இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


எருமையையும் வேதம் உரைக்க வைத்த ஸ்ரீஞானேஸ்வரர்!

Go down

எருமையையும் வேதம் உரைக்க வைத்த ஸ்ரீஞானேஸ்வரர்! Empty எருமையையும் வேதம் உரைக்க வைத்த ஸ்ரீஞானேஸ்வரர்!

Post by ஆனந்தபைரவர் Thu Oct 06, 2011 10:38 pm


ஸ்ரீதுக்காராம் சுவாமிகள், நாமதேவர், கோராகும்பர் போன்ற பல மகான்கள் அவதரித்த புண்ணிய பூமி மகாராஷ்டிரம். இந்த புண்ணிய பூமியில் அவதரித்தவர்தான் ஞானேஸ்வரர் என்ற மகான்.

கோவிந்த பண்டிதர், நிருபமா தம்பதிகள் இறை பக்தி மிகுந்த வர்கள். கோவிந்த பண்டிதர் அரண் மனையில் வேலையில் இருந்தார். பசி என்று யார் வந்தாலும் உணவிடும் தூயவர். கோவிந்த பண்டிதர் தம்பதிக்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. விட்டலனின் அருளால் கிடைத்ததால் குழந்தைக்கு விட்டோபா என்று பெயர் சூட்டினார் கள். விட்டோபா குழந்தைப் பருவத்தி லேயே விளையாட்டு குணமின்றி ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருப்பார். நாட்கள் ஆக ஆக விட்டோபா உலகப் பொருட்கள் எதன் மீதும் கடுகளவுகூட ஆசை இன்றி, தியானம் செய்வதிலும் பஜனை செய்வதிலும் ஈடுபட்டு வந்தார்.

விட்டோபா வாலிப வயதை அடைந்த வுடன், "பிள்ளைக்குத் திருமணம் செய்து விட்டால் நமது கடமை தீர்ந்துவிடும்' என்று பெற்றோர் நினைத்த னர். விட்டோபாவோ, ""தாய், தந்தையே! இந்த உலக பந்தமே எனக்குப் பிடிக்கவில்லை. நான் காசி யாத்திரை செல்ல லாம் என்றுள்ளேன். தயவு செய்து என்னை ஆசீர்வதியுங்கள்'' என்று உறுதியாகக் கூறி, காசி யாத்திரைக்கும் சென்று விட்டார். இதனால் பெருங்கவலை கொண்ட கோவிந்த பண்டிதரும் நிருபமாவும் தாங்கள் வணங்கும் கண்ணனிடம் தஞ்சம் அடைந்தார் கள். தன்னையே நம்பியிருக்கும் அடியார்களை விடுவாரா ஆண்டவர்?

காசி யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த விட்டோபா, இரவாகி விட்டதால் அலங்காவதி என்ற கிராமத்தில் தங்குவதற்காகச் சென்றார். அங்கு சீதோபந்த் என்ற அடியார் விட்டோபாவைப் பார்த்தார். அவரைத் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்து, உணவு கொடுத்து அங்கேயே தங்கும்படி வேண்டினார். அன்று இரவு சீதோபந்தின் கனவில் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றி, "சீதோபந்த்! உன்னுடைய மகள் ருக்மாபாயை விட்டோபாவிற்குத் திருமணம் செய்து கொடு' என்று சொல்லி மறைந்தார். காலை எழுந்தவுடன் சீதோபந்த் தான் கண்ட கனவை விட்டோபா விடம் சொன்னபோது, விட்டோபா கோபாவேச மானார். ""எனக்கு உலக பந்தமே வேண்டாம் என்றுதானே காசி யாத்திரை சென்றேன். உங்கள் வீட்டில் தங்கியதற்காக, பெண்ணைக் கல்யாணம் செய்து கொள் என்று கல்லைத் தூக்கிப் போடுகிறீரே! உங்களிடம் சொன்ன பகவான் என்னிடம் எதுவுமே சொல்லவில்லையே'' என்று ஆவேசமாகக் கேட்டார்.

சீதோபந்த் மிகவும் சாந்தமாக, ""சுவாமி, கோபப்படாதீர்கள். இன்று இரவும் இங்கு தங்குங்கள். என்னிடம் சொன்ன பகவான் உங்களிடமும் சொல்வார்'' என்றார் நம்பிக்கை யுடன். அதற்குச் சம்மதித்த விட்டோபா அன்று இரவு அங்கேயே தங்கினார்.

இந்நிலையில், ருக்மாபாய் விட்டோபா வையே தன் கணவனாக நிச்சயம் செய்து விட்டாள். சீதோபந்தும் அவருடைய மனைவியும் அன்று இரவு உறங்காமல் ஸ்ரீ கிருஷ்ணனையே தியானம் செய்துகொண்டிருந்தார்கள். விட்டோபா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய பாண்டுரங்கன், "விட்டோபா! சீதோபந்த் சொன்னது உண்மைதான். நீ ருக்மாபாயை மணந்துகொள்' என்று சொல்லி மறைந்தார். திடுக்கிட்டு விழித்த விட்டோபா அதிர்ச்சியடைந்தார். உடல் படபடத்தது. அவருடைய கோபம் இப்போது கண்ணன்மேல் தாவியது. "கண்ணனுக்கு இந்த வம்பு எதற்கு' என்று யோசித்தவர், ஒரு முடிவிற்கு வந்தார்.

யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார். அந்த சமயம் ருக்மாபாய் அங்கு ஓடி வந்து, அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கி, ""சுவாமி! என்னை மணம் செய்து கொள்ள வேண்டும். நான் உங்களையே கணவனாக மனதில் வரித்துவிட்டேன்'' என்றாள் கண்ணீருடன். அதற்கு விட்டோபா, ""எனக்குத் திருமணத்தில் விருப்பமில்லை. நான் நாடோடி'' என்று சீறினார்.

ருக்மாபாயோ அவரை விடுவதாக இல்லை.

""சுவாமி, நேற்றே என் தந்தையிடம் பகவான் கனவில் வந்தார் என்றபோதே நீங்கள் கிளம்பி இருக்கலாம். அதை விட்டு என் கனவில் பகவான் வருகிறாரா என்று மேலும் ஒரு இரவு தங்கினீர் கள். இந்த நிலையில் யாரிடமும் சொல்லாமல் போவது எப்படி நியாயம் ஆகும்? நான் உங்களைத் தவிர யாரையும் மணம் செய்துகொள்ள மாட்டேன்'' என்றாள்.

விட்டோபாவிற்குக் கோபம் தணியவே இல்லை. ஏதேதோ பேசித் தப்பிக்கப் பார்த்தார். அப்போது ருக்மாபாயின் தந்தை சீதோபந்தும், அவர் மனைவியும் ஏதோ பேச்சு குரல் கேட்கிறதே என்று எழுந்து வந்தனர். விட்டோபா கோபமாக இருப்பதையும், ருக்மாபாய் அவரிடம் கெஞ்சுவதையும் கண்டு ஒருவாறு விஷயத்தை அறிந்தனர். ருக்மாபாயும் பெற்றோரும், ""ஏ கிருஷ்ணா! ஏன் இப்படி எல்லாம் சோதனை செய்கிறாய்?'' என்று கண்ணீர் விட்டுப் பிரார்த்தித்தார்கள்.

அப்போது, "ஏ விட்டோபா, ருக்மாபாய் உத்தமி! அவளை நீ மணந்து கொள்' என்று அசரீரி ஒலித்தது. அப்போது ஊர் மக்களும் அங்கு கூடி ருக்மாபாயைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். வேறு வழி இல்லாமல் விட்டோபா ருக்மாபாயை மணந்து கொண்டார். சீதோபந்த் தம்பதிகள் இறைவனே நடத்தி வைத்த திருமணம் என்று ஆனந்தம் அடைந்தார்கள்.

சீதோபந்த் மகளையும் மருமகனையும் அழைத்துக் கொண்டு விட்டோபாவின் பெற்றோர் இருக்கும் "ஆபேகாம்' வந்து சேர்ந்தார். அவர்களைக் கண்ட கோவிந்த பண்டிதரும் நிருபமாவும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகாலக்ஷ்மி போன்ற ரூபவதியான மருமகளைக் கண்டு பேரானந்தம் கொண்டனர்.

விட்டோபா ஒரு கட்டாயத்திற்காகத் திருமணம் செய்து கொண்டாரே தவிர, மனம் ஒத்து திருமணத்தை ஏற்கவில்லை. அதனால் தாமரை இலை தண்ணீர்போல இருந்து வந்தார்.

சில ஆண்டுகளில் விட்டோபாவின் தாயும் தந்தையும் ஒருவர் பின் ஒருவராக இறைவனடி சேர்ந்தார்கள்.

விட்டோபாவிற்கு இல்லறம் சுமையாக இருந்தது. துறவையே மனம் நாடியது. ஒரு நாள் அவர் ருக்மாபாயிடம், ""ருக்மா, நான் எனது பெற்றோரின் அஸ்திகளை கங்கையில் கரைப்பதற்காக காசிக்குச் செல்ல வேண்டும். நீ உன் பிறந்தகம் போய் சில நாட்கள் இரு'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.

பாவம் ருக்மாபாய் சோர்ந்த மனதுடன் தாய்- தந்தையிடமே வந்து சேர்ந்தாள்.

தாயும் தந்தையும் தன் மகளின் நிலையைக் கண்டு துவண்டு போயினர். பின்னர் ருக்மாபாயைத் தேற்றி, ""அம்மா ருக்மாபாய்! நீ அம்பிகையைப் பூஜித்து வா. இது கண்ணன் செய்து வைத்த கல்யாணம். எல்லாம் சரியாகி விடும்'' என்று ஆறுதல் சொல்லி மகளை சாந்தப்படுத்தி னார்கள்.

காசிக்குச் சென்ற விட்டோபா பெற்றோரின் அஸ்தியை கங்கையில் கரைத்துவிட்டு இறைவனை வணங்கிவிட்டுத் திரும்பினார். வரும் வழியில் ஸ்ரீபாத சுவாமிகள் என்ற மகாபுருஷரைக் கண்டார். துறவியாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க, ஸ்ரீபாத சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி சந்நியாசி தீட்சை பெற்றுவிட்டார். காவி உடுத்தித் துறவறத்தை ஏற்றார்.

ருக்மாபாய் அம்பிகையை மனம் லயித்துப் பூஜை செய்து வந்தாள். ""தாயே! எனக்கு தாம்பத்ய வாழ்க்கையை அருளி, மக்கள் செல்வத்தையும் அருள வேண்டும்'' என்று கண்ணீர் விட்டுஇறைஞ்சினாள். அவள் பெற்றோரும் தன் மகள் படும் வேதனையைத் தாங்காமல் தவித்தனர்.

தயாநிதியான இறைவன் இனி சும்மா இருப்பாரா. காசியிலிருந்து ஸ்ரீபாத சுவாமிகள் பல தலங்களுக்குச் சென்றுவிட்டு ருக்மாபாய் இருக்கும் ஊருக்கு வந்தார். மகானைத் தரிசித்து தங்கள் துன்பங்களுக்குத் தீர்வு காண மக்கள் திரண்டனர். இந்தச் செய்தி அறிந்த ருக்மாபாயும் இறைவனை வேண்டிக் கொண்டு ஸ்ரீபாத சுவாமிகள் முன்பு போய் சுவாமிகளின் பாதங்களில் விழுந்து கண்ணீர் விட்டழுதாள்.

சுவாமிகள் திகைத்துப் போய், ""அம்மா! மகாலக்ஷ்மிபோல் இருக்கும் உனக்கு என்ன துன்பம்?'' என்று கேட்டார். துயரத்தால் அவளுக் குப் பேச்சே வரவில்லை. அருகில் இருந்தவர்கள் அவள் கதையை சுவாமிகளிடம் கூறினர்.

அதைக் கேட்டவுடன் ஸ்ரீபாத சுவாமிகள் ருக்மாபாயைப் பார்த்து, ""அம்மா, நீ வருந்த வேண்டாம். பிரம்மா, விஷ்ணு, சிவ, சக்தி அம்சங்களைக் குழந்தைகளாகப் பெறுவாய்!'' என்று ஆசீர்வதித்தார். ருக்மாபாய் உட்பட அனைவரும் அதிசயித்து நிற்க, ""என்னம்மா யோசிக்கிறாய்... கணவன் உன்னோடு இல்லாத நிலையில் நான் சொன்னது எப்படி சாத்தியம் ஆகும் என்றா? கவலைப்படாதே. நான் சொன்னது நடக்கும்'' என்றார்.

பின்னர் சீதோபந்தை அழைத்து முழு விவரங்களையும் விசாரித்தார். ஸ்ரீபாத சுவாமி களுக்கு உண்மை புலனாகி விட்டது. காசியில் இருக்கும் தன்னுடைய சீடன்தான் விட்டோபா என்பது புரிந்து விட்டது. மேற்கொண்டு யாத்திரையைத் தொடராமல் திரும்ப காசியை வந்தடைந்தார். விட்டோபாவை அழைத்து, ""விட்டோபா! நீ பொய் சொல்லி சந்நியாசம் பெறலாமா? திருமணம் ஆகாதவர்களுக்கே நான் சந்நியாச தீட்சை அளிப்பேன் என்பது தெரிந்திருந்தும் நீ இப்படிச் செய்யலாமா?'' என்று கேட்டதும் விட்டோபா தீயை மிதித்தவர்போலத் தவித்தார். உடனே விட்டோபா ஸ்ரீபாத சுவாமி களின் பாதங்களை வணங்கி, ""சுவாமி, திருமண மானாலும் நான் ஒரு நாள்கூட இல்லறம் நடத் தவே இல்லை'' என்று பணிவோடு சொன்னார்.

சாந்தமே உருவான ஸ்ரீசுவாமிகள் கோபத்து டன், ""விட்டோபா! நீ செய்த காரியம் மிகவும் பாவமான செயல். ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட ஆணுக்கு சில கடமைகள் உள்ளன. அதை முடித்தால்தான் துறவு பூணலாம். நீயும் உனது கடமைகளை முடித்துவிட்டு வா! எனது தவத்தின் பலன்களை உனக்கு அளிக்கி றேன். நீ புறப்படு. ஒரு உத்தமி கண்ணீர்விட்டால் அதற்கு பிராயச்சித்தமே கிடையாது'' என்றார்.

விட்டோபா மறுபேச்சின்றி குருவோடு ருக்மாபாய் இருக்கும் இடம் வந்தார். ருக்மாபாயை அழைத்த சுவாமிகள், ""அம்மா! நீ செய்த தேவி பூஜை பலித்து விட்டது. இதோ உன் கணவன். இனிதே இல்லறம் நடத்தி தெய்வீகக் குழந்தைகளைப் பெறுவாய்'' என்று சொல்லி விடைபெற்றார்.

குருவின் வாக்கை மதித்து விட்டோபா ருக்மாபாயுடன் குடும்பம் நடத்தினார். ஒரு இல்லறவாசி துறவியைபோல இருந்துவிடலாம். ஆனால் ஒரு துறவி இல்லறம் நடத்துவது என்பது சிக்கலான விஷயம்தான். விட்டோபா திரும்பி வந்து குடும்பம் நடத்துவது பற்றி ஊர் மக்கள் கேலியாகப் பேசினர். சந்நியாசிக்கு என்ன குடும்பம் என்று தூற்றினார்கள். இதைப் பொறுக்க முடியாமல் ஊரைவிட்டுக் கிளம்பி மனித சஞ்சாரமே இல்லாத காட்டில் போய் வசித்தார்கள் விட்டோபாவும் ருக்மாபாயும். ஸ்ரீ பாத சுவாமிகள் வாக்கு அப்படியே பலித்து விட்டது. விட்டோபா தம்பதிக்கு தெய்வத்தின் அம்சமாக நான்கு குழந்தைகள் பிறந்தன. சிவபெருமானின் அம்சமாக நிவர்த்திநாத்தும், மகாவிஷ்ணுவின் அம்சமாக ஞானேஸ்வரரும், பிரம்மாவின் அம்சமாக சோபாள் தேவரும், சக்தியின் அம்சமாக முக்தாபாயும் பிறந்தார்கள். குழந்தைகளுக்கு தெய்வ பக்தியும் நல்ல குணமும் இயற்கையாகவே இருந்தன. நால்வரும் விளையாடும்போதுகூட தெய்வ வழிபாடு, பூஜை, பஜனைப் பாடல்கள் என்று பக்திமயமாக இருந்தது. அவர்களின் விளையாட்டைப் பார்த்து பெற்றோர் பூரித்தனர். இருந்தாலும் குழந்தைகளுக்கு நல்ல உணவு, நல்ல உடைகள் கொடுக்க முடியாமல் தவித்தார்கள். காட்டில் இவற்றுக்கு எங்கே போவது?

குழந்தைகள் வளர்ந்தனர். ஞானேஸ்வரர் அசாத்தியமான அறிவும், நல்ல குரல் வளமும் பெற்றிருந்தார். குழந்தைகள் பசியும் பட்டினி யுமாக எத்தனை நாட்கள் இருப்பார்கள். ஞானேஸ்வரர் பிச்சை எடுத்தாவது சகோதரர் களுக்கும் பெற்றோருக்கும் கொடுக்கலாம் என்று நினைத்து அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்றார். தன் இனிமையான குரலில் கிருஷ்ண துதிப் பாடல்களைப் பாடிக் கொண்டே யாசித்தார். அந்த ஊரில் இருந்த வேதியர்கள் அவருக்குப் பிச்சையிட மறுத்ததோடு கேவலமாகவும் பேசினார்கள்.

ஞானமும் அறிவும் இறைபக்தியும் நிரம்பப் பெற்ற ஞானேஸ்வரர் அவர்களைப் பார்த்து, ""ஏன் எங்களை இப்படி வெறுத்து ஒதுக்கு கிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, ""நீ சந்நியாசிக்குப் பிறந்த பிள்ளை'' என்று வார்த்தையால் சுட்டனர்.

அதற்கு அவர், ""அந்தணர் களே, பிறப்பினால் மட்டும் ஒருவன் உயர்ந்தவனாக மாட்டான். அவன் செய்யும் செயல்களாலேயே மதிக்கப் படுகிறான். என் தந்தையை இழிவாகப் பேசுகிறீர்களே. அவர் என்ன தவறு செய்தார். தன் குருவின் வார்த்தையை மதித்து, தெய்வ பக்தி மாறாமல் இன்னும் இருந்து வருகிறார்'' என்று கூறிவிட்டுத் திரும்பி வந்தார்.

நடந்த விவரங்களை எல்லாம் அறிந்த விட்டோபா வும் ருக்மாபாயும் அந்த அந்தணர்களிடம் சென்று, ""நாங்கள் செய்தது குற்றமாக இருந்தால் அதற்குப் பரிகாரம் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்த அந்தணர்கள், ""நீங்கள் உயிரை விடுவதுதான் பரிகாரம்'' என்று இரக்கமின்றிச் சொன்னார்கள்.

மனம் நொந்த விட்டோபாவும் ருக்மாபாயும் அங்கிருந்து புறப்பட்டு பிரயாகை சென்றனர். அங்கு புனிதமான கங்கையில் குதித்து விட்டார் கள். பெற்றோரை இழந்த பிள்ளைகளை அந்த அந்தணர்கள் அதோடு விடவில்லை. ""நீங்கள் சமூகத்தோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அருகிலுள்ள "பைதான்' நகரில் உள்ள பண்டிதர் களிடம் சென்று நீங்கள் புனிதமானவர்கள் என்று நற்சான்று வாங்கி வரவேண்டும்'' என்றார்கள். அங்குள்ள பண்டிதர்களோ தெய்வீக களையும், பக்தியும் கொண்ட பாலகர் களிடம் துவேஷம் கொண்டு அவமதித்தார்கள். ஞானேஸ்வரர் அவர்களிடம் வாதம் செய்தார். பல சித்தாந்தங்களை மேற்கோள் காட்டினார். சிறுவனான ஞானேஸ்வரரின் வாதத்திற்கு எதிர்பேச்சு பேச முடியாமல் அவர்கள் திகைத்தனர்.

இறுதியாக ஞானேஸ்வரர், ""பண்டிதர்களே! உங்களோடு பேசுவதைவிட இதோ வருகிறதே எருமை... இதனோடு பேசலாம்'' என்றார். அதைக் கேட்ட அந்தணர்கள் கோபம் கொண்டு, ""அடே சிறுவா! இந்த எருமையோடு பேசலாம் என்றாயே. எருமை வேதம் படித்துள்ளதா?'' என்றனர். எங்கும் எதிலும் கண்ணனையே காணும் ஞானேஸ்வரர் எருமையைப் பார்த்து, ""ஹே கிருஷ்ணா... பாண்டுரங்கா! நீ இப்போது வேதம் சொல்ல வேண்டும்'' என்றார். என்ன ஆச்சரியம்! அந்த எருமை மாடு கணீரென வேத கோஷம் செய்தது. அதைக் கண்ட அந்தணர்கள் திகைத்துப் போய் ஞானேஸ்வரரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள்.

ஞானேஸ்வரர் எல்லா மக்கள் மனதிலும் பக்தியை விதைத்தார். அவரவர் மன ஈடுபாட்டிற்குத் தகுந்தபடி பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் ஆகியவற்றை முறைப்படி போதித்தார். தனது சகோதரர் நிவர்த்திநாத் கேட்டுக்கொண்டபடி ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரத்தை எழுதினார்.

ஸ்ரீஞானேஸ்வரர் மராட்டி யில் எழுதிய "ஞானேஸ்வரி' என்ற நூல் இன்றும் மதிக்கப் படுகிறது. ஞானேஸ்வரர் தனது பதினைந்து வயதிலேயே பல நூல்களை யும் அபங்கங்களையும் பாடினார். "ஹரிபாட்' என்ற நூலையும், "அம்ருதானுபவம்' என்ற அத்வைத சைவ வேதாந்த காவியத்தையும் இயற்றினார்.

ஞானேஸ்வரர் இறைவனோடு ஐக்கியமாகத் திருவுள்ளம் கொண்டார். பூனாவிற்கு 18 கல் தொலைவிலுள்ள "ஆலந்தி' என்ற ஊரை அடைந்தார்.

பக்தர்களிடம் தான் "ஜீவ சமாதி' அடைய விரும்புவதாகச் சொன்னார். நாமதேவர் போன்ற மகானுபாவர்கள் நாம சங்கீர்த்தனங்களை விடிய விடியப் பாடினர். ஸ்ரீஞானேஸ்வரர் அப்படியே சமாதியில் ஆழ்ந்தார். ஸ்ரீராகவேந்தர ஸ்வாமி களைப்போல, சுற்றிலும் செங்கற்களை அடுக்கி சமாதி அமைத்தார்கள். ஜோதியோடு ஜோதியாக ஞானேஸ்வரர் ஐக்கியமானார்.

ஞானேஸ்வரர் கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்சத்தில் சமாதியானார். இன்றளவும் ஆலந்தி நகரில் ஸ்ரீஞானேஸ்வரர் சமாதியான புனிதமான தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் கூடுகிறார்கள். ஸ்ரீஞானேஸ்வரர் சமாதியைத் தரிசித்த மாத்திரத்திலேயே மனம் சாந்தி அடையும். திருமணம் போன்ற நல்ல காரியங்கள் உடனே கைகூடும். தீராத நோய் தீரும். ஸ்ரீஞானேஸ்வரர் தெய்வமாக இருந்து நாம் கோரிய நல்ல வரங்களைத் தருகிறார். அவர் பாடிய "அபங்கங்களை' எல்லாரும் பாடி வருகிறார்கள். (குறையே இல்லாத பாடல்களை அ+பங்கம்=அபங்கம் என்பர்.) ஸ்ரீஞானேஸ்வரர் சமாதியான ஆலந்திக்குச் சென்று வந்தால் நம்முடைய பாவங்கள் தூசியாகி விடுகிறது.


ஓம் ஆன்மீக மாத இதழ்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum