இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பிள்ளையார் போற்றி நானூறு

Go down

பிள்ளையார் போற்றி நானூறு Empty பிள்ளையார் போற்றி நானூறு

Post by ஹரி ஓம் Sun Dec 23, 2012 1:05 pm


பிள்ளையார் போற்றி நானூறு Karpaga
நிலைமண்டில ஆசிரியப்பா

ஓமெனும் எழுத்தாம் ஓருரு அதுவே
தாமென வந்த தற்பர போற்றி!

தோற்றம்

முக்கட் கடவுள் உமை யொடு மகிழ்ந்து
மக்கட் களித்த முன்னவ போற்றி!
கணபதி வணக்கம்
கண்டேன் கணபதி களிற்றைக் கைதலைக்
கொண்டே குட்டி வணங்கினன் போற்றி!
கோப்பாய் காதிரு கரங்கள் கோர்த்து
தோப்பு கரணம் தொடர்ந்தனன் போற்றி!

இதயம் இருத்தல்

கொஞ்சக் கொஞ்சக் குழைவாய் வந்து
நெஞ்சத் தமர்ந்த நாத போற்றி!
திருப்பெயர்கள்
பேரே ஊரே இல்லாப் பிள்ளை
யாரே பலபேர் ஏற்றாய் போற்றி!

திருத்தலங்கள்

எத்தனை தலங்கள் எங்கெலாம் மேவி
பத்தரை காக்கும் பரமா போற்றி!
ஆவடு துறையுள் மேவிடு மூர்த்தம்
பூவிடும் அழகிய விநாயக போற்றி!
வந்தனை மகிழ அத்தலம் விளங்கிய
நந்துணை வந்த விநாயக போற்றி!
பவந்தனை யொழிக்க அப்பதி விளங்கும்
சிவப்பிர காச விநாயக போற்றி!
திருநறை யூர்சித் தீச்சுரந் தன்னில்
மருவிய ஆண்ட விநாயக போற்றி!
ஐயா றதனில் அன்பாய் மேவிய
சைவா ஆதி விநாயக போற்றி!
விருத்தா சலத்தே விளங்கிடு வேழமே
திருவா ழத்துப் பிள்ளையே போற்றி!
திருச்சி யுச்சிப் பிள்ளை யெனப்புகழ்
விரிச்சி ருக்கும் விநாயக போற்றி!
திருவிடை மருதில் கருவிடைப் போகா
மருவிடும் ஆண்ட விநாயக போற்றி!
குடந்தைக் கீழ்க்கோட் டப்பேர் தலத்தில்
மடந்தை கங்கை கணபதி போற்றி!
திருக்கா றாயில் தலத்தே விளங்கி
இருக்கும் கடுக்காய் விநாயக போற்றி!
நாகே சுரத்தில் நலமாய் விளங்கும்
வேகக் கங்கை விநாயக போற்றி!
சால வுயர்ந்த திருக்கச் சூரில்
தால மூல விநாயக போற்றி!
அத்தல மதனில் அழகுற விளங்கிய
சித்தியல் கருக்கடி விநாயக போற்றி!
உள்ளற் காய கடவூர் தன்னில்
கள்ள வாரணப் பிள்ளையார் போற்றி!
திருக்கடிக் குளத்தில் தேவைக் கருளி
உருப்பெறும் கற்பக விநாயக போற்றி!
முருகன் பூண்டி யதனில் மேவிய
சிறுவா கூப்பிடு பிள்ளை போற்றி!
திருக்குரு காவூர் தலத்தில் திகழும்
பெரும்பேர் கற்பக விநாயக போற்றி!
திருநாட்டியத்தான் குடியில் மேவிய
ஒருகை காட்டி விநாயக போற்றி!
தில்லை திகழ்ந்து தனிப்பெருங் கருணை
எல்லையில் கற்பக விநாயக போற்றி!
ஒருவரை சுட்டா உயர்தல மதனில்
திருமுறை சுட்டிய விநாயக போற்றி!
அங்கே விளங்கும் அரிய பொய
துங்கமுக் குறுணி விநாயக போற்றி!
என்பால் வருக எனவத் தலத்தில்
அன்புச் சிட்ட விநாயக போற்றி!
வரத மாக அத்தலம் விளங்கும்
நரமுக விநாயக நாத போற்றி!
மயலறு தில்லைத் தலமதில் மருவும்
உயர்செங் கழுநீர் பிள்ளையார் போற்றி!
திருக்கொட்டை யூரில் திகழ்ந்தினி தருளைப்
பெருக்குங் கோடி விநாயக போற்றி!
திருமறைக் காட்டில் திகழ்தரு கோலம்
ஒருசிந் தாமணி விநாயக போற்றி!
தீரம் திகழ தலமதில் அமர்ந்த
வீர கத்தி விநாயக போற்றி!
வெந்திறல் வினையை வீட்டுகீழ் வேளூர்
சுந்தர கணபதி சேவடி போற்றி!
போதந் திகழ திருவுசாத் தான
சூதவ னப்பிள்ளை யாரே போற்றி!
அன்பிலா லந்துறை ஆய்ந்ததி லமர்ந்த
நன்செவி சாய்ந்த விநாயக போற்றி!
நள்ளா றதனில் நடுவுற வமர்ந்த
விள்ளரும் சொர்ண விநாயக போற்றி!
திருமழ பாடியில் திருவீற் றிருக்கும்
ஒருபெருஞ் சுந்தர கணபதி போற்றி!
பனையூர் தன்னில் பாங்குற வமர்ந்த
வினைத்துணை யிருந்த விநாயக போற்றி!
நானை தன்னில் நலமுர விளங்கிய
வாகை மாவடி விநாயக போற்றி!
போகா வினைகள் போக்கி யாங்கிரு
நாகா பரணப் பிள்ளையார் போற்றி!
விஞ்சிய முத்தி வழங்கி யாங்கிரு
பஞ்ச முககண பதியே போற்றி!
திருவின் ன்ம்பர் தேர்ந்ததில் திகழும்
நிருத்தன விநாயக நாதா போற்றி!
திருப்பதி வீழி மிழலையில் திகழும்
ஒருபடிக் காசு விநாயக போற்றி!
புறம்பய மதனில் அறம்பல ஆற்றி
சிறந்த சுவைத்தேன் விநாயக போற்றி!
வரம்பல வழங்கி புறம்பயம் விளங்கும்
பிரளயங் காத்த பிள்ளையார் போற்றி!
வெய்ய வினைதணி மாகறல் விளங்கும்
பொய்யா விநாயக புண்ணிய போற்றி!
குருசம் பந்தன் காழியில் விளங்கி
கருதா பத்துக் காத்தாவ போற்றி!
நாரை யூரில் நேருற விளங்கும்
வாரப் பொல்லாப் பிள்ளையார் போற்றி!
அம்பல் எனும் ஊரில் அமர்ந்து
உம்பர் சுட்டு விநாயக போற்றி!
வெண்ணெய் நல்லூர் விளங்கி யிருக்கும்
புண்ணிய பொல்லாப் பிள்ளையார் போற்றி!
சாற்றருந் தலமாம் திருவா ரூரில்
மாற்று ரைத்த விநாயக போற்றி!
ஆலுந் தலமாம் திருவா ரூரில்
மூலா தார கணபதி போற்றி!
இருவா தனையும் இரியுமத் தலந்திகழ்
திருவா தாபி விநாயக போற்றி!
ஆல வாயில் அழகுற வமர்ந்த
சீலமுக் குறுணிப் பிள்ளையார் போற்றி!
வல்லந் தன்னில் விளங்கி யருள்கூர்
நல்வர சித்தி விநாயக போற்றி!
திருமா யூரம் திகழறு கோடு
வருமுக் குறுணிப் பிள்ளையார் போற்றி!
திருக்களர் தன்னில் உருக்கிளர்ந் தாவன
விருத்திசெய் வலம்புரி விநாயக போற்றி!
ஆணிப் பொன்னென அன்பருக் கமைந்த
காணிப் பாக்கம் கணேச போற்றி!
இகபரம் வழங்கிக் காஞ்சியில் இருக்கும்
விகட சக்கர விநாயக போற்றி!
அத்திக் கடவுளய் அத்தி கிரியில்
சித்தி வலம்புரி விநாயக போற்றி!
திருப்புக லூரில் திருப்புகழ் விளங்கி
மருவுவா தாபி விநாயக போற்றி!
செங்காட் டங்குடி சேர்ந்தினி தருளும்
துங்கவா தாபி விநாயக போற்றி!
வலஞ்சுழி யதனில் வீறுடன் விளங்கி
நலஞ்செயும் வெள்ளை விநாயக போற்றி!
வேதி குடியில் போதித் திருக்கும்
ஆதி வேதிப் பிள்ளையார் போற்றி!
நாளும் நல்லூர் நயந்தி திருக்கும்
சாளக் கிராம விநாயக போற்றி!
திருந்து தேவன் குடியில் தெளிவாய்ப்
பொருந்துகர்க் கடக விநாயக போற்றி!
மயூர புரந்தனில் மகிழ்ந்தினி தருளும்
மயூர கணபதி மாயிறை போற்றி!
காசி தன்னில் கவின்பெற விளங்கும்
தேசுடைத் துண்டி விநாயக போற்றி!
மெய்த்தமிழ் விளங்கும் மதுரையில் அடியார்
உய்த்த சித்தி விநாயக போற்றி!
பெருங்கா ளத்தி புண்ணிய தலத்தில்
திருமஞ் சந்தி விநாயக போற்றி!
திருக்கோ கர்ணம் தலத்தினில் விளங்கி
இருக்கும் இறைமகா கணபதி போற்றி!
விழுமிய பழுவூர் விமலன் கோவிலில்
கெழுமிய சுந்தர கணபதி போற்றி!
தெங்கா சித்தலம் திருவுடன் விளங்கி
மன்னும் லட்சுமி கணபதி போற்றி!
செல்லக் கதிர்கா மந்தனில் செறிந்த
நல்லமா ணிக்க விநாயக போற்றி!
வேலூர் சேண்பாக் கத்தே தானாய்
ஆலித் தெழுந்த கணபதி போற்றி!
சித்தியல் வள்ளி மலைத்தவப் பீட
கைத்தல நிறைகனி கணபதி போற்றி!
சின்னம் மாறி சுசீந்திர மதனில்
மன்னும் கஜானனி கணபதி போற்றி!
சல்பூ ரருகே பீரோ கேட்டில்
இபப்பெண் வடிவ கஜானனி போற்றி!
மும்பை நகால் பற்பல சந்தி
தம்பா லெழுந்த தயவே போற்றி!
ஒய்சலந் தன்னில் ஓங்கி யெழுந்த
தெய்வ நிருத்த கணபதி போற்றி!
தானாய் முளைக்கும் கணபதி குண்ட
பாணக் கணபதி பரமா போற்றி!
பிள்ளையார் பட்டியில் பேருரு வெடுத்து
கொள்ளை யருல்தரும் கணபதி போற்றி!
அகப்புறச் சமயங்களில் கணபதி
அகப்புற சமயம் அன்புடன் வணங்க
இகபரம் நல்கும் கணபதி போற்றி!
காணா பத்தியம் கனிவுடன் வணங்கும்
கேணான் எனவரு கணபதி போற்றி!
சாக்தே யர்சிறந் தேத்தி வழிபடும்
சூக்த சத்தி கணபதி போற்றி!
தெய்வத் தற்பரம் சிவமொன் றேயெனும்
சைவர் துதிசிவ கணபதி போற்றி!
வகுளா பரணனே பரமெனும் வைணவர்
உகளும் விட்டுணு கணபதி போற்றி!
சாங்கியர் தம்மதம் சாற்றி வணங்கும்
பாங்கியல் தத்துவ கணபதி போற்றி!
மீமாஞ் சகர்மே னாளில் முறையுரை
நாம தேவ கணபதி போற்றி!
வையா கரணிகள் வழிபா டியற்றும்
தெய்வா சப்த கணபதி போற்றி!
நித்தம் சோதிடம் நினைபவர் வணங்கும்
உத்திராட கணபதி போற்றி!
எண்ணிய லாளர் ஏத்தி வணங்க
ஒன்றில் ஒன்றிய கணபதி போற்றி!
தாயுள் ளம்புரை ஆயுள் வேதியர்
வாயுள் மூல கணபதி போற்றி!
புறப்புறச் சமயங்களில் கணபதி
புறப்புறச் சமயம் பிறபல நாடும்
உறவொடு வணங்கும் உத்தம போற்றி!
காந்தி பிறந்த குஜராத் தன்னில்
ஏந்தலே அருகர் ஏத்தினர் போற்றி!
சாக்கியச் சான்றோர் கணபதி இருதய
பாக்கிய மந்திரம் பகர்ந்தனர் போற்றி!
ஞான தேவன் எனச்சாக் கியர்சொல்
மான வணக்கம் மகிழ்ந்தனை போற்றி!
புத்தர் சூட்டிய பெருந்தலைப் பாகை
மெத்த அணிந்த மகோதர போற்றி!
கம்போ டியாவில் சங்கொடு சக்கரம்
நம்பா விளங்க நின்றனை போற்றி!
ஜாவா காந்தி சிங்க சாரியில்
மேவி யிருக்கும் கணபதி போற்றி!
விவேகா நந்தர் வேண்டி யெடுத்த
நவ்வமெ ரிக்க விநாயக போற்றி!
பர்மிய மொழிகளில் மகாபிணி யென்ன
தர்ம தேவதை யானாய் போற்றி!
மங்கோ லியத்தில் தோத்க ரென்னும்
எங்கோ நிறையே கணபதி போற்றி!
அம்மொழி தன்னில் அபுன்கா காமெனும்
செம்பொருட் சிவமே கணபதி போற்றி!
திபேத்திய மொழியில் த்சோக்பிராக் கென்னும்
குபேர லட்சுமி கணபதி போற்றி!
கம்போ டியமொழி பிராக்கணே சென்று
தம்பேர் சொல்லத் திகழ்ந்தனை போற்றி!
சீன மொழியில் குவான்சிடி யிக்கென
ஆன ஆனைக் கணபதி போற்றி!
சப்பான் மொழியில் விநாயகச் சாவெனும்
அப்பேர் விளங்கு மப்பனே போற்றி!
உலகம் எங்கணும் மேவி யிருந்து
நலம்பல அடியார்க் கருளினை போற்றி!

கணபதி பூசை

கணபதி பத்திர மண்டல மிட்டு
குணமியை யெந்திரம் இட்டனன் போற்றி!
அமைத்த கலசம் ஆங்கோ ருருவம்
சமைத்துச் சேர்த்து வணங்கினன் போற்றி!

சங்கல்பம்

மணங்கமழ் மறைத்தமிழ் உரைத்துளம் உருகி
கணபதி பூசை யியற்றுவன் போற்றி!

கண்ட பூசை

என்னு ளொலிக்கும் தசநா தத்தை
மன்னி யொலிக்கும் மணியே போற்றி!

பிராணாயாமம்

செயிர் தீர் வாசி சேர்த்துத் திரட்டி
உயிரா வனமிருந் துள்கினன் போற்றி!

சகளீகரணம்

முடிமுதல் அடிவரை என்னுடல் மேவி
கடிதில் கலந்தருள் கணபதி போற்றி!

தியானம்

ஓம்கண பதியென் றன்பெலாந் திரட்டி
ஆம்படி வேண்டி யுள்கினேன் போற்றி!

ஆவாகனம்

செப்பிய ஆகம வழிகண பதியே
இப்பொழு திங்கே எழுவாய் போற்றி!

ஆசனம்

நாதம் விளங்கிய நற்றிரு வணையைப்
போதக் கணபதிக் கிட்டேன் போற்றி!
பன்னிறங் கிளரொளி பன்மணி யணைமேல்
மன்னுக மகாகண பதியே போற்றி!

பாத்யம்

கணபதி பாதக் கமலங் கழுவி
இனமலர் தூவி ஏத்தினன் போற்றி!

அர்க்கியம்

ஆனைக் கடவுள் அணிமுட் விளக்கி
மானக் கங்கை விடுத்தேன் போற்றி!

ஆசமனம்

எனையாள் கணபதி மணிவாய் விளக்க
சுனைநீர் அதனைச் சொரிந்தேன் போற்றி!

நெய்யபிடேகம்

வையகம் காக்கும் வரத என்று
நெய்யபிடேகம் செய்தனன் போற்றி!
மூலப் பொருளே மெய்யொளிப் பொருளே
தூல ஆரத்தி எடுத்தேன் போற்றி!

நெய்யபி டேகம் நேர்ந்தனன் முடிவில்
துய்யநீர் ஆட்டி வணங்கினன் போற்றி!

பாலபிடேகம்

ஏலமு தெமக்கு எனநினைந் தேத்தி
பாலமு தஞ்சொரிந் தாட்டினன் போற்றி!
மூலம் பொருளே மெய்யொளிப் பொருளே
தூலவா ரத்தி யெடுத்தேன் போற்றி!
பாலபி டேகம் பரவிய பின்னர்
வாலநீ ராட்டி வணங்கினன் போற்றி!

தயிரபிடேகம்

உயிர்களின் உறவே ஒருதனித் துணையே
தயிரமு தஞ்சொரிந் தாட்டினன் போற்றி!
மூலப் பொருளே மெய்யொளிப் பொருளே
தூலவா ரத்தி யெடுத்தேன் போற்றி!
தயிரபி டேகம் தாழ்த்திய பின்னர்
செயிர்தீர் நீர்விடுத் தாட்டினன் போற்றி!

தேனபிடேகம்

வானமு தெமக்கு வாய்த்தது வென்று
தேனபி டேகம் செய்தனன் போற்றி!
மூலப் பொருளே மெய்யொளிப் பொருளே
தூலவா ரத்தி யெடுத்தேன் போற்றி!
தேனபி டேகம் தேர்ந்ததன் பின்னர்
ஆனநீர் சொரிந்துடன் ஆட்டினன் போற்றி!

பஞ்சாமிருத அபிடேகம்

தஞ்சம் நீயலால் வேறிலை யென்று
பஞ்சா மிருதம் பொழிந்தேன் போற்றி!
மூலப் பொருளே மெய்யொளிப் பொருளே
தூலவா ரத்தி யெடுத்தேன் போற்றி!
பஞ்சா மிருதம் படர்ந்ததன் பின்னர்
எஞ்சா தியைநீர் ஆட்டினன் போற்றி!

விபூதி அபிடேகம்

வெவ்விய வினைகள் வேரற விபூதி
அவ்விய மாகச் சொரிந்தனன் போற்றி!
மூலப் பொருளே மெய்யொளிப் பொருளே
தூலவா ரத்தி யெடுத்தேன் போற்றி!
நீற்றபி டேகம் நிகழ்ந்ததன் பின்னர்
ஆற்றுநீர் சொரிந்துட னாட்டினன் போற்றி!

ஆசமனம்

திருமஞ் சனமிவை துய்த்ததன் பின்னர்
திருவாய் விளக்கநீர் தந்தனன் போற்றி!

பட்டுடுத்தல்

தூமென் துகிலால் துடைத்த பின்னர்
தோமில் பட்டுடை புனைந்தனன் போற்றி!

கந்தமிடல்

கடிமணப் பன்னீர் களப கத்தூரி
அடிமுடி யெங்கு மிறைத்தனன் போற்றி!

ஆபரணம் புனைதல்

நவமணி பொதிந்த நல்லாபரணம்
சிவமணி யெழில்பெற புனைந்தனன் போற்றி!

நீறிடல்

ஆற்றல் அதுவுடை அழகர் திருவுரு
நீற்றுக் கோடியில் நிமிர்த்தினன் போற்றி!

சந்தனமிடல்

புந்தி விளங்கும் புருவ நடுவில்
சந்தனம் சாத்தி மகிழ்ந்தனன் போற்றி!

குங்குமமிடல்

அந்தச் சந்தனம் அழகுற விளங்க
சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி!

மலர்மாலையிடல்

பொதியெனப் பல்வகை மணமலர் தொடுத்து
அதியெழில் மாலைகள் அணிதோள் போற்றி!

தூபம்

சால வுயர்ந்த சாம்பி ராணி
ஏலப் புகைசூழ்ந் தேத்தினன் போற்றி!

ஏகதீபம்

உய்யும் வகைதந் தருளிட ஒருதிரி
நெய்யிடு தீபம் நேர்ந்தனன் போற்றி!

நைவேத்தியம்

அப்பம் மோதகம் அமுதுபல் வகைகள்
இப்பொழு திங்கே படைத்தனன் போற்றி!

கனியமுது

வழை மாபலா மணிதிகழ் மாதுளை
ஏழை யளித்தேன் ஏற்க போற்றி!

தாம்பூலம்

முற்றா இளந்தளிர் எண்ணி யெடுத்த
வெற்றிலை பாக்கு வழங்கினன் போற்றி!

தட்சிணை

பொன்னும் நவமணி குவையும் பொதியும்
என்னா லியல்பா சேற்க போற்றி!

சோடச உபசாரம்

எண்ணிரண் டெடுத்த கலையாய் விரியக்
கண்ணுப சாரம் களிக்க போற்றி!

மந்திர புஷ்பம்

பன்னும் மந்திரம் பன்னிரு திருமுறை
உன்னுசொல் மாலை உகக்க போற்றி!

புஷ்பாஞ்சலி

நானா விதத்து நவிலும் பூமழை
சேனா பத்தரொடு சொரிந்தனன் போற்றி!

மகா தீபாராதனை

பெருங்கற் பூர தீப மெடுத்தேன்
திருமங் களந்தத் தருளுக போற்றி!

பிரதிட்டை

பொலிக இவ்விடம் பொலிந்தி தருளி
மலிக திருவருள் எங்கணும் போற்றி!

வேண்டுதல்

இட்டது நன்மலர் உரைத்து மந்திரம்
சிட்டனே ஏற்றனன் என்றருள் போற்றி!
இடும்பைக் கிடும்பை படுத்தென் னிடரெலாம்
நடுங்கி யொழிய நேர்க போற்றி!
நாளும் கோளும் நல்லன வன்றி
மூளா தெம்மை யாள்க போற்றி!
இம்மையில் செல்வமும் மறுமையில் வீடும்
மெய்ம்மை யாக மகிழ்ந்தருள் போற்றி!

வாழ்த்து

அந்தணர் வானவர் ஆனினம் வான்மழை
தந்தர சுலகம் தழைக்க போற்றி!
தூயவை ஓங்கி தீயவை ஆழ்ந்து
நேயவுன் நாமமே சூழ்க போற்றி!
போற்றி போற்றி பழம்பொருள் அறிவே
போற்றி இன்ப வாரிதி போற்றியே!

கணபதியருளால் இயற்றியவர் சித்தாந்த கவிமணி மு.பெ. சத்தியவேல்முருகன்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum