இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அரியணை அரசனையும் அரனின் அடியாரையும் ஓரிணை வைத்த சிவபக்தி!

Go down

அரியணை அரசனையும் அரனின் அடியாரையும் ஓரிணை வைத்த சிவபக்தி! Empty அரியணை அரசனையும் அரனின் அடியாரையும் ஓரிணை வைத்த சிவபக்தி!

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 3:04 pm

ஜெயலட்சுமி கோபாலன்


சிவபக்தியால் இணைந்த நண்பர் களின் கதைகள் பலவற்றைக் கேட்டி ருப்போம். அவ்வகையில் நெஞ்சத்தை விட்டு அகலாத நட்பு என்று ஒன்று இருப்பின், அது சுந்தரர்- சேரமான் ஆகியோரது ஆழ்ந்த நட்பே ஆகும்.

சேரமான் பெருமானார் அரியணை ஏறி ஆட்சி புரியும் கோமான். சுந்தரமூர்த்தி நாயனாரோ திருத்தலங்களை வலம் வந்து இறைவனின் திருவருளை நாடிச் செல்லும் சிவனடியார். இவர்களி டையே எப்படி நேசம் உருவானது? பாசம் வளர்ந்தது?

சேரமான் பெருமான் பெரிய சிவபக்தர். அரியணை ஏறி ஆட்சி செலுத்திய போதும், ஆழ்ந்த ஆன்மிக நெறியிலே நாட்டம் கொண்டிருந்த சிவநேசச் செல்வர். கேரள நாட்டில், கொடுங்கலூரை அடுத்த திருவஞ்சக்குளம் பகுதியில் ஆட்சி புரிந்து வந்தார்.

அஞ்சக்குளத்துப் பெருமான் உமாமகேஸ் வரரிடம் தீராத பக்தி கொண்டவர். உள்ளத் தூய்மையுடன் அவர் அஞ்சக்குளத்தானை வழிபடும்போதெல்லாம், தில்லை அம்பலக் கூத்தனின் சிலம்பொலி "கலீர் கலீர்' என அவருக்கு ஒலிக்குமாம். அதனைக் கேட்டு அரனை ஆராதித்த பின்னர்தான் அமுது அருந்துவாராம் அவர்.

இப்படி இருக்க ஒருநாள், சேரமான் பெருமான் இறைவனை வழிபடும் நேரத்தில் சிலம்பொலி கேட்கவில்லை. திடுக்கிட்ட சேரமான் பதறினார். "எனது பக்திக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதோ? என் செய்வேன்! சிலம்பொலி கேட்காது உணவருந்துவதில்லை என இத்தனை நாள் இருந்தேன். இன்று வழிபாடு முடியும் நேரத்திலும் எனது ஐயனின் காற்சிலம்பு கலீரென ஒலிக்கவில்லையே! இனி நான் உயிர் வாழ்வது எதற்கு?' என்று உள்ளம் நொந்தார். உடைவாளை உருவி, தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதென முடிவு செய்தார்.

தன்னை அனுதினமும் ஆழ்ந்த பக்தியுடன் தொழுதிடும் அடியாரைக் கைவிட்டு விடுவானா இறைவன்? காலம் தாழ்ந்த போதிலும் "கலீர்' என்ற சிலம்பொலியுடன் சேரமான் முன்பு தோன்றினார் அம்பலத் தரசன்.

""வருந்தாதே! காலதாமதம் ஆனதற்குக் காரணம் கூறுகிறேன் கேள். சுந்தரன் என்ற எனது பக்தன் ஒருவன் உள்ளான். தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாடல்களால் எனக்கு தினமும் அபிஷேகம் செய்பவன் அவன். அவனது பாடல்களில் சற்று மெய்ம்மறந்து இருந்து விட்டேன்! அதனால் உனது வழி பாட்டு நேரத்தில் காலம் தாழ்ந்து வரநேர்ந் தது!'' என கூத்தபிரான் சேரமானுக்கு விளக்கி னார்.
இதுநாள்வரை சுந்தரரைப்போல் ஒரு சிவனடியாரைக் கண்டறியாது போனேனே என எண்ணிய சேரமான் தில்லையை நோக்கிப் புறப்பட்டார். அங்கு அம்பலவாண ரைத் தரிசித்து விட்டு திருவாரூர் சென்ற டைந்தார். அங்கு சபாபதியை வணங்கி விட்டு, சுந்தரர் இல்லத்திற்கு வந்து அளவளா வினார். அவர்கள் அன்று நண்பர்களாயினர். அந்த நட்பு- அந்த இருவருமே கயிலை செல்லும் வரை நீடித்தது. "எனது நெஞ்சை விட்டு அகலாத நண்பர் சேரமான்' என்று சுந்தரர் வர்ணிக்கும் அளவிற்கு அந்த நட்பு நீடித்தது. எப்படி இருவருமே ஒன்றாக கயிலை சென்றார்கள்?

சுந்தரமூர்த்திக்கு சேரமானின் நட்பு கிட்டியதும் திருவஞ்சக்குளம் சென்று நண்பருடன் சில காலம் தங்கியிருந்து அஞ்சக்குளத்தானை ஆராதித்து மகிழ்ந்தார். (அதன் பின்னர் மீண்டும் சோழ நாடு திரும்பியதும், சேரமான் அளித்த செல்வத்தை இறைவனே சிவகணங்கள் மூலம் கொள்ளை யடித்ததும், பின்னர் திருப்பிக் கொடுத்ததும் வேறு நிகழ்ச்சிகள்.)

தொண்டை மண்டலம், பாண்டி நாடு, சோழ நாடு ஆகியவற்றிலுள்ள திருத்தலங் களில் இறைவனைத் தரிசித்து விட்டு இறுதியில் மீண்டும் திருவஞ்சக்குளம் செல்ல எண்ணினார் சுந்தரமூர்த்தி நாயனார். சேர மானின் நட்பு அவரை காந்தமென இழுத்தது. பக்தி என்ற பயிர் அன்பு நீரால் வளர்ந்து, நட்பு என்ற பாலத்தையும் உருவாக்கி யதல்லவா?

மறையவரின் ஒலி முழங்கிட, மங்கலப் பெண்கள் பூமாரி சொரிய, தோரணங்கள் நிறைந்த தெருக்களில் தோழர்கள் அமர்ந்து வந்த யானை ஊர்ந்து சென்றது. வெண் சாமரங்கள் பக்கங்களில் வீச, இருவரும் அரண்மனை புகுந்தனர்.

அரியணையில் நாயனாரை அமரச் செய்து பாதங்களில் மலர்களால் அர்ச்சித்தார் சேரமான். சொல்லளவில் அடங்கிடாத நல்ல பூஜைகளைச் செய்து சுந்தரரை மகிழ்வித்தார்.

சேரமானின் உபசரிப்பில் திளைத்திட்ட சுந்தரர் மலைநாட்டுப் பதிகள் பலவற்றிற்கும் சென்று வழிபட்டுத் திரும்பினார். அப்படி யிருக்க ஒருநாள்...

முடியுடைவேந்தன் நீராடச் சென்றிருந்த நேரம். ஆரூரர் அஞ்சக்குளத்தானைத் தரிசிக்க ஆலயம் சென்றிருந்த நேரமும் அதுவே. உலக வாழ்க்கை நீங்கி கயிலை சேரும் நேரம் நெருங்கி விட்டது என்பதை உணர்த்தியது ஆரூரரின் உள்ளம். துன்பச் சூழலாம் உலக வாழ்க்கை தம்மை விட்டு நீங்கிட "தலைக்குத் தலைமாலை' என்ற பதிகத்தைப் பாடிட, எம்பெருமான் கயிலைநாதர் தனது நேசனை தம்மிடமே அழைத்துக் கொள்ளத் திருவுளங் கொண்டார்.

சிவகணங்களை நோக்கி, "நம்முடன் ஒன்றுபட்ட சிந்தனையுடைய நமது நம்பியூ ராரை தேவர்களின் வெள்ளை யானைமீது ஏற்றி இங்கு அழைத்து வாரீர்' எனப் பணித்தார். அரனின் அருளாணையைப் பெற்று அமரர் கூட்டமே திரண்டெழுந்து அஞ்சக்குளம் வந்து சேர்ந்தது. ஆலயத்திலிருந்து வெளியே வந்த சுந்தரர், "இதுவும் அவனுடைய செயலே' என்று கூறி இறைவ னின் ஆணையை ஏற்று கரிமேல் அமர்ந்து கயிலை நோக்கிப் புறப்பட்டார்.

நான்கு திசைகளிலிருந்தும் பேரொலி எதிரொலிக்க, ஐந்து வகை துந்துபிகள் முழங்கிட, தேவர்கள் பூமாரி பொழிந்திட, ஆரூரர் கயிலையை நோக்கி கரியின்மேல் சென்று கொண்டிருந்தார். ஆனால் அவரது நெஞ்சமோ சேரமானையே எண்ணி எண்ணித் தவித்தது.

செய்தியை அறிந்தார் சேரமான் பெருமான். விண்ணவர் மலர் சொரிய, வெள்ளை யானைமீது தமது நண்பர் திருவாரூரர் கயிலை நோக்கிச் செல்வதையும் விண்ணிலே கண்டார். நிலத்தினில் அவரால் கணமும் நிற்க முடியவில்லை. தமது வெள்ளைக் குதிரைமீது ஏறி, அதன் செவியில் "நமசிவாய' என்ற ஐந்தெழுத்தினை ஓதிட, அவரது பரியும் கரியினைத் தொடர்ந்து வானில் செல்லத் துவங்கியது. கணப்பொழு தில் வெள்ளை யானையை நெருங்கி வலமும் வந்தது. மகிழ்ச்சியில் திளைத்தார் மன்னர்.

காவலர் சேரமானை உள்ளே செல்ல விடாமல் தடுத்திட, சுந்தரர் மட்டும் இறைவனை அடைந்து வணங்கினார். அவரது நெஞ்சம் இன்னமும் சேரமானையே எண்ணித் தவித்தது.

""உலகுய்ய வந்தனையோ நம்பி ஆரூரா'' என உமையொரு பாகன் வினவிட,

""வாயிலில் ஆருயிர் நண்பன் சேரமான் காத்திருக்கிறார். கருணை கூர்ந்து அவரையும் வரச்செய்க'' எனப் பணிந்தார் சுந்தரர். நட்பின் இலக்கணமாய்த் திகழும் ஆரூரரைக் கண்டு மனம் திளைத்தார் மகேசுவரன்.

உடனே சிவனார் நந்திதேவரை அழைத்து, சேரமானை அழைத்து வரக் கட்டளையிட் டார். உள்ளே வந்த சேரமானைப் பார்த்து, ""நாம் அழைக்காது நீ இங்கு வந்ததேன்?'' என வினவினார்.

""ஆரூரரின் ஆனை முன்னே அவரைத் தொழுதவாறே வந்த என்னை, தங்கள் கருணை வெள்ளம் உந்திக் கொண்டு வந்து சேர்த்து விட்டது'' எனப் பணிவோடு உரைத்தார் சேரமான்.

இறைவனும் அக மகிழ்ந்து, ""நீவிர் இருவ ருமே சிவகணங்களுக் குத் தலைவராக இருப்பீ ராக'' எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

நட்புக்கே இலக்கணமாகத் திகழ்ந்த இருவரில் ஒருவர் அரியணையில் அமரும் அரசன். மற்றவரோ நாள்தோறும் இறைவனைத் துதிபாடும் அடியார். இவர்களது வாழ்க்கை யின் இறுதி நாட்கள் கழிந்த இடம்தான் திருஅஞ்சக்குளம். இது கேரள மாநிலத்தில் கொடுங்கலூரை அடுத்துள்ளது. கரியிலும் பரியிலும் ஏறி இந்த இரு பெரியவர்களும் கயிலை சென்ற நாள் "ஆடி சுவாதி' நாளாகும். ஆண்டுதோறும் இது இங்கு பெரியதொரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத் திலிருந்து நூற்றுக்கணக்கில் சிவநேசச் செல்வர்கள் குடும்ப சகிதமாகக் கூடுகின்றனர். கொடுங்கலூர் பகவதி ஆலயத்தில் முதல் நாள் இரவு சுந்தரர், சேரமான் ஆகியோரின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்வித்து, மிகச்சிறப்பாக அலங்கரித்து ஆனை வாகனம், குதிரை வாகனத்தில் அமரச் செய்து ஊர்வல மாக திருஅஞ்சக்குளம் எடுத்துச் செல்கின்ற னர். மறுநாள் காலை சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை, தமிழகப் பாணியில் விழாக் கோலத்துடன் நடைபெறு கிறது.

திருவஞ்சக்குளமென்றும் அழைக்கப்படும் இந்த சிற்றூர், கொடுங்கலூரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. கொடுங்க லூர்- பரவூர் செல்லும் பேருந்துகள் இவ் வழியே செல்கின்றன.

இத்தனை சிறப்புகள் கொண்ட திரு வஞ்சக்குளத்தில் ஆடி சுவாதித் திருநாள் சுந்தரர் குரு பூஜையைக் கண்டு தரிசிப்போர் வாழ்க்கையில் பெரும் பேற்றினை அடைந்த வர்கள் ஆவர்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum