இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அனைவர் அவதிகளையும் அகற்றும் இரட்டை ஆஞ்சனேயர்!

Go down

அனைவர் அவதிகளையும் அகற்றும் இரட்டை ஆஞ்சனேயர்! Empty அனைவர் அவதிகளையும் அகற்றும் இரட்டை ஆஞ்சனேயர்!

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 2:09 pm

அனைவர் அவதிகளையும் அகற்றும் இரட்டை ஆஞ்சனேயர்! 2hanuman


சுமார் 450 ஆண்டுகளுக்குமுன் செம்பனார் கோவிலுக்கு மேற்கே உள்ள ஆறுபாதி என்ற கிராமத்தில், ஒரு ஆலமரத்தின் கீழ் இரண்டு மனிதக் குரங்குகள் வாழ்ந்து வந்தன. செம்பனார் கோவிலுக்கும் மேலப்பாதிக்கும் இடையே ஓடும் காவிரி ஆற்றில் எப்போதும் நீர் வற்றாமல் ஓடியதால், அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்த ஆற்றில் இறங்கியே அக்கரைக்குச் சென்று வந்தனர். அதிக வெள்ளம் வந்த காலங்களில் அக்கரைக்குப் போக முடியாத நிலையும் இருந்தது.

மேலப்பாதியில் வாழ்ந்த பெருநிலக் கிழார்கள், ஆறுபாதியில் ஆலமரத்தடி யில் இருந்து வந்த அந்த இரண்டு மனிதக் குரங்குகளின் உதவியுடன் மேலப்பாதி- செம்பனார் கோவிலை இணைத்து மூங்கில் பாலம் ஒன்றை அமைத்தனர்.

மூங்கில் பாலம் கட்டியதால் சோர்வடைந்திருந்த அந்த மனிதக் குரங்குகள் அருகே இருந்த காட்டுத் திடலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந் தன. சில மணி நேரம் கழித்துப் பார்த்தபோது அவை அந்த இடத்தில் இல்லை. எப்படியோ மாயமாக மறைந்து விட்டன.

ராமாயண காலத்தில் பாலம் கட்ட உதவிய வானரங்கள்போல, இந்த மூங்கில் பாலம் கட்ட உதவிய இரண்டு மனிதக் குரங்குகளை அப்பகுதி மக்கள் ஆஞ்சனேயராகவே நினைத்தனர்.

உள்ளூர் மக்கள் உதவியுடன் மேலப்பாதியில் அந்தக் குரங்குகள் நினைவாகக் கோவில் கட்டப்பட்டு இரட்டை ஆஞ்சனேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

இந்த ஆஞ்சனேயர்கள் வேண்டுவோருக்கு வேண்டிய எல்லா நற்பலன்களையும் தரக்கூடியவர்கள். நோய், வறுமையைப் போக்கக் கூடியவர்கள்.

திருமணமாகாதவர்கள் இக்கோவிலின் தென்கரையில் ஓடும் பொன்னி நதியில் நீராடி, இக்கோவிலுக்கு வந்து இரட்டை ஆஞ்சனேயர் சந்நிதிமுன் அமர்ந்து தியானம் செய்து வேண்டினால், ஓர் ஆண்டுக்குள் திருமணம் நடக்கும். திருமணம் முடித்தவர்கள் கணவனும் மனைவி யுமாக இக்கோவிலுக்கு வந்து அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடனைச் செலுத்துவர். ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் ஏராளமானோர் வந்து இந்த இரட்டை ஆஞ்சனேயரைத் தரிசித்து பலன் பெறுகின் றனர். சனிக்கிழமைகளில் இந்த ஆஞ்சனேயர்களுக்கு வடை மாலை, வெற்றிலை மாலை, பழமாலை சாற்றப்படுகிறது. அமாவாசை நாட்களில் வெண்ணெய்க் காப்பு சாற்றப்படுகிறது. பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் நிறைய பக்தர்கள் வருகிறார்கள்.

இக்கோவில் நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவிலுக்கு வடக்கே, மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் அமைந்துள்ளது. இந்த மேலப்பாதிக்கு புதன் ஸ்தலமான திருவெண்காட்டிலிருந்தும், கேது ஸ்தலமான கீழ்ப்பெரும்பள்ளத்திலிருந்தும் செல்லலாம்.

தற்போதுகூட அந்த மனிதக் குரங்குகள் தங்கியிருந்த ஆலமரத்தை இரட்டைக் குரங்கு ஆலமரம் என்றே அழைக்கிறார்கள். ஆனால் அந்த மூங்கில் பாலம் தற்போது இல்லை.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum