இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சமயத்தில் உதவும் சமயபுரத்தாள்

Go down

சமயத்தில் உதவும் சமயபுரத்தாள் Empty சமயத்தில் உதவும் சமயபுரத்தாள்

Post by ஆனந்தபைரவர் Sat Sep 18, 2010 9:57 pm

உழவர் பெருமக்கள் தங்கள் வாழ்க்கை நலனுக்கு கிராமப்புற தெய்வங்களையே வழிபடுகிறார்கள். குறிப்பாக மழை பெய்ய வேண்டும் என்பதற்காக மாரியம்மன் வழிபாடு துவங்கியது. ''மாரி'' என்ற சொல்லுக்கு 'மழை' என்பது பொருள். பயிர்கள் பூச்சிகளின் தாக்குதல் இன்றி நல்லபடியாக வளர மாரியம்மன் வழிபாடு துவங்கியது. மாரியம்மனை உக்கிரமாகவும், சாந்த நிலையிலும் வழிபடத் துவங்கினர்.

தலவரலாறு: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பக்தருக்கும் அறிமுகமான தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்தக்கோயிலில் வரும் 11ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

சமயபுரத்தின் ஆதி பெயர் விக்கிரமபுரம். 13ம் நூற்றாண்டின் இவ்வூரில் வீரசோமசுவர தேவன் என்ற மன்னன் சிவாலயம் ஒன்றை எழுப்பினார். 'பொய்ச்சலேஸ்வரம்' என இந்தக்கோயில் இருந்த பகுதி அழைக்கப்பட்டது. இப்போது அந்தக் கோயில் போஜராஜா கோயில் எனப்படுகிறது.

இந்த சிவன் கோயில் அருகில் ஒரு அதிசய நிகழ்ச்சி நடந்தது.

விஜயநகர பேரரசர்கள் இப்பகுதியை ஆண்டபோது, தொடர்ந்து சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. இதற்குப் பரிகாரமாக, மன்னர்கள் விஜயநகரம் சென்று தங்கள் ஊரிலிருந்த விஜயநகர மாரியம்மனுக்கு விழா எடுத்தனர். பின்னர் உற்சவ மாரியம்மனை ஒரு பல்லக்கில் ஏற்றி தெற்கு நோக்கி அனுப்பி வைத்தனர்.

அந்த பல்லக்கை சேவகர்கள் நீண்ட தூரம் எடுத்து வந்தனர். சமயபுரம் வந்ததும் கீழே இறக்கி வைத்தனர். மீண்டும் தூக்கியபோது அதை அசைக்க கூட முடியவில்லை. எனவே அந்தச் சிலையை அங்கேயே விட்டு சென்றனர்.

அப்போது அம்பிகைக்கு 'உக்கிரம் தீர்க்க வந்த மாரியம்மன்' என்ற பெயர் சூட்டப்பட்டது. கெடு வினைகளை தீர்ப்பதற்காக வந்தவள் என்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டது. நீண்ட காலமாக இந்த சிலை ஒரு குடிசையில் இருந்தது. இதன் பின் 1804ல் இங்குள்ள விஜயரங்க ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் பிறகு கண்ணனூரில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் என்பவர் தனி கோயில் ஒன்றை உருவாக்கினார்.

அந்த இடத்திலேயே அன்று முதல் அம்மன் அருள்பாலித்து வருகி றார். பக்தர்களுக்கு தக்க சமயத்தில் உதவுபவள் என்பதால் 'சமயபுரத்தாள்' என்ற பெயர் உருவானது. ஊரின் பெயரும் சமயபுரமாக மாறியது.

சிறப்பம்சம்: சமயபுரத்து அம்மனுக்கு மிகவும் பிடித்த வழிபாடுகளுள் ஒன்று தீச்சட்டி ஏந்திவருதல். சமயபுரத்திற்கு ஏராளமான பெண்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் தீர்க்கிறார்கள்.

சமயபுரத்து அம்மன் சிலையை நோக்கும் எவரும் உயிருடன் ஒரு பெண் நிற்பது போன்ற தோற்றத்தையே காண்கி றார்கள். மிகவும் துடிப்பான தெய் வம் சமயபுரத்து அம்மன். கண் பார்வை குறைந்தவர்கள் சமய புரத்து அம்மனுக்கு கண்மலர் வாங்கி வைத்து வழிபடு கிறார்கள். இதன்மூலம் கண்பார்வை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தக் கோயிலின் அருகில் ஆதிமாரியம்மன் கோயில் உள்ளது. சமயபுரம் செல்பவர்கள் தாய்க் கோயிலாக கருதப்படும் இந்தக்கோயிலுக்கும் சென்று வணங்கி வரவேண்டும்.

திருவிழா: இந்த கோயிலின் முக்கிய திருவிழா பூச்சொரியல் விழா ஆகும். பங்குனி மாதத்தில் இந்தவிழா நடக்கிறது.வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்பிகையை பார்க்க கூட்டம் அலை மோதும். எந்நாளும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். பக்தர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பிடம்: திருச்சியிலிருந்து சென்னை செல்லும் ரோட்டில் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சியிலுள்ள அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலிருந்தும் 5 நிமிடத்திற்கு ஒரு முறை டவுன் பஸ் செல்கிறது
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum