இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பிராணாயாமம்

5 posters

Go down

பிராணாயாமம் Empty பிராணாயாமம்

Post by ஆனந்தபைரவர் Tue Mar 01, 2011 3:28 pm

ஆசனமும் பிராணாயாமமும் இரண்டு கண்களைப் போன்றது. இதில் இதுமட்டும் போதும் அல்லது இது மட்டும் போதும் என்று எப்படிச் சொல்லமுடியும். ஆசனங்கள் மட்டும் செய்து சுகமாக இருக்கலாம். ஆனால் இரு கண்கள் உள்ளவன் போல அழகாய் இருக்க முடியாதல்லவா? எனவே, ஆசனங்களுடன் பிராணாயமமும் சேர்ந்து செய்தால்தான் முழுமைய பெற்ற மனிதனாக முடியும்.
பிராணாயமம் என்பது பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றுவது போல. பாட்டரியின் சுவர்கள், அறைகள் சீராக இருந்தால்தான் சார்ஜ் ஏற்ற முடியும். அல்லது எவ்வளவுதான் சார்ஜ் ஏற்றினாலும் சார்ஜ் நிற்காது. அதுபோல நமது உடல் என்னும் பாட்டரிக்கு பிராணயாமம் என்னும் சார்ஜ் ஏற்றுகிறோம். உடலாகிய பாட்டரி சீராக இருக்கவும் பலம் பெறவும் ஆசனங்கள் செய்ய வேண்டும். ஆசனம் செய்து உடலை வலிமையாக்கிக் கொண்டால் பிராணாயாமம் செய்து பிராண வாயு ஏற்றி நிரம்பி சுகமாக வாழலாம்.
கற்ப முறைகள் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். அக்கற்ப முறைகளில் ஒன்று பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி என்பதை கீழக்காணும் திருமந்திரப் பாடலால் அறியலாம்.
"ஏற்றி இறக்கி இருகாறும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறியது வாமே"
மனிதர்களுக்கு மட்டுமின்றி எல்லா உயிரினங்களுக்கும் பிராண வாயு மிக முக்கியமானது. இதுவே உயிருக்கு ஆதாரமாகும்.
மூச்சினை உள்ளே இழுத்து வெளியே விடுவதன் மூலம் நம் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை நாம் பெறுகிறோம். மூச்சு மூன்று வகைப்படும்.
உள் மூச்சு & இதனைப் பூரகம் என்பர்.
வெளி மூச்சு & இதனை இரேசகம் என்பர்.
நிறுத்தல் & இதனைக் கும்பகம் என்பர்.
பொதுவாக நாம் மூக்கினால் உள்வாங்கும் பிராணவாயு முழுவதும் நம் உடலில் கலப்பதில்லை. உடலில் கலவாத பிராணவாயு வெளிவிடும் மூச்சுக் காற்றுடன் வீணாகச் சென்று விடுகின்றது. இவ்வாறு வீணாகச் செல்லும் உயிர்க்காற்றை, மூச்சுக் காற்றைப் பிராணாயம்ப் பயிற்சி செய்து அதிக நேரம் நுரையீரல்களுக்குள் நிறுத்தி வைத்து உடம்பில் கலக்கச் செய்தனர். இப்பயிற்சியே மூச்சுப்பயிற்சி, பிராணயாமம், வாசி அல்லது வாயுதாரணை எனப்படும்.
இப்பயிற்சியினால் நரம்பு மண்டலங்கள் பலப்படுகின்றன. நரம்பு விலங்கள் மூளை இவற்றுக்கு ஏனைய திசுக்களை விட அதிகப் பிராணவாயு தேவைப்படுகிறது. பிராணாயாமத்தினால் அதிக அளவு உயிர்க்காலை நுரையீரல்களிலிருந்து இரத்த ஓட்டம் எடுத்துச் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது. இரத்த உயிர்க்காற்றை எல்லாத் திசுக்களுக்கும் கொண்டு சென்றாலும் நரம்பு விலங்குகளும் மூளையும் அதிக அளவு உயிர்க்காலைப் பெறுகின்றன.
உயிர்க்காலின் அசைவு எதுவோ அதுவே சித்தத்தின் அசைவு என்றும், உயிர்க்காலின் அசைவை வென்றால் சித்தத்தை வலுப்படுத்தலாம் என்றும் கூறுவர்.
பிராணாயாமத்தின் பலன்
1. மூச்சுப் பயிற்சியினால் உடல் கற்பமாகும். மனம் கட்டுப்படும். சக்தியும் பலமும் உண்டாகும்.
2. எல்லா நோய்களும் தீரும். செரிமான சக்தி பெருகும்.
3. நரம்புகள் தூய்மையாகி, நல்ல தூண்டுதல் சக்தி பெறும்.
4. திட சித்தம், மன ஒருமைப்பாடு, மனமகிழ்ச்சி, உடலழகு, இனிய குரல், ஊக்கம், சுறுசுறுப்பு, உடல் நறுமணம் உண்டாகும்.
5. நீண்ட ஆயுள் கிட்டும்.
இடம்
பிராணாயாமம் செய்ய சாத்விக குணம் வேண்டும். நல்ல காற்றோட்டமுள்ள இடம் வேண்டும். தரை ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும். பனியும் குளிரும் இல்லாத காலங்களில் ஆற்றங்கரை, ஏரிக்கரை, தோட்டம், வெளி, மலைப்பகுதிகளில் செய்யலாம்.
உணவு
மனதை ஒருமைப்படுத்தி இயம, நியமாதிகளைக் கைக்கொண்டு தினமும் பிராணாயமம் பயில வேண்டும். இப்பயிற்சியினைச் செய்பவர் அரிசி, கோதுமை, நெய், பால், தயிர், மோர் இவற்றை உண்ணலாம்.
அரை வயிறு அன்னமும், கால் வயிறு நீரும் உண்டு மீதிக் கால் வயிற்றைக் காலியாக வைக்க வேண்டும். புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, கார்ப்புப் பொருள்களைக் கூடுமான வரை விலக்குவதும், மது, ஊன் நீக்குவதும் நல்லது.
காலம்
சூரிய உதய முதல் 6.00 மணி முதல் 7.30, நண்பகல், மாலை முன்னும் பின்னும் ஒன்றரை மணி நேரம், நள்ளிரவு ஆக நான்கு முறை செய்ய வேண்டும். வேளை ஒன்றுக்கு 20 முதல் 80 பிராணாயாமம் செய்யலாம்.
உயிர்க்காற்றை அடக்குதல்
யாமம் என்பது அடக்குதல் என்னும் பொருளைத் தரும் சொல். பிராண வாயுவை அடக்குவதே பிராணாயாமம். "வளியினை வாங்கி வயிற்றகத்து அடக்கின் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்" என்னும் திருமந்திரப் பாடலால் இதனை உணரலாம்.
மனிதன் உறங்கும்போது தன்னை மறந்து சுவாகிக்கிறான். அப்போது அவனுக்குத் தேவையான உயிர்க்காற்று அவனது உடலுக்குக் கிடைக்கிறது. அன்றாட அலுவல்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளும் போது வேலைப்பளுவினால் பல சமயங்களில் சுவாசிப்பை நிறுத்தி, குறைத்து சிந்திக்கிறான். சுவாசிக்க வேண்டிய உயிர்க்காற்றை நுரையீரல் நிறையும்படி இழுக்காமல் தொண்டை வரை இழுப்பதன் மூலம் காற்றின் தேவை அளவு குறைந்து உடல் நலிவடைகிறது.
காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவதை சுவாசம் என்கிறோம். இந்த சுவாசம் ஒரு நாளைக்கு 21,600 முறை நடைபெறுகிறது. இதில் உடலில் சென்று தங்குவது 14,400 சுவாசம் ஆகும். வீணாகச் செலவாகும் உயிர்ப்பு 7,200 ஆகும். இதனால்தான் வாழ்நாள் குறைந்து மரணம் ஏற்படுகிறது. எனவே வீணாகும் பிரணனை உடம்பில் சேமிக்க ஒரே வழி பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியே ஆகும். இதனையே உரோமரிஷி,
"ஆமென்று இருபத் தோராயிரத்து நூறு சுவாசமல்ல ஒரு நாளைக்கு
போமென்று போனதனால் நாள் குறைந்து போச்சு
போகாவிட்டால் போவதில்லை"
என்றார். நேரமும் வாய்ப்பும் கிட்டும் போதெல்லாம் பிராண வாயுவை உடம்பில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
"மேலென்ன இருக்கையிலும் நடக்கும்போதும்
வேறுவரையில் சாரங்கள் ஏற்று."
நுரையீரல் வலம் இடம் மாறல்
நமது மூக்கில் தொடங்கி தொண்டை வழியாகச் செல்லும் மூச்சுக் குழல்கள் வலப்பக்கமாகப் புறப்படும் சுவாசக்குழல் தொண்டையில் செல்லும் போது இடப்பக்கத்தில் உள்ள நுரையீரலை அடைகிறது. இட மூக்கின் வழி ஓடும் மூச்சுக்குழல் வலப்பக்கத்தில் உள்ள நுரையீரலை அடைகின்றது. இதனை காகபுசுண்டர், "வலம் இடமாய் நின்ற மதிரவிடைமாறி விலகாது அடியில் நிற்பின் வீடு" என்றார்.
நுரையீரலின் காற்றின் கொள்ளளவு
நுரையீரலில் ஆயிரக்கணக்கான காற்றறைகள் உள்ளன. ஒவ்வொரு நுரையீரலிலும் 16 மாத்திரை அளவுள்ள உயிர்க்காற்றை உட்கொள்ள வழி உண்டு. இதுதான் இயல்பான அளவு. இது மிகவும் கூடாது. குறையவும் கூடாது. இதற்கு அளவு உள்ளது.
பூரக, ரேசக, கும்பகம்
காற்றை உள் இழுத்தல் பூரகம். இதனை 16 மாத்திரை அளவு இழுக்க வேண்டும். நம் நுரையீரல் கொள்ளும் அளவு இதுவே. நம் ஐந்து விரல்களிலும் 15 கோடுகள் உள்ளன. இதனை அங்குலாஸதி என்பர். ஓம் என்று கூட்டி 16 அளவு மாத்திரை கொள்ளலாம். அல்லது நமசிவய, நமசிவய, நமசிவய, ஓம் என விரற்கிடைகளை 16 எண்ணி உயிர்க்காற்றை உள் இழுக்க வேண்டும்.
கும்பகம்
உள் இழுத்த காற்றை 64 மாத்திரை அளவு வயிற்றில் அடக்கி வைக்க வேண்டும். "வளியினை வாங்கி வயிற்ற கத்து அடக்கில்" என்று சித்தர்கள் கூறியுள்ளனர். இதனால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அனைத்துத் திசுக்களும் உயிர்க்காற்றைப் பெற்று சுகம் பெறுகின்றன.
வளமும் ஆற்றலும் பெறுகின்றன. இதற்கு பூரகத்திற்கு பயன்படுத்தியதுபோல 'நமசிவய’ என 12 முறை கூறி இறுதியில் 'நம ஓம்’ என முடிக்க வேண்டும். (12*5=60+4=64)
இரேசகம்
உள்ளிருக்கும் காற் ை32 மாத்திரை அளவுக் காலத்தில் மெதுவாக வெளியே விட வேண்டும். 6 முறை 'நமசிவய’ எனக்கூறி இறுதியில் 'ஓம்’ என்று கூறி முடிக்க வேண்டும். (6*5=30+2=32)
இதனையே திருமூலர்,
"ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்தி நாலதில்
ஊறுதல் முப்பத்திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றன்கண் வஞ்சகமாமே"
என்று அருளினார்.
பயிற்சி முறை
இதற்குப் பத்மாசனம் ஏற்றது. துறவறத்தாருக்கு சித்தாசனம் ஏற்றது.
1. வலக்கை கட்டை விரலால் வலது நாசித் துளையை மூடிக்கொண்டு இடது துளையால் மெதுவாகக் காற்றை உள்ளே இழுக்க (பூரகம்) வேண்டும்.
2. பிறகு இட நாசித் துளையையும் மோதிர விரல், சிறு விரல்களால் மூடிக்கொண்டு மூச்சை அப்படியே அடக்க (கும்பகம் செய்ய) வேண்டும். முடிந்தவரை அடக்கிக் கொண்டால் போதுமானது. சிரமப்பட்டு அடக்க வேண்டும்.
3. அடுத்து வலக்கை கட்டை விரலை எடுத்துவிட்டு மிக மிக மெதுவாக வலது நாசித் துளை வழியாக காற்றை வெளியே விட (இரேசிக்க) வேண்டும்.
4. இதுபோலவே வலது மூக்குத் துளை வழியாகக் காற்றை உள்ளே இழுத்து, சற்று நேரம் உள்ளடக்கி வைத்து, பின் இடது நாசித் துளை வழியாக ரேசிக்க வேண்டும்.
இந்த ஆறு தொழிலும் ஒரு பிராணாயாமம் ஆகும். இதுபோல் பூரகம் 1, கும்பகம் 4, இரேசகம் 2 என்னும் காலவிதிப்படி இருக்க வேண்டும். இது பயிற்சிக்குப் பின்னரே இயலும். தொடக்கத்தில் குறைவான பயிற்சி செய்து நாளாவட்டத்தில் பெருக்கிக் கொண்டே போகலாம். வெளியே விடும் மூச்சு 'அம்’ (ஹம்) என்னும் ஒலியுடனும் உள்வாங்கும் மூச்சு 'ஓம்’ என்னும் ஓசையுடன் இருக்கும்.

நன்றி தினகரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

பிராணாயாமம் Empty Re: பிராணாயாமம்

Post by mohandass17@gmail.com Tue Jun 12, 2012 10:49 pm

மாத்திரை என்றால் என்ன ? கால(Time) அளவு என்ன ?

mohandass17@gmail.com

Posts : 2
Join date : 06/06/2012

Back to top Go down

பிராணாயாமம் Empty Re: பிராணாயாமம்

Post by janani Wed Jun 13, 2012 11:20 am

thanks

janani

Posts : 7
Join date : 02/08/2010

Back to top Go down

பிராணாயாமம் Empty Re: பிராணாயாமம்

Post by Dheeran Mon Oct 29, 2012 12:39 pm

நன்று
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

பிராணாயாமம் Empty Re: பிராணாயாமம்

Post by ராகவா Thu Sep 12, 2013 5:32 am

janani wrote:thanks
தமிழில் ”நன்றி” என்று சொல்லாமே!
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

பிராணாயாமம் Empty Re: பிராணாயாமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum