இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்

Go down

ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்  Empty ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்

Post by ஆனந்தபைரவர் Sun Feb 13, 2011 1:35 pm

ஜோ என்கிற வலைப்பதிவாளர் ஒரு நூலை எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஏசு என்பவர் கற்பனை என நான் சொன்னது அவரை மிகவும்
வருத்தப்படுத்தியிருக்கும் போலிருக்கிறது. எனவே கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட 'இயேசு என்றொரு மனிதர் இருந்தார்' நூலை எனக்கு அனுப்ப வேண்டும் என கூறியிருக்கிறார்.
வாழ்க அவர் என் மீது கொண்டிருக்கும் பாசம். ஆனால் விசயம் என்னவென்று சொன்னால் ஏசு குறித்த புனைவுகளும் சடங்குகளும் நிறுவனமயமாக்கப்பட்ட கால கட்டம் முதல்
இன்றைய தேதி வரை அன்னாரைக் குறித்து கிறிஸ்தவ விவிலியத்துக்கு அப்பால் எவ்வித ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை. சேவியர் தாம் எழுதிய இந்த நூலைக் குறித்து
அதன் ஆசிரியர் என்ற முறையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். "என்னுடைய படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தமான நூல் என்று இதைச் சொல்வேன், காரணம் இந்த நூலை எழுதுவதற்காக அமெரிக்காவின் பல நூலகங்களில் இரவு பகல் பாராமல் தவம் கிடந்து வாசித்திருக்கிறேன்." என அவரே கூறியுள்ளார். ஆனால் அவர் அப்பதிவில் கொடுத்துள்ள
பின்னட்டை அப்படி தீர்க்கமான ஆராய்ச்சி பார்வையை ஒன்றும் வைக்கவில்லை. ஆராதனைப் பார்வையைத்தான் முன்வைக்கிறது. அதை நான் தவறெனக் கூறவில்லை. அவர் யூதகுல மக்களின் வாழ்க்கையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டதாகவும், அக்கால கட்டத்தில் மௌடீகமும் பூர்ஷ்வாத்தனமும் மேலோங்கி இருந்ததாகவும், இயேசுவின் குரல் அமைதி மற்றும் பகுத்தறிவினை கூறியதாகவும் எனவே அவர் குலத்துரோகியாக கருதப்பட்டதாகவும் எனவே தான் அவர் மரணத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் இந்நூல் கூறுகிறது.


1960களில் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி 'மாஸ்கோவில் ஏசு' என ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டது. (என்னிடம் வெகுகாலம் இருந்த இந்த பிரசுரம் எங்கோ தொலைந்து போயிற்று. பழைய சகாக்கள் இதனை வைத்திருந்தாலும் வைத்திருக்கலாம். சிவப்பட்டையில் ஒளிரும் சிலுவை போட்ட பிரசுரம்.). ' அமெரிக்காவின் பல நூலகங்களில் இரவு பகல் பாராமல் தவம் கிடந்து' எழுதிய சேவியரின் நூலினை நான் படிக்கவில்லை. ஆனால் பின்னட்டை கூறுகிற கதைக்கருவே உள்ளே பக்கங்களில் விரித்தோதப் பட்டிருக்குமெனில் 'மாஸ்கோவில் ஏசு கிறிஸ்து'வின் விளக்கவுரையாகவே அது அமைந்திருக்குமென கருதுகிறேன். ஏசு உயிர்த்தெழுந்ததாக கூறும் கிறிஸ்தவ நம்பிக்கையை கூறிவிட்டு சேவியர் மறு நிமிடமே மூன்று நாட்களில் கிறிஸ்தவ நம்பிக்கைகள் அனைத்தும் உயிர்த்தெழுந்ததாக கொள்ள வேணுமெனச் செப்புவது அவரது நூலின் முன்னட்டையில் 'மிகைக்கலப்பற்ற ... வாழ்க்கை வரலாறு' எனக்கூறுவதனை எள்ளி நகையாடி மறுதலிக்கிறது என்பதுடன் இந்த நூலின் வரலாற்று நேர்மைக்கும் கட்டியம் கூறுகிறது. கிழக்கு பதிப்பகம் ஏதோ மிகவும் தரமான புத்தகங்களை வெளியிடும் நிறுவனம் என்பதிலும் எனக்கு ஐயமுண்டு. தமிழ்நாட்டு பதிப்பகங்களில் சில பிரகடனப்படுத்தப்படாத பத்வாக்கள் உண்டு. கிறிஸ்தவத்தை ஆழமாக சர்ச்சைக்கோ விவாதத்திற்கோ உள்ளாக்கும் நூல் எதுவும் வெளி வந்திட முடியாது. ஓரளவு விமர்சனத்தன்மையுடன் கிறிஸ்தவத்தின் மையத்தை தொடாது ஏதாவது ஒரு நூல் வந்துள்ளதென்றால் அது சாதீயமும் கிறிஸ்தவமும் குறித்த ஒரு நூல் மட்டுமே. ஒரு புத்தக வெளியீட்டாளர் என்னிடம் கூறியது : "கிறிஸ்டியானிட்டியை தாக்குற மாதிரி கட்டுரைகள் வேண்டாம் சார். அது லைப்ரரி காப்பி போகமுடியாத மாதிரி அவுங்க செஞ்சிருவாங்க." கூறியவர் தனது அலமாரியில் இருந்து ஒரு கத்தையை எடுத்துக் காட்டினார். ஒரு கிறிஸ்தவ நண்பர் 'ஞான விவிலியங்களை' (Gnostic Gopels) மொழி பெயர்த்திருந்தார். "இதையே நான் வெளியிடாண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். கடனைவாங்கி நடத்துற தொழில் சார் இது. அவுங்களுக்கு எங்க அடிக்கணும்னு தெரியும்." என்றார். அவுங்க என்பது யார் என்பதனை ஊகங்களுக்கு விட்டுவிடுகிறேன். அண்மையில் உலகமெங்கும்
ஒளிபரப்பப்பட்ட கிறிஸ்துவின் அடக்க அறை குறித்த விவரணப்படத்தை இந்தியாவில் தடை செய்த கத்தோலிக்க சபையின் வலு அதன் பாசிச பரிமாணத்துக்கு மற்றொமொரு
எடுத்துக்காட்டு.


முன்பு நான் எழுதி பின் பல அலுவல்களாலும் மறதியாலும் எழுதாமல் நிறுத்திய இரு கட்டுரைத் தொடர்களை மீள் தொடர என்னை தூண்டிய முன்னிலையாக சகோதரர் ஜோவின்
செயல் அமைந்தது. அதற்கு நான் அவருக்கு நன்றி செலுத்தியே ஆகவேண்டும். ஏசுவின் வரலாற்று/தொன்மப் பின்னணியினை ஆராய்வதுடன் அதன் பின்னணியிலிருக்கும் அரசியலையும் அதிகார அமைப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவத்தின் பிற மத உரையாடல்கள் உண்மையில் உரையாடல்கள் அல்ல மாறாக ஒரு வழிபாதையே ஆகும். (இது மேல்தள இறையியலாளர்களாலேயே பலமுறை ஒப்புகொள்ளப்பட சமாச்சாரம்) எனவே இக்கட்டுரை தொடர் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதப்படும். கிறிஸ்தவத்தின் தொன்ம பரிமாணங்கள், யூத-கிறிஸ்தவ உறவுகள், கிறிஸ்தவ-பாரத தருமங்களின் சந்திப்புக்கள், மானுட வரலாற்றில் கிறிஸ்தவத்தின் பங்கு (இனப்படுகொலைகள் என்றில்லை மார்ட்டின் லூதர் கிங்கும் பிஷப் டுட்டுவும் கூட கிறிஸ்தவ இறையியலின் வெளிப்பாடுகள்தாம்.) என பல விசயங்களை இக்கட்டுரைத் தொடர் மூலம் காட்ட உத்தேசிக்கின்றேன்.

யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவா ஏசு?ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்  Jesus_nazi
ஏசு புனைவு யூத வெறுப்பியலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியது: ஏசு யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவாக இருக்க மூடியுமா?
இந்த நூல் முன் வைக்கும் யூத சமுதாய சித்திரம் விசித்திரமான ஒன்று: மௌடீகமான பூர்ஷ்வாத்தனமானதாக யூத சமுதாயத்தை அது காட்டுகிறது. பகுத்தறிவையும் அமைதியையும் வெறுத்த சமுதாயமாக எனவே ஏசுவை வெறுத்து அவர் கொலைக்கு காரணமான சமுதாயமாக அது யூத சமுதாயத்தினை சித்திகரிக்கிறது. வாஸ்தவத்தில் நிறுவன கிறிஸ்தவத்தின் ஏசு புனைவிலும் யூத சமுதாயம் இவ்வாறே சித்திகரிக்கப்படுகிறது. ஆனால் யூத சமுதாயம் யூத வரலாறு என்ன கூறுகிறது அக்கால கட்டத்தைக் குறித்து என்பது இந்த கிறிஸ்தவ மேன்மையாளர்களால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை. யூத நெறியின் திருமறையை பழைய ஏற்பாடு எனக் கூறுவதிலேயே கிறிஸ்தவத்தின் அகங்கார பயணம் தொடங்கி விடுகிறது எனலாம். 'உன்னைக் குறித்து நான் கூறுவதுதான் நீ' என்கிற பிறரை தீர்ப்பிடும் தன்மை. 'ஆண்டவன் உன்னோடு செய்த ஏற்பாடு பழையதாகிவிட்டது.' எனும் கருத்துருவாக்கத்தின் வெளிப்பாடே 'பழைய ஏற்பாடு' எனும் பதத்தில் உறைந்திருக்கும் மமதையான தீர்ப்பீடு ஆகும். என்றாலும் ஏசு பிறரை தீர்ப்பிடக்கூடாது என கூறியதாக கூறுவது இம்மதத்தின் பெயரிடும் விநோதத்திலேயே மறுக்கப்பட்டிருப்பதை நாம் உணர வேண்டும். ஏசு ஒரு கற்பனை புனைவு என்பதனை பலர் கூறியுள்ளனர் என்பதுடன் அன்று முதல் இன்று வரை குறைந்தது 1700 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ சபை ஏசு குறித்து போலித் தரவுகளை உருவாக்குவதை ஒரு கலையாகவே செய்து வந்துள்ளது. யூத இறையியலாளர்கள் தம் சமுதாயத்தின் இத்தகைய சித்திகரிப்பை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளார்கள் என்ற போதிலும் ஏழை சொல் அம்பலம் ஏறுவதில்லை என்ற கதையாக கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரை அவர்களது வார்த்தைகள் எடுபடவே இல்லை. அதே நேரத்தில் அவர்களது இறைநூல் கிறிஸ்தவ மொழிபெயர்ப்புகளில் அருமையான நுணுக்கமான மாறுதல்களுடன் ஏசுவுக்கான முன்னறிவிப்பாக மாற்றப்பட்டது. ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என்பதற்கான ஆதாரங்களாக இன்றைக்கும் மிசிநரிகளால் முன்வைக்கப்படும் தரவுகள் இவ்வாறு
மாற்று மதத்தவரின் நூலை தகாத முறையில் தவறாக மாற்றி அமைத்து செய்யப்படும் பிரச்சாரங்களே ஆகும். இது குறித்து யூத அறிஞர்கள் மிக தெளிவான ஆதாரங்களை ஒரு
இணைய தளத்தில் முன் வைத்துள்ளனர். அதனை இங்கே காணலாம். ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்  Jews_say
இயேசு ஏன் யூத இனத்தின் வாக்களிகபட்ட மெஸையா இல்லை இந்த இணைய தளத்தில் வேண்டிய அளவு தரவுகள் உள்ளன. உதாரணமாக 'அபிஷேகிக்கப்பட்டவன்' என தானியேல் 9:25 கூறுகிறதை கிறிஸ்தவ விவிலியத்தில் 'பிரபுவாகிய மெசையா' என மாற்றி அதனை தொடர்ந்து வருகிற வசனங்களை ஏசு குறித்த முன்னறிவிப்பாக மாற்றியுள்ளமையை என்னவென்பது! ஆனால் அதே ஹீப்ரு வார்த்தை 2-சாமுவேல் 1:21 இல் (அபிசேகிக்கப்பண்ணப் படாதவன் போல) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆக, இது கிறிஸ்தவ மொழி பெயர்ப்பாளர்கள் ஹீப்ரு தெரியாததால் செய்ததது அல்ல. மாறாக திட்டமிட்டு வார்த்தை திரிப்பு விளையாட்டில் இறங்கியதே ஆகும். யூத அறிஞர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த மோசடி முன்னறிவிப்புகள் இந்தியாவில் இன்னமும் ஆன்மீக அறுவடைக்கு
பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை சிந்தித்தால், இந்த யூத இணைய தளம் கூறுகிற விசயங்களை நாம் ஏன் தமிழ்படுத்தி துண்டு பிரசுரங்களாக மற்றும் சிறு நூல்களாக
விநியோகிக்க வேண்டுமென தெரியவரும். இந்த மொழிபெயர்ப்பு மோசடி குறித்து முழுமையானதோர் கட்டுரையை கீழே படிக்கலாம்: மெசையா என்பதன் வேர் பொருளே
அபிசேகிக்கப்பட்டவர் என சிலர் வாதிடலாம். ஆனால் வாக்களிக்கப்பட்ட மெசையா என்பதனை குறிக்கும் பதத்திற்கும் வெறுமனே அபிசேகிக்கப்பட்டவன் (அரசன் கூட அவ்வாறுதான்) எனும் பதத்திற்கும் நிச்சயமாக வேறுபாடு உண்டு என்பதனை யூத அறிஞர்கள் 2-சாமுவேல்1:21 ஐயும் தானியேல் 9:25 ஐயும் ஒப்பிட்டு காட்டி விளக்குகின்றனர். யூத சம்பிரதாயத்தின் படி தானியேல் இறை-அறிவிப்பாளர் (prophets) வரிசையிலேயே சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (பார்க்க: விக்கிபீடியா மெசியா:
http://en.wikipedia.org/wiki/Messiah

http://www.messiahtruth.com/anointed.html

டான் ப்ரவுன் சர்ச்சையின் ஆழமான வேர்கள்:

அண்மையில் வெளியாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி தடைகளைச் சந்தித்துள்ள திரைப்படம் 'தி டாவின்சி கோட்'. ஏசு கிறிஸ்து குறித்து அறியப்படாத சில கதையாடல்களை
இத்திரைப்படமும் இத்திரைப்படத்தின் அடிப்படையான டான் ப்ரவுன் என்பவரின் நாவலும் முன்வைக்கின்றன. இக்கதையாடல்கள் நிறுவன கிறிஸ்தவத்தின் தொடக்கம் முதலே
இருப்பவை. நிறுவன கிறிஸ்தவ அமைப்புகளால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு அடக்கி அழிவுக்கு உள்ளானவை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் அவை மேற்கத்திய அறிவுலகில் மட்டுமே ஓரளவு பேசப்பட்டவை. 1970களில் மேற்கில் ஏற்பட்ட நிறுவன எதிர்ப்பு அலைகளின் போது பொது பிரக்ஞைக்குள்ளும் புகுந்தவை. உளவியலாளர் கார்ல் உங் மற்றும் தொன்மவியலாளர் ஜோசப் கேம்பெல் ஆகியோரின் எழுத்துக்கள் இந்த மாறுபட்ட கிறிஸ்தவ கதையாடல்களை பிரபலப்படுத்தின. நிறுவன கிறிஸ்தவ கண்ணோட்டத்திற்கு மாறுபட்ட கதையாடல்களை கொண்ட ஞான விவிலியங்கள் (Gnostic Gospels) குறித்த சிறந்த ஆராய்ச்சியாளராக எலைன் பேகல்ஸ் எனும் பெண்மணி அறியப்படுகிறார்.
ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்  Pagels
ஸ்டிக்மட்டா' எனும் ஆங்கிலத் திரைப்படம் இந்நூல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பிரபல திரைச்சித்திரமாகும். ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்  STIGMATAஆனால் மிகுந்த சர்ச்சைகளுடன் உலகின் கவனத்தையே
கிறிஸ்தவத்தின் இந்த அறியப்படாத பரிமாணங்கள் பக்கம் திருப்பியுள்ள பெருமை 'தி டாவின்சி கோட்' திரைப்படத்தையும் நாவலாசிரியர் டான் ப்ரவுனையுமே சாரும். ஏதோ
பரபரப்பினை ஏற்படுத்தி பிரபலமடைவதாக 'டாவின்ஸி கோட்' குறித்து கூறுகிற நண்பர்கள் சில விசயங்களை இங்கே கோட்டைவிடுகிறார்கள்.


ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்  Empty Re: ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்

Post by ஆனந்தபைரவர் Sun Feb 13, 2011 1:41 pm

ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்  Starbird
மார்க்ரெட் ஸ்டார்பேர்ட்
மேலோட்டமாக ஏசு மேரி மேக்தலைனை மணந்துகொண்டது குறித்ததாக இந்த திரைப்படமும் நாவலும் அறியப்பட்டாலும், அதன் அடி நீரோட்டம் மேலும் வலுவான ஒன்றாகும்.
இறைமையின் பெண்மை தன்மை கிறிஸ்தவத்தில் முழுமை அடையவில்லை என்பதனால் எழும் ஒரு பூர்த்தியடையாத ஆன்மிகத் தேவையினையே இந்நூல் வெளிப்படுத்துகிறது. இந்நாவல் எழுத அடிப்படை ஆதாரங்களாக அமைந்த நூல்களில் ஒன்றின் ஆசிரியை மார்க்ரெட் ஸ்டார்பேர்ட் என்பவர். இவருடன் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இக்கட்டுரையாளன் நடத்திய உரையாடல் திண்ணை இணைய இதழில் (திண்ணை.காம். மார்ச் 4 2005) வெளியாகியிருந்தது. அவ்வுரையாடலில் தற்போதைய இச்சர்ச்சைகளை வரவேற்று ஸ்டார்பேர்ட் பின்வருமாறு கூறியிருந்தார்: "ஆயிரமாண்டுகள் பாலைவன வாசத்திற்கு பின்னர் மேரி மகதலேனை மீண்டும் வரவேற்கும் ஓர் சபையை நான் எதிர்நோக்குகிறேன். கார்டினல் ராட்ஸிங்கர் (இன்றைய போப்) அவளை என்றைக்கும் வரவேற்கப்போவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் மக்கள் கட்டாயமாக வரவேற்பார்கள். அதற்கு சில காலமாகலாம். ஆனால் மேரி மகதலேன் ஏசு கிறிஸ்து ஆகியோரது மண-இணைவு மையமாக - சில அண்மை நாகரிகங்களின் தொன்மங்களுடன் இணைத்தன்மையுடன் (தாமுஸ் ஓஸிரிஸ் அடடீனிஸ் மற்றும் டயோனிஸ்)-
விளங்குவதற்கு ஆதாரங்கள் உள்ளன...." இது மற்றோர் கேள்வியையும் எழுப்புகிறது. ஏசுவின் வரலாற்றுத்தன்மை குறித்தது அது. ஸ்டார்பேர்ட் கூறும் 'தொன்மங்களின்
இணைத்தன்மை' என்பது கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டங்களைச் சார்ந்த பல புராணக்கதைகளுடன், கிறிஸ்துவ விவிலியத்தை ஒப்பு நோக்குகையில் மீண்டும் மீண்டும்
உறுதிப்படுகிறது.


இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு காணலாம்.
ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்  Neareast-inana
இனானா பெண் தெய்வ வழிபாட்டின் பலகூறுகளை ஏசு புனைவுக்குள் கண்டறியப்பட முடியும்

'நரிகளுக்குக் குழிகளும், காயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை' என்று ஏசு கூறியதாக லூக்கா (9:58) கூறுகிறது. ஏசுவுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய பண்பாட்டினைச் சார்ந்த தெய்வமான இனானாவின் வேதனைப்பாடல் எனும் துதி "பறவைகளுக்கு கூடுகள் உண்டு ஆனால் எனக்கோ...விலங்குகளுக்கு தலைசாய்க்க ஓர் இடமுண்டு, ஆனால் எனக்கோ - எனக்கு தலை சாய்க்க ஓர் இடமில்லை" எனக் கூறுகிறது. (சாமுவேல் கிரேமரின் 'From the Poetry of Sumer', பக். 93 கலிபோர்னிய பல்கலைக்கழக வெளியீடு 1979) ஏசுவின் வரலாற்றுத்தன்மையும் அப்பாலும்  Cover_up
வழிகாட்டிய விண்மீன் அல்ல சோதிட கிரக நிலை குறித்த கதையே மறு உருவாக்கம் செய்யப்பட்டது
நியூ சயிண்டிஸ்ட்' எனும் பிரபல அறிவியல் பத்திரிகை டிசம்பர் 2001 இல் ஒரு செய்தியினை வெளியிட்டது. ஏசுவின் பிறப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவது பெத்லகேம்
விண்மீன். இது வழிகாட்ட கீழ்திசை ஞானிகள் குழந்தை ஏசுவை தரிசிக்க வந்ததாக விவிலிய நம்பிக்கை. ஆனால் உண்மையில் இது வானவியலுடன் தொடர்புடைய உண்மை நிகழ்வு
அல்ல என்றும், பாகன் (pagan) நம்பிக்கை மற்றும் சோதிடவியல் ஆகியவை சார்ந்ததோர் நிகழ்வே என்றும் ஜோசியத்தையும் ஏசு பிறப்பு கதையும் தொடர்பு படுத்தி அந்நாளைய ரோமில் பிரபலமடைந்த புனைவே இவ்வாறு இணைந்துள்ளது. இந்த உண்மை ஆரம்பக்கால கிறிஸ்தவ தலைவர்களால் மறைக்கப்பட்டு பெத்லகேம் விண்மீன் குறித்த புனைவு
உருவாக்கப்பட்டதென்றும் அறிவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அப்பத்திரிகை வெளியிட்டது. ஆக, டான் ப்ரவுன் கிறிஸ்தவத்தின் உருவாக்கத்தின் அடிப்படையில் பல
கிறிஸ்தவமற்ற மதங்களின் சேர்க்கை உள்ளதென்பதைக் கூறியுள்ளது, மூழ்கியுள்ள பெரும் பாறையின் ஒரு சிறிய நுனியே ஆகும்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum