இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4

Go down

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4  Empty ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4

Post by ஆனந்தபைரவர் Tue Aug 31, 2010 4:04 pm

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் - தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

11. ஹிந்து சமயமே, பொருள் பொதிந்தியது, முற்றிலும் பயன் படுத்திக் கொள்ள சாத்தியமானது, இறைவனிடம் நமக்கு இருக்கவேண்டிய ஈடுபட்டை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்று, ஆத்ம திருப்தியையும் அளிக்க வல்லது.

சங்கீதம், நாடகம், நடனம், சிற்பம், சதுரங்கம், ஓவியம் முதலிவை வெறும் புலன் சார்ந்த இன்பத்திற்குரியது, ஆகவே தவிர்க்கத் தக்கது, எனத் தங்கள் புனித நூல்களில் சொல்லப் பட்டவை களை மேற்கோளாகக் காட்டி, அதன்படி, எல்லோரும் அனுசரித்தாக வேண்டுமெனக் கூறி, இவ்வுன்னத மரபுகள் அனைத்தையுமே, அழித்து விட ஒரு சமயம் துடிக்கிறது.

ஆனால், சங்கீதமே உலகில் வேண்டாம் என்பவர்கள், தங்கள் சமயக் கொள்கைகளை மட்டுமே பரப்ப, தங்களுக்கென ஒரு பிரத்யேக இசைப் பாணியையும் அமைத்துக் கொண்டு சங்கீதத்தை உபயோகித்துக் கொள்ள என்றும் தயங்கியதில்லை! காரணம், இவர்களைத் தான் கேட்கவேண்டும்?!

[[[ .................... ↓

• மிகத் தொன்மையான மரபு சார்ந்த உன்னத (சாஸ்த்ரீய) சங்கீதம், நாடகம், நடனம், சிற்பம், போன்றவைகள்,

Prohibited as per Sahih Bukhari Volume 007, Book 069, Number 494 ----Sahih Muslim Book 024, Number 5279

• மிகப் புராதன இந்தியக் கண்டுபிடிப்பான, சதுரங்கம், போன்று, குறிப்பிட்ட சூழ்நிலையில் சடுதியில் பகுத்தாயும் திறனையும், மேலும், மதிநுட்பத்தை அதிகரிக்கப் பயிற்சியை அளிக்கவல்ல, போர்த்திற நடவடிக்கைக்கு ஒப்பான விளையாட்டு,

Playing chess is completely prohibited, as per Sahih Muslim Book 028, Number 5612 and Malik’s Muwatta Book 52, Number 52.2.7; Al-Muslim Vol IV – No. 5612– Chapter: CMXLVI

• இவைகள் போன்ற மற்ற கலைகள் சம்பந்தமான, Drawing Pictures and images prohibited: ref: Sahih Bukhari Volume 003, Book 034, Number 428 --- Sunan Abu Dawud Book 001, Number 0227, Book 032, Number 4140 – Book 027, Number 3746

• உடலில் பச்சை குத்திக் கொள்வது

prohibited: ref: Sahih Bukhari Volume 003, Book 034, Number 299; Sahih Bukhari Volume 003, Book 034, Number 440; Sahih Bukhari Volume 007, Book 072, Number 829, Sahih Bukhari Volume 007, Book 072, Number 845 ]]]

இருப்பினும், வேத வழி ஒன்றில்தான் ஒவ்வொருவருடைய மனதிலுள்ள தூய்மையான உணர்வுகளை அநேக செயல் பாணிகளில் இணைத்து, அதாவது சங்கீதம், நாடகம், நடனம், சிற்பம், இவைகள் வாயிலாக, சர்வ சுதந்திரத்துடன் வெளிப்படையாகக் காண்பிக்க ஊக்கமளிக்கிறது. இம்மாதிரி ஒவ்வொருவருடைய-மனதிலுள்ள ’உணர்வு’களை வெளிப்படையாகக் காண்பிப்பதையும், சொல்ல விரும்புவதையும் பரம்பொருளுக்கு தொண்டு செய்யும் கருத்தோடு தான் உபயோகிக்கப்படுகிறது. ஆகவே, இம் ’மன உணர்வை’ இவ்வாறு வெளிப்படுத்துவதால், இறைவனின் மீது ஒருமுகப் படுத்திக் கொண்ட ஈடுபாட்டில், ஏதாகிலும் தவறு நேர்ந்து விடுமோ என்ற பயம் கலந்த கவனத்தைச் செலுத்தி, இறைத் தொண்டிற்கே இசை போன்ற கலைகளில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். இப்படியாக மரபு சார்ந்த உன்னத சங்கீதம், நாடகம், நடனம், சிற்பம், இவைகளைக் கூட ஆன்மீக ஆற்றலாகவும், இறைவன் மீது கொண்டுள்ள பக்தி உள்ளத்தை வேத வழிகளில் மேம்படுத்திக் கொள்ளவும், உபயோகப் படுத்தப் படுகிறது.

வேத ஒழுங்கு முறையில் இறை வழிபாடு என்பது, காலங்காலமாக முக்கிய அங்கமாக வகித்து வருகிறது. வேத இலக்கியங்களில் பக்தியூட்டுகிற, வர்ணனை மிக்க மந்திரங்களும், கவிதைகளும், இறையருள் வேண்டி கடவுட்பற்றுள்ள வழிபாடுகள் ஏராளமாக இருக்கிறன. இவைகள் பிரதி தினமும் இறைவனிடம் முழு ஈடுபாடோடு பக்தி செலுத்தவும், தியானத்தில் மூழ்கவும் பயன்படுத்தப் படுவதோடு மட்டுமல்லாமல், இவைகளைத்தும் பாட்டுகளிலும் இணைத்து தனியாகவோ, அல்லது கூட்டிசைத்தோ பாடப்படுகிறது. இவ்வழிபாட்டை தனித்தனியாக தங்கள் வீடுகளிலோ, அல்லது கூட்டாகவே, அல்லது கோவில்களிலோ, அல்லது கோவில்களில் உள்ள சிலைகள் முன்பாகவோ, செய்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.

[[[கோவில்கள், சிலைகள் ஏன், எதற்கு என கேட்பவர்களுக்கு இதைக் கூறலாம்:

- WHY WE HAVE SO MANY TEMPLES, IF GOD IS EVERYWHERE?

A WISE MAN REPLIED:” AIR IS EVERYWHERE, WE ALL KNOW, BUT WE STILL NEED A FAN TO FEEL IT”]]]

வேத கலாச்சாரத்தில் எல்லாவித (சாஸ்த்ரீய) சங்கீதமும் உண்டு. ’காச்யப புரா’விலிருந்து (அதாவது மொகலாயர் வழங்கிய பெயரான - காஷ்மீரிலிருந்து) கன்யாகுமாரி வரை வியாபித்திருக்கும் தெய்வங்களை அடிப்படையாகக் கொண்ட மரபு சார்ந்த இந்திய சங்கீதத்தை ஒருவர் கேட்கும் போது, இனிய இச்சங்கீதம் கேட்பவர் கவனத்தையும் உள்ளத்தையும் உடனுக்குடன் ஈர்க்கிறது. ஆங்கே தெய்வீகம் எல்லா பக்கங்களிலும் சூழ்ந்துள்ளதாக (ambience) உணர முடிகிறது. சங்கீதமே வேண்டாம், என சங்கீதத்தை வெறுப்பவரை, ‘ஔரங்கசீப்” என ஏன் சொல்கிறோம்? இப்போது புரிகிறதல்லவா! இந்திய சாஸ்த்திரீய சங்கீதம் உலகிலுள்ள எல்லா சங்கீதங்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக ஆனால் எவ்விதத்திலும் மிக மேம்பட்டதாகக் காணலாம். இந்திய இசை ஒரு விதிக்குட்பட்டு, ஒவ்வொன்றும், ராக, தாள, லய சந்த ’பாவ’த்துடன், இந்திய சங்கீதமே ஒரு அறிவியல் போன்று, கணித நுண்ணறிவு அடிப்படையில் படைக்கப்பட்டதென, என கேட்பவர்களுக்கு தாமதமின்றி எடுத்துக்காட்டி விடும். இவைகள், பலவித இசைக் கருவிகளோடு இசைப்பதோடு மட்டு மல்லாமல், இவைகளில், அநேக பாணிகளில் பக்திக்கென்றும், தொழுகைக்கும், நடனங்களுக் கென்றும், நாடகங்களுக்கும் அல்லது பல தரப்பட்ட சடங்குகளுக்கென்றும், ஒவ்வொன்றிற்கும் இடம், காலம், மன நிலைக்கேற்பக் கேட்கலாம். இந்திய சங்கீதம் அநேக மாற்றிக் கொள்வதற்கு ஏற்ற (variables and permutations & combinations) திறனுள்ள தகைமை உடையது என கேட்பவர்களை வியக்கவைத்து ஆனந்தப்பரவச மூட்டுகிறது. மேலை நாட்டு இசைக்கருவிகளைக் கூட இந்தியர்கள் தங்கள் சங்கீதத்திற்கும் ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்துகொண்டு, குறுகிய நோக்க மின்றி, அவைகளையும் தனதாக்கிக் கொண்டு, மேலை நாட்டவரே போற்றி அதிசயிக்கும் வண்ணம், உபயோகிக்கிறார்கள்.

இந்தியாவில் அநேக இயல்புகளைக் கொண்ட பொருள் பொதிந்த சடங்குகளும், மரபு முறையில் செய்யப்படும் கடவுள் வழிபாடுகளும் உண்டு. இவைகளில் சில, கோவில்களிலும், சில வீடுகளிலும், சில திறந்த வெளி அரங்குகளில் அங்கு குழுமியுள்ள எல்லாரும் சேர்ந்து பங்கேற்றுக்கொள்ளும் வகையிலும் நடத்தப்படுகிறது. சில சடங்குகள் வேத வழி தெரிந்த பண்டிதர்களால் நிகழ்த்தப்படுகிறது, அப்படிச் செய்யும் போது குழுமியுள்ள மக்கள் யாவரும், பக்தி சிரத்தையுடனும், மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள். அநேக மரபுசார்ந்த வழிபாடுகள நடனத்தில் சேர்த்துக்கொள்ளப் பட்டுள்ளது. இவ்வித நடனங்கள் மிகப் புராதன அசைவுகளாலும், முக பாவங்களாலும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாறு நடனம் செய்யும் முறை, முன் தலைமுறையிலிருந்து பின் வந்த தலைமுறை யினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அரங்குகளில் நடத்தப்படுகின்றன. இவற்றில் பல நடனங்கள், அந்தந்த மொழிகளில், கலைஞர்களுடைய விளக்கங்களுடன் இந்திய புராண, இதிஹாசங்க ளிலிருந்தும் வேத இலக்கியங் களிலுள்ள இறைவன் சம்பந்த கதைகளில் உள்ள நிகழ்ச்சிகளை மையமாக வைத்து, நாடகங்களும், நடனங்களும் நிகழ்த்தப்படுகின்றன.

[[[ புராண, இதிஹாசங்களுக்கான விளக்கம் -- (पुरादपि + नवम्) (புராதபி + நவம்) = புராணம் = பழைய நிகழ்ச்சியாகக் கூறப் பட்டாலும் என்றும் புதிது (என்றும் உபயோகமானது); (इति + ह) = (இதி ஹ) = இதிஹாசம் = இவ்வாறு நடந்தது = சரித்திரம் = History)]]]

பெரும்பாலும் இவைகள் ஓய்வு நாட்களிலும், பொது விழாக்களிலும் பண்டிகைகளிலும் மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்திய நாடக நடனங்களில், ஒவ்வொரு இந்திய பிரதேச (பிராந்திய) பண்பாடுகளின் பின்னணியில், விதவிதமான ஆடை அணிகலன்கள், நாட்டிய நாடகங்கள், காலங்களுக் கேற்ற ஒப்பனைகளுடன், தங்களுக்கே உரிய வெவ்வேறு பாணிகளில், அந்தந்த கதைப் பாத்திரங்களுக்கேற்ற உணர்ச்சி பாவங்களோடு, மிக வியக்கும் வண்ணம் கண்டு களிக்கலாம். இதைப் பார்பவர்களுக்கு, பழைய வேத வழி பாரம்பரியம், மற்ற உலக பாரம்பரியங்களைக் காட்டிலும் எவ்வளவு மிகச் சிறப்பானவை என தெள்ளத் தெளிய தெரியவரும். உலகில், பல இடங்களில் நானும் பற்பல நாடக நடன நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்ததுண்டு. ஆனால், அவைகள் இந்திய பாரம்பரிய நிகழ்ச்சிகளைப் போன்று எவ்விதத்திலும் சிறப்பானவை அல்லவே அல்ல என்னால் தக்க காரணங்கள், சான்றுகளுடன் தெளிவாக நிரூபித்துக் கூற இயலும்.

மேற்கூறியவைகளைப் போல வேத கலாச்சாரத்தைச் சேர்ந்த அணிகலன்கள், ஆபரணங்கள், நகைகள் ஆகியவைகளுடன், அழகு எனும் சொல்லுக்கு பொருள்விளக்கம் தந்துகொண்டு, மனதை கொள்ளை கொள்ளும் ஓவியங்களும், கடுஞ்சிக்கலான சிற்பங்களும், (intricate designs in sculpture) வெறும் வார்த்தைகளால், பாராட்ட இயலாது. இவைகள் யாவும், மனிதர்களால் உண்மையாகப் படைக்கப் பெற்றாலும், இவைகளை இவ்வளவு அழகுடன் படைத்தது மனித உருவில் வந்த எல்லாம் வல்ல இறைவனின் கை வண்ணம் தானோ, என வியக்கும் வண்ணம் உள்ளது. (“ यह .खूबसूरती .कुदरत ने अपने हात से बनाया “ = “யே .கூப்சூர்தி .குத்ரத் நே அப்னே ஹாத்சே பனாயா” = இறைவனே ( .कुदरत = .குத்ரத்) மனித உருவில், தன் கைவண்ணத்தை இவ்வழகுச் சிற்பத்தில் காட்டி இருக்கிறாரோ என இருக்கிறது) இறைவனின் பற்பல வெளிப்படைத் தோற்றங்களையும், மகிழ்ச்சியுடன் இனியவர்களுடன் பொழுது போக்குவதற்குரிய செயல்களையும் காட்சிக்குரியதாகவும் கவனத்துடன் இறை வழிபாட்டிற்குச் சித்தரிக்கப்படுகிறது. ஓவியம், சிற்பம் ஆகியவைகள் மதித் திட்ப நுட்பம் நிறைந்த அறிவியலைச் சார்ந்ததே. இவைகளில் முறையாக பயிற்சி பெற்ற கலைஞர்களால் தான் மிகச் சிறந்த ஓவியங்களும், கண்ணுக்கினிய சிற்பங்களையும் வடிக்க இயலும். வேத வழியில், எந்த கலைஞனுக்கும், தங்கள் மனதில் உள்ள உணர்வுகளையும் இறைவனிடம் இருக்கும் பக்தியையும் வெளிப்படுத்த நல் வாய்ப்பு அளிக்கப் படுகிறது. இதைப்போன்ற கலைகள், ஆன்மீகத்தில் அவர்களுக்குள்ள தெளிவான அறிவையும், உணர்தலையும், தெளிவு பெற்ற நிலையையும் வெளிக்கொணர்கின்றன. இதைக் கண்டு களிப்பவர்களுக்கு இறைவனைப் பற்றி அகத் தூண்டுதலையும் உண்டாக்கி விடுகிறது.

இம்மாதிரியாக, மனித உள்ளத்தில் உருவாகும் இயல்புகளை எண்ணற்ற முறைகளில் எடுத்துக் கூறும் வழக்கம் ஹிந்து சமயத்தில் இருப்பதால் தான், வேத வழியே நல்வினை நல்குவதாகவும், நாம் எப்போதும் ஆன்மீகத்தில் மனதளவில் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாககவும் வேத வழி விளங்குகிறது.

12. உணவிலிருந்து, வாழும் பாணி, தினசரி செய்ய வேண்டிய காரியங்கள் ஆகியவைகளை அறிவியலுக்குரிய முறைப்படி வாழ்க்கையில் அமைத்துக்கொள்ள, ஹிந்து சமயம், வேத கலாச்சாரம் நமக்குத் திருப்தி அளிக்கும் வகையில் வழி காட்டுகிறது:

உலகாயதத்தில் நேர்மையுடன் பொருளீட்டவும், ஆன்மீகத்திலும் வாழ்க்கைப் பாணிகளை அமைத்துக் கொள்ளவும் வேத புனித நூல்கள், சம நிலையில் நமக்கு வழி காட்டுகின்றன.

உதாரணமாக, வேத வழி விளக்குவது:

முதலில், தியானம்: ஆழ்ந்த இறை சிந்தனைக்கு உகந்த காலம், விடியற்காலை. அதாவது ’ப்ரம்ம முகூர்த்தம்’ எனச் சொல்வார்கள். இது சூரிய உதயம் ஆவதற்கு சற்று முன்பாக உள்ள நேரம். காரணம், கழிந்த இரவில் நல்ல உறக்க-ஓய்வுக்குப் பிறகு, விடியற்காலையில் தான் மானிடருக்கு இயல்பாக இருக்கும் நல்லொழுக்கம், பாச உணர்வு, அன்புடமை, தாராள குணம் முதலியன மாற்றமடையாத நேரம், அதாவது சாத்வீக குணம் நிறைந்த காலம். ஏனெனெல், இந்நேரத்தில் தான் அன்றாட உலகாயத தினசரி வாழ்க்கை நடப்பில் ஏற்படும் சத்தம், நடவடிக்கை, சச்சரவு, எல்லாவித எண்ணங்கள் உதயமாக ஆரம்பிப்பதற்கு முன் உள்ள காலம். ஆகவே இக்காரணங் களுக்காகத் தான் தியானத்திற்கு விடியற்காலை மிக உகப்பானது.

இரண்டாவதாக உணவு: சாதாரணமாக, நண்பகல், (உச்ச வேளை) ஏறத்தாழ பகல் பன்னிரண்டு மணி அளவில் உண்ட உணவை ஜீரணிக்கச் செய்யும் ஜடராக்னி அமிலம் வயிற்றில் அதன் உச்சகட்டத்தில் உற்பத்தியாகி இருக்கும் நேரம். (hydrogen + sodium chloride à Hydrochloric Acid (HCl) – நீரியமும் (தண்ணீர்) லவணசாரமும் = ஜடராக்னி அமிலம். அதாவது சூரியன் தன் கொளுத்தும் சூட்டை, உச்சகட்டத்தில் உலகுக்களிக்கும் நேரத்தில் உணவை உண்டால், உணவு நன்கு ஜீரணிக்கப்பட்டு, அஜீரணமும் அதன் தொடர்புள்ள வயிற்று நோய்களும் உண்பவரை அணுகாது. உண்ணும் உணவை காலாகாலத்தில் உண்ணாதது தான் வயிற்றுக் கோளாறுகளுக்கு மூல காரணம். கண்ட நேரத்தில் கண்ட உணவை உண்பதால், அஜீரணமும் அதன் தொடர்புள்ள வயிற்று நோய்களும் உண்டாகின்றன என வேத வழி ஆயுர் வேத (Ayur Veda) மூலமாகத் தெளிவாகச் சொல்கிறது.

உண்ணும் உணவும் எந்தெந்த காலத்தில் உண்ண வேண்டியது, என மட்டுமல்லாமல், அதில் நல்லுணவின் உள்ள குணாதிசயங்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. உணவு வகைகளில்

1. நல்லொழுக்கத் தரும் உணவு (Sattvic = goodness)

2. சீற்றம், காம உணர்ச்சி, உண்டாக்கும் உணவு (Rajasic = passion)

3. உடல், மனது ஆகியவைகளுக்குத் தீமை, கறை பயக்கும், உணவு (Tamasic = darkness)

என வகுக்கப்பட்டுள்ளது

சாத்வீக உணவு - நல்லொழுக்கம் தரும் உணவு (Sattvic = goodness), அதாவது, சைவ உணவுக் கோட்பாடுள்ளது, (புலாலில்லாத உணவு) பழங்களும், காய் கறிகளும், நமக்கு சிக்கலற்ற உடல் நலம், மன அமைதி, மன நிறைவு, மனத் தெளிவு முதலியவைகளை ஊக்குவித்து, நம்மைப் பேணுகிறது.

ராஜச உணவு - சீற்றம், காம உணர்ச்சிகளை உண்டாக்கும் உணவு {(Rajasic = passion) அதாவது சுவை மிக்க நாவின்பம் தரும் உணவு (जिह्वा चापल्यम्), ஜிஹ்வா சாபல்யம்} நாக்கு சபலத்தால் அவ்வுணவின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி, நறுமணமும் காரசாரமும் நிறைந்த உணவு (spicy). இவ்வுணவு, மனக்கிளர்ச்சி, கோபம், காம உணர்ச்சி, பேன்றவைகளை இதன் தொடர்புள்ள நோய் நொடிகளை அளிக்கவல்லது.

ஒரே மேற்கோள்: ராஜச உணவை உண்பதால் உண்டாகும், ராஜச குணத்தால் விளையும் ”கோபத்தை”ப் பற்றி, கண்ணன் சொன்ன கீதையில் ப.கீ: 2-63 இல் கூறியபடி:

क्रोधाद्भवति संमोह:, संमोहात् स्मृतो विभ्रम: । स्मृति भ्रंशात् बुद्धिनाश:, भुद्धि नाशात् प्रण्श्यति ॥

க்ரோதாத் பவதி சம்மோஹ: சம்மொஹாத் ச்ம்ருதி விப்ரம: | ச்ம்ருதி ப்ரம்சாத் புத்தி நாச: புத்தி நாசாத் ப்ரணச்யதி ||

சினத்தால் à மனக்குழப்பம்; மனக்குழப்பத்தால் à நினைவு தடுமாற்றம்; நினைவு தடுமாற்றத்தால் à புத்தி நாசம் (நியாய அநியாங்களை சீர்தூக்கிப்பார்க்கும் திறனின்மை); புத்தி நாசமானதால்à மானிடரே முடிவில் அழிவை அடைந்து விடுகின்றனர்.

From anger produces delusion, from delusion confused memory, from confused memory the ruin of reason, due to ruin of reason, the human being ultimately perishes.

தாமச உணவு: உடல், மனது ஆகியவைகளுக்குத் தீமை, கறை பயக்கும் உணவு, (Tamasic = darkness) அதாவது, நல்ல சுவையும் இருக்காது, ஆனால், இவை பழைய உணவாகவும், புளிக்க வைத்த விபரீத சுவையுடன் கூடிய (fermented) உணவாகவும் இருக்கும், ஊட்டச்சத்தில்லாதது, மீண்டும் மீண்டும் உட்கொள்ளத் தூண்டி (alcoholic) மனதை தவறான வழிக்கு இட்டுச்செல்லும், சோம்பேறித் தனத்தை வளர்த்து, தூக்கத்திலும், முடிவாக, எப்போதுமே துன்பத்திலும் ஆழ்த்திவிடும்.

இவ்வாறாக, உணவைப்பற்றி ஒளிவு மறைவின்றி ஆர்வத்துடன் ஆழ்ந்து சிந்தித்து, நமக்கே நாம் வழி காட்டிக்கொண்டால், நாம் ஒவ்வொருவரும் மன நிறைவுடன் அமைதியுடன் வாழ்க்கை நடத்தலாமல்லவா! ; இங்கே -- (மகா கவி காளிதாசர் எழுதிய ’குமார சம்பவ’ காவியம் – 5வது சர்கம், 33வது ச்லோகம் ) ஏனெனில், “अपि क्रियार्थं सुलभं...........। अपि स्वशक्त्या तपसि..... शरीरं आद्यं खलु, धर्म साधनम्” ”சரீரம் ஆத்யம் கலு தர்ம சாதனம்” = நம் நல்வாழ்வை நாமே தர்ம வழியில் அமைத்துக் கொள்ள இவ்வுடல் தான் மிக இன்றியமையாத கருவி / சாதனம் என நமக்குப் புலனாகிறது. இதை நல்வழியில் பேண நமக்கு ஊக்குவிக்கிறது. (நல்லுணவு + உடற்பயிற்சி முதலியன)
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum