Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
தேவையில்லை இந்த துவேஷம்
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு அதிகப்படி நிதிஒதுக்கி, அந்த மொழியைப் பரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது முதல், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அத்தனை திராவிடக் கட்சித் தலைவர்களும் அதை ஏதோ "திணிப்பு' என்பது போன்ற மாயையை ஏற்படுத்திக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு அளிக்கப்படும் அதே ஆதரவை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினால் நியாயம். அதை விட்டுவிட்டு, சம்ஸ்கிருதம் ஆதரிக்கப்படக் கூடாது என்று இவர்கள் கூக்குரலிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னால், அதிலும் குறிப்பாக, ஆங்கிலேய காலனி ஆட்சியின் ஆதரவாளர்களாக இருந்த நீதிக் கட்சியினரும், அவர்கள் வழித்தோன்றலான திராவிட இயக்கங்களும் தோன்றியதற்குப் பின்னால்தான் இப்படி ஆரியம், திராவிடம், சம்ஸ்கிருதம், தமிழ் என்று வேறுபாடுகள் ஏற்படுத்தப்பட்டு துவேஷம் உருவாக்கப்பட்டது.
தமிழ்த்தென்றல் திரு.வி.க., "எல்லாத் தாய்மார்கட்கும் ஒரு நா. நமது தாய்க்கு இரண்டு நா. தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகட்கும் பிறப்பிடம் ஒன்றே. ஆரியம் தமிழோடு இசையானவன் கூரிய குணத்தார் குறிநின்றவர்' என்று அப்பரடிகளும் "செந்திறந்த தமிழோசை வடசொல் ஆகி' என்று திருமங்கையாழ்வாரும் சொல்லி இருப்பதை சுட்டிக்காட்டித் தொடர்வார்.
தொல்காப்பியர்கூட "வடசொற்கிளவி, வடவெழுத்தொரீஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே' என்று முடிப்பார். தொன்று தொட்டுத் தமிழும், சம்ஸ்கிருதமும் தமிழகத்தில் இருந்துவந்ததற்கு இதனினும் மேலென்ன சான்று வேண்டும்?
18-ஆம் நூற்றாண்டில் லண்டனில் பிறந்த சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற அறிஞருக்கு 13 மொழிகளில் நல்ல முழுமையான புலமையும், இன்ன பிற 18 மொழிகளில் நல்ல தேர்ச்சியும் உண்டு. இவர் இந்தியாவிற்கு வந்து கல்கத்தா நகரின் நீதிபதியாக பணியாற்றியபோது சொன்னார்:
"சம்ஸ்கிருதம் தனது மொழிச் செழுமையால், அழகான சொற்கட்டால், தொன்மையான மரபால், கிரேக்க, லத்தீன் மொழிகளைக் காட்டிலும் மிகவும் சிறப்புடையதாக இருக்கிறது. பின், ஏன் நீங்கள் (இந்தியர்கள்) வளமான சம்ஸ்கிருதத்தை விடுத்து எங்களின் மொழியான ஆங்கிலத்தைக் கற்க மோகம் கொள்கிறீர்கள்? என்று வியப்பும் வருத்தமும் மேலிட கேட்டார் என்பது வரலாறு!
இந்தியர்களின் பண்பட்ட மொழிவளம், தொன்மை நாகரிகம், இதிகாச இலக்கிய மேன்மை இவற்றை மேலை நாட்டார்க்கு உணர்த்தும் முகமாக "ஏஷியாட்டிக் சொசைட்டி' என்றதொரு அமைப்பை நிறுவி கீதை உள்ளிட்ட இந்திய நூல்களை மேலை நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்துத் தொண்டாற்றினார். சம்ஸ்கிருதத்தை விரும்பியதைப்போலவே உருதுவையும் விரும்பிப் படித்து மகிழ்ந்தார்.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னார்: "கீதையும், சம்ஸ்கிருத இலக்கியங்களும் எனது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உத்வேகம், உணர்ச்சி ஊட்டிய ஊற்றுக்கண்கள், வழிகாட்டிகள்' என்று. இன்றும், உலகளாவிய மொழியியல் அறிஞர்களால் உலகின் முதல் இலக்கியமாக மதிக்கப்படுவது "ரிக்' வேதமாகும்.
உலகத்தின் தோற்றம் குறித்து ரிக் வேத நூலில் இருந்து ஒரு கவிதையை பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை "எங்கிருந்துலகு தோன்றிற்று? இயற்றியதுதாமோ? அன்றோ, மக்களில் தேவரெல்லாம் படைப்பின் வந்தாரன்றோ? துங்க வானிருந்து நோக்கும் தொல்பெருந்தெய்வந்தானும் இங்குறு தோற்றந் தன்னை அறியுமோ? இயம்புவீரே! என்று மொழிபெயர்த்தார். (ரிக். 10 - 129)
இந்த உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே இந்த இரண்டு செம்மொழிகளும் உலா வந்திருக்கின்றன. பாலும், நீரும்போல வடமொழியும், தென்மொழியும் இரண்டறக் கலந்து வந்திருக்கின்றன. இவை இரண்டில் ஒன்றையொன்றை அழிக்க முற்படவில்லை என்பதே உண்மை. வடமொழியில் விற்பன்னரான பரிமேலழகர் தனது அளப்பரிய தமிழறிவால் அன்றோ, அன்றே அறநூலான திருக்குறளுக்கு செவ்விய உரை எழுதிப் புகழ் பெற்றார்.
பத்தாந் திருமுறையான திருமந்திரம் "ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகையார்க்கு கருணை செய்தானே' என்றும், "தமிழ்ச்சொல், வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே' என்றும் சொல்வதால் இறைவனுக்கே இந்த இரண்டு மொழிகளுமே பிடிக்கும் என்பதை உணரலாம்.
"தமிழ் எங்களது உயிர்' என்று வெறுமனே சொல்லிக் கொண்டிராமல் பிறிதொன்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
"எழுதா கிளவி' என்று சொல்லப்படுகின்ற காலப் பழமையுடைய வடமொழி வேதங்கள் இன்றளவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தாரால் செவி வழியாகக் கேட்டு மனனம் செய்யப்பெற்று பாதுகாத்து வரப்பட்டிருக்கிறது. இன்றளவும் அவர்தம் வேதப் பாடசாலைகளில், பல சமயச்சடங்குகளில் சொல்லப்பட்டு வருகிறதே, அதன் காரணம் என்ன?
சுமார் 5000 ஆண்டுகட்கு முன்னர் ஒலித்த வேத கீதங்கள் இன்றும் அதே பாணியில், தொனியில் வாய்மொழியாக இசைக்கப்படுகிறதே, இது எங்ஙனம் சாத்தியம்? தாய்மொழிப் பற்றும், பிறமொழி ஆர்வமும், தொன்மை மொழி, வேதமொழியை பாதுகாப்பது நம் கடமை என்ற சீரிய உணர்வுதான் காரணம்.
இலக்கியத் திறனாய்வாளர் வ.சுப.மாணிக்கம் ஒருமுறை எழுதினார்கள் "ஒரு மொழி தனித்தியங்கும் வன்மையினால், பெருமையுடையது என்றோ அயன் மொழிச் சொற்களின் கலப்பினால் ஒரு மொழி சிறுமைத்தோ என்றோ புகழ், பழி கூறுவது வேண்டாதொன்று. இம்மொழி தனித்து நடக்கும் இயற்கை சான்றது. அம்மொழி கலந்து செழிக்கும் இயற்கை வாய்ந்தது என இரு பாலினையும் அவ்வம் மொழியியற்கையாகவே கருத வேண்டும். கருதி வளர்க்க வேண்டும் என்பார் அவர்.
இந்தக் கருத்தில் குருதேவர், பன்மொழிப்புலவர் தெ.பொ.மீ. "வடக்கும், தெற்கும் ஒற்றுமை காண வடமொழியைப் பயன்படுத்த விரும்பினார். தமிழ்மொழியில் 12 மொழிகளின் சொற்கள் கலந்து இருக்கின்றன என்பதை விளக்கிப் பட்டியல் இட்டார். இவருக்கு தமிழ் மீதிருந்த மாளாக் காதலால் தனக்குத் தெரிந்த 18 மொழிகளின் ஆற்றலால் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உரையாற்ற முனைந்தார். பின்னாளில் அப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையொன்றை தொடங்கியவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இன்றைக்கு நமக்கு கிடைத்திட்ட பழந்தமிழ் நூல்களில் முதலாவதான தொல்காப்பியத்தைத் தந்த தொல்காப்பியர், சங்க காலப் புலவர்களான கபிலர், பாணர், நக்கீரன், காப்பிய ஆசிரியர்களான இளங்கோவடிகள், சீத்தலை சாத்தனார், திருத்தக்க தேவர், அற இலக்கியம் வழங்கிய திருவள்ளுவர் ஏனைய பதிணென்கீழ் நூலாசிரியர்கள், கவிச் சக்கரவர்த்திகளான கம்பர், ஒட்டக்கூத்தர், ஜெயங்கொண்டார், வில்லிபுத்தூரார், பெரும் உரையாசிரியர்களான சேனாவரையர், நச்சினர்கினியர், பேராசிரியர் அருளாளர்களான பரஞ்சோதி முனிவர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், ஸ்ரீகுமரகுருபரர், தாயுமானவர் அனைவரும் இரு மொழி வல்லவர்கள்தான்.
சைவ சமயக் குரவர்களான நால்வர் பெருமக்களோ, ஆழ்வாராதிகளோ, இன்ன பிற அறிஞர் பெருமக்களோ ஒன்றை உயர்த்தி, மற்றொன்றை தாழ்த்த இல்லை. மாறாக இரண்டையும் இரு கண்களாகவே பாவித்தனர்.
தனித்தமிழில் எழுதுவதும், பேசுவதும், 1000 ஆண்டுகட்கு முன்னரே கம்பநாட்டாழ்வார் நமது முன்னைய தலைமுறையினர்க்கு கற்றுத் தந்துள்ளார். அவர்தம் இராம காதையில் வீடணன், தயரதன், அனுமன், இலக்குமணன் என்று எழுதி தமிழை வளப்படுத்தவில்லையா? ஆனால், வடமொழியில் அவர் ஆழங்காற்பட்டிருந்ததன் விளைவே வழிநூலாக கம்ப ராமாயணம் எழுந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இளமையில் வேதாசலனாக இருந்தவர் தனித்தமிழில் மறைமலை அடிகள் என்ற பெயர்கொண்டு தமிழையும் சைவ நெறியையும் ஒருசேர வளர்த்த காலை வடமொழியை வெறுத்தார் இல்லை. தனித்தமிழை உயர்த்தி நின்றார் அவ்வளவே! ஏன் எனில் அவருக்கு வடமொழி, தென்மொழி மட்டுமல்ல, ஆங்கிலமும் அத்துப்படி.
"ஆரியம்போல் வழக்கொழிந்து' என்று பேச்சு வழக்கில் இருந்து விடுபட்டதைத்தான் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை எழுதினார். இந்நிலைக்குக் காரணம் ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு பாரதத்தின் தொன்மை மொழியை பல வழிகளில் சிதைக்கச் செய்ததுதான்.
உலகிலேயே உணர்ச்சியில், எழுச்சியில் தலை நிற்பவர்கள் தமிழர்களாகிய நாம்தான். உணர்ச்சி என்பது ஆர்வத்தின்பால் உள்ளீடாக இருப்பது. இதுவே தங்குதடையின்றி, கரை புரண்டு வெள்ளமென ஓடும்போது கல்லும் நகரும்; மண்ணும் கரையும். இதை நன்கு உணர்ந்த வெள்ளையர்கள் நம்மை மெல்ல, மெல்ல மொழி உணர்ச்சியில் புகழ் உரைகளால் உசுப்பி மொழிவழி பிரிவினை பேதத்தைத் தூக்கி நிறுத்தினார்கள். அவர்கள் வந்தது வணிகம் செய்ய. நமது ஒற்றுமை குலைந்ததால் மெல்ல, மெல்ல வென்று நின்றார்கள்.
ஆணை பிறப்பிக்க அரசு, ஆள் பிடிக்க அன்னிய மதப் பிரசாரகர்கள். போதாக்குறைக்கு நமது நாட்டு சமய சனாதனவாதிகளின் சாதி வேற்றுமை, தீண்டாமை கொடுமை. இவை எல்லாமாகச் சேர்ந்து வடமொழியோ, தென்மொழியோ இரண்டும் எல்லோருக்கும் பொதுவானது என்ற நிலை மாறி இவர்கள் மட்டுமே வடமொழி படிக்கலாம். மற்றவர் எல்லாம் தேவபாஷை சம்ஸ்கிருதம் கற்க இயலாத நிலையை வர்ண பேதம் வழிவகைப்படுத்தினார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளாக பாலும் நீருமாக இரண்டறக் கலந்து வாழ்ந்து கொண்டிருந்த தமிழுக்கும், சம்ஸ்கிருதத்திற்கும் பேதம் வளர்க்க அன்னிய மதப் பிரசாரகர்கள் கடல்கடந்து கன்னித் தமிழ்நாட்டில் கால் பதித்தார்கள். சமயம், மொழி இரண்டும் வேறல்ல! ஒன்றுதான் என்று வாழ்ந்த தமிழ்க் குடிமக்களை ஒன்றை உயர்த்துவது மூலம் மற்றொன்றைத் தாழ்த்தி மொழி வேறு, சமயம் வேறு என்ற இரு கூறுகளாக்கி முடிவில் தன் மத வழியைப் பரப்பி வெற்றி கண்டனர்.
பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, தமிழ் அகரவரிசைப் பெரு நூல் ஒன்றை உருவாக்கித் தந்த நல்லறிஞர். 1 லட்சத்து பதினாயிரம் சொற்கள் வரை தொகுத்து புகழ் கொண்டவர். இவருக்கு வடமொழியில் மிகுந்த புலமையுண்டு. இவர் 235 தமிழிலக்கியச் சொற்கள் வடமொழி வேத அகராதியில் காணப்படுவதைச் சுட்டுவார்.
சிற்பக் கலைஞர் முனைவர் டி.என்.கணபதி ஸ்தபதி ஒருமுறை சொன்னார் "என்னுடைய சிற்பக் கலை மேன்மைக்கு, நான் வடமொழியைக் கற்றதனால்தான் முடிந்தது. சிற்பக்கலை சாஸ்திரம் சம்ஸ்கிருதத்தில் மிக ஏராளமாக இருக்கிறது. சம்ஸ்கிருத அறிவு இல்லாமல் மாபெரும் கோயில்களை நிர்மாணிக்க முடியாது' என்றார் அவர். டாக்டர் நா.மகாலிங்கம் சொல்லுவார், "தமிழும், சம்ஸ்கிருதமும் இரண்டும் நமது மொழிகளே!' என்று.
விண்வெளி ஆராய்ச்சி அறிஞர் டாக்டர் விக்ரம் சாராபாய் சொன்னார் "ஆர்யபட்டரின் வானவியல் தத்துவம் நமக்குக் கிடைத்த பெரிய கருவூலம். சம்ஸ்கிருதம் விஞ்ஞான உலகத்திற்கு மிகவும் நெருக்கமான மொழி. அம் மொழியில் இன்றைய நவீன விஞ்ஞான அறிவு, ஆற்றல் எல்லாம் இருக்கிறது'.
சுமார் 500, 600 ஆண்டுகால வரலாறுகொண்ட ஆங்கிலத்தை தமிழர்களாகிய நாம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம். ஆனால், இந்த பாரத மண்ணில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழைப்போல இருந்து வருகின்ற வடமொழியை வெறுக்கிறோம். இது மதியின்பால் வந்த உணர்வல்ல; சதியால் வந்தவிளைவு.
தமிழும், சம்ஸ்கிருதமும் நமது நாட்டுத் தொல் மொழிகள். பாரதத் தாயின் இரட்டைக் குழவிகள் தமிழும், சம்ஸ்கிருதமும். தமிழால் தமிழரின் தொல் புகழ், நாகரிகச் சிறப்புகள், மொழி வளம் அறியலாம். சம்ஸ்கிருதம் பாரதம் முழுமையும் உள்ள பண்பாட்டு அம்சங்களின் கண்ணாடியாக விளங்குகிறது.
அதனால், பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்களை இணைக்கும் ஒரு செம்மொழியாக சம்ஸ்கிருதத்தை வளர்க்க வேண்டும். யார் வந்து நம்மை மதத்தால், எல்லையால், நிறத்தால், மொழியால் பிரித்தாலும் நாம் அனைவரும் பாரதத் தாயின் மக்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம்.
டி.எஸ். தியாகராசன்
நன்றி - தினமணி

» தமிழ்நாட்டு கல்வெட்டுகளைப் படிக்க சமஸ்கிருத அறிவு தேவையா?
» கடவுள் நமக்குத் தேவையா?
» இந்த வார ராசி பலன்கள்
» இந்த கவிதை சரிதானா
» இந்த கோப்பை தரவிறக்கி பாருங்கள்
» கடவுள் நமக்குத் தேவையா?
» இந்த வார ராசி பலன்கள்
» இந்த கவிதை சரிதானா
» இந்த கோப்பை தரவிறக்கி பாருங்கள்
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum