இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமத் பகவத்கீதை-அக்ஷரப்ரஹ்ம யோகம்

Go down

ஸ்ரீமத் பகவத்கீதை-அக்ஷரப்ரஹ்ம யோகம் Empty ஸ்ரீமத் பகவத்கீதை-அக்ஷரப்ரஹ்ம யோகம்

Post by ஆனந்தபைரவர் Thu Aug 05, 2010 10:43 pm

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத அஷ்டமோ அத்யாய:।

அக்ஷரப்ரஹ்ம யோகம்



அர்ஜுந உவாச।
கிம் தத் ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம।
அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே॥ 8.1 ॥



அதியஜ்ஞ: கதம் கோ அத்ர தேஹே அஸ்மிந்மதுஸூதந।
ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோ அஸி நியதாத்மபி:॥ 8.2 ॥



ஸ்ரீபகவாநுவாச।
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோ அத்யாத்மமுச்யதே।
பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:॥ 8.3 ॥



அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஷ்சாதிதைவதம்।
அதியஜ்ஞோ அஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர॥ 8.4 ॥



அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம்।
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஷய:॥ 8.5 ॥



யம் யம் வா அபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்।
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித:॥ 8.6 ॥



தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்ய ச।
மய்யர்பிதமநோபுத்திர்மாமேவைஷ்யஸ்யஸம்ஷய:॥ 8.7 ॥



அப்யாஸயோகயுக்தேந சேதஸா நாந்யகாமிநா।
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்தாநுசிந்தயந்॥ 8.8 ॥



கவிம் புராணமநுஷாஸிதாரம் அணோரணீயம்ஸமநுஸ்மரேத்ய:।
ஸர்வஸ்ய தாதாரமசிந்த்யரூபம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத்॥ 8.9 ॥



ப்ரயாணகாலே மநஸா அசலேந பக்த்யா யுக்தோ யோகபலேந சைவ।
ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஷ்ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்॥ 8.10 ॥



யதக்ஷரம் வேதவிதோ வதந்தி விஷந்தி யத்யதயோ வீதராகா:।
யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பதம் ஸம்க்ரஹேண ப்ரவக்ஷ்யே॥ 8.11 ॥



ஸர்வத்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச।
மூத்ந்யா।
ர்தாயாத்மந: ப்ராணமாஸ்திதோ யோகதாரணாம்॥ 8.12 ॥



ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந்।
ய: ப்ரயாதி த்யஜந்தேஹம் ஸ யாதி பரமாம் கதிம்॥ 8.13 ॥



அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஷ:।
தஸ்யாஹம் ஸுலப: பார்த நித்யயுக்தஸ்ய யோகிந:॥ 8.14 ॥



மாமுபேத்ய புநர்ஜந்ம து:காலயமஷாஷ்வதம்।
நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்திம் பரமாம் கதா:॥ 8.15 ॥



ஆப்ரஹ்மபுவநால்லோகா: புநராவர்திநோ அர்ஜுந।
மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே॥ 8.16 ॥



ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத் ப்ரஹ்மணோ விது:।
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தே அஹோராத்ரவிதோ ஜநா:॥ 8.17 ॥



அவ்யக்தாத் வ்யக்தய: ஸர்வா: ப்ரபவந்த்யஹராகமே।
ராத்ர்யாகமே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே॥ 8.18 ॥



பூதக்ராம: ஸ ஏவாயம் பூத்வா பூத்வா ப்ரலீயதே।
ராத்ர்யாகமே அவஷ: பார்த ப்ரபவத்யஹராகமே॥ 8.19 ॥



பரஸ்தஸ்மாத்து பாவோ அந்யோ அவ்யக்தோ அவ்யக்தாத்ஸநாதந:।
ய: ஸ ஸர்வேஷு பூதேஷு நஷ்யத்ஸு ந விநஷ்யதி॥ 8.20 ॥



அவ்யக்தோ அக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் கதிம்।
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம॥ 8.21 ॥



புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப்யஸ்த்வநந்யயா।
யஸ்யாந்த:ஸ்தாநி பூதாநி யேந ஸர்வமிதம் ததம்॥ 8.22 ॥



யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகிந:।
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி பரதர்ஷப॥ 8.23 ॥



அக்நிர்ஜோதிரஹ: ஷுக்ல: ஷண்மாஸா உத்தராயணம்।
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜநா:॥ 8.24 ॥



தூமோ ராத்ரிஸ்ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயநம்।
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர்யோகீ ப்ராப்ய நிவர்ததே॥ 8.25 ॥



ஷுக்லக்ருஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: ஷாஷ்வதே மதே।
ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந:॥ 8.26 ॥



நைதே ஸ்ருதீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஷ்சந।
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந॥ 8.27 ॥



வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ தாநேஷு யத்புண்யபலம் ப்ரதிஷ்டம்।
அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா யோகீ பரம் ஸ்தாநமுபைதி சாத்யம்॥ 8.28 ॥



ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
அக்ஷரப்ரஹ்மயோகோ நாமாஷ்டமோ அத்யாய:॥ 8 ॥



ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'அக்ஷரப்ரஹ்ம யோகம்' எனப் பெயர் படைத்த எட்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.

அர்ஜூனன்: புருஷோத்தமா, பிரம்மம், ஆன்மா, கர்மம், ஜடத்தோற்றம் என்பன என்ன? தேவர்கள் யார்? யக்ஞபதி உடலின் எங்குள்ளார்? அன்புத்தொண்டு புரிபவர்கள் இறுதிக்காலத்தில் எங்ஙனம் உம்மை அடைகின்றனர்?

பகவான்: அழிவற்ற உன்னத ஜீவான்மாவே பிரம்மம். அதன் இயற்கையே ஆன்மா. ஜட உடல்களின் உற்பத்தி சம்பந்தமான செயல்கள் கர்மம் ஆகும்.

ஜடத்தோற்றம் முடிவற்ற மாற்றங்களுடையது. அது அதிபூதம் எனப்படும். சூரிய சந்திரர் மற்றும் தேவர்கள் அவர்களின் லோகங்கள் உள்ளிட்டதாக விளங்கும் இறைவனின் அகில உருவம் அதிதைவம் எனப்படும். ஜீவர்களின் இதயங்களில் இறைவனது பிரதிநிதியான பரமாத்வாக (அதியக்ஞம்) இருப்பதும் நானே.

இறுதிக்காலத்தில் என்னையே எண்ணியபடி உடலை விடுபவன் எனது இயற்கையை அடைகிறான். உடலை விடும்போது எத்தகைய உணர்வுகளுடன் விடுகிறானோ அந்நிலையை அடுத்த வாழ்வில் அடைகிறான்.

எனவே அர்ஜூனா, என்னை இவ்வுருவில் கண்டு, கடமையைச் செய். மனம் புத்தியை என்னில் நிறுத்தி, செயலை எனக்கு அர்ப்பணித்து, சந்தேகமின்றி என்னை அடையலாம்.

பார்த்தனே, பரம புருஷரைத் தியானித்து, என்னை எண்ணுவதில் மனதை நிறுத்தியவன் - பிறழாது பயிற்சி செய்பவன் உறுதியாக என்னை அடைகிறான்.

பரம புருஷரான இறைவனை ஒரு நபராகவும், எல்லாம் அறிந்தவராகவும், மூத்தவராகவும், பரம் ஆளுனராகவும், அணுவினும் அணுவாகவும், அனைத்தையும் காப்பவராகவும், ஜட இயற்கைக்கும், எண்ணங்களுக்கும், ஆய்வுக்கும் அப்பாற்பட்டவராகவும், உன்னதமானவராகவும், சூரியன் போன்று பிரகாசிப்பவராகவும் தியானிக்க வேண்டும்.

இறக்கும் தருவாயில் உள்மூச்சை புருவமத்தியில் நிறுத்தி பக்தியுடன் பரமபுருஷரை எண்ணுபவன் நிச்சயமாக அவரை அடைகிறான்.

வேத வித்துக்களும், பற்றற்ற துறவியரும், பிரம்மத்தில் புகும் பக்குவத்தை அடைவதற்காக சிற்றின்பத்தைத் துறக்கின்றனர். விடுதலைக்கான இம்முறையை நான் உனக்குக் கூறுகிறேன்.

புலன் வாயில்களை அடக்கி, மனதை இதயத்திலும், பிராணனை தலையுச்சியிலும் நிறுத்தி, யோக நிலையில் அமர்ந்து, ஓங்காரத்துடன் என்னை எண்ணியபடி உடலை விடுபவன் உறுதியாக உன்னதத் தலத்தை அடைகிறான்.

மாறுபடாத நோக்கமின்றி பக்தித்தொண்டில் எப்போதும் ஈடுபட்டு இருப்பவனுக்கு நான் எளிதில் அடையப்படக் கூடியவனாயிருக்கிறேன்.

பக்குவமடைந்த அத்தகைய பக்தியோகிகளான மஹாத்மாக்கள், என்னை அடைந்தபின் துன்பம் நிறைந்த இத் தற்காலிக உலகுக்குத் திரும்ப வருவதில்லை. இங்கிருந்து பிரம்மலோகம் வரை பிறப்பு இறப்புத் துயருண்டு. என்னை அடைபவன் மீண்டும் பிறப்பதில்லை. (பிரம்மலோகம் வரை கீழிருந்து மேலாக 14 அடுக்கு கிரக கூட்டங்கள் உள்ளன. கீழே அதள, விதள, சுதள, மஹாதள, ரஸாதள, பாதாள என்றும், மேலே பூ, புவ, ஸ்வ, மஹ, தப, ஜன, சத்ய (பிரம்ம லோகம்) என்றும் லோகங்கள் உள்ளன. கீழிருந்து மேலாக எட்டாவது அடுக்கில் பூலோகம் உள்ளது).

மனிதக் கணக்கின்படி ஆயிரம் யுகங்கள் பிரம்மாவின் ஒரு பகல் (432 கோடி ஆண்டுகள்). அதுபோன்ற காலம் அவருக்கு ஓரிரவாகும். அவரது பகலில் ஜீவர்கள் தோன்றி, இரவில் மறைகின்றனர்.

தோன்றி மறையும் இவ்வுலகங்களுக்கு மேலாக திவ்வியமான, நித்தியமான ஓர் உலகு உள்ளது. அகிலங்கள் அழிகையில் அது அழிவதில்லை. என் இருப்பிடமான அதுவே ஆன்மாக்களின் இறுதி இலக்கு.

பரமபுருஷரான இறைவன் தூய பக்தியினால் அடையப்படக் கூடியவர். தனது லோகத்தில் அவர் இருப்பினும் எங்கும் நிறைந்துள்ளார். எல்லாம் அவரில் அமைந்துள்ளன.

எக்காலத்தில் உடலை விட்டாலும் மீண்டும் இவ்வுலகுக்கு ஒருவன் வருவானோ / வரமாட்டானோ அதைக் கூறுகிறேன்.

பரப்பிரம்மத்தை அறிபவன், கதிரவனின் ஆதிக்கத்தில் ஒளிபொருந்திய நேரத்தில், வளர்பிறையின் இருவாரங்களில், சூரியன் வடக்காகச் செல்லும் ஆறு மாதங்களில் ஜட உலகிலிருந்து உடலை விட்டுச் செல்கிறான்.

புகை நேரத்தில், இரவில், சந்திரனில்லாத அமாவாசையைச் சேர்ந்த இருவாரங்களில், சூரியன் தெற்காகச் செல்லும் ஆறு மாதங்களில், உலகை விட்டுச் செல்லும் யோகிகளும், சந்திரலோகத்தை அடைவோரும் மீண்டும் இவ்வுலகில் பிறக்கின்றனர்.

ஒளியில் நீங்குபவன் மீண்டும் வருவதில்லை, இருளின் நீங்குபவன் மீண்டும் வருகிறான் என வேதங்கள் கூறுகின்றன.

இவ்விரு வழிகளையும் அறிந்துள்ள பக்தர்கள் குழப்பமடைவதில்லை. எனவே எப்போதும் பக்தியில் நிலைத்திரு.

வேதம் பயிலல், யாகம் செய்தல், தான தவம் புரிதல், கர்ம, ஞான பாதைகளை மேற்கொள்ளல் - இவற்றால் அடையப்படும் விளைவுகளை பக்திப்பாதையில் உள்ள ஒருவன் இழப்பதில்லை. அவன் மூல ஸ்தானமான பரமபதம் அடைகிறான்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum