இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கருணைத் தெய்வம் கோமதி-சங்கர நயினார் கோவில் “ஜீயார்”

2 posters

Go down

கருணைத் தெய்வம் கோமதி-சங்கர நயினார் கோவில் “ஜீயார்” Empty கருணைத் தெய்வம் கோமதி-சங்கர நயினார் கோவில் “ஜீயார்”

Post by ஆனந்தபைரவர் Thu Mar 24, 2011 4:20 pm

தவக்கோல நாயகியாக, குமரிமுனையிலே நிற்பவள் கன்யாகுமரி. ‘தபஸ்’ செய்யும் நாயகியாக சங்கரநயினார் கோவிலிலே அருட்கோலம் கொண்டவள் கோமதியம்மன். வரம் தரும் தாயான தயாபரி அவள்.

பதினொன்றாம் நூற்றாண்டில் உக்ரபாண்டியன் என்ற மன்னர் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார். மதுரை மீனாட்சியை தரிசிக்க யானை மீது செல்வார். கோவிலுக்குப் போகும் வழியில், யானை ஓரிடத்தில் நின்று காலால் மண்ணைக் கிளறுவது வழக்கம். ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போதும் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருந்தது. பின்னாளில் அவ்விடம் புன்னை மரங்கள் சூழ்ந்து புன்னை வனமாகக் காட்சி தந்தது.

புன்னை வனத்தில் மணிக்ரீவன் என்பவன் பூந்தோட்டம் அமைத்து, பாதுகாத்து வந்தான். நந்தவனத்திற்கு சற்று தொலைவில் பாம்புப் புற்று இருந்ததால், மணிக்ரீவன் கோடரியால் புற்றைத் தகர்க்கலானான். அப்போது அதனுள் இருந்த நாகத்தின் வாலில் கோடரி பட்டதால், வால் துண்டாகியது, புற்றினடியில் நாகமும், அருகில் ஒரு சிவலிங்கமும் இருப்பதைக் கண்டு மணிக்ரீவன் திடுக்குற்றான். புற்றைத் தாக்கிய பாபச் செயலைச் செய்ததற்கு வருந்தினான். பின்பு இந்த அதிசயச் செய்தியை ஊராரிடமும் மன்னரிடமும் தெரிவித்தான். மன்னர் விரைந்து வந்தார்.

“உக்ரபாண்டியனே! மதுரைக்குச் சென்று அப்பனை வழிபட்டு வந்த உனக்காகவே யாம் இங்கு தோன்றினோம்” என்ற ஒலி வானில் ஒலித்தது.

உக்ரபாண்டியன் புன்னைவனத்தில் முறையாகக் கோவில் எழுப்பி, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வித்தார். சங்கரநயினார் கோவிலில் அருள் பாலிக்கிறார் சங்கரலிங்கமாக.

திருநெல்வேலி மாவட்டத்தில் இக்கோவில் உள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில், பிருத்வித்தலமாக விளங்குகிறது. வரராசபுரம், புன்னைவனம், ஸ்ரீஇராஜபுரம் என்றும் இத்தலம் பெயர்களைப் பெற்றுள்ளது.

இக்கோவிலில் சங்கரலிங்க ஸ்வாமி, சங்கரநாராயணர், கோமதியம்மன் எனத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இராஜகோபுரம் ஒன்பது அடுக்குகள், 125 அடி உயரம், இதிகாச, புராணக் காட்சிகளைக் கொண்ட நிலைகள் என கம்பீரமாகக் காட்சி தருகிறது.

கோமதியம்மன், சங்கரலிங்க ஸ்வாமி கோவில்களின் மத்தியில் அரியும் அரனும் ஒன்றாக சிலா ரூபமாகக் காட்சி தருகிற சங்கரநாராயணரின் கோவில் அமைந்துள்ளது. மூல மூர்த்தியாக விளங்கும் லிங்கோத்பவர் தோன்றிய புற்று இக்கோவிலின் வட மேற்குப் பகுதியில் இருப்பதைக் காணலாம். சங்கரலிங்கஸ்வாமி கோவிலில் பிரம்மாவும் யோக நரஸிம்மரும் தனிச் சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ள ஒரே தலம் சங்கரநயினார் கோவில் என்னும் பெருமை பெற்றுள்ளது. தென்திசை நோக்கிய துர்க்கை மிகவும் வரப்பிரஸாதியாவாள். இக்கோவிலில் துர்க்கை அவ்வாறு காட்சி தருகிறாள்.

சிருங்கேரி ஆசார்யாள் ஸ்ரீநரஸிம்ம பாரதீ ஸ்வாமிகள் இத்தலத்திற்கு வருகை தந்தபோது, ஒரு விஷயத்தை கவனித்தார்கள். சிவனும் விஷ்ணுவும் இணைந்த சங்கரநாராயணருக்கு இக்கோவிலில் அபிஷேகம் செய்வதில்லை. சிவன் அபிஷேகப் பிரியன். ஆறுகால அபிஷேகம் நடைபெற வேண்டும் என்று ஸ்ரீஆசார்யாள் தாம் பூஜை செய்து வந்த ஸ்ரீசந்திரமௌளீஸ்வரரின் ஸ்படிக லிங்கத்தை அளித்து, அபிஷேகம் செய்து வருமாறு கூறியருளினார்கள். அவ்வாறே நடைபெற்று வருகிறது.

சங்கரநயினார் கோவிலில் புன்னை வனத்தில் ஆடி மாதம் கோமதியம்மன் தவம் செய்தாள். ஈசனோ தம் திருமேனியின் ஒரு பாதியை நாராயணருக்குத் தந்தார். எனவே அன்னை அவரை மணம் புரிய இயலவில்லை. மீண்டும் தவமிருந்து, ஐப்பசியிலே சங்கரலிங்கஸ்வாமியைத் திருக்கல்யாணம் செய்து கொண்டாள். ஆடித் தபசும், ஐப்பசித் தபசும் இக்கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

கோமதியம்மன் சந்நிதியில் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்திருப்பதால், அம்மன் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறாள். இக்கோவிலில் நடைபெறும் அர்த்தஜாமப் பூஜையின் போது கோமதியம்மனுக்குப் பால் நிவேதனம் செய்கிறார்கள். நிவேதனமான பாலைப் பெற்று, அதிலே ஒரு துளி பருகினாலும் போதும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அம்மன் அருளாலே அப்பேறு கிடைக்கிறது. அவர்கள் வயிற்றிலே பால் வார்க்கிறாள்.

அகோர வீரபத்திரரின் சாபம் பெற்ற சூரியன், சங்கர நயினார் கோவிலில் சிவலிங்க பூஜை செய்து செய்து சாபத்தைப் போக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதைக் குறிப்பிடுவது போல ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் 21, 22, 23 ஆம் தேதிகளிலும் செப்டம்பர் மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளிலும் உதய சூரியனின் பொற்கதிர்கள் சங்கரலிங்கஸ்வாமியின் மீது படிகின்றன.

திருமணப் பிராப்தி, மகப்பேறு, மனநோய்கள் அகல, சகல சௌபாக்யங்களைப் பெறவும் என்று நினைத்ததை முடித்துத் தருகிற தயாபரியாக கோமதியம்மன் இத்திருத்தலத்திலே அருள் பாலிக்கிறாள்.

சித்திரை மாதத்தில் வசந்த விழா, எல்லா நாள்களிலும் ஏழு கால பூஜை, புற்று மண்ணே நோய் தீர்க்கும் மருந்து. நாகச்சுனையே புனித தீர்த்தம். நெஞ்சில் அம்மனை நினைத்தாலே போதும் அருள் செய்யும் கருணைத் தெய்வம் கோமதியம்மன். சங்கரநயினார் கோவிலைத் தரிசித்து மும்மூர்த்திகளின் அருளையும் அம்பிகையின் வரத்தையும் பெறலாம்.


நன்றி அம்மன் தரிசனம்



ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

கருணைத் தெய்வம் கோமதி-சங்கர நயினார் கோவில் “ஜீயார்” Empty Re: கருணைத் தெய்வம் கோமதி-சங்கர நயினார் கோவில் “ஜீயார்”

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 1:42 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum