இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இந்து சமயத்திற்கு ஓர் அறிமுகம்

Go down

இந்து சமயத்திற்கு ஓர் அறிமுகம் Empty இந்து சமயத்திற்கு ஓர் அறிமுகம்

Post by ஆனந்தபைரவர் Tue Nov 09, 2010 1:42 pm

நீங்கள் பெருமையுடன் சமுதாயக் கூட்டங்களில் படைக்க வல்ல ஓர் அடிப்படைச் சுருக்கத்தை வழங்குகின்றார்
சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள்


ேற்கத்திய நாடுகளில் வாழும் இந்துக்கள் சில வேளைகளில் தம் சமயத்தை விளக்கி சொற்பொழிவாற்ற கல்லூரி, பள்ளி வகுப்பறை, சமய கலந்துரையாடல் , ஏன் கிருஸ்துவ சர்ச்சுகளுக்குக் கூட அழைக்கப்படுகின்றனர். சிலர் தமக்கு அத்தகைய விளக்கமளிக்கும் அளவு தகுதி இல்லை எனக் கருதி என்னிடம் முறையிட்டு உள்ளனர். ஆக அத்தகைய சூழல்களில் , அதிகாரப்பூர்வமான, வெறும் கல்வி நோக்கில்லாத, முன்னுரை ஒன்று இந்து சமயத்திற்குத் தேவை என்பது தெளிவாகின்றது. இந்த பதிப்பகத்தார் பக்கத்தை ( இந்து சமயம் என்றால் என்ன? என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு) நமது நம்பிக்கையின் ஓர் அகண்ட சுருக்கமாகத் தயாரித்து உள்ளேன். இதிலிருந்து இந்து சமயத்தை அடிப்படை ரீதியில் மற்றவர்களுக்கு முறையாக எடுத்துச் சொல்ல உதவியாயிருக்கும். இதனால் பழங்கதைகளும் பொய்த்தகவல்களும் நீங்கிய ஓர் இந்து சமய அறிவு கிடைக்கும்.

நீங்கள் கூகல் தேடுதலில் ‘இந்து சமயம் என்றால் என்ன?’ என்று கேட்டால், ஏறக்குறைய 39,000 பதில்கள் கிடைக்கும். பெரும்பாலானவை அண்ணியர்களின் கைவரிசை; பெருவாரி எதிர்ப்பாளர்களின் தலைச்சிறந்த படைப்பாக இருக்கும். அறிவுப்பூர்வமானவை மிகக் குறைவு; அதிலும் குறைவு அதிகாரப்பூர்வமானவை. குறுகிய நோக்கு வழக்குச்சார்பு புரிந்துணர்வை கடந்த பதில்கள் அரிது. கேள்வியினால் தோன்றும் பரந்த அளவு சந்தேகத்தைத் தீர்க்கும் விடைகள் மிகப் பற்றாக்குறை. இந்தக் காரணங்களுக்காவே, இந்து சமயத்துக்கு ஓர் அறிமுகம் தவிர்க்கமுடியாதத் தேவையாகிவிட்டது.

இந்துஸ்ம் டுடே இதழின் நிறுவனராகிய சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகள்(1927-2001), இன்றைய உலகின் அனைத்து மதங்களும், உள்ளிருந்தோ வெளியிலிருந்தோ, எதிர் நோக்கும் சவால்களை நன்கு புரிந்திருந்தார். ஒவ்வொரு மதமும் தனக்கு ஓர் ஆன்மீக நீதி நூல், மக்களின் சடங்கு , பாரம்பரிய முறைகள் கொண்டு - ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு வழங்கப்பட்டு- உயர்ந்த உணர்வு நிலைகளுடன் தொடர்பை நிலைநிறுத்தி, இதனால் மனிதனை கடவுளுடன் தொடர்பு படுத்தி, கலாச்சார பாரம்பரிய உச்ச முழுநிறைவை வாழ வைப்பதாக எழுதி வைத்துள்ளார். பாசத்தோடு குருதேவர் என்று அழைக்கப்பட்ட அவர், இந்த தொடர்பு ஒரு தலைமுறை தவறினாலும், ஒரு மதம் நிரந்தரமாகக் காணாமல்போய், தூசுபடிந்த வரலாற்று, அகழ்வாராய்ச்சி, மனித ஆராய்ச்சி நூலகங்களில் மக்கிப் போக விடப்படும் எனக் கண்டுள்ளார். தான் மனதார விரும்பிய மதத்தைக் காக்க அவர் கடும் சிரத்தை எடுத்துள்ளார். “ எங்கே போயின ஒரு காலத்தின் பாபிலோனிய, எகிப்திய, அஸ்டெக், மாயான், சிவப்பிந்திய அல்லது ஹவாயிய பிராதன சமயங்கள்?” என அவர் வேடிக்கையாகக் கேட்பதுண்டு. அவற்றின் மிகக் குறைவானதே எஞ்சியுள்ளது. சில காலங்களுக்கு முன்னர், உலக மக்கள் தொகையின் ஆறில் ஒரு பகுதியான மனித இனத்தின் மதம், பெரும்பாலும் இந்தியாவில் வாழ்பவர்களின் மதம், ஒரு பில்லியன் மக்கள் கொண்டாடும் இந்து சமயத்திற்கும் இதே கதிதான் என சிலரால் அஞ்சப்பட்டும், பலரால் எதிர்ப்பார்க்கவும் பட்டது. மத ரீதி ஆக்கிரமிப்பு மற்றும் முழுஅழிப்பு வரலாறு பழமையான பல மதங்களை துடைத்து ஒழித்த போதிலும் இந்து மதம் மட்டும் அதை எதிர்கொண்டு இன்னும் வாழ்ந்துக் கொண்டு இருப்பது தனித்துவமானது.

முரணாகவே, இந்தப் புனித மதம் 1000 ஆண்டுகளாக படையெடுப்புக்கள், சூறையாடல்கள், கண்மூடி ஆதிக்கம் ஆகியவற்றை அண்ணிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து எதிர்கொண்டு தாக்குப்பிடித்தாலும் 20 ஆம் நூற்றாண்டில் மதச்சார்பின்மை மற்றும் பொருள் உலக கவர்ச்சி போன்ற சூட்சுமமான சக்திகளை சந்திக்கத் தள்ளப்பட்டு உள்ளது. கிருஸ்துவ பிரச்சாரம், 16-வது நூற்றாண்டு இயேசுயிட் சமய பரப்பாளர்களால் திரித்துக் கூறப்பட்டு, 19-ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இராஜாங்கத்தால் வலுவூட்டப்பட்டு, இன்றைய மேற்கத்திய மற்றும் இந்திய தகவல் சாதனங்களால் முன்னெடுக்கப்பட்டு, பல காலமாக மிகு வலிமிக்க அடிகள் அடிமையுண்டு கௌரவமில்லா ஓர் இந்து அடையாளத்தைக் கண்டுள்ளது. ஏனைய சுயமாண்பு நம்பிக்கையை தாழ்த்தி மிதித்தல், அதை மூடநம்பிக்கை மிக்க சடங்கு என தூற்றுதல், வெற்று உருவ வழிபாடு, தற்காலத்திற்கு ஒவ்வாத பழமை, பண்டைய வழக்கம், கணக்கில்லாத பொய்த் தெய்வங்கள் எனக் கூறுவதே ஒரு சாதாரண கிருஸ்துவ தந்திரம். இந்தியாவின் கமூனிஸ்ட்/மதச்சார்பற்ற ஊடகங்கள் ஜாதீய முறைகேடும், மோசமான சமுதாயச் சீரழிவுகளை வலியுறுத்தியும், இந்து என கூறும் எதனையும் அடிப்படைவாதம், தீவிரவாதம், வகுப்புவாதம் என முத்திரை குத்துகின்றன.

ஆனால், ஓர் எதிர்பாரா இந்து எழுச்சி பூமிப்பந்தின் எல்லா பாகங்களிலும் வெடித்துள்ளது கடந்த இருபது ஆண்டுகளில், சில வேளைகளில் இந்துக்களின் வேற்று நாடு குடியேற்றம், மற்றும் இந்தியாவின் புதிய கௌரவம் மற்றும் செல்வாக்கின் காரணமாக. தற்கால தலைமுறையினர் அதன் பொக்கிஷங்களை கண்டு உள்ளதாலும், அதன் காலத்திற்கேற்ற பயன்பாட்டை அறிந்ததாலும், இந்து மதம் 21 ஆம் நூற்றாண்டில் ஊக்கமுள்ள ஒரு சக்தியாக நுழைந்து உள்ளது. தனது தவறுகளைத் திருத்திக் கொண்டும், பலத்தை உற்சாகப்படுத்திக் கொண்டும், இந்து சமயம் டிஜிட்டல் (எண்ணியல்) உலகத்திற்குச் செல்கின்றது. தலைவர்கள் முன்னோக்கி அடி எடுக்கின்றனர். பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் இன்னும் சிறப்பாகச் செய்யவும், பலன்மிக்க வாழ்க்கை வாழவும் பெற்றோர்கள் தம் சமயத்தின் சிறந்ததை வழங்க முயற்சி செய்கின்றனர். ஆயிரக்கணக்கில் கோயில்கள் எழும்புகின்றன உலக அளவில். சமூகங்கள் தம் தெய்வ மூர்த்திகளை வைத்து, பாரிஸ், பெர்லின், டொரொன்டோ, சிட்னி ஆகியவற்றில் ஊர்வலம் வருகின்றனர்; இந்து திருவிழாக்களை பெரு அளவில் கொண்டாடுகின்றனர். அடுத்தவர்கள் தம்மை வித்தியாசமாக நினைப்பார்களோ அல்லது “பாகன்” என்பார்களோ என்ற கவலை இன்றி. மத வேற்றுமை இன்றி யோகா அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றது. சொல்திறமிக்க பேச்சாளர்கள் ஒரு பில்லியன் இந்துக்களைப் பிரதிநிதித்து அனைத்துலக சமாதான மாநாடுகளிலும், சர்வமதக் கூட்டங்களிலும், இந்து உரிமை கலந்துரையாடல்களிலும் கலந்துக் கொள்கின்றனர். உயர்பள்ளிக்கூடம், பல்கலைக்கழக இந்து மாணவர்கள் திரும்பி தம் பாரம்பரியத்திற்குச் செல்கின்றனர். கோயில்களில் இருக்கும் தெய்வங்களை நாடுகின்றனர், தம் பெற்றோர் சொன்னதால் அல்லாமல், தம் உள்ளார்ந்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தன் வாழ்க்கையை மேம்படுத்த, ஆத்மாவின் அழைப்பைப் பூர்த்தி செய்ய. இவ்வாறு எந்தக் கட்டத்திலும் நமது சமயத்தை விளக்கிக் கூற வேண்டின், கீழ் கண்டவற்றை வழங்குகின்றோம்.

பல நம்பிக்கைகள் ஒரே பெயரின் கீழ்

இந்து சமயத்திற்கு புதியவர்களுக்கு புதிராக இருப்பதன் முக்கியக் காரணம் அதன் பரந்ததன்மையே ஆகும். இந்து மதம் ஓர் ஒற்றைப் பாரம்பரியம் அல்ல. விஷயங்களில் ஒரே இந்துக் கருத்து என்ற ஒரு நிலை கிடையாது. ஆன்மீக சம்பந்தமான விஷயங்களை வரையறுக்க ஒற்றை அதிகாரப்பூர்வத் தலைவர் கிடையாது. சில வழக்குச்சார்பு பிரிவுகள் உள்ளன. அவற்றுள் நான்கு பெரியவை, வைணவம், சைவம், சாக்தம், ஸ்மார்த்தம். மேலும், கணக்கிடமுடியாத சம்பிரதாயங்கள் குருபாரம்பரியமாக வெளிப்படுத்தப் படுகின்றன. ஒவ்வொன்றும் முழுச் சுதந்திரத்துடன் அதிகாரத்தில் தன்னிறைவு கொண்டு உள்ளன. உண்மை வழக்கத்தில் கூறின், இந்த பெரும் மதத்தை பத்தாயிரம் சமயங்கள் சமாதானத்துடன், இந்து மதம் / சனாதன தர்மம் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்று கூடியதாக வரையறுத்தும் புரிந்தும் கொள்ளலாம். இந்த பரந்த பாங்கை நோக்கத் தவறுவது ஒட்டு மொத்த மதத்தையே தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்க எடுத்து வைக்கும் முதல் அடி, பொதுவாகவே. பெரும்பாலான ஆன்மீக பாரம்பரியங்கள் எளிதாக, ஒருங்கிணைக்கப் பட்டு, ஐயமின்றி இருக்கின்றன.

தொன்மை மட்டுமின்றி சிந்தனா அமைப்புக்கள், அழகுமிக்க கலை மற்றும் கட்டடமைப்பு, மக்களின் நெகிழ்வு ஆகிய ஆழமான கூறுகள் எல்லாம் இருந்தும் இந்து மதம் ஒரு புதிராகவே உள்ளது. திரிக்கப்பட்ட கருத்துக்கள் வழிந்தோடுவதால், செழிப்புமிக்க கட்டமைப்பு, நேர்த்தி, ஆன்மீக பரிசுகளை அள்ளித் தரும் இம்மதம் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. ஏதோ பாம்பாட்டி, மாட்டு வழிபாடு, ஆணி படுக்கை யோகிகளின் நையாண்டி சம்மேளனத்திற்கு சற்றே உயர்ந்த கீழான இடத்தில் வைத்தும் பார்க்கப்படுகின்றது.

நல்ல வேளையாக, சற்று சுலபமான, இயற்கையான வழி ஒன்று இந்து சமயத்தின் பரப்பை அறிய உள்ளது. ெதளிவான வழிகாட்டும் எண்ணிலடங்கா உயிர்வாழும் குருமார்கள், ஆசிரியர்கள், பண்டிதர்கள் மத்தியில் ஓர் ஆசான் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரின் போதனைகளைப் பயின்று, அவரின் சம்பிராதாயத்தைத் தழுவி, அந்த நீதி நெறிகளையும் ஒழுக்கத்தையும் மாணவன் ஏற்றுக் கொள்வதே அது. இவ்வாறே நடைமுறையில் மத நம்பிக்கை பேணப்படுகின்றது. புனித ஆண்களும் பெண்களும், லட்சக்கணக்கில் குருமார்களாகவும், மத பாதுகாவலர்களாகவும், நம்பிக்கை மிக்கவர்களுக்கு தூண்டுகோலாகவும் இருக்கின்றனர்.

நான்கு அடிப்படைக் கோட்பாடுகள்

சுலபமான ஒரு ஒட்டுமொத்தப் பார்வையில் (மிக எளிமயாக இருப்பினும்) பெருவாரியான இந்துக்கள் நான்கு சார நம்பிக்கைகளை பகிர்ந்துக் கொள்கின்றனர்: கர்மம், மறுபிறவி, எங்கும் தங்கும் தெய்வீகம் மற்றும் தர்மம். இந்த நான்கு நம்பிக்கை கோட்பாட்டை பின்பற்றி வாழும் ஒருவரை நாம் இந்து என அழைக்க முடியும்.

கர்மம்: நேர்ப்பொருள் அடிப்படையில் கர்மம் “காரியம்” அல்லது “செயல்” என பொருள்படும். விளக்கமாகக் கூறின் அது காரண-காரிய பொதுக் கோட்பாடு, வினை-வினைப்பயன், எது அனைத்து தோற்றத்தையும் ஆளுகின்றதோ அது. மனதின் இயற்கை சட்டவிதியே கர்மம், எவ்வாறு புவியீர்ப்பு சக்தி பௌதீக சட்டவிதியாக உள்ளதோ அப்படி. கர்மம் விதி அல்ல, ஏனென்றால் மனிதன் சுய முயற்சியால் தனது அடைவுநிலையை உருவாக்குகின்றான். நல்லதை விதைத்தால் நல்லது கிடைக்கும். தீயதை விதைத்தால் தீயது கிடைக்கும் என வேதங்கள் சொல்கின்றன. கர்மம் நமது இந்த பிறவி மற்றும் கடந்த கால பிறவிகளிலும் ஒட்டு மொத்த செயல்களும் அவற்றினால் உருவான செயல்களையும் குறிக்கும், இதனால் நமது எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது. நமது அனுபவமும், அதனை நாம் எதிர்நோக்கும் விதமும், கர்மம் அழிவு வேலையைச் செய்கின்றதா அல்லது உதவிக்கரம் நீட்டுகின்றதா என்பதை காட்டுகின்றது. கர்மத்தை வெற்றிக் கொள்ள அறிவார்ந்த செயல்களும் உணர்ச்சி வசப்படாத எதிர்ச் செயல்களும் தேவை. எல்லா வினைகளும் உடனே திரும்பி வருவதில்லை. சில சேமிக்கப்பட்டு, எதிர்பாராத வழிகளில் இந்த பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ திரும்பி வரும். வேதங்கள் விளக்குகின்றன, “ ஒருவன் தான் செய்வது போலவே ஆகின்றான். நல்ல காரியத்தால் ஒருவன் நல்லவன் ஆகின்றான். தீயதனால் தீயவனாகின்றான்” (யஜுர் வேதம், பிரிஹதரன்யகா உபநிஷதம் 4.4.5).

மறுபிறவி: புனர்ஜன்மம் எனப்படும் மறுபிறவி, இயற்கையான பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறப்பு நடைமுறையாகும். இறப்பின் போது, நாம் இந்த பூத உடலை உதறிவிட்டு, சூக்கும உடல்களில் இருந்தவாறு, உள் உலகங்களில் தொடர்ந்து பரிணாமம் அடைகின்றோம், மீண்டும் ஒரு பிறப்புக்குள் நுழையும் முன். பல காலமாக, மறுபிறவி கோட்பாடு இந்துக்களிடையே மிகப்பெறும் ஆறுதல் கூறாக இருந்துள்ளது, சாவைப்பற்றிய பயத்தை நீக்கி. நாம் வாழும் உடல் அல்ல நாம், ஆனால் அனாதியான ஆத்மா, அது பரிணாம வளர்ச்சியில், சம்சாரத்தில் பல உடல்களில் வாழ்ந்துள்ளது. இறப்புக்குப் பின், பார்வைக்கு அகப்படாத உலகங்களில் நாம் தொடர்ந்து இருந்து, உலகத்தில் செய்த காரியங்களுக்கு சுகத்தையோ துக்கத்தையோ அனுபவித்து, மீண்டும் ஒரு பூதவுடல் கொண்ட பிறவிக்காக காத்திருப்போம். கடந்த பிறவிகளில் நாம் செய்த காரியங்கள் அடுத்தப் பிறவியின் நிலைமை மற்றும் மனப்பாங்குகளாக உருவாகின்றது. கர்மம் தீர்க்கப்பட்டதும், கடவுள் அறியப்பட்டதும், மோட்சம் அடையப்பட்டதும் விளைவாக மறுபிறவி நீங்குகின்றது. வேதங்கள் பகருகின்றன, “ இறப்புக்குப் பின், ஆத்மா அடுத்த உலகுக்கு செல்கின்றது. தான் செய்த காரியங்களின் நுட்ப பதிவுகளை மனதில் தாங்கியவாறு. அதற்கான பலன்களை அனுபவித்தப் பிறகு, காரிய உலகமான இங்கு மீண்டும் வருகின்றது. ஆக, இச்சை உள்ளவருக்கு மறுபிறவி வாய்க்க தொடர்ந்து வழி உண்டு” ( யஜுர்வேதம், பிரிஹதரன்யகா உபநிஷதம் 4.4.6).

எங்கும் தங்கும் தெய்வீகம்: பல சமய நம்பிக்கைகளின் குடும்பமாதலால், இந்து மதம் பலதரப்பட்ட கோணங்களில் தெய்வீகத்தைப் பார்க்க முனைகின்றது. இருப்பினும் எல்லா இந்துவும், அந்த ஒரு, எங்கும் தங்கியிருக்கும் உச்ச பொருள், எது உபநிக்ஷதங்களில் கூறப்பட்டு இருக்கின்றதோ, அதையே வணங்குகின்றனர். தீர்க்க உண்மைப் பொருளாக நோக்கின், கடவுள் தோற்றமின்றி, மாற்றமின்றி, கடந்த நிலையில், காலம் அகன்று, உருவம் அகன்று, இடம் அகன்று, தான் கடவுளாக உள்ளளார். பரிசுத்த உணர்வாக இருப்பதால், கடவுள் ஆதிமூல தோற்றப் பொருள், தூய அன்பு, மற்றும் ஒளியாகி, அனைத்துத் தோற்றங்களிலும் வழிந்தோடி, சர்வ காலங்களிலும், சர்வ இடங்களிலும் ஆதியந்தமில்லாத பேரறிவாளனாக, சக்தியாக நிற்கின்றார். மூல ஆத்மாவாதலால், கடவுள் நமது தனிப்பட்ட தெய்வமாகி, மூன்று உலகங்களின் ஆதாரமாகி, நம்மை காக்கும், வளர்க்கும், வழிகாட்டும் அப்பன் - அம்மை ஆகி உள்ளார். நம் வாழ்க்கையில் கடவுளின் அருளை வேண்டும் அதே வேளை, நாம் அவன்/அவள் நமது ஆத்மாவின் சாரம் என்பதையும், நமது உயிரின் உயிர் என்பதையும் அறிந்து உள்ளோம். ஒவ்வொரு வழக்குச்சார்பும், ஏனைய கடவுளர்களையும், அல்லது மகாதேவர்கள், கடவுளால் படைக்கப் பட்டு, அவருக்குப் பணி செய்து, வணங்குவதாக நம்புகின்றனர். வேதங்கள் அறிவிக்கின்றன, “எண்ணிலடங்கா தோற்றங்களை உடைய கடவுளாகிய அவனது மகிமையாலே அனைத்தும் நிலைக்கின்றன- அணுவிலும் சிறிதாகி, இருப்பினும் அனைத்துக்கும் படைப்பாளனாகி, தன் படைப்பில் என்றும் வாழ்கின்றான். அன்பாகிய இக்கடவுளைக் காண்பவர்க்கு நிலைத்த அமைதி உண்டு. அனைத்துக்கும் தலைவனாகிய அவன், அனைத்தின் மத்தியிலும் மறைந்திருக்கின்றான், கால உலகை கண்காணிக்கின்றான்” (கிருஷ்ண யஜுர் வேதம், ஸ்வேதஸ்வதர உபநிஷதம் 4.14-15).

தர்மம்: கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தபோது, அதற்கு ஒரு நெறியையும் , தோற்றத்தை ஆளுகின்ற சட்டங்களையும் வழங்கியுள்ளார்். தர்மம் என்பது கடவுளின் தெய்வீகச் சட்டம் தோற்றத்தின் அனைத்து மட்டத்திலும் காணப்படும், நிலைப்பெறச் செய்யும் பிரபஞ்ச நியதி முதல் சமய மற்றும் நன்னெறி விதிகள் வரை நம்மை பிணைத்து சுமூகமாக இருக்க வைக்கின்றது. ஆத்மாவின் தொடர்பில், தர்மம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிக தோதுவான நடத்தை, சீரான நன்னடத்தை. அது கடவுள் பற்று மற்றும் கோட்பாட்டு பயிற்சி, கடமை மற்றும் கட்டாயம். நாம் தர்மத்தை பின்பற்றுகையில், நாம் பிரபஞ்சத்தை பற்றியிருக்கின்ற, வழிகாட்டுகின்ற உண்மையுடன் ஒத்து வாழ்கின்றோம், ஆக இயற்கையிலேயே கடவுளுடன் நெருக்கத்தில் உள்ளோம். தெய்வீக சட்டத்துக்கு எதிரானது அதர்மம். ஒரு விதைக்கு வழக்கமான வளர்ச்சி எப்படியோ அது போலவே மனிதனுக்கு தர்மம் - இயற்புத் தன்மை மற்றும் குறிக்கோளைப் படிப்படியாக நிறைவேற்றுதல். திருக்குறள் (31-32) நினைவுறுத்துகின்றது, “வானுலகின் கீர்த்தியையும், மண்ணுலகின் செல்வத்தையும் தர்மம் வழங்குகின்றது. அதைவிட பயனுள்ள வேறு எது உள்ளது? தர்மத்தை விட பரிசளிக்கும் ஒன்றுமில்லை, அதை கண்டுகொள்ளாததை விட அழிவு வேறு இல்லை.”

இந்து மதத்தின் தனித்த மதிப்பு இன்னாளில்.

இந்துக்களும் இந்து அல்லாதவர்களும் இந்து மதத்தின் தன்மையை கற்று உணர நல்ல காரணங்கள் உள்ளன. பரந்த பூகோள மற்றும் கலாச்சாரக் கூறுகள் கண்டங்களையும், மக்களையும், மதங்களையும் பிரித்திருந்தாலும், வரவர அவற்றுக்கிடையில் உறவுகள் ஏற்பட்டு, உலகம் ஒன்றுடன் ஒன்று மேன்மேலும் நெருங்கி வருகின்றது. தொலைத்தொடர்ப்பு, இணையம், வியாபாரம், பயணங்கள் மற்றும் உலகளாவிய குடிமாற்றம் ஆகியன முன்னாளில் தூரமாயிருந்தவர்களை தற்போது பக்கத்து வீட்டுக்காரர்களாக்கி விட்டது, சிலவேளைகளில் விருப்பமில்லாமல்.

படிப்படியாக பன்மைப்பாங்கு பெருகிவரும் உலகில், ஒருவர் மற்றொருவருடன் சுமூகமாக இருக்க வேண்டுமாயின், பூமியின் மக்கள் தமது சக அண்டை சமூக மதங்கள், கலாச்சாரங்கள், கருத்துக்கள் மற்றும் கவலைகளை அறிந்து, பாரட்டுவது மிக முக்கியமாகிறது. இவ்விஷயத்தில், சனாதன தர்மம், தன்னுடைய மாண்புடைய சமரச போக்கினாலும், சர்வ வியாப கடவுள் கொள்கையினாலும் உலகத்திற்கு நிறையவே வழங்க முடியும். இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த ஒரு இடத்திலும், மதங்கள் நெருக்கமாகவும் சுமூகமாகவும் வாழ்ந்து வளர்ந்ததாகத் தெரியவில்லை. உலகில் உள்ள எல்லா முக்கிய மதங்களுக்கும் ஆயிரக்்கணக்கான ஆண்டுகளுக்கு, இந்தியா ஒரு வீடாக இருந்து இருக்கின்றது. யூதர்கள், பார்சி சமயத்தவர், சூஃபிகள், பௌத்தர்கள், கிருஸ்துவர்கள், நாத்திகர்கள் என பலருக்கு இந்தியா அடைக்கலம் வழங்கியுள்ளது. இன்று நூறு மில்லியனுக்கு மேல் இந்தியர்கள் முஸ்லீம்களாக இருக்கின்றனர், இதை பெரும்பான்மை இந்து சமூகத்தினர் பெருமனதுடன் ஏற்றுள்ளனர். இத்தகைய நட்புறவு, எல்லா தூய மதங்களுக்கும் வழங்கப்படும் உறைந்த மதிப்பின் காரணமாகவே நிகழ்கின்றது. இப்பழக்கம் “ ஏகம் சத் அனேகா பந்தா,” “உண்மை ஒன்றே, வழிகள்தான் வேறு.” என்ற வழக்கு வாசகத்தை மெய்ப்பிக்கின்றது. பௌத்தம், சீக்கியம், சமணம் போன்றவற்றை ஈன்று, ஏனைய மதங்களுக்கு தாராள பாதுகாப்பு கொடுக்கும், இந்து தேசத்திடம் இருந்து என்ன கற்றுக் கொள்ளலாம்? இந்தியாவின் அசல் சமயம் ஒரு கிடைக்கதற்கரிய கண்ணோட்டத்தையும் , அமைதி, பகுத்தறிவு, செயல்படுத்தவல்ல பாதையையும் கொடுத்து, நமது உலகை புரிந்து கொள்ளச் செய்கிறது. தனிப்பட்ட மனித ஆன்மீக உள்நோக்கு பெறவும், நமது சமூகத்தின் ஆன்மீக வளர்ச்சிக்கு உந்தும் உலகநோக்குக்கு ஓர் அரிச்சுவடியாகவும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இந்து மதம் தனது போதனைகளும் பயிற்சிகளும் காலத்தில் 8000 ஆண்டு மற்றும் அதற்கு மேல் வழக்கம் உடையதென பெருமை கொள்கின்றது. இந்த கால சரித்திரம் மற்ற பல மதங்களை குள்ளமாக்கின்றது. உண்மையில், இந்து மதம் தோன்றிய குறிப்பிட்ட காலம் சரித்திரத்தில் கிடையாது. காலம் தோன்றிய போதிலிருந்தே அது ஆரம்பித்ததாகக் கூறப்படுகின்றது. மற்ற மதங்களின் ஒப்பீட்டு வயதை அழுத்திச் சொல்லி, இந்து மதத்தின் தொன்மையை காட்டும்பட்சத்தில், ‘தி வேதிக் எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற நூலின் ஆசிரியர், ரய்மன் பனிக்கர் மிக அறிவுப்பூர்வமாக, ஒவ்வொரு 100 ஆண்டுகால சரித்திரத்தை ஒரு மனித வாழ்க்கை ஆண்டாக பிரதிநிதிக்கிறார். இவ்வாறு பார்க்கின், சீக்கியம், மிக இளமையான மதம் ஐந்து வயது. இஸ்லாம் ஒரு பதின்மவயதினர், பதினான்கு வயது. கிருஸ்துவ மதம் இருபது வயது ஆகியுள்ளது.பௌத்தம், தாவேயிசம், சமணம் மற்றும் கான்பூசியனிசம் ஆகியவை இருபத்து ஐந்து வயது. சமணம் ஒரு வளர்ந்த முப்பத்து ஏழு வயது. இந்து மதமோ, பிறந்த தேதி தெரியாமல், குறைந்த பட்சம் எண்பது ஆண்டு வயது - இப்புவியின் ஆன்மீக வாழ்க்கையின் வெள்ளைத் தாடி தாத்தா.

இந்த அசாதாரணமான பாரம்பரியத்தின் மக்கள் அதனை சனாதன தர்மம், “அனாதி நம்பிக்கை” அல்லது “அனாதி நெறி” என குறிப்பிடுகின்றனர். தன்னைச் சார்ந்த மில்லியன் கணக்கான ஒவ்வொரு மனிதனின் பங்களிப்பையும் காலங்காலமாகத் தன்னுள் ஏற்று, சமயம், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், கலை, கட்டடவியல் என, செழிப்புமிக்க வியக்கத்தகு கலாச்சார சொத்தை உலகுக்கு அது அளிக்கிறது. இதனால், ஆச்சரியத்துக்கு இடமில்லாமல், தன் மக்களால் ஒரு மதமாக இன்றி, வாழ்க்கை நெறியாக, மனித கலாச்சார , ஆன்மீக அடிப்படை சத்துச் சாராக நோக்கப் படுகின்றது. இந்துக்களுக்கு, இந்து மதமே பொருட்களின் அமைப்பை ஆக சரியான, சாத்தியமிக்க வகையில் உணர்த்துகின்றது - அனாதி உண்மைகள், இயற்கை கோட்பாடுகள் என. அவர்களுக்கு இந்து மதம் பிரபஞ்சத்துடன் கலந்து நின்று, கலாச்சார மற்றும் வளமைக்கு அடிப்படையாகின்றது. இந்த மாண்புமிகு மதத்தைப் புரிந்துக் கொள்வதால், அனைத்து மக்களும் மனித இனத்தின் மத மூலத்தையும் சாரத்தையும் ஆழ்ந்து உணர முடியும்- அனாதி பாதையின் மிகப் பழமை எடுத்துக்காட்டு ஏனைய சமய நம்பிக்கைகளிலும் பிரதிபலிக்கப்படுவதை கண்டு உணர்ந்து.

860 மில்லியன் இந்துக்கள் இந்தியாவில் 85 சதவீத மக்கள் தொகையாக வாழவும், பல மில்லியன் கணக்காணவர்கள் உலகின் எல்லா மூலைகளிலும் வாழ்கின்றனர். இது உலகத்திலுள்ள ஒவ்வொரு நாட்டு மக்களையும், இனத்தையும், குடிகளையும் அடக்கும். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 2.4 மில்லியன் இந்துக்கள் உள்ளனர், ஏறக்குறைய மூன்றில் இரண்டு தெற்காசியர்களும், மூன்றில் ஒன்று மற்ற பிண்ணனி மக்களாவர்.

இந்து மறைநூல்கள்

எல்லா பெரிய மதங்களும் ஒரு குறிப்பிட்ட புனித நூலின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. கிருஸ்துவத்துக்கு பைபளும், இஸ்லாத்துக்கு குரானும் எடுத்துக்காட்டு. வியக்கத்தகுவகையில் அதிகமான மறை நூட்களை இந்து மதம் பெருமையுடன் தழுவியுள்ளது. உண்மையை கூறின் மனிதனுக்கு தெரிந்த மிகப் பெரிய மறைநூற் பெட்டகம் இந்து சமயத்தினுடையது. உச்சப் புனிதமும் மதிப்பும் உடையது வேதங்களும் ஆகமங்களும், இவை இரண்டும் சுருதியின் (செவிமடுக்கப்பட்ட) பெருத்த ஆழ நூட்கள், கடவுளால் ஞானம் பெற்ற முனிவர்களுக்கு பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டது. வேதங்கள் பொதுமறை எனவும், ஆகமங்கள் வரையறைக்குட்பட்ட மறை எனவும் சொல்லப்படுகின்றது. ஆகமங்கள் நேரிடையாக வழிபாட்டு விதிகள், யோகங்கள், மந்திரம், தந்திரங்கள், கோயில் கட்டுமானம் ஆகியன பற்றி நுணுக்கமாகப் பேசுகின்றன. வேதங்களின் மிக பரவலாக அறியப்பட்ட பகுதி உபநிஷதம், இதிலிருந்தே பொதுவான சமயக் கோட்பாட்டு அடிப்படை கிடைக்கின்றது.

இரண்டாம் பட்ச மறைநூட்கள், ஸ்ம்ரிதி (நினைவில் கொள்ளப்பட்டது), சரிசம அளவில், அதிக பிரபலமுடன் உள்ளன, அதிக அளவில் கொண்டாடப்படுபவை இதிகாசங்களும் (காவிய நாடகங்கள் மற்றும் வரலாறு - குறிப்பாக இராமாயணம் மற்றும் மகாபாரதம்) புராணங்களும் ஆகும் (புனித வரலாறு மற்றும் பழங்கதைகள்). மிகப் பிரசித்தி பகவத் கீதை மாகாபாரதத்தின் ஒரு சிறிய பகுதி. வேத கலைகளும் விஞ்ஞானமும் (ஆயுர்வேதம், வாணவியல், நாட்டியம், இசை, கட்டடவியல், அரசாட்சி, வாழ்க்கை கடமை, சட்டம்) வேதாங்கம் மற்றும் உபவேதம் என்ற நூல் தொகுப்பில் பிரதிபலிக்கப்டுகின்றன. மட்டுமல்லாமல், காலம் காலமாக கடவுளை அறிந்த ஞானிகள் தத்தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நிறைய நூட்களை வெளிக்கொணர்ந்து, யோகத்தின் அதிசயங்களையும், உள்ளம் உருக்கும் பக்தி மற்றும் ஞான பதிகங்களை வழங்கியுள்ளனர். இந்து மறை நூல் படைப்பு இந்நாள் வரை தொடருகின்றது, தற்கால ஞானிகள் காலம் கடந்த உண்மைகளை மீண்டும் சொல்லி, ஆத்மாக்களை இறைவனிடம் கொண்டு செல்வதால்.

இந்து மறைநூட்களை வாழ்நாள் வழிகாட்டியாகவும் ஆறுதலாகவும் தழுவியிருத்தல் ஒருவர் இந்து என்பதற்கு தெளிவான அறிகுறி. அனைத்து பிரிவிசார்புகளும் வேதங்களை ஏற்றுக்கொண்டிருக்கும் அதே வேளை, ஒவ்வொரு பரம்பரையும் மற்ற பின்பற்றுபவனரின் முக்கிய அதிகாரப்பூர்வ மறைநூட்களை வரையறுக்கவே செய்கின்றன. மேலும், ஒவ்வொரு பக்தரும், தனது பரம்பரையில் உள்ள மறைநூட்களில் தனக்கு பிடித்ததை சுதந்திரப் போக்குடன் தேர்ந்தெடுத்து, பின்பற்றலாம். அது ஒரு வேளை உபநிஷதங்களின் தொகுப்பு, பகவத் கீதை, திருமந்திரம் அல்லது தன் சொந்த குருவின் படைப்பாகவோ இருக்கலாம். இத்தகு சுதந்திர ஓட்ட, பலவகைப்பட்ட மறைநூல் அணுகல் இந்து மதத்தின் தனித்தன்மை ஆகும். இங்கு மறைநூட்களுக்கு உள்ள இடம் மற்ற மதங்களில் உள்ளது போல் ஆகாது. உண்மையான ஆன்மீக முன்னேற்றம் வேண்டுமாயின், மறைநூட்களின் போதனைகள் வெறுமனே படித்து விட்டு, பிரச்சாரம் செய்தால் மட்டும் போதாது, ஆனால் தன்னுடைய சொந்தமானதாக வாழ்ந்தும் அனுபவிக்கப் படவும் வேண்டும்.

கடவுளின் தன்மை

சில இந்து மதத்தைப் பற்றிய விளக்கங்கள், இந்துக்கள் ஒரே உச்ச பரம்பொருளை நம்பாமல், பல உச்ச தெய்வங்களை வணங்குவதாக, தவறாகச் சொல்கின்றன. சாதாரணமாக, இந்த தவறான கருத்து காணப்படும் எடுத்துக்காட்டு, இந்துக்கள் மும்மூர்த்தி வழிபாடு செய்வதாகச் சொல்வது: பிரம்மன், படைப்பவர், விஷ்ணு,காப்பவர், சிவன், அழிப்பவர். ஓர் இந்துவுக்கு, இந்த மூன்றும் ஒரே பரம்பொருளின் பண்பாகும். பல தெய்வங்கள் காணப்படுவதால், ஒரு வேளை வெளி ஆள் ஒருவருக்கு, இம்மதம் பல்தெய்வ கொள்கையாகக் காணப்படலாம்- இதுவே மிகப் பெரிய ஒரு குறையாக- பலதெய்வ உறுப்பியம் ஒரு நாகரீகமில்லாத பொய்யாகக் கருதப்படுகின்றது. ஆனால், எந்த இந்துவை கேட்டாலும், அவன் ஒரே பரம்பொருளை வணங்குவதாகவே கூறுவான். ஒரு கிருஸ்துவன், யூதன், முஸ்லீம் மற்றும் அனைத்து பெரும் சமய நம்பிக்கைவாதி போலவே இதுவும் அமைந்துள்ளது. அவன் சைவனாகில், பரம்பொருளை சிவன் என்கிறான். சாக்த இந்து தேவியை இறுதிப் பொருளாகக் காண்கின்றான். ஸ்மார்த்த இந்து பல தெய்வ கட்டமைப்பிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உச்ச தெய்வமாக வணங்குகின்றான். வைஷ்ணவ இந்து, விஷ்ணுவை அல்லது அவருடைய பூலோக அவதாரங்களாகிய, குறிப்பாக கிருஷ்ணர் அல்லது இராமரை வணங்குகின்றான்.

ஆக, எல்லா இந்துக்களும் இதைத்தான் அல்லது அதைத்தான் நம்புகின்றனர் என அறுதியாகக் கூறமுடியாது. சில இந்துக்கள் கடவுளை, அருவமான உண்மை பரம்பொருளை மட்டுமே ஏற்கின்றனர்; மற்றவர் உருவமான தெய்வமாக, படைப்பாளனாக ஏற்கின்றனர். சிலர் கடவுளை ஆணாகவும், சிலர் பெண்ணாகவும், சிலர் பால் கூறுகள் சட சம்பந்தமாதலால், பாலற்ற பொருளாக பார்க்கின்றனர். இந்தச் சுதந்திரம், கடவுளை கருதுவதற்காக உள்ள மிக செழிப்பான வளமிக்க புரிந்துணர்வு என நாம் கூறலாம். அனைத்து உண்மையான ஆன்மீக பாதைகளையும்- அத்துவைதம், “கடவுள் மட்டுமே உள்ளார்” என்ற முடிவுக் கொள்கையும் “என்று நான் அவனின் அருளைப்பெறுவேன்” என்று கேட்கும் துவைதம் கொள்கையும் இந்துக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு உரித்தான வழியில் இதைச் செய்ய வழியுண்டு, பக்தி, தவம், தியானம், யோகம் அல்லது தன்னலமற்ற சேவை.

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

இந்து சமயத்திற்கு ஓர் அறிமுகம் Empty Re: இந்து சமயத்திற்கு ஓர் அறிமுகம்

Post by ஆனந்தபைரவர் Tue Nov 09, 2010 1:44 pm

கடவுள் கற்பனைக்கு கூட எட்டாதவாறு கடந்தும், சர்வ வியாபியாக அனைத்துள்ளும் ஊடுருவி உள்ளார். அவரே படைப்பவனும் அவரது படைப்பும். தூரமான உயரத்திலிருந்து ஆட்சிசெய்யாமல், மிக ஒட்டியிருந்து, அனைத்துள்ளும் அதன் சாரமாக அமர்ந்துள்ளார். படைப்பின் எந்த ஒரு மூலையிலும் கடவுள் தங்காத இடமில்லை. எட்டாத நட்சத்திரத்தை விட எட்டா தொலைவிலும், நமது மூச்சை விட நெருக்கமாக இருக்கும் தன்மையாளன். கடவுளுடைய இருப்பு எந்த ஒரு பொருளிலிருந்தும் நீக்கப்படுமானால், அப்பொருள் இருக்காது.

ஒரு முக்கிய கருத்து, பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவது என்னவென்றால், ஒரே ஒரு பரம்பொருள் இருப்பது ஏனைய தெய்வங்கள் இருப்பதை மறுப்பதாக ஆகாது. கிருஸ்துவ மதத்தில் அங்கீகரிக்கப்பட்ட கடவுளின் அருகே வாழும் செரேபிம் மற்றும் செரபிம் தேவதைகள் (மனித மற்றும் விலங்கு தன்மை உடையவை) போன்றே இந்துக்களும் பரம்பொருளால் உருவாக்கப்பட்டு, அவரை வழிபட்டு தொண்டு செய்யும் மகா தேவர்களை வணங்குகின்றனர். ஒவ்வொரு வழக்குச்சார்பும் பரம்பொருளையும் அவ்வழக்குத் தேவ திருக்கூட்டத்தையும் வழிபடுகின்றது. யானை முகம் கொண்ட கனேசப் பெருமான் மிகப் பிரபலம் மட்டுமின்றி எல்லா இந்துக்களாலும், வழக்குச்சார்பு பேதமின்றி வழிபடப்படுகின்றார். வலிமை, யோகம், படிப்பு, கலை, இசை, செல்வம், கலாச்சாரம் என்பனவற்றுக்கு ஒரு தேவரோ அல்லது தேவியோ உள்ளனர். சிறு தெய்வங்களும், கிராமிய தேவதைகள், பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சிறப்பான அறுவடை போன்ற பூலோக விஷயங்களுக்காக வேண்டியழைக்கப்படுகின்றனர்.

ஆத்மாவின் தன்மை

ஆத்மாவைப் பற்றி இந்து சமயம் என்ன சொல்கின்றது? “நான் யார்?” “நான் எங்கிருந்து வந்தேன்?” மற்றும் “நான் எங்கே போகின்றேன்?” என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க - தன்னை அறிவதற்கு தவிர்க்கமுடியாத உந்துசக்தி, அனைத்து பெரும் மதம் மற்றும் தத்துவ பள்ளிகளின் மையமாக இருந்துள்ளது. ஆத்மாவைப் பற்றிய இந்து போதனைகள் தத்துவார்த்தமாக ஆழமாக இருப்பது மட்டுமன்றி, ஆழமான செயல்முறைக்கும் ஒத்து பயனளிக்கின்றது. நாம் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் அறிவு, எதனை நாமென்று நினக்கிறோமோ, எவை நிலையில்லாமல், குறையுடையதாக, கட்டுப்பட்டு இருக்கின்றனவோ, அவற்றை விட அதிகமான ஒன்று. நமது உண்மையான சொரூபம் நமது இறப்பிறப்பறியாத ஆத்மா, அனாதி, பரிபூரணம், வரையறையற்ற உள் சாரம், பிரகாசிக்கும் ஒளியால் ஆன தூய பொருள் மனிதக் கண்களால் காணப்படாதது, ஐப்பொறிகளால், பௌதீக உலகில் வாழ தேவையான கருவிகளால், அறியப்படாதது.

நமது அறிவு, மனத்திடம், அன்பு உட்பட நமது அனைத்து உயர் காரியங்களுக்கும் ஆத்மாவே மூலம். அது ஆணுமல்ல பெண்ணுமல்ல. ஆத்மாவின் சாரம், எது படைக்கப்படவில்லையோ, அஃது சர்வத்திலும் சதா உள்ளூர ஊடுருவியிருக்கும் அன்பு மற்றும் கடந்த மெய்ப்பொருள், இது கடவுளுடன் முழுதும் ஒத்து, அனாதியாக கடவுளுடன் ஒன்றாக இருக்கின்றது. வேதங்கள் விளக்குகின்றன, “ஆத்மா பிறந்து ஓர் உடலில் வளருகின்றது, வாழ உணவும் கனவுகளையும் ஆசைகளையும் சுமந்து. பிறகு மற்ற உடல்களில் மீண்டும் பிறப்பெடுக்கின்றது, முன்னாளில் செய்த காரியங்களுக்கு ஏற்ப. ஆத்மாவின் தகுதி அதன் எதிர்கால உடலை, உயர்வு அல்லது தாழ்வு, கனம் அல்லது இலேசு என நிர்ணயிக்கின்றது.”

எல்லா தோற்றங்களிலும் தெய்வீகம் இருப்பதாக வேதங்கள் போதிக்கின்றன. நமது உண்மையான, ஆன்மீக சாரம், கடவுள் போலவே, அனாதி, பேரானந்தம் பொருந்திய, நல்ல, ஞானமாக, அழகுநிரம்பிய தன்மையானது. கடவுளையும் ஆத்மாவையும் இணைப்பது யோகம். நாம் உலகத்தில் பெரும்பகுதி நேரத்தை அழகு, கல்வி மற்றும் ஆனந்தத்துக்காக செலவிடுகின்றோம், நமது ஆசைக்குக் காரணமான இந்த பொருள் யாவும் நமது ஆத்மாவின் தன்மையாக நமக்கு உள்ளே ஏற்கனவே இருப்பது தெரியாமல். நமது நோக்கை உள்ளூராக, வழிபாடு மற்றும் தியானத்தின் மூலம் திருப்பும் பட்சத்தில், நமது உண்மை ஆன்மீக தன்னுடன் இனங்காணும் வேளை, உலகத்தின் மகா செல்வத்தையும் எதிர்கொள்ளும் அளப்பிட முடியாத உள் பொக்கிஷங்களை நாம் கண்டுபிடிக்க இயலும்.

இந்து மதம் மறை மெய்மை மதம், பக்தனை சுயமாகவே உள்ளூர உண்மைப் பொருளை அனுபவிக்க வழிகாட்டி, இறுதியில் உணர்வின் உச்சியை அடையும் போது, மனிதனும் கடவுளும் ஒன்றே ஆகின்றது. தெய்வீக ஆத்மாக்களாக நாம் யாவரும் மறுபிறவி மூலம் பரிணாமித்து, கடவுளுடன் ஐக்கியமாக உள்ளோம். நாம் இறப்பிறப்பு இல்லாத ஆத்மாக்களாக, உலக அனுபவங்களை நுகர்ந்து, பூலோக வாழ்க்கை எனும் பள்ளியில், வாழ்ந்தும் வளர்ந்தும் வருகின்றோம், பல பிறப்புகளில் வாழ்ந்தும் விட்டோம். இதை அறிவது பின்பற்றுபவர்களுக்கு ஒரு கவலையற்ற தன்மையை கொடுக்கின்றது, சாவப்பற்றிய பயத்தையும், நடுக்கத்தையும் நீக்குகின்றது. ஒரு நாத்திகவாதி நம்புவது போல இறப்பு தனது இருப்பின் இறுதியென்று ஓர் இந்து நினைப்பதில்லை. மட்டுமல்லாது, அவன் வாழ்க்கை ஒரே ஒரு வாய்ப்பு, சிறப்பாக வாழ்பவர்களுக்கு அனாதி சுவர்க்கமும், அவ்வாறு இயலாதவர்களுக்கு நிரந்தர நரகமும் என பார்ப்பதில்லை. ஓர் இந்துவுக்கு, இறப்பு மிகவும் உயர்வான அனுபவமாகும், இவ்வுலகிலிருந்து அடுத்த உலகிற்கு ஆழமான ஒரு புடை பெயர்வு, ஏக காலத்தில் ஒரு முடிவும், புதிய தொடக்கமும்.

மனதை நெகிழவைக்கும் நமது சுய தன்மையை மறைநூட்கள் பறைசாற்றினாலும், பெரும்பாலான ஆத்மாக்கள் இதனை அறியாமல் இருக்கின்றன. இந்த அறியாமை அல்லது “மறைத்தல்” இந்து சமயத்தில் கடவுளின் வேண்டுமென்றே அறிவை குறுக்கி வைக்கும் செயலாகப் பார்க்கப் படுகின்றது, இதனால் நமக்கு ஆத்ம வளர்ச்சி ஏற்படும். இந்தக் குறுகலான பார்வையும், ஆணவமும் சேர்ந்தே, உலகத்தையும், அதில் நமது இடத்தையும், நடைமுறை மனித கோணத்தில் பார்க்க வைக்கின்றது. இந்துப் பார்வையில், வாழ்க்கையின் இறுதி நோக்கம் மோட்சம், மறுபிறப்பிலிருந்து விடுதலை. பூலோக கர்மங்கள் தீர்ந்தும், தர்மம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டும், கடவுள் முழுமையாக அறியப்பட்டும் விட்டால் மோட்சம் கிட்டும். அனைத்து ஆத்மாக்களும், ஒன்று விடாமல், மிக உயர்ந்த ஆன்மீக நிலைகளை அடையவே விதிக்கப்பட்டு இருக்கின்றன, ஆனால் இந்த பிறவியிலேதான் என்ற கட்டாயம் இல்லாமல். இந்துக்கள் இதனை புரிந்து, இதுதான் கடைசி வாழ்க்கை என்ற மயக்கமின்றி இருப்பர். ஆழமான அனுபூதிகளை நோக்கியும், அடைந்தும், வாழ்க்கையின் மற்ற மூன்று இலக்குகளை, தர்மம், செல்வம், இன்பம் ஆகியவற்றை நிறை செய்ய தேவை இருப்பதை அறிவர்.

சில இந்து பாரம்பரியங்களில், மோட்சத்திற்குப் பிறகு, ஆத்மாவின் முடிவு , சுவர்க்கத்தில் கடவுளுடன் அனாதியாகவும் பேரானந்தத்தை நுகருவதாகவும் கருதப்படுகின்றது, கடவுளின் அருளால் கிடைக்கப்படும் ஒரு வித விமோச்சனம், பெரும்பாலான ஆபிரகாமிய மதனங்கள் நம்புவது போலவே. ஏனைய இந்து பாரம்பரியங்களில், ஆத்மாவின் முடிவு, கடவுளுடன் பரிபூரண இணைப்பு, ஒன்றே உள்ள நிலை, என கொள்ளப்படுகின்றது.

உலகின் தன்மை

இந்துப் பார்வையில், நமது எதிர்காலம் உருவகப்படுத்தப்பட்டும், ஆசைகள் நிறைவேற்றப்பட்டும், ஆத்மா முதிர்ச்சி அடையப்படும் இடமாகவும், உலகம் இருக்கிறது. மாயை எனப்படும் இந்த உலகம் இல்லையேல், அனுபவத்தின் மூலமாக ஆத்மா வளர்ச்சி அடைய முடியாது. உலகில் இருந்து நாம் அறியாமையிலிருந்து ஞானத்திற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், சாவு உணர்விலிருந்து இறப்பிறப்பற்ற தன்மைக்கு வளர்கின்றோம். உலகம் யாவும் ஓர் ஆசிரமம், நாம் அனைவரும் அதில் ஆன்மீக வளர்ச்சி அடைகின்றோம். கடவுளின் படைப்பாகிய இவ்வுலகத்திடம் நாம் அன்பு செலுத்த வேண்டும். உலகை நிந்தித்து, பயந்து, வெறுத்து இருப்பவர்கள் அனைத்தின் உள்ளார்ந்த நன்மையை புரிந்துக் கொள்ளவில்லை. உலகம் ஒரு மகிமை பொருந்திய இடம், பயப்பட வேண்டியதில்லை. வேதங்கள் அறிவுறுத்துகின்றன, “ கடவுளின் மகிமையினால் இப்பிரபஞ்சத்தையும், பூமியில் வாழ்வன, நகருவன அனைத்தையும் பார். நிரந்தரமற்றதை விட்டு, அனாதியில் மகிழ்ச்சியைக் காண்.”

உலக கல்வி ஏடுகளில், சாதாரணமாக, இந்து சமயம் உலகத்தை ஒதுக்கும் ஒரு நம்பிக்கையாக, தவறாகக் காட்டப்படுகின்றது. இந்தக் கருத்து திணிக்கப்பட்டது, 19 ஆம் நூற்றாண்டு மேற்கத்திய நாட்டு கீழை தேச பிரச்சாரிகளால் முதல் முறையாக இந்தியாவில் பயணிக்கும் போது, தாங்கள் கண்ட மிக வித்தியாசமான, வினோதமானவற்றை அறிக்கையிடும் போது நடந்தது, தற்கால மேற்கத்திய பத்திரிக்கையாளர்கள் செய்வது போலவே. நாகரீகமற்றதாக காணப்பட்டு, உலகை துறக்கும் யோகிகள், குகைகளில் தஞ்சம் பெற்று, புலன் உணர்ச்சிகளை மறுத்து, ஆக மொத்தத்தில் உலகத்தை துறந்த இயல்பு, மிகவும் கிளர்ச்சியூட்டும் விருப்பமாகி, வெறும் கல்விமான்களின் கண்களில், உலகநீர்ப்பு இந்து சமயத்தின் ஒட்டு மொத்தக் குணம் என்று பார்க்கப்பட்டது. இந்து மதத்தின் சாரமாகிய, காலத்தால் அழியாத துறவறம், கிருஸ்துவ மற்றும் புத்தமத உலக ஒறுத்தல் தன்மையை விட அதிக வித்தியாசம் கொண்டதல்ல. இம்மதங்களும் ஆன்மீக நோக்குக்காக உலகை விட்டு ஒதுங்கியிருக்கும் ஆண், பெண் துறவிகளைக் கொண்டுள்ளன.

மூன்று உலகங்கள் உள்ளதாக இந்து மறை நூட்கள் கூறுகின்றன: பூலோகம், சூக்கும லோகம், மற்றும் காரணலோகம். பூலோகம் ஜடப்பொருட்களால் ஆன தளமாகும், இங்கே ஐந்து புலன்களைக் கொண்டே விஷயங்கள் அறியப்படுகின்றன. அதிக மாற்றங்களுக்கு ஆளாகி, ஆக நிரந்தரமற்ற, பெரிதும் அடங்கலுக்கு உட்பட்ட இடமாக பூலோகம் இருக்கின்றது. சூக்கும லோகம், எண்ண-உணர்ச்சி தளமாகும். நாம் இங்கே எண்ணங்களாலும், உணர்ச்சிகளாலும் ஈடுபடுகின்றோம், தூக்கத்திலும், இறப்பின் பிறகும் முழுமையாக இடம் கொள்கிறோம். சூக்கும லோகம் பூலோகத்தின் உள்ளே இருக்கின்றது. சூக்கும உலகத்தின் மிக ஆழத்தில், தோற்றத்தின் மூலமாக, காரணலோகம் துடித்துக் கொண்டிருக்கின்றது. இதுவே மேன்மைஉணர்வு உலகமாகி, தெய்வங்களும் பெரிதும் முதிர்ந்த ஆத்மாக்களும் வாழும் இடமாகின்றது, இவ்விடத்தை யோகம் மற்றும் கோயில் வழிபாட்டு மூலம் அடையலாம்.

உலகத்தையும், அதில் இருக்கும் அனைத்தையும் கடவுள் படைத்ததாக இந்துக்கள் நம்புகின்றனர். பார்வைக்கு உட்பட்ட ஜட, பார்க்கமுடியாத ஆன்மீக பிரபஞ்சம் ஆகியவற்றின் ஒவ்வொரு அணுவையும், ஒவ்வொரு வினாடியும், கடவுளே படைத்தும் காத்தும் வருகின்றார். அனைத்தும் அவருள்ளே இருக்கின்றன. அவரே அனைத்துள்ளும் இருக்கின்றார். அவரே காலத்தையும், புவியீர்ப்பையும், பரந்து விரிந்த ஆகாசத்தையும், அளப்பரிய நட்சத்திரங்களையும் படைத்தார். படைப்பு என்பது பிரிதொரு பொருளை உருவாக்குவது அல்லாமல், தன்னிடமிருந்து வெளிப்படுத்துதல் ஆகும். அவர் படைக்கின்றார், தொடர்ந்தாற்போல் தனது படைப்புத்தோற்றங்களை காத்து, மீண்டும் அவற்றை தன்னிடமே இழுத்துக் கொள்கின்றார். படைத்தல், காத்தல், அழித்தல் யாவும் முடிவில்லாத ஒரு சுழற்சி என்கின்றது இந்து மதம். ஒவ்வொரு சுழற்சியின் படைப்பு மற்றும் காப்பு பகுதி ஏறத்தாழ 309 திரில்லியன் ஆண்டுகள் நிலைத்து, ஈற்றில் மகா பிரளயம் ஏற்படும். மகா பிரளயத்தின் போது, அனத்துத் தோற்றமும்- காலம், இடம், தனி உணர்வு, அனைத்து உலகங்கள், அவற்றின் வாழ்வன - கடவுளுக்குள் உறிஞ்சப்படும், அனத்தும் தன் மூலத்திடம் திரும்பும் காரியம், சில வேளைகளில் ஆற்று நீர் கடலுக்கு திரும்புவது போல கொள்ளப்படுகின்றது. அப்போது கடவுள் மட்டுமே நிலைத்திருப்பார், தான் மீண்டும் ஒரு படைப்பை வெளிப்படுத்தும் வரை.

நடைமுறையில் இந்து சமயம்

இந்து மதத்தை மூன்று தூண்கள் நிலைபெறச் செய்கின்றன: கோயில் வழிபாடு, மறைநூட்கள், குரு-சிஷ்ய வழக்கம். இவற்றை ஒட்டியே அனைத்து ஆன்மீக பயிற்சிகளும் சுழல்கின்றன. வேண்டுதல், தியானம், வழிபாடு கோயிலிலும் வீட்டிலும், மறைநூட் கல்வி, மந்திர உச்சாடனம், புனித யாத்திரைகள், தவம், தன்னலமற்ற சேவை, தாராள கொடை, நல்ல வாழ்க்கை மற்றும் பல யோகங்கள். விழாக்களும் இறைவாழ்த்துப் பாடல்களும் ஊக்கமிக்க நடவடிக்கைகளாகும்.

இந்து வாழ்க்கையில் கோயில்கள் ஒரு மைய இடத்தை வகிக்கின்றன. சிறிய கிராம கோயிலோ அல்லது கூட கோபுர ஆலயங்களோ, அவை கடவுளின் புனித இல்லமாகக் கருதப்படுகின்றன. ஒரு கோயிலில், இந்துக்கள் கடவுளிடம் நெருங்கிச் சென்று, உலகத்திலிருந்து அடைக்கலம் தேடுகின்றனர். கடவுளின் அருள் எல்லா இடங்களிலும் ஊடுருவி நிற்பினும், இத்தகு புனித இடங்களில் மிகச் சுலபமாக உணரப்படுகின்றது. தூய்மையடைந்த இவ்வாறான சூழலில், மூன்று உலகங்களும் (பூலோகம், சூக்கும லோகம், காரண லோகம்) அதிக பூரணத்துடன் சந்திக்கின்றன, ஆகையால் பக்தர்கள் கடவுள், கடவுளர்கள் மற்றும் தேவதைகளுடன் சுமூகத்தை நிலைநிறுத்துகின்றனர். பாரம்பரிய கோயில்கள் சிறப்பாக புனிததன்மையூட்டப்பட்டு, ஆன்மீக சக்தி கதிர்களைக் கொண்டு, தெய்வீக உலகங்களுடன் தொடர்புடன் உள்ளன.

கோயில் சடங்குகள், இந்து பூசாரிகளால் செய்யப்படுப்போது, பூசையாக, மணிஅடித்தல், ஆரத்தி காட்டுதல், காணிக்கை செலுத்துதல், மந்திர உச்சரிப்பு மூலம் தேவதைகளையும் தெய்வங்களையும் அழைத்து, அத்தகு தெய்வங்கள் ஆங்கே வந்து பக்தர்களை ஆசீர்வதித்து உதவியும் புரிகின்றனர். பூஜையின் போது, சுய வழிபாடானது ஒரு வேளை வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டாட, மரியாதை செலுத்த, நன்றி கூற, பிராயச்சித்தம் செய்ய, குற்றத்தை ஒப்புக்கொள்ள, வேண்டுதல்களை பயபக்தியோடு முன்வைத்தல், அல்லது மேன்உணர்வு ஆழத்தினை நோக்குவதற்காக இருக்கலாம். கல் அல்லது உலோகத்தால் ஆன தெய்வ மூர்த்தங்கள் வெறும் அடையாளங்கள் அல்ல; அவை வெற்று சிலைகள் அல்ல, அம்மூர்த்தங்கள் மூலமாக தெய்வீக அன்பும், சக்தியும், ஆசீர்வாதமும் தேவலோகத்திலிருந்து பூலோகத்திற்கு பெருக்கெடுத்து ஓடுகின்றன. பக்திமிக்க இந்துக்கள் இம்மூர்த்தங்களை அந்தந்த தெய்வத்தின் பூலோக உடலாகக் கொள்கின்றனர், அந்த தெய்வம் பூஜையின் போது அங்கே வந்து, அம்மூர்த்ததில் உணர்வுடன் அமர்கின்றது, பக்தர்களின் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் தெரிந்து, ஏன் பூசாரி உலோக/கல் மூர்த்தத்தை தொடுவதைக் கூட உணர்ந்து கொள்வதாக பக்தர்கள் அறிவர்.

பூசாரிகளுக்கு, மைய முக்கியத்துவமும் மரியாதையும் உள்ளது. ஒவ்வொரு கோயிலும் தனக்கென பூசாரிகளைக் கொண்டுள்ளன. சில கோயில்கள் ஒரே ஒருவரை நியமித்தாலும், ஏனையவை பெரிய பூசாரிக் குடும்பத்தையே கொண்டு அங்கிருக்கும் பல பல சந்நிதிகளையும், விரிவான விழாக்களையும் கொண்டாடும். பெரும்பாலனவர்கள் சிறுவயது முதலே பூஜை முறைகளில் சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகின்றனர். கடவுளின் இந்த மக்கள் கண்டிப்பாக மதத்தின் மெய்ஞ்ஞான அறிவும், மதத் தன்மைகளையும் முழுதுமாக உணர்ந்தும், சடங்கு வழிபாட்டில் தேவையான நூற்றுக்கணக்கான மந்திரங்களைப் பயின்றும் இருக்க வேண்டும். பொதுவாக பூசாரிகள் பக்தர்களின் சுயப் பிரச்சனைகளில் தலையிடுவதில்லை. அவர்கள் கடவுளின் தொண்டனாக, கடவுளின் இல்லத்தை கவனித்து, சம்பந்தமான காரியங்களில் ஈடுபட்டு, பக்தனுக்கும் கடவுளுக்கும் இடையே நிற்பது இல்லை. உத்தியோகக் கடமையிலிருக்கும் பூஜாரி பெருவாரி எல்லா நேரங்களிலும் திருமணமானவர், அவரின் உதவியாளர் வேண்டுமானால் திருமணமாகாத இளைஞனாகவோ, மனைவியை இழந்தவராகவோ இருக்கலாம்.

ஆன்மீக வாழ்க்கையின் நடுநாயகமாதலால், ஒரு கோயிலின் அருகே வசிப்பதை இந்துக்கள் முக்கியமாகக் கருதுகின்றனர். இங்குதான், தெய்வத்தின் இல்லத்தில், ஒரு பக்தன் தெய்வீகத்துடன் தனது உறவை வளர்த்துக் கொள்கின்றான். நீண்ட காலம் விலகியிருக்க விரும்பாதலால், வாரம் ஒரு முறை சென்றும், ஒவ்வொரு முக்கிய விழாவில்் கலந்துக் கொண்டும், ஆண்டுக்கொருமுறை தூரத்திலிருக்கும் ஒரு கோயிலுக்கு யாத்திரைச் சென்று சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறவும், தினசரி காரியங்களில் இருந்து ஒரு விடுப்பையும் பெறுகின்றனர்.

ஓர் இந்துவுக்கு வாழ்வில் வலியுறுத்தப்படுவது யாதெனில், ஆன்மீக வளர்ச்சி. ஏனைய குடும்ப மற்றும் தொழில் ரீதி கடமைகளையும், குறிக்கோள்களையும் அடைந்தவாறே. வாழ்க்கை ஒரு விலை உயர்ந்த ஒன்று, முன்னேற்றத்திகுத் தேவையான பறந்து போகின்ற வாய்ப்புக்களைக் கொண்டு, உள்ளார்ந்த மாற்றங்களை உண்டாக்கி, எப்பொழுதும் இந்த உண்மையில் நன்றாக திளைத்தவாறே. அவனுக்கு செய்யும் தொழில் வழிபாடாகும், தனது சமய நம்பிக்கை வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்பட்டு.

இந்து மதத்தின் ஆன்மீக மையம் அதன் புனித ஆண்களும் பெண்களும் - மில்லியன் கணக்கான சாதுக்களும், யோகிகளும், சுவாமிகளும், வைராகிகளும், சற்குருமார்களும் தங்கள் வாழ்க்கையை முழுநேரமாக சேவை, பக்தி, மற்றும் கடவுளை அறிவதற்காக அர்ப்பணித்துக் கொண்டு, சனாதன தர்மத்தின் அனாதி உண்மைகளை பறைச்சாற்றிக் கொண்டிருப்பவர்கள். அன்றாட வாழ்க்கையில், ஏன் ஒரு வேளை தர்மத்தின் எந்தவொரு பகுதியும் ஓர் ஆன்மீக ஆசிரியர், சற்குருவை, போன்ற முக்கியத்துவம் பெறவில்லை. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இத்தகு புனித ஆண்களும் பெண்களும் வாழும் ஆன்மீக ஆற்றலாகும். நம்பிகையூட்டிகளாகவும், விளக்கமளிப்பவர்களாகவும், நெருங்கிய வழிகாட்டியாக, தானே கடவுளை அறிந்த நிலையில், ஏனையவர்களை கடவுள் உணர்வுக்கு கொண்டுவர வல்லமை உள்ளவர்கள். ஒரு பார்வை, தொடல், ஏன் ஒரு எண்ணம் கூட, அத்தகு பெருமை வாய்ந்த ஆத்மாக்களிடம் இருந்து வருமாகில், அதை ஒரு ஆசீர்வாதமாக இந்துக்கள் நம்புகின்றனர். இதனால் ஆத்ம பரிணாம வளர்ச்சிக்கு உதவியும், சுயமாக ஆகாவிட்டாலும், ஆழ்மன சுத்திகரிப்பு மூலம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களும் ஏற்படுகின்றது. மேலும் அத்தகைய ஆத்மாவின் சக்தி போதுமளவு உறுதியாய் இருப்பின், மற்றும் தாம் அவருடன் போதுமான ஒத்துப்போகும் போது, தியானம் செய்ய போதுமளவு சக்தி கிடைப்பதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர்.

அனைத்து இந்து சமூகங்களிலும் பக்தர்களின் ஆன்மீக பயிற்சிகளையும் வளர்ச்சியையும் கண்காணிக்கும் குருமார்கள் இருக்கின்றனர். அவ்வாறான ஆசான்கள், ஆணாகினும் பெண்ணாகினும் சரிசமமாக மதிக்கப்படுகின்றனர். வெகு சில மதங்களிலேயே பெண்கள் அத்தகு உயர்மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அமர்வுகளுக்கு அனுமதிக்கப் படுகின்றனர்.

தர்மத்தைப் பின்பற்றி, கோட்பாடுமிக்க , ஆக்கும்திறன் வாய்ந்த வாழ்க்கை வாழ ஆழமான இச்சை இந்து வாழ்க்கை பாதையில் காணப்படுகின்றது. பின்பற்றுபவர்களிடையே விதைக்கப்படும் நற்பண்புகள் உண்மையாயிருப்பது, விசுவாசம், மனநிறைவு மற்றும் பேராசை, காம வெறி, கோபம் போன்ற தவிர்ப்புக்கள். தர்மத்தின் ஆதாரம் அகிம்சை, அனைத்து உயிர்களுக்கும் தீங்குச் செய்யாமை. தர்மத்தை வெளிப்படுத்திய வேேத ரிஷிகள், நமது சுற்றுச் சூழலுடன் சுமூகமாக இருப்பது, மக்களிடையே அமைதி நிலைப்பது, நம்முள் கருணை நிறைவது அகிம்சையாலே என்று பறைசாற்றினர். பக்திமிகு பின்பற்றுனர் சைவ உணவராய் இருந்தும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்க விரும்புகின்றனர். மற்ற எல்லா மதங்களில் இருக்கும் மக்களும் சுற்றுச்சூழலைப் பற்றி கவனம் கொண்டு, எதிர்கால தலைமுறையினருக்காக அதனை முறையாக பாதுகாக்க விரும்புகின்றனர். இந்துக்களுக்கும் இந்த பரிவில் பங்கு கொண்டு, தம்மைச் சுற்றியிருக்கும் உலகை கடவுளின் படைப்பாக மதிக்கின்றனர். இந்து பாரம்பரியங்கள் எப்போதும் இயற்கையைப் போற்றியும், பாதுகாத்தும் வந்துள்ளன. அவர்கள் இயற்கையிலேயே பூமியின் பல்வகைக்கும், வளங்களுக்கும் பாதுகாப்பு வழங்க காரியமாற்றி, காக்கப்பட்ட, நிலைத்த சுற்றுச் சூழலைப் பெற குறிக்கோளாயுள்ளனர்.

கடவுளுக்கும், மனிதகுலத்துக்கும் ஆன தன்னலமற்ற காரியம், சேவையென அறியப்பட்டு, ஆணவத்தை மென்மையாக்கி, தெய்வீகத்திடம் செல்லும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது. தானம், மனிதாபிமான காரியங்கள் பலவற்றின் மூலமாக வெளிப்படுத்தப் படுகின்றது, முக்கியமாக அடுத்தவருக்கு உணவளிக்கும் அன்னதானம்.

இந்துக்கள் பிரிவுசார்பு அடையாளங்களை, திலகம் எனப்படுவது, தம் நெற்றியில் புனித சின்னங்களாக அணிந்து, தம் பாரம்பரிய வழக்கத்தை காட்டுவர். இறந்த உடலை புதைப்பதை விட, விரும்பப்படுவது சுட்டுஎரித்தல், இதனால் ஆத்மா அவ்வுடல் கட்டிலிருந்து மிக சீக்கிரத்தில் விடுபட்டு, தனது பரிணாம வளர்ச்சியில் தொடர அனுமதிக்கப்படுகின்றது.

ஒருவேளை இந்து மதத்தின் மிகவும் புத்தெழுச்சியூட்டும் பாங்கு என்னெவெனில் அதன் திறந்த சிந்தனை மற்றும் சுதந்திர போக்கை ஊக்குவிப்பதும் எனலாம். மறைநூட்களும், குருமார்களும் பின்பற்றுபவர்களை உண்மையப் பற்றி கேள்வி கேட்கவும் ஆராயவும் ஊக்குவிக்கின்றனர். வழிபாட்டு, மற்றும் தியான மார்க்கங்களை ஆழ்ந்து, ஆய்ந்து, நேரிடையாகவே தெய்வீகத்தை அனுபவிக்க ஊக்குவிக்கப் படுகின்றனர். இந்த திறந்த மனப்பாங்கு, ஏனைய கலாச்சாரம், மதம், பார்வை கோணங்கள் ஆகியவற்றுடன் இந்து மதம் கொண்டுள்ள சமரசத்தின் ஆணிவேராகும், வாசகமாக காட்டப்படும், “ஏகம் சத் விப்ரா பகுத வடந்தி,” பொருள் “ உண்மை ஒன்றே, ஞானிகள் அதை வெவ்வேறு வகையில் விளக்குவர்.” ஓர் இந்து தனது பாதையை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கவும், தெய்வீகத்தை அணுகும் முறையை நிர்ணயிக்கவும், தனது வாழ்நாளில் தேவைக்கேற்ப மாற்றங்களை செய்யவும் அனுமதிக்கப் பட்டுள்ளது. மத எதிர்ப்புக் கொள்கை என்றோ கொள்கை மீறுதல் என்ற ஒன்றோ இந்து மதத்தில் இல்லை. இந்து மதத்தின் இயற்கையான உள்ளடக்கும் தன்மையுடன் சேர்ந்து, வெறித்தனம், அடிப்படைவாதம் அல்லது குறுகிய மனப்பான்மை ஆகியன இந்து மதத்தில் அணுமதிக்கப்படுவதற்கான இடம் மிகக் குறைவே. இதனால் மிகச்சரியாகவே, இந்து மதம் ஒரு பரந்தவெளியென கூறப்படுகின்றது, குறுகியஅடைபட்ட இடமல்ல.

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், பிரபல தத்துவவாதியும் இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் 1962 இல் இருந்து 1967 வரை இருந்தவர், தனது ‘இந்துவின் பார்வையில் வாழ்க்கை’ என்பதில் சுருங்கச் சொல்வதாவது: “இந்து அங்கீகரிப்பது ஒரே உச்ச பொருள், ஆன்மா, பல்வேறு பெயர்கள் அதற்கு கொடுக்கப்பட்டாலும். கடவுள் உலகத்தில் இருக்கின்றார், உலகமாக இல்லாவிட்டாலும். வெறும் இடைச்செயலாக உயிரை அல்லது உணர்வைப் படைப்பது என இல்லாமல், சதா கணமும் தொழில் புரிகின்றார். இயற்கை மற்றும் இயற்கை கடந்த எனும் இருமை கிடையாது. தீங்கு, தவறுகள், அவலட்சணம் ஆகியன உச்சம் அல்ல. எந்த ஒரு கருத்தும் முழுத் தவறு ஆகாது, எந்த மனிதனும் தீர்க்கமாக தீயவனாகி கடுமையாக கண்டிக்கத்தக்கவனல்ல. நரகம் ஒன்று இல்லை, அப்படி இருந்தால் கடவுள் இல்லாத ஓரிடம் இருப்பதாக பொருளாகும். கடவுளின் அன்பை மீறியவை பாவமாகும். கர்ம வினை சட்டம் சொல்வதாவது, தனிமனித வாழ்க்கை ஒரே தவணையல்லாமல், தொடர் நிகழ்ச்சி. ஒரே தொடர்ந்த நகர்வில் சுவர்க்கமும் நரகமும் உயர்ந்த அல்லது தாழ்ந்த தளங்களாகும். ஒவ்வொரு வகையும் தனக்கென ஒரு தன்மையை பின்பற்ற வேண்டியது உண்டு. நாம் இருப்பதாகக் கூறப்படும் வாழ்க்கை நிலையில் நமது பொறுப்பை ஆற்ற வேண்டும். இந்து மதம் உறுதியுடன் சொல்வதாவது, மத அனுபவங்களால் தெய்வ வெளியீடு நிச்சயம் வேறுபடும், அனைத்து நம்பிக்கை வகைகளும் ஏற்றுக் கொள்ளப்படும், ஒரே குறியை நோக்கி ஒவ்வொருவனும் தன் பாதையில் வழிகாட்டப்படுகின்றான். இவையே இந்து மதத்தின் சில மைய கோட்பாடுகள். இவற்றால்தான் இன்றும் இந்து மதம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.”

நன்றி இந்து டுடே
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum