இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஹிந்து சமய செய்திகள்-இன்று

2 posters

Go down

ஹிந்து சமய செய்திகள்-இன்று Empty ஹிந்து சமய செய்திகள்-இன்று

Post by ராகவா Sat Sep 14, 2013 12:54 pm

போருக்குப் பின் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு: இலங்கை எம்.பி.யோகேஸ்வரன்

போருக்குப் பிறகு இலங்கையில் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று, இலங்கை எம்.பி. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கோவையின் பல்வேறு பகுதிகளில் 18 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தபட்டது. ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை சிலைகள் அனைத்தும் விசர்ஜனத்துக்காக ராஜவீதி தேர்நிலைத் திடலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதில் இலங்கை தமிழ் எம்.பி. யோகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விசர்ஜன ஊர்வலத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையின் பூர்வீக மக்கள் இந்துக்கள் ஆவர். அது இந்து மத மக்களின் புண்ணிய பூமியாகும். காலப்போக்கில் அங்கு பெளத்த மதத்தினர் குடியேறி தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்து மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்த மண்ணில் தற்போது இந்து கோவிகள் இடிக்கப்பட்டு வருகின்றன. இந்துக்களின் புரதாண சின்னங்கள் அழி்க்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக புத்த மதக் கோவில்கள் அங்கு கட்டப்பட்டு வருகின்றன.

இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் மீது வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன. இந்துக்களின் நிலங்கள், இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தமிழ் ஈழ போருக்குப் பிறகு இது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு இத்தகைய சூழல்கள் இல்லை என்றார்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பனுன் காஷ்மீர் அமைப்பின் தலைவர் அஷ்வனி குமார் சுருங்கூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நன்றி:தினமணி
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

ஹிந்து சமய செய்திகள்-இன்று Empty Re: ஹிந்து சமய செய்திகள்-இன்று

Post by ராகவா Sat Sep 14, 2013 12:58 pm

"காஷ்மீரில் இந்துக்களுக்கு தனி யூனியன் பிரதேசம் தேவை'

ஜம்மு - காஷ்மீரில் இந்துக்களுக்கு என்று தனி யூனியன் பிரதேசம் அமைக்கப்பட வேண்டும் என்று, பனுன் காஷ்மீர் அமைப்பின் தலைவர் அஷ்வனிகுமார் சுருங்கூ தெரிவித்தார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க வந்த அவர், வியாழக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியது:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைப் பொருத்த வரை அங்கு இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இதனால் அங்குள்ள இந்துக்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

உதாரணமாக அங்குள்ள 100 இந்துக் கோவில்கள் எரிக்கப்பட்டுள்ளன. பல கோவில்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த மக்களின் 35,000 வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள. அவற்றில் பல வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.

அங்கு இந்து மக்களையும், இந்து மத அடையாளங்களையும் அழிக்க, உள்ளூர் சமூக விரோதிகளும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே, ஜம்மு - காஷ்மீரில் இந்து மக்களுக்கு என்று தனி யூனியன் பிரதேசம் அமைக்கப்பட வேண்டும். மேலும் அங்குள்ள அனைத்துக் கோவில்களையும் காக்க தனி சட்டம் இயற்றப்பட வேண்டும். அதில் எவ்விதப் பாகுபாடும் இருக்கக் கூடாது. இதற்கான நடவடிக்கையை மாநில அரசு நடப்பு கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும். அங்கு இந்துக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து தற்போது தேசிய மனித உரிமை ஆணையம் மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொருத்த வரை, இரு நாட்டு அதிகாரிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி, அங்குள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உடனிருந்தார்.

நன்றி:தினமணி
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

ஹிந்து சமய செய்திகள்-இன்று Empty Re: ஹிந்து சமய செய்திகள்-இன்று

Post by ஹரி ஓம் Sat Sep 14, 2013 1:28 pm

நன்றிகள்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஹிந்து சமய செய்திகள்-இன்று Empty Re: ஹிந்து சமய செய்திகள்-இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum