவருக்குரிய அதி தேவதை - அக்னி, பிரத்யதி தேவதை - ருத்திரன், தலம் - சூரியனார் கோவில், றம் - சிவப்பு, வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம், தான்யம் - கோதுமை, மலர் - -சந்தாமரை, எருக்கு, வஸ்திரம் - சிவப்பு, ரத்தினம் - மாக்கம், அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்.

இனி இந்த சூரிய தேவனுக்குரிய மிக பலம் வாய்ந்த துதியான ஆதித்ய ஹ்ருதயம் எவ்வாறு இராம பிரானுக்கு கும்ப முனி என்று அழைக்கப்படும் அகத்திய முனிவரால் எப்படி உபதேசிக்கப்பட்டது என்பதைப் பார்ப்போமா? யுத்த களத்திலே ராவணனை கடைசியாக எப்படி அழிப்பது என்று யோசித்துக் கொண்டு இராம பெருமான் ன்ற போது , பல தேவர்களுடனும், கந்தவர்களுடனும், ரிஷ’களுடனும் சேர்ந்து இராம இராவண யுத்தத்தை கவனித்துக் கொண்டிருந்த பெரும் சிறப்பு வாய்ந்த கும்ப முனி என்று அழைக்கப்படுபவரும், அம்மையப்பரின் திருக்கல்யாணத்தின் போது வடக்கு திசை தாழ்ந்து தெற்கு உயர்ந்த போது உலகைச் சமப்படுத்த வந்தவருமான அகஸ்திய முனிவர், ராமரிடம் வந்து பேசத் தோடங்கினார் : "பெரும் தோள்வலி படைத்தவனே, இராமா! என்றுமே அழியாத ஒரு இரகசியத்தை உனக்கு உரைக்கின்றேன் கேள். நான் கூறப்போவது ஆதித்ய ஹ்ருதயம் என்கிற துதி. இது சாஸ்வதமானது; புனிதமானது; அழிவற்றது; எல்லா பாவங்களையும் ஒழிக்க வல்லது; எல்லா எதிரிகளையும் அழிக்க வல்லது; மன குழப்பத்தையும், துன்பத்தையும், வேரோடு அறுக்க வல்லது; ஆயுளை வளர்க்க வல்லது; பெறும் சிறப்பு வாய்ந்தது. தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவனும், உலகுக்கே ஒளி தருபவனும், தினம் தவறாமல் தோன்றுபவனுமான உனது இஷ்வாகு குல தெய்வமான சூரியனைப் பற்றிய துதி இது. உலகை மட்டுமல்லாமல் தேவர்களையும் கூட வாழ்விப்பவர் சூரிய பகவான். அவரே பிரம்மா!, விஷ்ணு!, சிவ பெருமான்!, அவரே கந்தன்!, ப்ரஜாபதி!, இந்திரன்!, குபேரன்! அவரே காலன், யமன்!, சோமன்!' வருணன்! அவரே அணைத்து பித்ருக்களும் ஆவார்! அவரே அஷ்ட வஸ"க்கள் ஆவார்! அவரே மருத்துவர் ஆவார்! அவரே மனு!, வாயு!,மற்றும் அக்னி! பருவங்களின் காரணம் அவரே! உலகை உய்வித்து வைத்திருக்கின்ற ஒளியின் இருப்பிடம் அவரே! உலகின் மூச்சுக் காற்று அவரே." என்று தொடங்கி சூரிய பகவானின் பெருமைகளையும், சிறப்புகளையும் வர்க்கும் துதிகளை கீழ் கண்டவாறு

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்


தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:


ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு


ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்


ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்


ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்


சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:


ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:


பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :


ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:


ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்


ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:


வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:


ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:


நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே


நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:


ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:


நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:


பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:


தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:


தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே


நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:


ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்


வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:


ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ


பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு


அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்


ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்


ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்


ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்


அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி

என்று கூறிய அகஸ்திய மாமுனி கூறி இறுதியாக " இரகு குலத்தில் உதித்தவனே! சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய காலங்களிலும். எந்த துன்பமும் ஏற்படுவதில்லை. தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை முணைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள், மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால் அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும். பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலி பெற்றவருமான ஸ்ரீ ராமர் சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவ€ணை வென்ற இந்த மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum