இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள்-ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!-1

Go down

காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள்-ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!-1 Empty காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள்-ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!-1

Post by ஆனந்தபைரவர் Wed Nov 03, 2010 10:28 pm

இந்த ஆலயத்தில், 12 மாதங்களும் திருவிழா நடைபெறுகிறது. அவை: சித்திரை- தமிழ் வருட பிறப்பு; திரு அவதார உற்சவம்; சித்ரா பௌர்ணமி, தோட்டோற்சவம்; ஸ்ரீராமநவமி; ஸ்ரீபாஷ்யகார சாற்று முறை; ஸ்ரீமதுரகவிகள் சாற்றுமுறை, வைகாசி- பிரம்மோற்சவம்; வசந்தோற்சவம்; ஸ்ரீநம்மாழ்வார் சாற்று முறை; ஸ்ரீநரசிம்ம ஜயந்தி, ஆனி- கோடை உற்சவம்; கருட சேவை; ஸ்ரீபெரியாழ்வார் சாற்று முறை; ஸ்ரீவைனதேய ஜயந்தி; ஸ்ரீசுதர்சன ஜயந்தி; ஸ்ரீமந் நாதமுனிகள் சாற்று முறை; ஸ்ரீபேரருளாளன் ஜ்யேஷ்டாபிஷேகம்; ஸ்ரீபெருந்தேவியார் ஜ்யேஷ்டாபிஷேகம், ஆடி- திருவாடிப்பூர உற்சவம்; கஜேந்திர மோட்ச கருட சேவை; ஸ்ரீஆளவந்தார் சாற்று முறை, ஆவணி- ஸ்ரீஜயந்தி, புரட்டாசி- ஸ்ரீதூப்புல் தேசிகன் மங்களாசாஸனம்; திருக்கோயில் தேசிகன் சாற்று முறை; நவராத்திரி; விஜயதசமி பார்வேட்டை, ஐப்பசி- தீபாவளி; ஸ்ரீசேனைநாதன் சாற்றுமுறை; ஸ்ரீபொய்கை ஆழ்வார் சாற்று முறை; ஸ்ரீபூதத்தாழ்வார் சாற்று முறை; ஸ்ரீபேயாழ்வார் சாற்று முறை; ஸ்ரீமணவாள முனிகள் சாற்றுமுறை, கார்த்திகை- கைசிக புராண படனம்; பரணி தீபம்; திருக்கார்த்திகை; ஸ்ரீதிருப்பாணாழ்வார் சாற்று முறை; ஸ்ரீலக்ஷ்மிகுமார தாததேசிகன் சாற்றுமுறை, மார்கழி - ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் சாற்று முறை; திருவத்யயன உற்சவம்; பகல் பத்து-ராப்பத்து வைபவம்; அனுஷ்டான குள உற்சவம்; ஆண்டாள் நீராட்டு உற்சவம்; போகி திருக்கல்யாணம், தை- சங்கராந்தி; சீவரம் பார் வேட்டை; தெப்போற்சவம்; தைப்பூசம்; ஸ்ரீதிருமழிசை ஆழ்வார் சாற்றுமுறை; வனபோஜன உற்சவம்; ரதசப்தமி உற்சவம்; மாசி- தவனோற்சவம், பங்குனி- திருக்கல்யாணம், பல்லவோற்சவம்.

பழைய சீவரம், மங்களகிரி, ஐயங்குளம், ராஜகுளம் முதலான வெளியூர்களிலும் காஞ்சி வரதருக்கு வருடாந்தர திருவிழாக்கள் உண்டு.

கள்ளழகர் வைகையில் இறங்குவது போல, ஸ்ரீவரதராஜ பெருமாள், காஞ்சி புரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலாற்றில் இறங்கும் 'நடபாவி உற்சவம்' சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.

மொகலாயர் படையெடுப்பின்போது காஞ்சி வரதராஜர் (உற்சவமூர்த்தி), காஞ்சிக்கு அருகில் வந்தவாசி செல்லும் பாதையில் 4 கி.மீ. தொலைவில் பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு லட்சுமி நரசிம்மர் கோயிலில் அடைக்கலம் புரிந்தார். ஒரு வருட காலம் அவருக்கு திருமஞ்சனம் மற்றும் உற்சவங்களும், செவிலிமேட்டில் நடைபெற்று வந்தது. இதன் அடையாளமாக ஒவ்வொரு வருடம் சித்ரா பௌர்ணமி விழாவில் காஞ்சி வரதர் பாலாற்றில் எழுந்தருளி திரும்பும்போது செவிலிமேடு லட்சுமி நரசிம்மரை வலம் வந்து செல்கிறார்.

பொங்கல் அன்று இரவு பத்து மணிக்கு பார்வேட்டைக்குக் கிளம்பும் காஞ்சி வரதராஜ பெருமாள், கோயிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள சீவரம் நரசிம்மர் கோயிலுக்கு செல்வார். பாசுரம் பாடியபடி அடியார்களும் உடன் வருவர். அங்கு 'வனபோஜனம்' விழா சிறப்பாக நடந்து முடிந்ததும், மறு நாள் பகல் 12 மணியளவில் வரதர், 140 படிகள் ஏறிச் சென்று குன்றின் மீது இருக்கும் நரசிம்மபெருமாள் சந்நிதியை அடைகிறார். பிறகு, அங்கிருந்து ஸ்ரீவரதராஜ பெருமாளும், ஸ்ரீபுரம் நரசிம்மரும் 'திருமுக்கூடல்' எனும் இடத்தில் உள்ள ஸ்ரீநிவாசபெருமாள் கோயிலுக்குப் புறப்படுவர். மூன்று பெருமாள்களும் அன்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

இங்கு, கருடசேவை வருடத்துக்கு மூன்று முறை அதாவது வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி மாதம் பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய வைபவங்களின்போது நடைபெறுகிறது.

முகம்மதியர் ஆதிக்கத்தின்போது காஞ்சி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய தலங்களில் இருந்த உற்சவ மூர்த்திகள் பாதுகாப்பு கருதி, உடையார்பாளையம், ஜமீனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பிற்காலத்தில் உடையார்பாளையத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு உற்சவர் விக்கிரகங்களை எடுத்து வர, ஆத்தான் ஜீயர் என்ற பெரியவர், தோடர்மால் என்பவர் மற்றும் சலவை தொழிலாளி ஒருவர் ஆகியோர் உதவினர். அவற்றில், எது காஞ்சி வரதர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனபோது, மூர்த்திகளின் திரு ஆடையை முகர்ந்து பார்த்த சலவைத் தொழிலாளி குங்குமப்பூ வாசனையை வைத்து காஞ்சி வரதரைக் கண்டுபிடித்தாராம்! நவராத்திரி விழாவின்போது சலவைத் தொழிலாளி வம்சத்தவர்களுக்கு மாலை- மரியாதைகள் அளிக்கப்படுகின்றன. தோடர்மால் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு விக்கிரகங்கள் ஏற்படுத்தப்பட்டு, இன்றும் அவை காஞ்சி வரதராஜர் கோயிலில் பாதுகாக்கப்படுகின்றன. இப்படி வரதர் மீண்டும் காஞ்சிக்கு வந்தது, பங்குனி உத்திரட்டாதி திருநாள் (1710-ஆம் ஆண்டு). இந்த நாளை உடையார் பாளையம் விழாவாகக் கொண்டாடுவர். இந்த உற்சவத்தின்போது ஸ்ரீவரதர் நாலு மாட வீதிகளில் புறப்பாடு செய்து சேவை சாதிப்பார்.

வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள்- சூரிய உதயத்தில் கோபுர வாயிலில் கருட வாகனத்தில், குடையின் கீழ் கம்பீரமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீகாஞ்சி வரதர். அப்போது சில நிமிட நேரம்... குடைகளால் ஸ்ரீவரதரை மறைத்து விடுவர். இதுவே தொட்டாச்சார்யர் சேவை எனப்படும்.

சோளிங்கபுரத்தில் வாழ்ந்தவர் தோட்டாச்சார்யர். இவர், ஆண்டுதோறும் வைகாசி உற்சவத்தின்போது கருட சேவையைக் காண காஞ்சிக்கு வருவது வழக்கம். ஒருமுறை அவரால் காஞ்சிக்கு வர இயலவில்லை. சோளிங்கபுரத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் நின்றவாறே வரதனின் கருட சேவையை நினைத்து நெக்குருகினார். அங்கேயே அவருக்கு கருட சேவையைக் காட்டி அருளினாராம் ஸ்ரீவரதராஜர். இதன் நினைவாகவே இன்றும் பகவானை குடையால் மறைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அதாவது பெருமாள் இங்கு மறைந்து அங்கு தோன்றுவதாக ஐதீகம்.

வைகாசி பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் அன்று காஞ்சி ஸ்ரீவரதராஜர், ஸ்ரீவேணுகோபாலன் அலங்காரத்தில் வீதி புறப்பாடு கண்டு திரும்பியதும் மாலைகள் எல்லாம் களைந்த பிறகு, திருவாபரணங்கள் (நகைகள்), வெள்ளி விதானம் (பந்தல்) ஆகியவற்றுடன் ரத்தினக் கம்பளம் விரிக்கப்பட்டு அழைத்து வரப் படுவார். அப்போது நாகஸ்வரம் முழங்க அசைந்து வரும் அவரது (பெருமாளை சுமந்து வரும் அழகு) நடையழகே அழகு!

ஒரு முறை யக்ஞமூர்த்தி என்பவர் ஸ்ரீராமானு ஜரிடம் வாதிட வந்தார். 18 நாட்கள் விவாதம் நடந்தது. 17-ஆம் நாளன்று ராமானுஜரால் யக்ஞ மூர்த்தியிடம் வாதிட்டு அவரை எதிர்கொள்ள முடியவில்லை. தம்மால் வைணவத்துக்குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று கலங்கினார். இரவு இதே கவலையால்

காஞ்சிப் பேரருளாளனான வரதராஜ பெருமாளை நினைத்தபடி படுத்த அவருக்குத் தூக்கம் வரவில்லை. எனினும் இடையில் தம்மை அறியாமல் தூங்கி விட்டார். அப்போது வரதராஜர் அவர் கனவில் தோன்றி, 'யாம் இருக்கிறோம். கவலைப்பட வேண்டாம். ஆளவந்தாரின் மாயாவாத கண்டனத்தைக் கொண்டு வாதிட்டு யக்ஞமூர்த்தியை வெல்வீராக!' என்று கூறினார்.

தூக்கம் விழித்து எழுந்த ராமானுஜர் காலையில் எழுந்து நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்து விட்டு யக்ஞமூர்த்தியிடம் வாதாடச் சென்றார். தேஜஸ§டன் ராமானுஜர் நடந்து வருவதைக் கண்டு பதறிய யக்ஞமூர்த்தி, ராமானுஜரின் கால்களில் விழுந்து சரணடைந்தார். பிறகு ''தாங்கள் பெருமை தெரியாமல் தங்களை வாதாட அழைத்து விட்டேன். அதற்காக மன்னிக்க வேண்டும். என்னையும் தங்களின் சீடனாக ஏற்று அருள் புரிய வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ராமானுஜரும் காஞ்சி வரதராஜரின் அனுக்கிரகத்தை எண்ணி மனதார வணங்கி, யக்ஞமூர்த்தியை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

திருக்கச்சி நம்பிகள் என்ற (அந்தணரல்லாத) பக்தர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு விசிறி கைங்கரியம் செய்து வந்தார். அவருடன் நேரடியாகப் பேசி வந்த ஸ்ரீவரதராஜ பெருமாள் தம்முடைய கட்டளைகளை அவர் மூலமாகவே ஸ்ரீராமானுஜருக்கு தெரிவித்து வந்தாராம்.

ராமானுஜருக்காக சோழ மன்னனிடம் கண்களை இழந்த கூரத்தாழ்வார், 'ஸ்ரீவரதராஜ ஸ்தவம்' என்ற பாடலைப் பாடி கண்களைப் பெற்ற திருத்தலமும் இதுவே.

கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிலேடைப் புலவர் கவி காளமேகம் காஞ்சியில் கருட சேவையின் போது ஒளிமிக்க கருடன் மீது சுடர்விட்டுப் பிரகாசிக்கும் பொன்வண்ணத் திருமேனியில் வரதர் திருவீதிஉலாவைக் கண்டு பெருமாளை வணங்கி நிந்தாஸ்துதியாக ஒரு பாடலைப் பாடினார்.

நன்றி சக்தி விகடன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum