இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


உடலெனும் பிரபஞ்சம் ஆற்றல் தரும் அமிர்த கலை நீர்..

Go down

உடலெனும் பிரபஞ்சம் ஆற்றல் தரும் அமிர்த கலை நீர்.. Empty உடலெனும் பிரபஞ்சம் ஆற்றல் தரும் அமிர்த கலை நீர்..

Post by ஆனந்தபைரவர் Fri Aug 27, 2010 11:31 pm

மனித உடலானது பிரபஞ்சத்தில் ஒரு பிரபஞ்சம் என்றே சித்தர்கள் கூறுகின்றனர். கடந்த இதழில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த ஐம்பெரும் பூதங்கள் நம் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொண்டோம்.

ஐம்பூதங்களின் தன்மையினால் உருவான உடலானது அண்டத்தின் செயல்பாடுகளால்தான் இயக்கப் படுகிறது.

இத்தகைய உடலை இயக்கும் உயிர்ஸ்தானம் எங்குள்ளது என்பதை தியானம் மூலமே அறிந்துகொள்ள முடியும்.

சித்தர்கள் தங்களின் தவப்பயனால், உடலின் சாராம்சங்களை அறிந்து கொண்டு மனதை செம்மைப்படுத்தி ஒருநிலைப்படுத்தும் போது உடலில் உள்ள ஆதாரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு ஒரே நேர்க்கோட்டில் வரும்போது திலர்த காலம் என அழைக்கப்படும் சுழிமுனையில் ஒளியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில்தான் உடலில் பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளுக்கும், கோள்களின் ஆதிக்கத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.

இதைத்தான் சித்தர்கள் அகாரம் உகாரம் மகாரம் என்ற சொல்லின் வடிவம்தான் ‘ஓம்’ என்று அழைத்தனர். இந்த ‘ஓம்’ என்ற சொல் எந்த ஒரு மதத்தினருக்கும் சொந்தமானதல்ல. அனைவருக்கும் பொதுவானது. மனிதனின் முகம் ஓம் என்ற வடிவில் அமைந்துள்ளது என சித்தர்கள் கூறுகின்றனர்.

ஆகையால்தான் தமிழ்மொழியில் ‘அ’ என்ற எழுத்தை முதல் உயிரெழுத்தாக கொண்டுள்ளது.

திருவள்ளுவர் தன்னுடைய திருக் குறளில்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று பாடியுள்ளார்.

சிலர் திருவள்ளுவர் இறைவணக்கம் பாடவில்லை என்று கூறுவர். ஆனால் அகர என்ற சொல்லே இறைவனை வணங்கும் முதல் சொல்லாகும். மனித உடலின் பிரபஞ்சத்தை நன்கு அறிந்து அதனையே முதல் குறளில் முதல் வரியாகவும் இறைவணக்க பாடலாகவும் பாடியுள்ளார்.

அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்த்திடவே ஆகும் முக்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப்பார்த்து
குறியான குண்டலியா மண்ட வுச்சி
கூறுகிறேன் முக்கோண நிலையதாமே

சித்தர் பாடல்

“பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்”

இந்த ஓங்கார சக்திதான் உடலை இயக்கும் மாபெரும் சக்தி என்கின்றனர் சித்தர்கள். இத்தகைய சக்தியை அடைந்துவிட்டால் மனம் என்னும் அடங்காத குதிரையை அடக்கி அதன்மேல் சவாரி செய்வதுபோல் கம்பீரம் கிடைக்கும் என்கின்றனர்.

மேலும் அவர்கள்

அம் என்று இரு

இம் என்று இரு

உம் என்று இரு என்று கூறுகின்றனர்.

பிராண வாயுவின் செயல்பாடுகள் இந்த வடிவில்தான் செயல்படுகின்றது. தவக்கோலத்தில் பிராண வாயுவை அம், இம், உம் என்ற நிலையில் செயல்படுத்தினால் மூலாதாரத்தில் இருந்து எழும்பும் (அதாவது குண்டலினி) ஓங்கார சக்தி மேல் நோக்கி எழுந்து தனஞ்செயன் வாயு அடங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று அங்கிருந்து சுழிமுனையை அதாவது திலர்த காலத்தை அடைகின்றது. இதனால்தான் சித்தர்கள் அண்ட சாரத்தினை தங்களின் ஆற்றலினால் மாற்றி அமைக்க முடிந்தது.

சாதாரணமாக மனித உடலில் கிலேசம் என்ற நீர் உற்பத்தியாகிறது. இந்த கிலேச நீரை ஒருநிலைப் படுத்தும்போது உருவாகும் நீரைத்தான் அமிர்த கலை நீர் என்று அழைக்கின்றனர். இந்த கிலேச நீர் என்பது ஒன்றை பார்த்தவுடன், கேட்டவுடன் அல்லது உணர்ந்தவுடன் உடலில் ஊறும் ஒரு அபரிமிதமான நீராகும். இந்த நீர் எண்ணங்களுக்கு ஏற்ப உற்பத்தியாகிறது... மாறுபடுகிறது.

உதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அல்லது ஒரு பெண் ஒரு ஆணைப் பார்க்கும்போது உடலில் ஒருவகையான மனக் கிளர்ச்சி உண்டாகும். அப்போது சுரக்கும் நீர் மனக் கிலேச நீராகும். அதுபோல் தொடும்போது, உணர்ச்சிவசப்படும்போது, இனிமையான பாடலைக் கேட்கும்போது பலவிதமான எண்ணங்களை வெளிப்படுத்தும் போது உடலில் மாற்றம் ஏற்பட்டு மனநிலை மாறி கிலேச நீர் உற்பத்தியாகிறது. இந்த கிலேச நீர்தான் அனைத்து செயல்பாட்டினையும் தூண்டும் சக்தியாக விளங்குகிறது.

மூலாதாரத்திலிருந்து உயிர் சக்தி சீற்றமாகி மேல் எழும்பி ஆதாரங்களைத் தூண்டி தனஞ்செயனை தொடும்போது கிலேசன் என்னும் அமிர்த நீர் உற்பத்தியாகிறது. இதைத்தான் சிவனின் தலையிலிருந்து உற்பத்தியாகும் கங்கை நீராக புராணங்களில் சித்தரிக்கின்றனர்.

ஒருவரை பார்க்கும்போதும், பேசத் தூண்டும் போதும் கிலேச நீர் அபரிமிதமாக தோன்றி எண்ணங்களை மேலோங்கச் செய்கிறது.

அதிக மகிழ்ச்சியடையும்போது ஆனந்தக் கண்ணீராக வெளிவருவதற்கும், துக்கமடையும்போது கண்ணீராக வெளிவருவதற்கும் இந்த கிலேச நீர்தான் காரணம்

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum