இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

2 posters

Go down

விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள் Empty விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

Post by ந.கார்த்தி Wed Apr 11, 2012 6:43 pm

-அரவிந்தன் நீலகண்டன்

விதி என்று ஒன்று உண்டா? எல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கிறதா? எல்லாவற்றையும் யாரோ ஏற்கனவே விதித்துவிட்டார்களா, இல்லை அனைத்துமே வெறும் நிகழ்வுகள்தானா? இந்த கேள்விகள் குறித்து நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. நான் அதில் கலந்து கொண்டேன். [19/09/2010 அன்று ஒளிபரப்பானது.] என் நிலைப்பாடு உண்டு இல்லை என்பதிலிருந்து வேறுபட்டது. விதி என்பது ஓர் உளவியல் கருவி. அதற்குப் புற யதார்த்தம் கிடையாது என்பதே என் நிலைப்பாடு. இந்நிகழ்ச்சியில் நான் கவனித்த /கூறிய/ கூறவிரும்பி முடியாமல் போன கருத்துகள் அனைத்தையும் தொகுத்துத் தருகிறேன்.



கவனித்த பிறர் கூறிய கருத்துக்கள்

aravindan-neelakandan2விதி உண்டு என்று சொன்னவர்கள் பொதுவாக தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவ ஒற்றுமைகளை- குறிப்பாக அவர்கள் வாழ்க்கையின் ஆதாரமான தருணங்களில் நிகழ்ந்தவற்றை- கூறினார்கள். ஒரு சமணப் பெண்மணியும் ஓர் இஸ்லாமியரும் மட்டுமே அவர்களது கோட்பாடு சார்ந்து விதி உண்டு என்று பேசினார்கள். அந்தச் சமண பெண்மணி தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சோகத்தைக் கூறி எல்லாமே விதிக்கப்பட்டது என்றார். (predetermined) அந்த இஸ்லாமிய நண்பர், “எல்லாமே விதிக்கப்பட்டது ஆனால் மனிதனுக்கு ஓர் எல்லைக்குள்ளாக சுய-சங்கல்பத்துடனான செயல்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

relates-to-tsunamiஎன்னை மிகவும் பாதித்த ஒரு கருத்து, நல்ல கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குழந்தைகள் கடற்கரையோரமாக தங்கள் காலைக்கடன்களைக் கழிக்க ஒதுங்கி, சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டதைச் சொல்லி, அதை விதி என்றார் ஒருவர். விதி இல்லை என வாதித்தவர்கள், பொதுவாக மானுட அறிவு முன்னால் விதி என்று சொன்ன விஷயங்களை எல்லாம் முறியடித்துவிட்டது எனவே விதி இல்லை எனக் கூறினார்கள். நிகழ்வுகளே விதி எனச் சொல்லப்படுவதாக ஒருவர் கூறினார். விதி என்பது தலையில் பதிவாகும் விஷயம்; அதனை மூளை ஸ்கேனில் பார்க்கலாம் என ஒருவர் கூற எதிர்தரப்பில் ஒரு மருத்துவர் திட்டவட்டமாக மறுத்தார். எப்படி அரைகுறை அறிவியலும் நம்பிக்கையும் கலக்கும்போது தவறான கருத்துகள் உருவாகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாக அமைந்தது அது.

relates-to-deathமுழுக்க நான் கவனித்த விஷயம் என்னவென்றால் எந்த பிரச்சினையையும் அணுகுவதில் நாம் இன்னும் பட்டிமன்ற மனநிலையைத் தாண்டவில்லை என்பதுதான். எதிர்தரப்பை முறியடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் நமக்கு இருக்கும் அளவுக்கு அவர்களின் மனநிலையை விளங்கிக் கொள்ள வேண்டும் என நாம் நினைப்பதில்லை. விதி என்பது நமது இயலாமைக்கு, தப்பிக்க நாம் கற்பிக்கும் escapism என்றார் ஒருவர். நான் கவனித்த மட்டில் விதி என்பதை ஆதரித்துப் பேசியவர்கள் வைத்த ஆதாரங்களில் நூற்றுக்கு எண்பது சதவிகிதம் மரணம் சார்ந்தது அல்லது உயிராதாரமான ஆபத்து சார்ந்ததாக இருப்பதைக் கவனித்தேன். இது ஏற்கனவே எனது மனதில் நான் கொண்டிருந்த ஒரு கோட்பாட்டை உறுதிசெய்வதாக அமைந்தது.

அரவிந்தன் நீலகண்டன் கூறிய கருத்துகள்
நாம் நிச்சயமின்மை நிறைந்த பிரபஞ்சத்தால் சூழப்பட்டிருக்கிறோம். மரணம் மட்டுமே மனிதத்தின் ஒரே நிச்சயமான விஷயம். இது மனிதனை வாழவே விடாமல் நிலைகுலையச் செய்யும். அவனைச் சுற்றி அவன் சந்திக்கும் துர்மரணங்கள், ஏமாற்றங்கள், அசம்பாவிதங்கள் ஆகியவை மீண்டும் மீண்டும் அவனுக்கு அவனது வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையையும் அவனுடைய மரணத்தின் நிச்சயத்துவத்தையும் சுட்டிக் கொண்டேயிருக்கின்றன. இந்த நிச்சயமற்ற தன்மையிலிருந்து தனது வாழ்க்கைக்கு ஒரு பொருளை உருவாக்க நினைக்கும் மானுட மனத்தின் உருவாக்கமே விதி என்கிற கோட்பாடு. அது ஓர் உளவியல் கருவியே. ஆனால் அதற்கு ஒரு புற யதார்த்தம் உண்டா என்று பார்த்தால் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்லவேண்டும். க்வாண்டம் இயற்பியல் மிக நுண்ணிய அளவில் அடிப்படைப் பொருண்மையிலேயே ஒரு நிச்சயமின்மை அல்லது நிர்ணயமின்மை இருப்பதைச் சொல்கிறது. நாம் அறிவியல் விதிகளாக நம் அளவில் அறிந்து கொள்பவை கூட இந்த நிச்சயமின்மையிலிருந்து கூட்டு சாத்தியங்களாக உருவானவையே. எனவே எல்லாமே ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டதாகக் கூறுவது மகா அபத்தம். இன்னும் சொன்னால் சில க்வாண்டம் இயற்பியல் கோட்பாடுகள் ஒவ்வொரு சாத்திய முடிவும் அதன் பல சாத்தியங்களுக்கேற்ப பிரபஞ்சத்தை பல கூறுகளாகப் பிரிப்பதாகக் கூட கூறுகின்றன. விதி என்பது ஒரு பரிணாம உளவியல் கருவி; விதியை இறைவன் நடத்தி செல்கிறான் என்பதும் அத்தகைய ஓர் உளவியல் தகவமைப்பே. மதம் இதனை சமுதாய அளவில் கட்டுப்பாடுகளுக்குப் பயன்படுத்துகிறது.

aravindan-neelakandan1ஆனால் பாரதப் பாரம்பரியத்தில், விதி எனும் இந்த உளவியல், சுக வட்டத்தை விட்டு மீறிச் செல்லும் ஞான தேடலே அடிப்படை ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. சமூகச் சூழலில் கூட விதி என இருந்துவிடாத புத்தரும், நாராயண குருவும் அய்யா வைகுண்டரும் பாடுபடாமல் இருந்திருந்தால் நம் சமுதாயச் சூழ்நிலை இன்றைக்கும்கூட மிக மோசமாக இருந்திருக்கக்கூடும். டார்வின் தேவன் உலகை படைத்தான் என்கிற ‘விதி’யை ஏற்றுக்கொண்டிருந்தால் பரிணாம அறிவியல் உலகுக்குக் கிடைத்திருக்காது.



கவிஞர் விக்கிரமாதித்தியன் கருத்துகள்

poet-vikramadityan‘அண்ணாச்சி’ என பாசத்துடன் அழைக்கப்படும் கவிஞர் விக்கிரமாதித்தன், விதியை நம்பாதவர்களுக்கு ஜாதகத்தில் குரு சண்டாள யோகம் இருப்பதால்தான் அப்படிச் செயல்படுகிறார்கள் என்றார். ஸ்வாமி விவேகானந்தர் ஒரு பேருரை முழுக்க மனிதனே தனது விதியை உருவாக்குகிறான் என சொல்லியிருக்கிறார் எனச் சுட்டிக்காட்டப்பட்டதும் ஞானத்தைத் தேடும்போது விதியைத் தூக்கி எறிந்துவிட்டு நாம் செல்லலாம் என்றும் அதையே வியாசரும் நம் மகரிஷிகளும் நம் இதிகாசங்களும் பகவத்கீதையும் சொல்லுவதாகக் கூறினார். மானுடத்துக்குக் கிடைத்த ஞானத்தின் கனிந்த உச்சம் உபநிடதங்கள் என அண்ணாச்சி கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்ற அழைக்கப்பட்டபோது பின்வரும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன- ஆதிகவியான வான்மீகி மகரிஷி கிரௌஞ்ச பறவை இறந்த போது அதன் விதி என அதைப் புறக்கணிக்கவில்லை. அதன் இணையின் சோகத்தை தன் சோகமாக தன் இதயத்தில் உணர்ந்தபோதுதான் ஆதிகாவியத்தின் சுலோகமே வெளிவந்தது; எப்போதும் விதி என முடங்காமல் விரிவடையும் போதுதான் ஞானத் தேடலுக்கான இறக்கை விரிகிறது. ஞானம் என்பது உள்முக ஞானத் தேடலான ஆன்மிகம் மட்டுமல்ல, புறப் பிரபஞ்சத்தை ஆராயும் விஞ்ஞானமும் ஆன்மத்தேடலே. எனவே விதி ஒரு மரப்பாச்சி பொம்மையாக- குறுகிய ஓர் உளவியல் ஆறுதலுக்காக- வைத்திருக்கலாமே தவிர அதனை வாழ்க்கை முழுவதும் வைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. மனிதனின் அடிப்பட்ட உணர்ச்சியான ஞானத்தேடலில் அவன் விதி எனும் மரப்பாச்சி பொம்மையைத் தூக்கி எறிந்துவிட்டு முன்னேற வேண்டும்.



கீழ்வரும் கருத்துகளையும் கூற விரும்பினேன். ஆனால் கூறமுடியாமல் போனது.

விதி என்று சொல்லும்போது பொதுவாக சில விதித்துவக் (determinism) கோட்பாடுகளை நாம் கவனிப்பதில்லை. அவை அறிவியல் முலாம் பூசிக்கொள்கின்றன அல்லது நம்பிக்கை முலாம். உதாரணமாக ஆபிரகாமிய இறையியலில் எல்லாமே இறைவனால் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக கருதப்படுகிறது. எதிர்காலத்துக்குள் சென்று பார்ப்பது இறை இச்சையை சோதிப்பது என்கிற காரணத்தால்- மூடநம்பிக்கை என்பதால் அல்ல- சோதிடம் இந்த மதங்களால் விலக்கப்படுகிறது. மாறாக குறுக்கியல்வாதிகள் அறிவியல் அல்லது தொழில்நுட்ப விதித்துவத்தை நம்புகிறார்கள். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அனைத்துக் காரணிகளையும் சமன்பாடுகளாக மாற்ற முடிந்தால் அதனை முழுமையாக நம்மால் கட்டுப்படுத்த முடியும் எனக் கருதுகிறார்கள். இதுவும் ஒருவித விதி நம்பிக்கையே. மார்க்ஸியர்களோ எல்லா மானுட வரலாறுமே மார்க்ஸிய விதிகளின்படி இயங்குவதாகக் கருதுகிறார்கள். அனைத்து இயக்கங்களையும் இயந்திரத்தன்மையுடன் அணுகும் இத்தகைய அனைத்துக் கோட்பாடுகளும் பார்வைகளும் விதித்துவப் பார்வைகளே. இயற்கையும் அறிவியலும் இத்தகைய கோட்பாடுகள் தவறானவை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்துள்ளன.

ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள் Empty Re: விதி: “நீயா நானா”-வில் கூறப்பட்ட சில கருத்துகள்

Post by Dheeran Mon Oct 29, 2012 12:42 pm

ok
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum