இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வாழ்வின் லட்சியம்

Go down

வாழ்வின் லட்சியம்  Empty வாழ்வின் லட்சியம்

Post by ஆனந்தபைரவர் Mon Aug 01, 2011 2:59 pm

நம் ஜீவிதக் குறிக்கோள் என்ன?

எல்லோரும் உலகில் வாழ்வதற்காகவே ஜனித்திருக்கிறோம். இது கூடத் தெரியாதா என்ன? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் வாழ்வு என்பது என்ன? நம் ஐம்புலன்கள் உலகிலிருந்து வரும் விஷயங்களை உட்கொண்டு அதற்கேற்ப இயங்குகின்றன. நாம் உண்ணும் உணவுப் பொருட்களின் தன்மயைப் பொறுத்து நம் இயக்கம் உள்ளது. ஸாத்வீக உணவுப் பொருட்களை உட்கொள்வோமானால் நம் இயக்கம் ஸாத்வீகமாக இருக்கும். ராஜஸீக உணவு உட்கொண்டால் நம் இயக்கமும் ராஜஸீகமாக இருக்கும். தாமஸீக உணவு மந்த புத்தியுடன் நம்மை இயங்க வைக்கும். காரணம் நம்முள் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பொழுது நாம் ஒவ்வொரு விதமாக இயங்குகிறோம். எதனால்? இம்மூன்று குணங்களின் சேர்க்கை வீதத்தைப் பொறுத்திருக்கிறது நம் இயக்கத்தின் தன்மை.

இம்மூன்று குணங்கள் நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களின் தன்மையை ஒட்டியுள்ளது. எதற்காக உண்ணுகிறோம்? உயிர் வாழ்வதற்காக அல்லவா? ஆனால் சிலர் உண்ணுவதற்காகவே வாழ்கிறார்கள். உணவு மட்டும்தான் நம் வாழ்வின் நோக்கமா? அல்ல. பின் நம் வாழ்வின் குறிக்கோள் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எப்படி வந்தோம்? எதற்காக வந்தோம் என்ற கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். விடை கிடைக்கிறதா? அம்மாவின் உதரத்திலிருந்து வந்தோம். உதரத்தில் கருவாக வந்து வளர்ந்து முழு வளர்ச்சியான பிறகு கர்ப்பப் பை வழியாக வெளி வந்தோம். உயிர் வாழ்வாதற்காக வந்தோம். இதுதானே உண்மை? தவறு. கரு எங்கிருந்து உருவானது? எதற்காக உருவானது? எனபன போன்ற வினாக்களுக்கு விடை காண வேண்டும். உடல் மூலமாக உலகில் இயங்குகிறோம். உயிர் உள்ளதால் வாழ்கின்றோம். உயிர் நிலைத்து நிற்க உணவு உட்கொள்கிறோம். ஆனால் உயிர் என்பது என்ன? எங்கிருக்கிறது? எங்கிருந்து வந்தது? விடை காண இயலாத ஒரு வினா. உள்நோக்கி நம் கவனத்தைத் திருப்பினால் விடை கிடைக்கும். நம்மை நம்முள் இருந்து இயக்குவது யார்? நான் யார்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காண வேண்டும். நான் உடலா? அல்லது மனமா? அல்லது புத்தியா? அல்ல. அஹம் என்ற நினைவா? அல்ல. பின் நான் என்பதின் பொருள் என்ன? இப்படி பகவான் ரமண மஹாரிஷி தந்துள்ள ஆத்ம விசாரத்தைக் கையாண்டால் விடை கிடைக்கும். ஆனால் இதை ஒரு வினாவாகக் கையாளக் கூடாது. ஒரு சாதனையாகக் கொள்ள வேண்டும். எப்படி?
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

வாழ்வின் லட்சியம்  Empty Re: வாழ்வின் லட்சியம்

Post by ஆனந்தபைரவர் Mon Aug 01, 2011 3:00 pm

உணவு வகைகள்

முதல் பாகத்தில் "ஸாத்வீக உணவு", "ராஜஸீக உண்வு", "தாமஸீக உண்வு" எனக் குறிப்பிட்டதை இங்கு விரிவு படுத்த விரும்புகிறேன்:

ஸாத்வீக உணவு:

நல்ல நினைவுகள், நல்ல விசாரங்கள் இவைகளைத் தூண்டிவிட உதவியாக உள்ள உணவு வகைகள் பால், பழ வகைகள், அரிசி, கோதுமை, ஊக்க சத்துடைய காய்கறிகள், தென்னை இளநீர், வாயுவை அதிகரிக்காத தான்ய வகைகள், தேன், நெய், தயிர் முதலியவை. உப்பு காரம் மிதமாக சேர்க்க வேண்டும், அதாவது உணவு உட்கொள்ளத் தேவையான அளவு. நம் ஆசைகளை, முக்கியமாகக் காம விசாரத்தைத் தூண்டிவிடக்கூடிய உணவு வகைகள் சேர்க்கக் கூடாது. இது நம் மனதை நல்வழிக்குப் போக உதவாது. நாம் எப்பொழுதும் சாந்தமாகவும், ஸுமுகமாகவும் இருக்க வேண்டியது அவசியம். அதற்குத் தேவையான, உயிர் வாழ்வதற்குத் தேவையான, உணவு வகைகள், அதுவும் தேவையான அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். நம் நலல எண்ணங்களைத் தூண்டிவிடக் கூடிய உணவாக உட்கொள்ள வேண்டும். அவை நம்மை நல்ல வழியில் செல்ல உதவும் வகையில் இருக்க வேண்டும்.

ராஜஸீக உணவு:

அதி காரம், உப்பு, வெங்காயம், உள்ளிப்பூண்டு, அசைவ உணவு, அதிகமாகப் பருப்பு வகைகள், மைதா, எண்ணெயில் பண்ணக் கூடிய பலஹாரங்கள், பூமிக்கடியிலிருந்து வரும் கிழங்கு வகைகள், பிராந்தி (சாராயம் வகைகள்), இவை நம் காம விகாரத்தைத் தூண்டிவிடும், வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளைக் கிளப்பும். இரத்தக் கொதிப்பு வர ஹேதுவாகும். சினத்தைத் தூண்டிவிடும். நம் மனதை ஒரு நிலையில் நிறுத்த உதவாது. காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யாதி துர்குணங்களைத் தூண்டிவிடுபவை இவைகள். தேக, மானஸீக, ஹிருதய சம்பந்தப்பட்ட வியாதிகளைக் கிளரும். நற்புத்தி நலியும். சண்டை சச்சரவுகளில் மனம் செல்லும், நிம்மதி கெடும்.

தாமஸீக உணவு:

உப்பு, காரம் இல்லாமல் சாப்பிடுவது, வேகாத காய்கனியைத் தினபது, சாராய வகைகள் அருந்துவது, ஊக்க சத்துடைய உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிகமாக மருந்துகள் சாப்பிடுவது, அமிதமாக உணவு உட்கொள்ளுவது, இவை நம் தாமஸ குணத்தைத் தூண்டிவிடும். எப்பொழுதும் சோர்வாக இருப்பது, ஸதா உறங்குவது, சுய சக்தியை இழப்பது போன்ற நிலை ஏற்படும். நம்மை சோம்பலலாக இருக்கச் செய்யும்.

எல்லோரும் நலமுடன் வாழ ஈசனை வேண்டுகிறேன்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

வாழ்வின் லட்சியம்  Empty Re: வாழ்வின் லட்சியம்

Post by ஆனந்தபைரவர் Mon Aug 01, 2011 3:00 pm

உள்ளே உள்ளதென்ன?
சென்ற இதழில் சொன்னதுபோல் நம் கவனத்தை உள்நோக்கிச் செலுத்தி "நான் யார்?" என்ற விசாரத்தைக் கையாண்டால் நமக்கு என்ன விடை கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். நான் உடலா, அல்லது மனமா, அல்லது புத்தியா, அல்லது அஹம் என்ற உணர்வா என்று கண்டுபிடிக்க வேண்டும். அது எப்படி? இது நம் புத்திபூர்வமாக அறிய வேண்டிய விஷயம். இதுவரை ஓர் விசாரமாகவே இதைக் கையாளவேண்டும். பார்ப்போமா?

நான் உடலா? நாம் பேசும்பொழுது உடலைத் தொட்டு நான் என்றல்லவா சொல்கிறோம்? அப்போது உடல்தானே "நான்" என்ற வினா எழலாம். "எனக்குப் பசிக்கிறது", "என்னுடல் நலம் கெட்டுவிட்டது", "என்னால் நடக்க இயலாது" என்றெல்லாம் சொல்லும் பொழுது நாம் உடலைப் பற்றித்தானே சொல்கிறோம்? ஆம். ஆனால் பாருங்கள் என், எனக்கு, என்னுடைய, என்னால் என்றெல்லாம் சொல்லும்பொழுது அதில் உடமை நினைப்பு இருக்கிறதல்லவா? அதாவது நான் வேறு, எனது உடல் வேறு என்று ஆகிறதல்லவா? அதாவது உடல் எனது உடமையாகும். அதேபோல், "நான் நினைக்கிறேன்", "எனக்குக் கவலையாக இருக்கிறது", "என் மனம் ஓர் நிலையில் இல்லை" என்றெல்லாம் கூறும் பொழுது, அங்கேயும் நான் வேறு என் மனம் வேறு என்றாகிவிட்டதல்லவா? இங்கேயும் மனம் எனது உடமை என்று ஆகிவிடுகிறது அல்லவா? இதுபோல் புத்தி சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆராய்வோம். "எனது அறிவில்", "என் கருத்தில்", "எனது நினைவில்" என்றெல்லாம் உரைக்கும் பொழுதும், நான் வேறு எனது கருத்து, அல்லது எனது அறிவு வேறு எனக் கோள்கிறோம் அல்லவா? இதிலிருந்து என்ன தெரிகிறது? "நான்" என்பது நம் உடல் அல்ல, மனமல்ல, புத்தியும் அல்ல எனவாகும் இல்லையா?

அப்படியானால் இந்த "நான் யார்"? எப்படி அறிவது? நாம் பேசும் பொழுது "நான்", "எனது", "என்னால்" என்று சொல்லாமல் எதையாவது குறிப்பிட முடியுமா? ஆதலால் இந்த நான் எனப்படுவது ஓர் நினைவு தானா? ஆம், அது நம் விசாரங்களின் அடிப்படையாகும். இந்த "நான்" என்பதை ஒரு மூல விசாரமாகக் கொண்டு நாம் உரையாடுகிறோம். அதனால் இந்த "நான்" நம் விசாரங்களின் எழுச்சிக்குக் காரணமாக அமைந்துள்ள மூலவிசாரமாக உள்ளது எனத் தெள்ளெனத் தெரிகிறது இல்ல்யா? இந்த முதல் விசாரத்தை நோக்கி நம் கவனத்தைத் திருப்பினால், அதாவது வேறொன்றும் நினைக்காமல் "நான்" என்ற மூல விசாரத்தை மட்டுமே பின்பற்றிச் சென்றால், அது பின்வாங்கிவிடும். கொஞ்ச நேரத்தில் அதன் மூலத்திலே போய் அடங்கிவிடும். அதன் மூலம் (இருப்பிடம்) ஏது? அதைத்தான் நாம் "மனம்" எனக் குறிப்பிடுகிறோம். இது சாதனை மூலமாகத்தான் உணர முடியும். விசார வடிவில் புரிந்துகொள்ள முடியாது. இது எப்படி முடியும்? ஒரு உதாரணாத்தைக் கொண்டு பார்ப்போம்.

ஒரு மழலைச் சிறுவன் தன் களிக்கோப்பைகளை வைத்து விளயாடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் சேஷ்டைகளை நாம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவன் கோப்பைகளை மேலும் கீழும் உருட்டியும் புரட்டியும் பார்க்கிறான். சிலவற்றை உடைக்கிறான். இன்னும் சிலவற்றை சிதைக்கிறான். மற்றும் சிலவற்றைத் தூர எறிகிறான். நாம் கோபம் கொள்ளாமலும் அவனிடம் போகாமலும் இருந்த இடத்திலிருந்தே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறுவனின் கவனம் தானாக நம்மிடம் திரும்புகிறது. நாம் ஒன்றும் சொல்லாமலும் முகமாற்றம் இல்லாமலும் இருப்பதைப் பார்த்துச் சிரிக்கிறான். அப்போதும் நாம் பேசாமல் அவனையே உற்றுப் பார்க்கிறோம். சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல நம்மை நோக்கி நகர்ந்து வருகிறான். முடிவில் நம்மைத் தொட்டுப் பார்க்கிறான். நாம் அசையாமல் அவனையே உற்றுப் பார்க்கிறோமே தவிர, பேசவில்லை. அவனை அதட்டவில்லை. அப்பா நம்மைப் பார்க்கிறார், ஆனால் நம்மை ஒன்றும் சொல்லவில்லை என்பதை உணர்ந்து நம்மிடம் வந்து நம் மடியில் ஏறி அமர்கிறான். நம் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்கிறான். நாம் அசையவில்லை. முடிவில் தானாகத் தோய்ந்து படுத்து உறங்கிவிடுகிறான். நாம் ஒன்றும் சொல்லாமலே அவன் சேஷ்டைகள் நின்று விடுகின்றன, அவன் உறங்கிவிடுகிறான் இல்லையா?

இப்போது நம் மூலவிசரத்தை அந்தச் சிறுவனாகக் கொள்வோம். நாம் பிரிந்து நின்று இந்த "நான்" என்ற மூலவிசாரத்துடன் வேறு விசாரங்கள் எழாமல் அல்லது கலக்கமல் அதன் போக்கை கவனிப்போம். அந்தச் சிறுவனைப்போல் இந்த "நான்" அதன் இருப்பிடத்திற்குச் சென்று அடங்கிவிடும். நம் கவனம் மட்டும் அதை நோக்கியே இருக்க வேண்டும். அது தானாக ஓய்ந்து அடங்கிவிடும். இதைத்தான் "ஆத்ம விசாரம்" அல்லது "Meditation" என்று சொல்கிறோம். இது வெகு எளிதில் கைவரக்கூடிய சாதனை அல்ல. தொடர்ந்து பல நாள் கையாள வேண்டிய ஒரு மகத்தான சாதனையாகும். இப்படி "நான்" என்ற உணர்வு அடங்கிவிட்டால் அதாவது மூல விசாரமே இல்லையெனில் அங்கு மனம் இல்லை. காரணம் மனம் என்ற ஒன்று தனித்து இல்லை. தொடர்ச்சியாக வந்துபோகும் பலவாறான விசாரங்களின் சேர்க்கையே "மனம்" எனப்படும். முதல் விசாரமான "நான்" அடங்கிவிட்டால் மற்ற விசாரங்களுக்கு ஆதாரமில்லாமல் போய்விடும். ஆகையால் யாதொரு விசாரமும் இல்லாமல் ஆகிவிடும். அப்பொழுது மனம் என்ற ஒன்றுக்கு இடமேது? அப்பொழுது அங்கு என்ன உள்ளது? எல்லாமாக ஒன்றாக உள்ளது. அதென்ன எல்லாமாக ஒன்றாக உள்ளது? அங்கு ஒன்றும் இல்லையே என வினவலாம். இதனை அடுத்த இதழில் பார்ப்போமாக.

"எல்லோரும் நன்றாய் இருக்க வேண்டும்

அதற்கு ஈசன் கணேசன அருளல் வேண்டும்"
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

வாழ்வின் லட்சியம்  Empty Re: வாழ்வின் லட்சியம்

Post by ஆனந்தபைரவர் Mon Aug 01, 2011 3:01 pm

விசாரத்தின் அழிவு

ஏகாக்கிர சித்தத்துடன் நாம் இந்த "நான்" என்ற விசாரத்தை உற்று நோக்குவோமானால் அது ஒளிந்தோடிவிடுகிறது. கடைசியில் மறைந்து போய் விடுகிறது. அப்போது நமக்கு என்ன புலப்படுகிறது? எல்லாமாக, ஒன்றாக ஓர் இருப்பு மட்டுமே புலப்படுகிறது. அல்லாது ஒன்றுமில்லா சூனிய அவஸ்தை எற்படுவதில்லை. எப்படி? சூனியம் என்றால் ஒன்றும் இன்மை. ஆனால் ஏதோ நமக்குப் புலனாகிறது. அது என்ன? நம் இருப்பு சத்தியம் தானே? நாம் இருப்பது புலப்படுகிறது? விசாரமே இல்லாமல், மனம் அடங்கிவிட்ட அத்தருணத்தில் ஏதோ புலப்படுவது ஏன்? அதைத்தான் நாம் "Consciousness", "அறிவு", "ஞானம்" எனக் கூறுகிறோம். இந்த அறிவு புறமிருந்து வரவில்லை. அது நம்முள் உள்ள "உணர்வு" எனக் கூறப்படும் தன்மை என்றே கூற வேண்டும். இதைத்தான் "GOD" எனச் சொல்கிறோம். ஆக, "நான்" என்ற முதல் விசாரத்தை அடக்கிவிட்டால் நம் சுய வடிவம் (உருவம் இல்லை) அதாவது நமது "இருப்பு" என்ற தன்மை புலப்படும். இந்த இருப்பு தான் நம் "Real Nature". இதைப் பல பெயரிட்டு அழைக்கிறோம்.

ஜீவன்முக்த நிலை:

இந்த இருப்பு நீடிக்குமானால், அதாவது நாம் இந்த உலகில் வாழ்ந்துகொண்டே இந்த இருப்பில் ஸ்திரமாக இருப்போமானால், அதுதான் "ஜீவன் முக்தன்" நிலை எனக் கூறப்படுகிறது. ஒரு தரம் இந்த இரகிசியம் புரிந்து விட்டால், அதாவது இந்த நிலை கிடைத்து விட்டால், நம் ஜீவிதக் குறிக்கோளை அடைந்துவிடுகிறோம். பிறகு ஜீவிப்பது எதற்கு என வினவலாம். இந்த ஜெடமானது அதன் கர்ம வினைகளை அனுபவித்தே தீர வேண்டும். மன நிலையில் நாம் ஜீவன் முக்தர்கள் ஆனாலும் உடல் நிலை வேறு அல்லவா? உடல் நமது உடமைப் பொருள். அது நாம் அல்ல. ஆனால் அது நம்முடைய வாகனம். அதன் வினையை அதுவே அனுபவிக்க வேண்டும். ஆனால், அப்பொழுது ஜீவன் முக்தர்கள் அந்த அனுபவத்தில் இருக்க மாட்டார்கள். ஏனெனில் உலகிலுள்ள எல்லா உடலையும் போல இந்த உடலை பாவிப்பார்கள். அவர்கள் நிலை ஒரு ஸம பாவனையில் இருக்கும். அதாவது "நான்" எல்லாற்றிலும் உள்ளேன், எல்லாம் என் வசம் என்ற நினைவில் இருப்பார்கள். இப்பொழுது "நான்" என்ற நினைப்பு ஓர் விசாரமல்லவா என்று தோன்றலாம். அல்ல. இந்த "நான்" ஆத்மாவைக் குறிக்கிறது. அதாவது "இருப்பு" என்ற நிலையில் உலகெல்லாம் நிறைந்து இருக்கும் ஓர் தன்மையைக் குறிப்பிடுகிறது. இறைவன் என்று கூறுவதும் ஜீவன் முக்தர்கள் கூறும் "நான்" என்பதும் ஒன்றே.

அப்படியானால் நாம் இறைவனாகி விடுகிறோமா? நாம் வேறு இறைவன் வேறு என்று இருந்தால் தானே "நாம்" இறைவனாகிவிட முடியும். இங்கு நமக்கு உதயமாகும் அறிவு என்னவென்றால் நாம் வேறு இறைவன் வேறு என்றில்லை, எல்லாம் ஒன்றாக இருக்கும் இருப்பு தான் "சத்தியம்". இதைத்தான் "அத்வைதம்" சுட்டிக் காட்டுகிறது. ஒன்று மட்டுமாக உள்ள இருப்பு. வேறொன்றும் இல்லாத தன்மை. இந்த வாழ்வின் இரகசியம் புலப்பட்டு அதற்குப் பின் வாழும் வாழ்வு உடலளவில் வேறாகத் தோன்றினாலும் ஸம பாவனையுடன் இருக்கும். அதாவது எல்லாம் ஒன்றாக, வேறொன்றில்லா அவஸ்தை.

மூல வடிவு:

இப்படி நம் மூலஸ்தானத்தை அடைவதைத்தான் "நம் ஜீவிதக் குறிக்கோள்" அல்லது "நம் வாழ்வின் நோக்கம்" என்று கூறியுள்ளேன். எல்லோரும் இந்த நிலையிலிருந்து வந்தவர்கள் தான். அதே நிலைக்குத் திரும்பப் போக வேண்டும். ஏனெனில், நாம் நம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஓர் இடத்திற்குச் சென்றால் திரும்ப நம் இடத்திற்கே வந்து விடுவது வழக்கம். அதுபோல், சத்திய நிலையிலிருந்து அசத்திய நிலைக்கு வந்த நாம், திரும்ப நம் இருப்பிடமாகிய சத்திய நிலைக்குத் திரும்ப வேண்டியது அவசியம் தானே? இதுவே "நம் ஜீவிதக் குறிக்கோளாக" அல்லது "நம் வாழ்வின் நோக்கமாக" இருக்க வேண்டும். அப்பொழுது தான் நம் ஜென்மம் ஸாபல்யமாகும்.

நன்றி மழலைஸ்.காம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

வாழ்வின் லட்சியம்  Empty Re: வாழ்வின் லட்சியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum