Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தென்புலத்தார் வழிபாடு
Page 1 of 1
தென்புலத்தார் வழிபாடு
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
- திருக்குறள்.
மனிதர்கள் 1. தேவயக்ஞம் 2. ரிஷியக்ஞம் 3. பித்ருயக்ஞம் 4. நரயக்ஞம் 5. பதயக்ஞம் என ஐந்து வகையான வேள்விகளைச் செய்யவேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன.
தென்புலத்தார் என்பது காலஞ்சென்ற முன்னோர்களைக் குறிக்கின்றது. ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் இறந்த நாளன்று (திதியன்று) திதி கொடுப்பது, தென்புலத்தார் வழிபாடு (பித்ரு யக்ஞம்) எனப்படும்.
திரு அண்ணாமலையார் அளிக்கும் திவசம்: 14 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையை வல்லாள மகாராஜன் ஆண்டு வந்தான். அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. ஸ்ரீ அண்ணாமலையாரை வேண்ட அவர் நாமே உனக்கு மகனாக இருந்து என்னுடைய கடமையைச் செய்வேன் என்று அருளினார். அதே போன்று, வல்லாள மகாராஜாவிற்கு மகவாக அவதரித்து, மன்னர் உயிர் துறந்தபின், அவருக்குச் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை இன்று வரை செய்து வருகிறார். ஆண்டுதோறும் மாசி மகத்தன்று, ஸ்ரீ அண்ணாமலையார் "பள்ளிகொண்டபட்டு' என்ற இடத்திற்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜாவிற்குத் திவசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குடந்தை பெருமாள் செய்யும் சிரார்த்தம்: திருக்குடந்தை அருள்மிகு சாரங்கபாணி கோயிலில் லட்சுமி நாராயணன் என்ற பிரம்மச்சாரி திருக்கோயிலில் கைங்கர்யம் செய்து வந்தார். அவருக்கு நெருங்கின உறவினர்கள் யாரும் இல்லை. அவர் இறைவனடி சேர்ந்த பின், இறுதிச்சடங்கைச் செய்ய யாரும் முன்வரவில்லை. இறைவனே தன் பக்தனுக்கு இறுதிச் சடங்குகள் செய்ததாக வரலாறு. இன்று வரை தீபாவளியன்று அப் பிரம்மச்சாரியின் சிரார்த்தம் பெருமாளால் செய்யப்படுகிறது.
திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டு சிரார்த்தத்தில் மும்மூர்த்திகளும் எழுந்தருளி உணவு உண்டு ஆசீர்வதித்து சென்ற நினைவாக, இன்றும் கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று மக்கள் அங்குள்ள கங்கை பொங்கி வந்த கிணற்றில் குளித்து அருள்பெற்று வருகின்றனர்.
நமது பெற்றோர்கள் மறைந்த தினம், அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய, சந்திர கிரகண காலங்கள், தட்சிணாயன உத்தராயண புண்ணிய காலங்களில் பிதுர்களுக்காக செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வது அவசியம்.
புரட்டாசி மாதம் பெüர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி 15 நாள் அமாவாசை வரை மகாளய பட்சம் எனப்படும். மகாளய பட்சம் முழுவதும் அல்லது மகாளய அமாவாசை (புரட்டாசி அமாவாசை) அன்றும் திதி கொடுக்கலாம். இவைகளை கடற்கரை, நதிக்கரை, ஊர்க்குளக்கரை, சில கோயில் குளங்கள் முதலிய இடங்களில் ஏதாவது ஒன்றில் செய்யலாம். வேதாரண்யம் மற்றும் இதர கடற்கரைகளிலும், கங்கை, பம்பை, காவிரி, கோதாவரி, நர்மதா, பவானி முக்கூடல், தாமிரபரணி போன்ற நதிக்கரைகளிலும் காசி, கயா போன்ற தலங்களிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்வது சிறப்பாகும்.
பித்ரு தோஷம் போக்கும் தலங்கள் என சில தலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவைகளில் சிலவற்றைக் காண்போம்.
பவானி கூடுதுறை: திருநணா என்றழைக்கப்படும் தேவாரத் தலம். ஸ்ரீ வேதாம்பிகை சமேத ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில், பவானி ஆறு காவிரியில் கூடும் இடத்தில் அமைந்துள்ளது.
திருபவணம்: பாண்டிய நாட்டுத் தலம். மதுரை மானாமதுரை பாதையில் உள்ள ரயில் நிலையம். இங்கு வைகையாறு உத்தரவாகினியாக (வடக்கு நோக்கி) பாய்வதால் இறந்தோர்களுக்கு இறுதிக் கடன் செய்வது சிறப்பாகக் கூறப்படுகிறது. இறைவன்: ஸ்ரீ பவண நாதர் இறைவி: ஸ்ரீசெüந்தரநாயகி.
திருப்பூந்துருத்தி: அருள்மிகு செüந்தரநாயகி சமேத அருள்மிகு புஷ்பவனேஸ்வர சுவாமி திருக்கோயில் ஒரு பிதுர் சாப நிவர்த்தி ஸ்தலம். திருநாவுக்கரசர் மடம் அமைத்து தங்கியிருந்தபோது திருஞான சம்பந்தர் அவ்வூருக்கு வருகை புரிந்தார். சப்தஸ்தான தலங்களில் ஒன்று. கிருஷ்ணலீலா தரங்கிணி பாடிய நாராயண தீர்த்தருடைய ஜீவ சமாதி உள்ளது. ஆடி அமாவாசையன்று காசிப முனிவருக்காக இத்திருக்கோயிலில் உள்ள கிணற்றில் கங்கையை பொங்கியெழச் செய்து, ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வநாதராகக் காட்சி தந்ததாகவும அவர் இறைவனை வழிபட்டதாகவும். வரலாறு. இத்தலத்தில் பிதுர்களுக்குத் திதி கொடுத்து இறைவனை வழிபட்டுச் சென்றால் பித்ரு சாபம் நீங்கும் என்ற அளவில் பக்தர்கள் இத்தலத்திற்கு ஒவ்வொரு அமாவாசைக்கும் வந்து திதி கொடுக்கின்றனர்.
திருப்பள்ளிமுக்கூடல்: அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அருள்மிகு முக்கோணநாத சுவாமி திருக்கோயில். திருவாரூருக்கு அருகில் உள்ளது. குருவி ராமேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள முக்கூடல் தீர்த்தத்தில் மூழ்கி ஜடாயு, காசி, கங்கை, இராமேஸ்வரம் சேது முதலிய தீர்த்தங்களின் மூழ்கிய பலனைப் பெற்றதாக வரலாறு. இத் தீர்த்தம் திரிவேணி சங்கமத்திற்கு ஒப்பாகவும் ஷோடச தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது. இங்கும் பிதுர்க்காரியங்களைச் செய்கின்றனர்.
திலதைப்பதி செதலபதி: மயிலாடுதுறை திருவாரூர்ச் சாலையில் பூந்தோட்டத்திற்கு அருகில் அரிசிலாற்றங்கரையில் உள்ளது. இராம லட்சுமணர்கள் தம் தந்தையாகிய தசரதனுக்கும் ஜடாயுவுக்கும் தில (எள்) தர்ப்பணம் செய்ததால் இத்தலம் திலதர்ப்பணபுரி எனப் பெயர் பெற்றதாக வரலாறு. பிதுர்களுக்குச் செய்ய வேண்டிய சிரார்த்தம் தர்ப்பணம் முதலிய கடமைகளைச் செய்வதற்குரிய தலங்களில் இதுவும் ஒன்றாகும். இறைவன்: ஸ்ரீமுத்தீஸ்வரர் இறைவி: ஸ்ரீ சுவர்ணவல்லி. சம்பந்தர் பாடல் பெற்றது. இங்குள்ள விநாயகர் தும்பிக்கை இன்றி ஆதி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகின்றார். ஸ்ரீ சரஸ்வதி கோயிலும் உள்ளது.
திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு வழியில் உள்ள நெம்மேலி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலில் பித்ருக்களுக்கான ஸ்ரார்த்தம், அமாவாசை போன்ற தினங்களில் தர்ப்பணமும் செய்து வைக்கப்படுகிறது. கயாவைப் போல் விஷ்ணு பாதமும் உள்ளது. உற்சவருக்கு "ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண நாராயணர்' என்று பெயர். இங்கு பித்ரு வேளையில் நடைபெறும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ரார்த்த ஸம்ரக்ஷணமாகும்.
தென்னக திரிவேணி சங்கமம் என அழைக்கப்படும் ஸ்ரீவல்லபபேரியிலும் (சீவலப்பேரி) பிதுர்க் கடன்களைச் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.
அரனும் அரியுமே கொடுத்த வாக்கின்படி பிதுர்க் கடன்களை இயற்றும் போது நாமும் நம் கடமையைச் செய்ய வேண்டும். புரட்டாசி மாதம் மகாளய பட்சம் (28.09.2015 - 12.10.2015); மகாளய அமாவாசை: 12-10-2015.
- மருத்துவர் கைலாசம் சுப்பிரமணியம்.
நன்றி -Dinamani
Similar topics
» கர்ப்பரட்சாம்பிகை வழிபாடு
» சிவ வழிபாடு புத்தகம்
» சூரிய வழிபாடு
» மழைக்காக ஒரு வழிபாடு
» வேப்பிலை ஆடை வழிபாடு
» சிவ வழிபாடு புத்தகம்
» சூரிய வழிபாடு
» மழைக்காக ஒரு வழிபாடு
» வேப்பிலை ஆடை வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum