இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அழகரந்தாதி -2

Go down

அழகரந்தாதி -2 Empty அழகரந்தாதி -2

Post by ஆனந்தபைரவர் Mon Aug 02, 2010 4:00 pm

நன்னினனாகமுடிமேனடித்தென்னைநாசமறப்
பண்ணினனாகமும்பாருமளந்தனபண்டுதம்பி
மண்ணினனாகவனிம்போயினவளர்சோலைமலைக்
கண்ணினனாகங்கரியான்சிவர்தகழலிணையே. 26
கழலப்புகுந்தவளையறியாரென்கருத்தறியா
ரழலப்புகன்றொறுப்பாரன்னைமாரறுகாற்சுரும்பு
சுழலப்புனைந்ததுழாய்மார்பர்மாலிருஞ்சோலையென்னார்
தழலப்புவரென்றனங்களிலேசந்தனங்களென்றே. 27
தனத்துக்கராவியவேல்விழிக்கேக்கற்றுத்தையாலராற்
றினத்துக்கராகித்திரிவார்பலர்சிலர்செங்கமல
வனத்துக்கராசலங்காத்தாற்குச்சோலைமலையினின்ற
கனத்துக்கராவணையாற்கெம்பிராற்குள்ளங்காதலரே. 28
காதலைப்பத்தினிமேல்வைத்தநீசக்கருநிருதன்
மாதலைப்பத்தியைமண்ணிலிட்டாய்நின்னைவாழ்த்தித்தொண்டர்க்
கீதலைப்பத்தியைச்செய்வோர்கள்வாழுமிடபவெற்பா
தீதலைப்பத்தியங்கித்திரிவேற்கருள்செய்தருளே. 29
அருடருமங்கைவிடாதேத்துமன்பருக்கன்பரெல்லி
லிருடருமங்கையெறியாழியாரிசைக்கின்னரருங்
கெருடருமங்கையரும்வாழிடபகிரியிற்கல்லா
முருடருமங்கையலெய்திலன்றேயலர்முத்தரன்றே. 30
முத்தரன்றேநின்கழலொருகாற்கைமுகிழ்க்கப்பெற்றோர்
பித்தரன்றேநினக்கேபித்தராகிற்பிரமன்கங்கை
வைத்தரன்றேய்துயர்தீர்த்தாய்நின்சோலைமலைமருவும்
பத்தரன்றேபரிவாலென்னையாளும்பரமர்களே. 31
பரந்தாமரைத்திருமாலிருஞ்சோலைப்பரமரைக்கால்
கரந்தாமரையன்னகார்நிறத்தாரைக்கடல்கடக்குஞ்
சரந்தாமரைதிரிகான்போயிலங்கைத்தலைவன்பத்துச்
சிரந்தாமரைக்கணத்தெய்தாரையெய்தற்குத்தேர்மனமே. 32
நேராயிரவுபகலிரைதேடுவைதீமைநன்மை
பாராயிரங்குவைபாவையராற்பண்டுமாவலிபாற்
சோராயிருந்தவனைத்திருமாலிருஞ்சோலைநின்ற
பேராயிரமுடையானைநெஞ்சேயென்றுபேணுவையே. 33
பேணிக்கவித்தவரைக்குடையாய்பெரியோர்பதின்ம
ராணிக்கவித்ததமிழ்மாலைகொண்டாயழகாகரிய
மாணிக்கவித்தகமாமலையேவண்டுளவுக்கல்லாற்
பாணிக்கவித்தடங்காதுவெங்காமப்படர்கனலே. 34
படராகுவால்குவியக்குழலூதியபாலரைய
மடராகுவாகன்ன்றாதைக்கிட்டாரலங்காரர்துழாய்க்
கிடராகுவார்பலர்காண்டமியேனையெரிப்பதென்னீ
விடராகுவாய்க்கொண்டுடல்சுட்டுக்கான்றிட்டவெண்டிங்களே. 35
திங்களப்பாநின்றசெந்தீக்கொழுந்திற்செழுஞ்சங்குபோ
லுங்களப்பாவையுருகுவதோர்கிலரும்பரெல்லா
மெங்களப்பாவெமைக்காவாயெனவுலகீரடியா
லங்களப்பான்வளர்ந்தார்சோலைமாமலையாதிபரே. 36
ஆதியராவிற்றுயிலலங்காராழகரன்பாம்
வேதியராவுதிவீற்றிருப்பாரண்டமீதிருக்குஞ்
சோதியராவின்பின்போந்தாரையன்றித்தொழேனுடலைக்
காதியராவினும்பொன்மாமகுடங்கவிக்கினுமே. 37
கவித்தானைமன்னற்குநட்பாய்முடிகவித்தானையன்று
புவித்தானைவற்றப்பொழிசரத்தானைப்பொருதிலங்கை
யவித்தானைமாலிருஞ்சோலைநின்றானையழகனைமுன்
றவித்தானைவாவெனவந்தானைப்பற்றினென்றஞ்சமென்றே. 38
தஞ்சந்தனமென்றுதேடிப்புல்லோர்தையலார்கடைக்கண்
வஞ்சந்தனங்கொள்ளவாளாவிழப்பர்மதியுடையோர்
செஞ்சந்தனப்பொழின்மாலிருஞ்சோலைத்திருநெடுமா
னெஞ்சந்தனக்குவப்பாகநல்காநிற்பர்நேர்படினே. 39
பேராயவேதனைநெஞ்சிடந்தாய்நெடுஞ்சோலைமலைக்
காராயவேதனைமுன்படைத்தாய்நின்கழற்குத்தொண்டென்
றாராயவேதனைப்புன்பிறப்போயுமவர்வழியிற்
பேராயவேதனையில்லுழைப்போரும்பிழைப்பர்களே. 40
பிழைத்தலையானெண்ணிப்பேசுகின்றேனிப்பிணிமற்றொன்றான்
மழைத்தலைவார்குழலீர்தணியாதுவருணனைமு
னழைத்ததலையங்கடைத்தாநலங்கனல்கீர்
முழைத்தலைநின்றுமலயாநிலம்வந்துமோதுமுன்னே. 41
மோதாகவந்தனைமூட்டிலங்கேசன்முடிந்துவிண்ணின்
மீதாகவந்தனைவில்லெடுத்தேவிடைவெற்பினின்ற
நாதாகவந்தனைச்செற்றாயுனையன்றிநான்மறந்துந்
தீதாகவந்தனைசெய்யேன்புறஞ்சிலதேவரையே. 42
தேவரையாதன்மனிதரையாதல்செழுங்கவிதை
நாவரையாமனவிலுகிற்பீர்நம்மையாளுஞ்செம்பொன்
மேவரையானையிருஞ்சோலைவேங்கடமெய்யமென்னு
மாவரையானையொருவனையேசொல்லிவாழுமினே. 43
வாழுமின்பங்கயச்சுந்தரவல்லிமணாளன்வெற்பைச்
சூழுமின்பந்தித்ததொல்வினைதீர்ந்துய்யத்தொங்கல்சுற்றுந்
தாழுமின்பஞ்சணைமேன்மடவார்தடமாமுலைக்கே
வீழுமின்பங்கருதித்துன்பயோனியில்வீழ்பவரே. 44
வீழமராமரமெய்தார்மதிதவழ்வெற்பைநெஞ்சே
தாழமராடச்சமன்குறுகானிச்சரீரமென்னும்
பாழமராமற்பரகதியேற்றுவர்பார்க்கில்விண்ணோர்
வாழமராவதியுந்நரகாமந்தமாநகர்க்கே. 45
நகரமுனாடும்புரந்தவர்நண்ணலரால்வனமுஞ்
சிகரமுனாடுஞ்சிறுமைகண்டோமஞ்ஞைதேனிசைகள்
பகரமுனாடும்பனிச்சோலைவெற்பினிற்பார்க்குக்கஞ்சன்
றகரமுனாடுகைத்தார்க்கறிந்தீர்கள்சரண்புகுமே. 46
சரணியனாகத்தனைநினைந்தாரைத்தன்போலவைக்கு
மரணியனாகத்தணையானரங்கனழகனெங்கோ
னிரணியனாகமிடந்தான்கதையன்றியீனர்தங்கண்
முரணியனாகத்தும்புன்குரலோரிமுதுக்குரலே. 47
முதுவிருந்தாவனத்தானிரைமேய்த்தவர்முன்விதுரன்
புதுவிருந்தானவர்மால்லங்காரர்பொலுங்கழலா
மதுவிருந்தாமரைக்களாயிரார்க்குமதிநுட்பநூ
லெதுவிருந்தாலுமதனால்விடாவிங்கிருவினையே. 48
வினையாட்டியேன்கொண்டவெங்காமநோய்வெறியாட்டினுமிச்
சினையாட்டினுந்தணியாதன்னைமீர்செய்யபூங்கமல
மனையாட்டிநாயகன்மாலிருஞ்சோலைமலைச்சிலம்பாற்
றெனையாட்டிவாருஞ்சொன்னேனெந்தநோயுமெனக்கில்லையே. 49
எனக்காவியங்குமுடலிங்குமாகியிருப்பதைச்சந்
தனக்காவியங்குந்தமரவண்டீர்சொல்லுந்தத்துவநூல்
கனக்காவியங்கவிவல்லோர்புகழலங்காரனுக்கு
வனக்காவியங்கண்ணிமாமலராண்மணவாளனுக்கே. 50
மணவாளராவிநிகர்திருமாதுக்குமாலழகர்
பணவாளராவிற்கண்பள்ளிகொள்வார்திருப்பாதமெண்ணக்
குணவாளராவிரின்யேபுயிர்காளும்மைக்கூற்றுவனார்
நிணவாளராவியறுக்குமப்போதுநினைப்பரிதே. 51
நினைப்பரியாயெளியாயும்பர்யார்க்குநின்னன்பருக்கும்
வினைப்பரியானவன்வாய்பிளந்தாய்வியன்சோலைமலை
தனைப்பரியாநின்றதாளழகாமுற்சனனத்துள்ளு
முளைப்பரியாமலன்றோபரித்தேனிவ்வுடலத்தையே. 52
உடலம்புயங்கத்துரிபோல்விடுமன்றுவணப்புள்ளி
னடலம்புயமிசைநீவரவேண்டுமையானனற்கு
மடலம்புயற்கும்வரந்தருஞ்சோலைமலைக்கரசே
கடலம்புயர்வரையாலடைத்தாயென்னைக்காப்பதற்கே. 53
காப்பவனந்தமலரோனையுங்கறைக்கண்டனையும்
பூப்பவனந்தரம்போக்கவைப்பான்புனல்பார்விசும்பு
தீப்பவனந்தருந்தெய்வசிகாமணிசேவடியை
நாப்பவனந்தப்புகழ்வார்க்கொப்பில்லைநவகண்டத்தே. 54
கண்டாகனன்கண்ணனல்லாற்கதியின்மைகண்டடைந்த
துண்டாகனம்பவொட்டாதுங்களூழ்வினையுண்மையறிந்
தண்டாகவனவண்ணனேயருளாயென்றழகனுக்கே
தொண்டாகனன்னெஞ்சினாலுரைப்பீர்பிறர்தொண்டர்களே. 55
தொண்டுபடார்திருமாலிருஞ்சோலையிற்சோதிக்கன்பு
கொண்டுபடாமலரிட்டிறைஞ்சார்மடக்கோதையரைக்
கண்டுபடாமுலைதோயனுராகங்கருதியிரா
வுண்டுபடாநிற்கும்போதுநைவாரெங்ஙனுய்வதுவே. 56
உய்வந்தொழும்புசெய்தென்றிருப்போமையுய்யாமலைவர்
பெய்வந்தொழுவினைக்கேயென்பராற்பெருந்தேன்சிகரந்
தைவந்தொழுகுமலையலங்காரசதுமுகத்துத்
தெய்வந்தொழுந்தெய்வமேயென்கொலோவுன்றிருவுளமே. 57
திருவிளையாடுதிண்டுடாட்செங்கண்மால்பலதேவருடன்
மருவிளையான்றிருமாலிருஞ்சோலைமலையெனவோ
ருருவிளையாமற்பிறப்பார்பலர்புகழோதிச்சிலர்
கருவிளையாநிற்கவித்தாவர்முத்தியிற்காமமற்றே. 58
காமத்தனைப்பொய்யழுக்காறுகோபங்களவுகொலை
யாமத்தனையுமுடையேனையாளுங்கொலான்பொருப்பாந்
தாமத்தனைவரும்போற்றநின்றான்பண்டுதாமரையோன்
பூமத்தனைச்செய்தநோய்துடைத்தானடிப்போதுகளே. 59
போதகத்தானும்வெண்போதகத்தானும்புராந்தகனுந்
தீதகத்தானதுதீந்தருங்காலைத்திருவரைசேர்
பீதகத்தாயழகாவருளாயென்பர்பின்னையென்ன
பாதகத்தான்மறந்தோதனிநாயகம்பாவிப்பரே. 60
பாவிக்கமலவிரிஞ்சற்கிறையவர்பத்தர்தங்க
ளாவிக்கமலத்துவீற்றிருப்பாரளிப்பாடல்கொண்ட
வாவிக்கமலமணநாறுஞ்சோலைமலையைக்கண்ணாற்
சேவிக்கமலமறுமனமேயெழுசெல்லுதற்கே. 61
செல்லுக்குவளைகுழனாட்டமென்றுதெரிவையர்பாற்
பல்லுக்குவளைமுதுகாந்தனையும்புன்பாட்டுரைப்பீ
ரல்லுக்குவளையுழும்பாண்டிநாட்டையடைந்துநுங்கள்
சொல்லுக்குவளையுண்டார்க்கலங்காரர்க்குக்கூட்டுவினே. 62
சூட்டோதிமஞ்சென்றுசொல்லாதென்காதலைத்தும்பியிசைப்
பாட்டோதிமங்கையரும்பணியார்பண்டுகன்மழைக்காக்
கோட்டோதிமமெடுத்தார்சோலைமலைக்கோவலனார்
மாட்டோதிமஞ்சினங்காளுரைப்பீர்மறுவாசகமே. 63
வாசம்பரந்ததுழாயுமென்பாடலுமாலையொளி
வீசம்பரம்பசும்பொன்னுமென்வேட்கையும்வீற்றிருக்குந்
தேசம்பரமபதமுமென்சிந்தையுந்தீவளியா
காசம்பரவைமண்கண்டுண்டமாலலங்காரனுக்கே. 64
அலங்காரன்சுந்தரத்தோளனழகனணிமுடியி
விலங்காரனேறுதிருவுடையானெட்டெழுத்துங்கற்றார்
கலங்காரனங்கன்கணையாலெச்செல்வமுங்காதலியார்
மலங்காரருந்துயர்மேவினுமாகுவர்வானவரே. 65
வானவதாரணிசுந்தரந்தோளன்முன்மாவலியைத்
தானவதாரணிதாவென்றமாயன்றராதலத்து
மீனவதாரமுதலானவைவினையின்றியிச்சை
யானவதாரறிவாரவரேமுத்தராமவரே. 66
ஆமவரைப்பணித்தாள்வாரழகரயனுமையாள்
வாமவரைப்பணியான்பணிபாதத்தைவாழ்த்துங்கொங்கை
யேமவரைப்பணிபூணாள்சந்தேந்திழையாளுரைத்தால்
வேமவரைப்பணியாதேயெனுமெங்கண்மெல்லியலே. 67
மெல்லியலைப்பரியங்கனையாரும்வெறுத்துவசை
சொல்லியலைப்பரியங்கவொட்டார்சுடர்மாமலையைப்
புல்லியலைப்பரியங்கத்திலேறும்புயல்பதின்மர்
நல்லியலைப்பரியங்கழற்றாமநயந்தபின்னே. 68
பின்னிறப்பும்பிறப்புந்நரைமூப்பும்பிணியுமனை
முன்னிறப்பும்பிரித்தானிருந்தானவர்மூதிலங்கை
மன்னிறப்புங்கக்கணைதொட்டசோலைமலையழகன்
மென்னிறப்புண்டரிகத்திருத்தாளன்றிப்போற்றிலமே. 69
போற்றியிராமவென்னார்சோலைமாமலைபோதவிடார்
மாற்றியிராவைப்பகலாக்கிலார்வண்டுழாய்குழன்மே
லேற்றியிராசதமாகவையாரென்னிடரையெல்லா
மாற்றிபிராரன்னைமாரென்னைவாய்வம்பளக்கின்றதே. 70
அளப்பதுமங்கையினீரேற்பதுந்தந்தளிப்பதும்பின்
பிளப்பதுமங்கையில்வெண்கோட்டிற்கொள்வதும்பேருணவாக்
கிளப்பதுமங்கையெனத்தோள்புணர்வதுங்கேட்கில்வையம்
வளப்பதுமங்கையஞ்சேர்சோலைமாமலைமாதவரே. 71
மாதவராலும்பராலறியார்மதுரைப்பிறந்த
யாதவராலிலைமேற்றுயின்றாரிருந்தாழ்சுனையிற்
போதவராலுகண்மாலிருஞ்சோலையிற்போம்பிறவித்
தீதவராலன்றியெத்தேவராலுந்தெறலரிதே. 72
அரியவரந்தந்தயன்முதலோர்க்கருள்செய்தவரைப்
பெரியவரந்தமில்வாழ்வினராக்கித்தம்பேரருளாற்
கரியவநந்தணர்கைதொழுமாலலங்காரர்வையத்
துரியவரந்தரங்கத்துயர்தீர்க்கவுலாவுவரே. 73
உலகுதிக்கும்படிசிந்தித்துத்தந்திவ்வுலகிலுறு
நலகுதிக்கும்படிநின்றபிரானிடநானிலமு
மிலகுதிக்கும்விசும்புந்தொழவோங்கியிறால்வருடை
பலகுதிக்குந்தோறுந்தேன்பாயுஞ்சோலைப்பருப்பதமே. 74
பருப்பதந்தாமன்னிநிற்பதுபாற்கடல்பள்ளிகொள்வ
திருப்பதந்தாமம்பண்டிப்பேரதெலாமிளஞாயிறன்ன
வுருப்பதந்தாமதர்க்கீயாமலன்பர்க்குதவழகர்
திருப்பதந்தாமரைபோல்வாருகப்பதென்சிந்தனையே. 75
சிந்திக்கலாங்கொழிக்குந்திருச்சிலம்பாற்றழகும்
பந்திக்கலாபமயிலாடுஞ்சாரலும்பங்கயனோ
மந்திக்கலாமதியாற்கரியாருறையான்பொருப்பும்
வந்திக்கலாமெனிற்சந்திக்கலாமுயர்வைகுந்தமே. 76
வைதாரையுமுன்மலைந்தாரையுமலர்த்தாளில்வைத்தாய்
மொய்தாரையத்தனைத்தீங்கிழைத்தேனையுமூதுலகிற்
பெய்தாரைவானிற்புரப்பானிடபப்பெருங்கிரியாங்
கொய்தாரைவேய்ந்ததிருவடிக்கீழ்த்தொண்டுகொண்டருளே. 77
கொண்டமருந்துங்கடைவாய்வழியுகக்கோழைவந்து
கண்டமருந்துபராம்போதுன்பாதங்கருதறியேன்
வண்டமருந்துளவோனேதென்சோலைமலைக்கரசே
யண்டமருந்தும்பிரானேயின்றேயுன்னடைக்கலமே. 78
அடைக்கலந்தானையிரந்தாள்புகலவவள்பொருட்டாற்
படைக்கலந்தானைத்தருமன்கெடாமல்வெம்பாரதப்போ
ரிடைக்கலந்தானையலங்காரனைச்சரணென்றடைந்தேன்
முடைக்கலந்தானையுமப்போதயர்ப்பினுமுத்தியுண்டே. 79
உண்டிறக்கும்புவனங்களைமீளவுமிழ்ந்திலையேற்
பண்டிறக்கும்பதுமத்தோன்புரந்தரன்பைந்தழல்போற்
கண்டிறக்குஞ்சங்கரன்முதலோர்களைக்கண்டவரார்
திண்டிறக்குஞ்சரஞ்சேர்சோலைமாமலைச்சீதரனே. 80
சீரரிதாழ்பெரழின்மாலிருஞ்சோலையிற்செல்வர்செங்கட்
போரரிதாள்புனைதாரரிதாகிற்றண்பூந்துளலின்
றாரரிதாவுந்தழையரிதாகிற்றழைதொடுத்த
நாரரிதாகிற்பிழைப்பதரிதாமெங்கணன்னுதற்கே. 81
நன்னுதலைப்பணிபூண்மார்பில்வைத்துவிண்ணாட்டிருப்பார்
மின்னுதலைப்பணிமேற்றுயில்வார்விடைவெற்பினிற்பார்
மன்னுதலைப்பணியன்பரைவைக்குமலரடிக்கீழ்த்
துன்னுதலைப்பணிசெய்வதெஞ்ஞான்றென்னுயர்தொலைந்தே. 82
தொலைந்தானையோதுந்தொலையானையன்னைசொய்லான்மகுடங்
கலைந்தானைஞானக்கலையானையாய்ச்சிகலைத்தொட்டிலோ
டலைந்தானைப்பாலினலையானைவாணன்கையற்றுவிழ
மலைந்தானைச்சோலைமலையானைவாழ்த்தென்மடநெஞ்சமே. 83
நெஞ்சிலம்பாற்றமுடியாதுவேளெய்துநீளிரவுந்
துஞ்சிலம்பாற்றுளியுந்நஞ்சமாஞ்சொரிகன்மழையை
யஞ்சிலம்பாற்றடுதாரலங்காரரடிவிளக்குஞ்
செஞ்சிலம்பாற்றருகேகிடத்தீருயிர்தேற்றுதற்கே. 84
தேற்றுவித்தாற்புனறேற்றுநர்போற்றிருவெட்டெழுத்தான்
மாற்றுவித்தானென்மயக்கமெல்லாமண்ணும்விண்ணுமுய்யப்
போற்றுவித்தாரப்புயலலங்காரன்பொன்மேருவைப்போற்
றேற்றுவித்தாரணியுஞ்சுந்தரத்திருத்தோளண்ணலே. 85
அண்ணலைவான்மதிதோய்சோலைமாமலையச்சுதனைத்
தண்ணலைவானவனைத்தெயவநாதனைத்தாளடைவா
னெண்ணலைவான்பகையாமைவரோடிசைந்தின்னமுடற்
புண்ணலைவானெண்ணினாய்மனமேயுன்புலமைநன்றே. 86
புலமையிலேநிமிர்ந்தற்பரைப்போற்றிப்பொதுமகளைக்
குலமையிலேகுயிலேகொடியேயென்றுங்கூர்விழியாம்
புலமையிலேயென்றும்பாடாமற்பாடுமின்பாவலர்கா
ணலமையிலேய்முத்தமார்சோலைமாமலைநம்பனையே. 87
நம்பிநின்றேனுன்சரணாரவிந்தத்தைநன்னெஞ்சென்னுஞ்
செம்பிநின்றேபொறித்தேனுனக்காளென்றுதெய்வக்குழாம்
பம்பிநின்றேசெறிக்கும்பதங்காணப்பதறுகின்றேன்
கொம்பிநின்றேன்சொரியுஞ்சோலைமாமலைக்கொற்றவனே. 88
கொற்றவிராவணன்பொன்முடிவீழக்கொடுங்கண்டுஞ்ச
லுற்றவிராவணன்மாளயெய்தோனொண்பரதனிக்குச்
சொற்றவிராவணன்மாலிருஞ்சோலைதொழுதுவினை
முற்றவிராவணனற்றமிழ்மாலைமொழிந்தனனே. 89
மொழித்தத்தைகொஞ்சமலையலங்காரமுன்னூற்றுவரை
யழித்தத்தைமைந்தர்க்கரசனித்தோன்டிநாட்டொடர்ந்தென்
னுழித்தத்தைச்செய்தன்றிப்போகாவினையையொருநொடியிற்
கழித்தத்தையென்சொல்லுகேன்றனக்காட்பட்டகாலத்திலே. 90
காலமலைக்கும்புவனங்களைக்கரந்தாயுதிரங்
காலமலைகுமைத்தாயழகாகமலத்துப்பஞ்சரர்
காலமலைக்கும்புவிக்குமன்பாவுயிர்காயம்விடுங்
காலவலைக்குங்கடுங்கூற்றைக்காய்ந்தென்னைக்காத்தருளே. 91
அருளக்கொடியிடைப்பூமாதுநீயும்வந்தரளினும
மிருளக்கொடியநமன்வருங்காலத்திகழினுமாங்
கருளக்கொடியழகாவலங்காரவன்கஞ்சனெஞ்சத்
துருளக்கொடியவுதைத்தாயெனதுயிருன்னுயிரே. 92
உயிர்க்கும்படிக்குமுன்னாயிரம்பேரென்றெறுத்தன்னைமார்
செயிர்க்கும்படிக்குநின்றேனென்செய்கேன்செழுந்தேவர்களு
மயிர்க்கும்படிக்குறளாமழகாவலங்காரநெய்க்குந்
தயிர்க்கும்படிக்குஞ்செவ்வாய்மலர்ந்தாய்நின்னைத்தாள்பணிந்தே. 93
பணிபதிவாடநின்றாடினநூற்றுவர்பாற்சென்றன
பணிபதினாலுபுவனமுந்தாயினபாப்பதின்மர்
பணிபதியெங்குமுவந்தனபங்கயப்பாவையுடன்
பணிபதிமார்பனலங்காரன்பொற்றிருப்பாதங்களே. 94
பாதகரத்தனைபேருங்கனகனும்பன்னகத்தா
லேதகரத்தனையற்கருளாளியையெட்டெழுத்து
ளோதகரத்தனைசுந்தரத்தொளுடையானைநவ
நீதகரத்தனைச்சேர்ந்தார்க்குத்தேவருநேரல்லரே. 95
அல்லலங்காரையுஞ்சேர்விக்குமைம்புலவாசையென்றும்
பல்லலங்காநைந்துகோலூன்றியும்பற்றறாதுகண்டாய்
மல்லலங்காரிகையார்மருடீர்ந்துவணங்குநெஞ்சே
தொல்லலங்காரனைத்தென்றிருமாலிருஞ்சோலையிலே. 96
சோலையிலாமையில்சேர்திருமாலிருஞ்சோலைநின்றான்
வேலையிலாமையில்வேடங்கொண்டான்புயமேவாப்பெறாச்
சோலையிலாமையிலங்குகண்ணாளவன்றேய்வத்துழாய்
மாலையிலாமையின்மாலையுற்றாளந்திமாலையிலே. 97
மாலைக்கரும்புசிறுகாறுகைக்கவருந்துமெங்க
ளாலைக்கரும்புதன்னாசையெல்லாஞ்சொல்லிலாயிரந்தோட்
டோலைக்கரும்புண்டொடமுடமாமதியூர்குடுமிச்
சோலைக்கரும்புயலேயருளாயுன்றுளவினையே. 98
துளவிலையார்பொன்னடிமுடிசூட்டித்தொண்டாக்கியென்னை
வளவிலையாக்கொண்டநீகைவிடேன்மங்கலகுணங்க
ளளவிலையாவலங்காரசமயிகளாய்ந்தவண்ண
முளவிலையாயுருவாயருவாயவொருமுதலே. 99
ஒருபாலமரரொருபான்முனிவருடனிருந்தெ
னிருபார்வையுங்கொண்டுவப்பதென்றேவிடபக்கிரிக்கும்
பொருபாற்கடற்குமயோத்திக்கும்பொற்றுவராபதிக்கு
நிருபாவைகுந்தமுநீவீற்றிருக்கின்றநீர்மையுமே. 100
அலங்காரருக்குப்பரமச்சுவாமிக்கழகருக்குக்
கலங்காப்பெருநகரங்காட்டுவார்க்கருத்தன்பினா
னலங்காதசொற்றொடையந்தாதியைப்பற்பநாபப்பட்டன்
விலங்காதகீர்த்திமணவாளதாசன்விளம்பினனே. 101

அழகரந்தாதி முற்றுப்பெற்றது
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum