இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஐயப்பனுக்கு திருமணம் நடக்கும் தலம்

2 posters

Go down

ஐயப்பனுக்கு திருமணம் நடக்கும் தலம் Empty ஐயப்பனுக்கு திருமணம் நடக்கும் தலம்

Post by ஆனந்தபைரவர் Mon Feb 07, 2011 3:03 pm

விஷ்ணு தசாவதாரம் எடுத்து மனிதகுலத்தின் வாழ்க்கை நடைமுறைகளை நெறிப்படுத்த வழிகாட்டுகிறார். முருகபெருமான் ஆறுபடை வீடுகளில் குடியிருந்து வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தத்துவார்த்தமாக எடுத்து சொல்கிறார். இதுபோல பகவான் ஐயப்பன் நான்கு படை வீடுகளில் குடியிருந்து வாழ்க்கையின் நான்கு நிலைகளை உணர்த்துகிறார். குளத்துப்புழையில் பாலகனாகவும், அச்சன்கோவிலில் வன அரசராகவும், சபரிமலையில் சன்னியாசியாகவும் இருக்கும் அவர் ஆரியங்காவில் குடும்பஸ்தராக கிரகஸ்தாஸ்ரம நிலையில் காட்சி தருகிறார்.

தல வரலாறு: இத்திருத்தலத்து ஐயப்பன் மனம், மெய், வாக்கு என்ற அனைத்து நிலையிலும் புஷ்கலா என்ற பெண்மணி போற்றிவந்தாள். அவரது பக்தியை மெச்சி அவரது விருப்பப்படி அவரை தன்னோடு ஐயப்பன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். கர்ப்பகிரகத்தில் மதகஜவாகன ரூபனாக அம்பாளுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

சுவாமியின் அமைப்பு: நெற்றியில் திருமண் இட்டு, முகத்தில் தெய்வீக சிரிப்பு தவழ, வலக்கையில் நீலத்தாமரை ஏந்தி, ஜுவாலை கிரீடம் தரித்து, யோக பட்டயத்துடன் யானைமீது அமர்ந்து காட்சி தருகிறார். அவரது இடப்பாகத்தில் புஷ்கலாதேவி வலக்கையில் கதம்பவன மலர் ஏந்தி, முகத்தில் நாணம் தவழ, மணக்கோலத்தில் காட்சி தருகிறார். சாஸ்தா கோயில்களில் இங்கு மட்டுமே பகவானும் அம்பாளும் காளை வாகனத்திலும், பூங்கோவில் வானகத்திலும் திருக்கல்யாண தினத்தன்று கோயிலை உலா வருகின்றனர். சாஸ்தாவின் நான்கு கோயில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.

திருக்கல்யாணம்: புஷ்கலாதேவிக்கும் ஐயப்பனுக்கும் இன்றும் லௌகீக முறைப்படி, நிச்சயதார்த்த விழா நலுங்கு வைபவம், திருக்கல்யாணம் ஆகியவை ஆண்டுதோறும் டிசம்பரில் நடக்கிறது. புஷ்கலாதேவி சவுராஷ்டிரகுல பெண்மணி என்பதால் அந்த சமுதாய மக்கள் திருக்கல்யாண தினத்தன்று அம்பாள் சார்பில் பட்டு வஸ்திரங்கள், மலர்மாலைகள், சந்தனம், பழ வகைகளை கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர். கோயில் நிர்வாகஸ்தர்கள் சார்பில் திருமாங்கல்யம், பட்டு வஸ்திரங்கள் எடுத்து வரப்படுகின்றன. திருமண மண்டபத்தில் மங்கலகுலவை ஒலிக்க, அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் விமரிசையாக நடக்கும். இந்த நேரத்தில் நாம் செய்துகொள்ளும் பிரார்த்தனைகள் ஒரு ஆண்டிற்குள் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கையாகும். குறிப்பாக திருமணம் கைகூடிவர வரம் வேண்டுவோர் அம்பாளை வழிபட்டு வரலாம்.

திருக்கல்யாணத்தின்போது சவுராஷ்டிர மக்களுக்கு சம்பந்தி மரியாதை தரப்படுகிறது. திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் மூன்று நாட்களுக்கு திருக்கல்யாண விருந்து நடக்கும். இவ்வாண்டு திருக்கல்யாணம் டிசம்பர் 25,26,27 தேதிகளில் நடக்கிறது.

இந்த கோயிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலருவி சிறந்த சுற்றுலா தலமாகும். இடுப்பளவு நீரில் பத்தடி உயரத்திலிருந்து விழும் அருவியிலிருந்து குளிப்பது சுகமான அனுபவமாகும்.

செல்லும் வழி: செங்கோட்டையிலிருந்து புனலுõர் செல்லும் ரோட்டில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஜாதி மத பேதமில்லை: பொதுவாக இந்து கோயில்களுக்குள் அனைத்து மதத்தினரும் அனுமதிக்கப்பட்டாலும், கருவறை பகுதிக்கு செல்ல இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த கட்டுப்பாடு இல்லை. அனைத்து மதத்தினரும் விரதம் இருந்து இருமுடி கட்டுடன் வந்தால், 18 படியேறி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

நன்றி ikmahal.org
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஐயப்பனுக்கு திருமணம் நடக்கும் தலம் Empty Re: ஐயப்பனுக்கு திருமணம் நடக்கும் தலம்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 1:34 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum