இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அழகரந்தாதி -1

Go down

அழகரந்தாதி -1 Empty அழகரந்தாதி -1

Post by ஆனந்தபைரவர் Mon Aug 02, 2010 3:59 pm

நீராழிவண்ணனைப்பாலாழிநாதனைநின்மலனைச்
சீராழியங்கைத் திருமகள்கேள்வனைத்தெய்வப்புள்ளூர்
கூராழிமாயனைமாலலங்காரனைக்கொற்றவெய்யோ
னோராழித்தேர்மறைந்தானையெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே. 1
உரைமாற்றமுண்டென்பொறியைந்துமுன்னிடத்தன்றியுண்ணு
மிரைமாற்றவேண்டுமிதுவேயென்விண்ணப்பமென்னப்பனே
யுரைமாற்றளவற்றபொன்னுடுத்தாய்வில்லெடுத்திலங்கை
வரைமாற்றலரைச்செற்றாயழகாகருமாணிக்கமே. 2
மாணிக்கனகம்புரைமேனிமாலுக்குவார்சடையோன்
பாணிக்கனகம்பலியொழித்தானுக்குப்பச்சைத்துழா
யாணிக்கனகமுடியலங்காரனுக்குக்கண்டமெல்லாம்
பேணிக்கனகனுக்குப்பித்தரானவர்பித்தரன்றே. 3
பித்தரும்பாநின்றநெஞ்சனைவஞ்சனைப்பேருலகோர்
கைத்தரும்பாவியெனுங்கடையேனைக்கடைக்கணியாய்
முத்தரும்பாருந்தொழுமழகாவண்டுமூசுந்துழாய்ப்
புத்தரும்பார்முடியாயடியாரைப்புரப்பவனே. 4
புரந்தரனாமெனப்பூபதியாகிப்புகர்முகமா
துரந்தரசாளிலென்னல்குரவாகிலென்றொல்புவிக்கு
வரந்தரமாலிருஞ்சோலைநின்றார்க்கென்மனத்தினுள்ளே
நிரந்தரமாயலங்காரர்க்கிங்காட்டப்பட்டுநின்றபின்னே. 5
நின்றபிராணன்கழலுமுன்னே நெஞ்சமே நினையாய்
சென்றபிராயம்வம்பேசென்றேதாற்றிருமங்கைகொங்கை
துன்றபிராமனைசசுந்தரத்தோளனைத்தோளின்மல்லைக்
கொன்றபிரானையடைந்தடியாரொடுங்கூடுகைக்கே. 6
கூடுகைக்குஞ்சமரத்தடியேற்குக்கொடியவஞ்சஞ்
சாடுகைக்குஞ்சரணந்தரவேண்டுந்தடத்தழுந்தி
வாடுகைக்குஞ்சரங்காத்தீர்விண்வாழ்க்கைக்கும்வாளகக்கர்
வீடுகைக்குஞ்சரங்கோத்தீர்விடைவெற்பின்வித்தகரே. 7
வித்தகரும்பர்க்கரசானவனும்விதியுங்கங்கை
மத்தகரும்பரவும்மலங்காரர்மழைகொண்டகா
ரொத்தகரும்பரஞ்சோதியர்நாமமுரைத்தன்னைமீ
ரித்தகரும்பரதெய்வமுங்கூத்தும்விட்டேத்துமினே. 8
ஏத்துமின்பத்தியெனாலெட்டெழுத்துமிணையடிக்கே
சாத்துமின்பத்திரத்தண்ணந்துழாய்மதிதாங்கிக்கஞ்சம்
பூத்துமின்பத்திசெய்யும்பச்சைமாமுகில்போலழகர்
காத்துமின்பத்திலிருத்தியும்வைப்பர்கருணைசெய்தே. 9
செய்தவராகவருந்தியுந்தீர்த்தத்துறைபடிந்துங்
கைதவராகமங்கற்றுமென்னாங்கடற்பார்மருப்பிற்
பெய்தவராகனைமாலலங்காரனைப்பேரிலங்கை
யெய்தவராகவவென்றேத்தநீங்குமிருவினையே. 10
வினைக்குமருந்தளிக்கும்பிணிமூப்புக்கும்வீகின்றவே
தனைக்குமருந்தன்னதாளழகாசெய்யதாமரையங்
கனைக்குமருந்தமுதேயருளாய்நின்னைக்காதலித்து
நினைக்குமருந்ததிதன்னுயிர்வாழ்க்கைநிலைபெறவே. 11
நிலையாமையானவுடலுமுயிருநினைவுந்தம்மிற்
கலையாமையானங்கலக்குமுன்னேகங்கைவைத்தசடைத்
தலையாமையானனன்றாமரையான்றொழுந்தாளழக
னலையாமையானவன்மாலிருஞ்சோலையடைநெஞ்சமே. 12
நெஞ்சமுருக்குமுயிருக்குந்தொல்லைநீள்வினையின்
வஞ்சமுருக்கும்பவமுருக்கும்வண்டுழாயழகர்
கஞ்சமுருக்குமலர்வாய்த்திருநண்பர்கஞ்சனுக்கு
நஞ்சமுருக்குவளையாழியன்னவர்நாமங்களே. 13
நாமங்களாவிநழுவுந்தனையுநவின்றவரைத்
தாமங்களாவிமனத்துள்வைப்பார்தண்டலையினகிற்
றூமங்களாவிமணநாறுமாலிருஞ்சோலையன்பர்
சேமங்களாவின்களியனையார்பதஞ்சேருவரே. 14
சேராதகாதநரேகேழ்தலைமுறைசேர்ந்தவர்க்கும்
வாராதகாதம்வசைபிணிபாவமறிகடன்முன்
றூராதகாதங்கடூர்த்தானைமாலிருஞ்சோலையிற்போ
யாராதகாதலுடன்பணிவீரென்னழகனையே. 15
அழக்கன்றியகருங்கண்ணிக்குக்கண்ணியளித்திலரேல்
வழக்கன்றிமுன்கொண்டவால்வளைகேளுமறுத்ததுண்டேற்
குழக்கன்றின்பின்குழலூதலங்காரர்க்குக்கோதைநல்லீர்
சழக்கன்றில்வாய்பிளந்தாலுய்யலாமென்றுசாற்றுமினே. 16
சாற்றுக்கரும்பனைக்கூற்றென்னுமாசைத்தமிழ்மலயக்
காற்றுகரும்பனையுங்கண்படாளலங்காரற்கண்ட
ரேற்றுக்கரும்பனையக்கொங்கையாள்கொண்டவின்னலுக்கு
மாற்றுக்கரும்பனையல்லாதுவேறுமருந்தில்லையே. 17
மருந்துவந்தார்தொழுமாலிருஞ்சோலைமலையழக
ரருந்துவந்தாரணியென்றயின்றாரடலாயிரவாய்
பொருந்துவந்தார்பணிப்பாயார்விதுரன்புதுமனையில்
விருந்துவந்தாரடியார்க்கில்லைநோயும்வெறுமையுமே. 18
வெறுத்தவரைக்கஞ்சனைச்செற்றுளார்விடைவெற்பற்வெங்கட்
கறுத்தவரைக்கஞ்சலென்றுவந்தார்கனகாம்பரத்தைப்
பொறுத்தவரைக்கஞ்சனமேனிக்காவிபுலர்ந்துருகிச்
சிறுத்தவரைக்கஞ்சங்கூப்புமென்பேதைக்கென்செய்புவதே. 19
செப்போதனஞ்செழுந்துவபோசெவ்வாயென்றுசேயிழையார்க்
கொப்போதனஞ்சுருகித்திரிவீர்கனலூதைமண்வி
ணப்போதனமென்றமுதுசெய்தாரலங்காரர்பொற்றா
ளெப்போதனந்தறவிர்ந்தேத்தநீங்களிருக்கின்றதே. 20
இருக்கந்தரத்தனைவோர்களுமோதியிடபகிரி
நெருக்கந்தரத்தனையேத்தநின்றானைநிறத்ததுப்பி
னுருக்கந்தரத்தனைத்துன்பொழித்தானையுலகமுண்ட
திருக்கந்தரத்தனையல்லாதெண்ணேனொருதெய்வத்தையே. 21
தெய்வம்பலவவர்நூலும்பலவவைதேர்பொழுதிற்
பொய்வம்பலவென்றுதோன்றும்புல்லோர்கட்குப்போதநல்லோ
ருய்வம்பலனுமவனேயென்றோதியுணர்வர்நெஞ்சே
கொய்வம்பலர்சொரியுஞ்சோலைமாமலைக்கொண்டலையே. 22
கொண்டலையாநிற்குமைம்புலக்கோண்மகரங்களினீர்ப்
புண்டலையார்பிறவிக்கடன்மூழ்குவருத்தமனைத்
தண்டலையார்திருமாலிருஞ்சோலைத்தனிச்சுடரைப்
புண்டலையால்வணங்காரணங்கார்வினைபோகவென்றே. 23
என்றுதரங்கலந்தேனற்றைநான்றுதொட்டிற்றைவரை
நின்றுதரங்கிக்கின்றேற்கருள்வாய்நெடுங்கான்கடந்து
சென்றுதரங்கக்கடறூர்த்திலங்கையிற்றீயரைக்
கொன்றுதரங்குவித்தாய்சோலைமலைக்கோவலனே. 24
கோவலன்பார்ப்புடன்கேகயஞ்சூழ்குளிர்சோலைமலைக்
காவலன்பாற்கடற்கண்டுயின்மாமலங்காரனென்றே
பாவலன்பாற்பணிவாரணிவானவராகிமறை
நாவலன்பார்ப்பதிநாதனண்ணாப்பதநண்ணுவரே. 25
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum