இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீமகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி.

Go down

ஸ்ரீமகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி. Empty ஸ்ரீமகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி.

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 3:00 pm

பஞ்சபூதேஸ்வரம்- இராவணனோடு போரிட்ட ஸ்ரீ ராமபிரான் இந்த இடத்திற்கு வந்தபோது இது "வானரவீர மதுரை' என்றும்; சிவனின் அருளால் ஆஞ்சனேயர் தன் வானரப் படைகளுடன் தேன் பருகி இளைப்பாறுகை யில் திரேதாயுகத்தில் "கீசான மதுரை' என்றும்; வில்வவனக் காடுகள் சூழ்ந்திருந்ததால் கலியுகத்தில் "வில்வ வனம்' என்றும் கூறப்படுகிறது. மகரிஷி அகத்தியரும் அவரது மனைவி லோப முத்திரையும் ஸ்ரீ ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் உபதேசித்த இடமும், ஆஞ்சனேயர் ராமனுடன் இணைந்து இராவணனுடன் போரிடப் புறப்பட்ட இடமும், ராமன் சக்தியை நோக்கிப் பூஜை செய்த இடமும், பலராமனுக்கு சிவபூஜை பயிற்சி செய்வித்த இடமும் இதுவே ஆகும் என புராணங்களும், சிவவாக்கிய நாடி மற்றும் காகபுஜண்டர் நாடியும் தெரிவிக்கின் றன. சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகில் வேதியரேந்தல் விளக்கு என்னும் பகுதி யில் உள்ள இந்த பஞ்சபூதேஸ்வரத்தில் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி.

2002-ல் ஐந்து ஏக்கர் பரப்பளவில் திருப்பணிகளைத் தொடங்கி, தற்போது ஆகம சிற்ப சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி தெய்வ சங்கற்பமுள்ள கருங்கற்களால் அந்தக் கால மன்னர்கள் அமைத்ததுபோலவே, பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய கற்கோவிலை இங்கே பிரத்யங்கிரா தேவிக்காக எழுப்பியிருக்கிறார்கள்.

இங்கே எழுந்தருளியிருக்கும் அம்பாளின் திருவுருவம் விஸ்வரூபிணியாக- அதேசமயம் சாந்த சொரூபிணியாக அமைந்திருக்கிறது. இங்கே பீடத்தில் பதினொன்றேகால் அடி உயரத்தில், மலர்ந்த தாமரையில், இருபது கரங்களுடன்- ஒரு கரம் ஆசி கூற, ஏனைய கரங்களில் பல்வேறு தத்துவங்கள் அடங்கிய ஆயுதங்களையும் கொண்டு விளங்குகிறாள் அன்னை. ஏழு தலை நாகம் குடைபிடிக்கும் வண்ணம் காணப்படுகிறது. இது மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை யிலான மனிதனின் ஏழு சக்கரங்களை விளக்குவது என்பர். அன்னைக்குப் பின்னே நிற்கும் சிங்கத்தின் தலை இடப்புறமும், அதன் வலது கால் சற்று தூக்கிய வண்ணமும் அமையப் பெற்றிருக்கிறது. நவகிரகங்களையும் 27 நட்சத்திரங்களையும் மண்டை ஓட்டு மாலையாக அணிந்து காட்சி தருகிறாள் தேவி. ஸ்வகுரு, பரமகுரு, பரமேஷ்டி குருவாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

ஸ்ரீ மஹா வல்லப கணபதிக்கும் இங்கு ஆலயம் அமைத்து கடந்த 24-6-2010 அன்று இத்திருக் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தினார்கள். தொடர்ந்து 25-ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரை ஸ்ரீ சகஸ்ரசண்டீ மகா யக்ஞமும் நடைபெற்றது.

""இந்த யாகம் மௌரியப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தன் காலத்தில் செய்யப்பட்டது. சீமாற வல்லபன் காலத்திலும் செய்யப்பட்டது. அதன் பிறகு மைசூர் அரசர் காலத்திலும், காஞ்சி, மதுரை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் 1963-ஆம் ஆண்டிலும் நடந்தது. அதற்குப் பிறகு இப்படி ஒரு உயர்வான ஸ்ரீ சகஸ்ர சண்டீ மகா யக்ஞம், செய்முறைப் படி ஐந்து தினங்களும் சாதனையாக நடந்தேறியது இத்தலத்தில்தான். மேலும் இக்கோவிலைச் சுற்றிலும் தசமகா வித்யா, ஸ்ரீ விஜய ஆகர் ஷண பைரவர், ஸ்ரீ சப்த மாதர்கள், ஸ்ரீ சப்த ரிஷிகள் மற்றும் 18 சித்தர் களுக்கும் ஆலயங்களை அமைக்க விருக்கிறோம்'' என்றார் இக்கோவிலின் அறங்காவலரான ஸ்ரீ ஞானசேகர ஸ்வாமிகள்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குகொண்ட மகா கும்பாபிஷேகத்தின்போது நம்மிடம் பேசிய வித்யா என்பவர், ""இந்தக் கோவிலில் வைத்த பொருள் வைத்த இடத்திலேயே இருக்கும். பிறர் பொருளுக்கு ஆசைப்படு பவர்கள் இங்கே கால் வைக்க முடியாது. அற்புதமான இம்மகா சக்தியின் அருளைப் பெறவே கோவையிலிருந்து வந்திருக்கிறேன்'' என்றார்.

ஆசிரியரான முருகன், ""எல்லா நாட்களிலும் எந்த நேரத்திலும் அன்னதானம் நடக்கும் கோவில் இது. இங்கே ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடோ சாதி வேறுபாடோ கொஞ்சமும் கிடையாது. தனிமனிதனைத் துதிப்பது, மாலை மரியாதை செய்து பரிவட்டம் கட்டுவது, பாதகாணிக்கை செலுத்துவது போன்ற காரியங்கள் இங்கே அறவே கிடையாது. உலக அமைதிக்காக அமாவாசை தோறும் யாகமும் பௌர்ணமி நாட்களில் விளக்குப் பூஜையும் தவறாமல் இங்கு நடக்கிறது'' என்றார்.

ஸ்ரீ பிரத்யங்கிரா என்பவள் ஸ்ரீ மகா பத்திரகாளியேதான். பத்ரம் என்றால் மங்களம். அன்பர்களுக்கு மங்களத்தையே செய்யும் தேவியான இவள் அதர்வண வேதத்தின்படி அதர்வண பத்ரகாளி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவி பாவங்களை நீக்கக் கூடியவள். ஆங்கிரஸ், ப்ரத்யங்கிரஸ் என்ற மகரிஷிகள் இவளது மந்திரங்களை உணர்ந்து வெளிப்படுத்தியதனாலேயே பிரத்யங்கிரா என்ற பெயரில் பூஜிக்கப்படுகிறாள். இராவணனை அழிக்க ஸ்ரீ ராமபிரானே வழிபட்ட சக்தி இவள். இரண்யகசிபுவை வதம் செய்ய, நரசிம்ம மூர்த்தியின் கோபம் தணிக்க சரபமூர்த்தியான சிவபெருமானுக்கு உதவியவள். பஞ்சமுகத்துடன் நடனமிடும் சக்தி இவள் என தேவியின் சிறப்புகளைப் பறைசாற்றுகிறது இக்கோவில்.
ஸ்ரீமகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி. Pirthangadevi1
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum