இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


போகரும் புலிப்பாணி பரம்பரையும்!

2 posters

Go down

போகரும் புலிப்பாணி பரம்பரையும்! Empty போகரும் புலிப்பாணி பரம்பரையும்!

Post by agnilingam Sat May 28, 2011 11:25 pm

போகர் சித்தர் ஆகாய மார்கமாக பயணம் செய்யும் போது பழனியை கண்டு, இந்த இடம் தான் நம் பூஜைக்கு ஏற்ற இடம் என தீர்மானித்து தரை இறங்கினார். அங்கே அவர் கண்ட காட்சி அவரது எண்ணத்தை உறுதி செய்தது. அவர் கண்டது, ஒரு வெள்ளை காகம், சிவப்பு நிற கொக்கு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் இரண்டு குன்றுகள். வெள்ளை குன்று சிவகிரி என்றும், சிவப்பு குன்று சக்திகிரி என்றும் அவர் உணர்ந்தார்.

அவர் பழனியை வந்தடைந்த காலம் என்பது த்வாபர யுகத்தின் முடிவும், கலி யுகத்தின் தொடக்கமும். அங்கு வந்து சேர்ந்த உடனேயே ஒரு குன்றின் மேல் தன் கமண்டலத்தையும், கைத்தடியையும் வைத்து, இறைவனாக பாவித்து தினமும் பூசை செய்து வரலானார். பின்னர் பலரிடமிருந்தும் வந்த உத்தரவால், ஒரு நவபாஷாண சிலை செய்து அதற்கு தண்டாயுத (முன் சொன்ன கைத்தடியின் பெயர்) பாணி (கமண்டலத்துக்குள் இருக்கும் நீர்) என்று பெயர் வைத்து நித்ய பூஜை செய்து வரலானார். அந்த நவபாஷாண சிலைக்காக ஒன்பது வித விஷங்களை உருவாக்கினார். அவை , வீரம், பூரம், ரசம், கந்தகம், மோமசலை, கௌரி, PHOSPHORUS, துருசு, வெள்ளை பாஷாணம் என்பவை.

கலியுகம் பிறந்த பின் 205 ஆண்டுகள் அந்த சிலைக்கு போகர் பூசை செய்து வந்தார். அதற்கு பின் சிவலிங்க தேவ உடையார் உடையார் என்பவர் போகரிடம் சிஷ்யராக வந்து சேர்ந்தார். இவர் கர்நாடக மாநிலத்தில் மைசூரை சேர்ந்தவர். உடையார் அவர்களை நித்ய பூஜைக்கு நன்றாக தயார் படுத்திய பின், பூஜை செய்யும் பணியை அவரிடம் சேர்பித்துவிட்டு, போகர் நிர்விகல்ப சமாதியில் அமர்ந்தார். போகர் சமாதி ஆனா பின்னரும், உடையார் பலமுறை போகரை சந்தித்து பூசை சம்பந்தமான விஷயங்களில் கலந்தாலோசித்து வரலானார்.

நைனாதி முதலியார் என்பவர் சிறிது காலத்திற்குப்பின் உடையாரிடம் சிஷ்யராக வந்து சேர்ந்தார். முதலியாரின் பக்தியில் மனம் மகிழ்ந்த உடையார், அவரை அழைத்து கொண்டு போகரிடம் சென்று "முதலியார் நல்ல திறைமை உடையவர். அவருக்கே இனி பூஜை செய்யும் பணியை கொடுத்துவிடலாம் என்று" பரிந்துரை செய்தார்.

போகர் சற்று நேர அமைதிக்கு பின் "முதலில், இவர் உலகை ஒரு முறை சுற்றி வரட்டும். அதற்கு பின் பூஜை செய்யும் உரிமையை கொடுக்கும் தீர்மானத்தை எடுக்கலாம்" என்றார்.

இதை கேட்ட உடையார் அதிர்ந்து போனார்.

போகரிடமிருந்து நித்ய பூஜை முறைகளை ஏற்று வாங்கி நிறைய வருடங்கள் ஓடிவிட்டது. போதும். நாமும் போகரிடம் உத்தரவு கேட்டு சமாதி ஆகிவிடலாம் என்று ஆசை பட்ட உடையாருக்கு, "அவரை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால், அதற்கு முன் அவர் இந்த உலகை ஒருமுறை சுற்றி வந்து என் முன் வெற்றிகரமாக நிற்க வேண்டும். அப்படி ஆனால் அவருக்கு பூஜை செய்யும் உரிமையை கொடுக்கிறேன்" என்று போகர் சொன்னபோது உண்மையிலேயே உடையார் ஆடி போய் விட்டார். "இவரால் முடியுமா? அப்படியும் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து இவர் முடிப்பதற்குள் எத்தனை வருடங்கள் ஆகிவிடும். அதுவரை காத்திருக்க வேண்டுமே", என்றெல்லாம் அவர் மனதில் எண்ணங்கள் ஓடியது.

முதலியார் பேச தொடங்கினார்.

"இந்த உலகை கால் நடையாக சென்று சுற்றி வர என்னால் முடியாது. வேண்டுமானால் ஒரு புலியின் மீதமர்ந்து முடிக்க முயற்சி செய்கிறேன்" என்றார்.

போகரும் அதற்கு சம்மதிக்கவே, முதலியாரும் காட்டுக்குள் சென்று ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது ஏறி அமர்ந்து, விடை பெற்றார். காலங்கள் ஓடியது. சென்றவரை காணவில்லை. உடையாருக்கு மனதில் கவலை ஏறியது. எதிர்பார்க்காமல் ஒரு நாள், உடையார் ஒரு வேளை பூசை முடித்து தீபாராதனை காண்பிக்கவே, அங்கு புலிமேல் அமர்ந்தபடி, முதலியார் வந்து சேர்ந்தார். இதை கண்ட உடையாரின் மனம் சொல்லொண்ணா இன்பத்தில் ஆழ்ந்தது.

பூசை முடித்த கையுடன், அவரை அழைத்து சென்று போகர் முன் நிறுத்தினார். அவரை கண்ட போகர், "சரி, வெற்றிகரமாக உலகை சுற்றி வந்து விட்டாய். இருப்பினும், ஒரு சில நாட்கள் வரை உடையாரே பூசை செய்யட்டும். அதுவரை, பூசையில் உடையாருக்கு உதவி செய்து இரு" என்று கட்டளை இட்டார். மேலும் "புலியில் சென்று இந்த உலகை சுற்றி வந்ததால் நீ இன்று முதல் "புலிப்பாணி" என்று அழைக்க படுவாய்" என்று கட்டளை இட்டார்.

பூஜை நன்றாக நடப்பதை கண்ட போகர், புலிப்பாணியின் பெருமையை உடையாருக்கு உணர்த்த பல வித சோதனைகள் நடத்தினார். அதில் ஒன்று "ஷண்முக நதி வரை சென்று அபிஷேகத்துக்கு நீர் கொண்டு வா" என்று உத்தரவிட்டார். நதி கரை வரை சென்ற புலிப்பாணி, கையில் ஒரு பாத்திரமும் இல்லாததால், தன் தபோபலத்தால், அந்த நதியின் நீரை எடுத்து ஒரு "பாத்திரமாக" மாற்றி, அதனுள் நீரை ஊற்றி, அபிஷேகத்துக்கு கொண்டு வரலானார். அதிலிருந்து அவர் "புலிப்பாணி பாத்திர சுவாமிகள்" என்று அனைவராலும் அழைக்க பட்டார். தினமும் ஆறு முறை ஷண்முக நதிக்கு சென்று நீரை பாத்திரமாக்கி, அதில் நீரை ஊற்றி, மலை மேல் இருக்கும் முருகனுக்கு அபிஷேகத்துக்கு கொண்டு வரலானார்.

எல்லாம் நல்ல படியாக நடப்பதை கண்ட போகர், உடையாருக்கு சமாதியாகும் பாக்கியத்தை கொடுத்தார். பின்னர் புலிப்பாணியை அழைத்து, "பூஜை முறைகள் தொடர்ந்தது தலை முறை தலை முறையாக நடக்கவேண்டும். அதற்கு நீ தான் வழி அமைக்க வேண்டும்" என்றார்.

205 வருடங்கள் புலிப்பாணி பூஜைகளை தொடர்ந்து செய்து வந்தாயிற்று. போகரின் இந்த உத்தரவுக்கு, புலிப்பாணி கீழ் வருமாறு பதிலளித்தார்.

"இன்றுவரை 205 வருடங்கள் ஆகிவிட்டது. அடியேனுக்கு, குடும்ப வாழ்க்கையில் சற்றும் விருப்பம் இல்லை" என்றார்.

"தலை முறையாக பூஜை நடக்க வேண்டும் என்றால், ஒரு ஆண் மகவு வேண்டும். குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு சன்யாச வாழ்க்கையும் வாழலாம். ஆண் மகன் பிறந்த 16 வது வருடம், பூஜை விஷயங்களை அவனிடம் சேர்பித்துவிட்டு, நீ சமாதி ஆகலாம்" என்றார்.

குருவின் வார்த்தைக்கு கட்டு பட்டு புலிப்பாணியும் குடும்ப வாழ்க்கை தொடங்கினார்.

ஒரு வருடத்தில் அவருக்கு ஆண் மகன் உருவானான். அவனுக்கு "காரண புலிப்பாணி" என்று பெயர் இட்டு வளர்த்து வரலானார்!

காரண புலிப்பாணி தனது பதினாறாவது வயதில் பூஜை செய்யும் உரிமையை ஏற்றுகொள்ள, புலிப்பாணி பரம்பரை பூசை செய்யும் உரிமை உருவாயிற்று. புலிப்பாணியும் சமாதியில் அமர்ந்தார். காரண புலிப்பாணி 1100 ஆண்டுகள் பூசை செய்து வந்தார். அவருக்கு ஒரு மகன் பிறக்க,, அந்த மகனுக்கு குமார சுவாமி புலிப்பாணி என்று பெயரிட்டனர். குமார சுவாமி புலிப்பாணி, காரண புலிப்பாணி இடமிருந்து பூசை செய்யும் உரிமையை வாங்கிக்கொள்ள, புலிப்பாணி தலைமுறை வளர்ந்தது. இவர் 1000 ஆண்டுகள் இருந்து பூசை செய்து வர, அவருக்கு அடுத்த வாரிசாக, வேல் ஈஸ்வர புலிப்பாணி என்பவர் வந்தார்.

பின்னர் இந்த புலிப்பாணி தலைமுறை கீழ்கண்டவாறு வளர்ந்தது.

வேல் ஈச்வர புலிப்பாணி > ஆறுமுக புலிப்பாணி > ஹரிக்ருஷ்ண புலிப்பாணி > பழனியப்ப புலிப்பாணி.

பழனியப்ப புலிப்பாணி தலை முறை வந்ததும், இரண்டு மகன்கள் உருவாயினர். அவர்களை, பாலகுருநாதர் புலிப்பாணி, போகநாதர் புலிப்பாணி என்று அழைத்து வந்தனர். விதிப்படி, பூஜை முறைகள் மூத்த மகனுக்குத்தான். பால குருநாதர் புலிப்பாணி திருமணம் செய்து கொள்ளததினாலும், 22 வயதில் மரணமடைந்ததினாலும், பூஜை செய்யும் உரிமை இரண்டாவது மகன், போகநாதர் புலிப்பாணி இடம் சேர்ந்தது. போகநாதர் புலிப்பாணி தன் மகன் பழனியப்ப புலிப்பாணி இடம் பூஜை விஷயங்களை சேர்க்க, அது அடுத்த தலைமுறையில் சிவானந்த புலிப்பாணி இடம் சேர்ந்தது. இவர் தான் இன்று அந்த ஆஸ்ரமத்தில் தலைவராக இருந்து கொண்டு பூஜை முறைகளை நடத்தி வருகிறார்.

பழனியப்ப புலிப்பாணி ஒரு நாள் ஆஸ்ரமத்தின் பின் பக்கம் கட்டிட வேலைக்காக குழித்த போது அங்கே ஒரு குகையில் ஒரு சித்தர் தவம் செய்வதை கண்டார். சித்தரின் தலையிலிருந்து நீண்டு வளர்ந்த முடியானது மரத்தின் வேர் போல மண்ணுக்குள் மிகுந்த ஆழத்தில் ஊடுருவி செல்வதை கண்டார். அந்த சித்தர் பத்மாசனத்தில், கைகளை மார்புக்கு குறுகலாக வைத்த படி இருக்க, அவர் கை, கால் விரல்களில் நகம் இதுவரை அவர் கண்டிராத அளவுக்கு நீளமாக அவர் தோள்களை சுற்றி வளர்ந்திருந்தது. அவரது தவத்தை கலைத்துவிடுகிற அளவுக்கு நாம் ஏதேனும் செய்து விட்டோமோ என்று நினைத்த அவர், அப்படியே தொடங்கிய வேலையை விட்டுவிட்டு, உடனேயே அந்த இடத்தில் சமாதி கட்டினார். அது தான் இன்றும் நாம் சென்றால் பார்க்கும் மிக பெரிய லிங்கம் உள்ள, சமாதி.

பழனி அந்த காலத்தில் மதுரை நாயக்க மன்னரின் ஆட்ச்சியில் இருந்ததால், மன்னரே, ஆஸ்ரமம், பழனி முருகருக்கு பூசை செய்யும் முறை இவைகளின் பேரில் உள்ள உரிமையை புலிப்பாணி தலைமுறைக்கு மட்டும் தான் என்று பிரகடனம் செய்து, செப்பு தகட்டில் பதித்து கொடுத்தார்.

மேலும், பூசை முறைகளுக்கு யார் எந்த விதத்தில் உதவினாலும் அவர்கள் காசியில்/கங்கை கரையில் ஒரு கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்த பலனை அடைவர் என்றும், இதற்கு (பூஜைக்கு) ஏதேனும் விதத்தில் தடங்கல் செய்பவர்கள், கங்கை கரையில் "காராம் பசுவை" கொன்ற குற்றத்திற்கு உள்ளாவார்கள் என்று பிரகடனம் செய்தார்.

பழனி என்பது யோகிகளால், நவக்ரகங்களில், செவ்வாய்க்கு பரிஹார ஸ்தலமாக கருதப்படுகிறது. தங்கள் தவத்தை/அதன் நிலையை உயர்த்திக்கொள்ள பழனியை யோகிகள் சிறந்த இடமாக கருந்துகின்றனர்.

உணர்ந்து, சென்று, உங்கள் நிலையை உயர்த்திகொள்ளுங்கள்.

agnilingam

Posts : 14
Join date : 28/05/2011

Back to top Go down

போகரும் புலிப்பாணி பரம்பரையும்! Empty Re: போகரும் புலிப்பாணி பரம்பரையும்!

Post by jegmar Sun Apr 08, 2012 11:57 am

such a great information. Thanks a  lot.

jegmar

Posts : 2
Join date : 22/03/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum