இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கைவிடாத கடவுள்

Go down

கைவிடாத கடவுள் Empty கைவிடாத கடவுள்

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 3:31 pm

கைவிடாத கடவுள்
டாக்டர் ஹேமா சந்தானராமன், M.A.,M.Ed.,Ph.D.

புறம்பணையான்
கிராமங்களில் கிழக்குத் திசையில் சிவாலயமும், மேற்குப் பக்கத்தில் விஷ்ணு ஆலயமும் எழுப்புவார்கள். கிராமத்தின் எல்லைகளில் காவல் தெய்வங்களுக்குக் கோயில்கள் நிர்மாணிப்பார்கள். அவ்வகையில் ஐயனார் கோயில்கள் கிராமங்களின் எல்லையில் அமைந்திருக்கும். ஊரின் புறத்தில் (எல்லையில்) கோயில் கொள்வதால் ஐயனாரை, "புறம்பணையான்" என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. "புறம்பணையான் வாழ் கோட்டம்" ஒன்று புகார் நகரத்தில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

"ஐயன்" என்றால் தலைவன் என்று பொருள். ஊர்க்காவல் தெய்வங்களின் தலைவனாக இருந்து காப்பதால் அவரை "ஐயனார்" என்றனர். "சாஸ்தா" என்றால் காப்பாற்றுகிறவர் என்றும், கைவிடாதவர் என்றும் பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்று வழங்கி வருகிறது. சாத்தனூர், சாத்தன்குளம் என்றெல்லாம் ஊர்களுக்குப் பெயரிட்டுள்ளனர். சாத்தனார் என்ற பெயரில் புலவர்களும் புகழ் பெற்று விளங்கினர்.

கந்தபுராணத்தில் ஐயனார்
கச்சியப்பரின் கந்த புராணத்திலுள்ள, "மகாசாத்தாப் படலம்" ஐயனாரின் தோற்றம், ஆற்றல் போன்ற செய்திகளை விளக்குகிறது.

தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமுதத்தை எடுத்தனர். அசுரர்களுக்கு அமுதம் கிடைக்காமல் செய்திடத் திருமால் மோகினி வடிவம் கொண்டார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் தங்களுக்கு மோகினியே வேண்டும் என்றனர். தேவர்கள் அமுதமே வேண்டும் என்றனர்.

திரண்ட மென்தனங்களை உடைய மோகினியைக் கூட விரும்பிய அசுரர்கள் யாவரும் தங்களுக்குள் சண்டையிட்டு மடிந்தனர். எவ்வாறெனில், மூங்கிற் கிளைகள் ஒன்றுக்கொன்று உரசித் தோன்றும் தீயில் தாமே அழிவது போல் இருந்தது! என்கிறார் கச்சியப்பர். பரந்து விரிந்து நிற்கும் மூங்கிற் காட்டில், மூங்கில் கிளைகள், ஒன்றோடு ஒன்று உரசுவதால் தானாக நெருப்புப் பற்றிக் கொள்ளும். அதனால் மூங்கிற்காடு முழுவதும் எரிந்து விடும். அசுரர்களும் அவ்வப்பொழுது தங்களுக்குள் ஏற்படும் சண்டையில் முழுவதுமாக மடிந்து போவார்கள். மோகினிக்காகத் தங்களுக்குள் சண்டையிட்ட அசுரர்கள் அழிந்தார்கள்.

உமை, திருமால், காளி, துர்க்கை என்ற நான்கு சக்திகளில் திருமாலும் ஒருவர். அதனால், சிவபெருமான், பெண்கள் எவரும் ஆசை கொள்ளத்தக்க எழில் மிகுந்த வடிவத்தை எடுத்துக் கொண்டு மோகினி இருந்த இடத்திற்குச் சென்று கூடினான். திருமாலை, புருஷ சக்தி என்று சைவநெறியில் கூறுவார்கள்.

இருண்ட கருங்கடல் போன்ற திருமேனியும், வானில் உலாவும் செஞ்சடையும், கையில் மலர்ச் செண்டும் உடைய ஆற்றல் மிகுந்த ஒரு மகன் தோன்றியவுடன், ஈசன் மோகினியிடமிருந்து விலகினான். அவ்வாறு ஹரிஹர புத்திரராகத் தோன்றிய குமாரனே ஐயனார் ஆவார். ஈசன் அரிய வரங்களைக் கொடுத்து அக்குமாரனை உருத்திரர் கணத்தில் சேர்த்து உலாவச் செய்தான்.

இந்திராணியைப் பாதுகாத்தவர்
சூரபன்மனின் கொடுமைகளை ஈசனிடம் கூறி முறையிடுவதற்காக இந்திரன் திருக்கயிலைக்குப் புறப்பட்டான். அப்போது அவன் சீர்காழியில் மறைந்து வாழ்ந்து வந்தான். தான் திருக்கயிலைக்குச் சென்று திரும்பும் வரை, இந்திராணியை மகாசாஸ்தா காப்பாற்றுவார் என்று இந்திரன் கூறினான். “அந்த சாஸ்தா யார?” என்று இந்திராணி வினவினாள். அப்போதுதான் இந்திரன் மகா சாஸ்தாவின் மகிமையை இந்திராணிக்கு எடுத்துக் கூறினான்.

இந்திரன் கயிலைக்குச் சென்றவுடன் இந்திராணி தவம் மேற்கொண்டாள். தன் உடல் மெலிவதையும் பொருட்படுத்தாது கடுந்தவம் இயற்றினாள். அவள் தவமியற்றி வந்த சோலையின் பக்கமாக, சூரனின் தங்கை அசமுகி வந்தாள். அவளுக்குத் துணையாகத் துன்முகி என்பவள் வந்தாள். அங்குக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஐயனாரின் படைத் தலைவரான வீரமாகாளர் அசமுகியைக் கண்டார்.

“இக்கொடியவளின் வரலாற்றை அறிந்த நான், இவளுடைய செயல்களை மறைந்திருந்து பார்ப்பேன்; இவள் செய்யும் குற்றத்திற்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பேன்;" என்று கூறிய வீரமாகாளர், வில்லைக் கையிலேந்திய வேடர் உருவத்துடன் மற்றோர் இடத்தில் இருந்து கவனித்தார்.

அசமுகி இந்திராணியின் அழகைக் கண்டு வியந்தாள்! “இவளை எப்படியும் சூரனிடம் சேர்ப்பேன்!” என்று கூறினாள். தவத்தில் அமர்ந்திருந்த இந்திராணியிடம் சூரனின் வீரம், வரம், புகழ் அனைத்தையும் விளக்கிக் கூறினாள். இந்திரனை விட சூரன் பல வகையாலும் மேம்பட்டவன் என்று எடுத்துரைத்தாள்.

அசமுகியின் சொற்களைக் கேட்டு, காதுகளைப் பொத்தி, ஆற்றொணாது அழுதாள் இந்திராணி. பிரமனின் குமாரரான காசிப முனிவரின் மகளான அசமுகி அவ்வாறு பேசுதல் தகாது என்று கூறிய இந்திராணி, அசமுகியை அவ்விடத்திலிருந்து அப்பாற் செல்ல வேண்டினாள். ஆனால், அசமுகி மீண்டும் சூரனின் பெருமைகளையும், இந்திரனின் சிறுமைகளையும் எடுத்துக் கூறினாள்.

“என் அண்ணன் சூரன் அழிவில்லாத ஆயுளை உடையவன்; உன் இந்திரன் அழியும் தன்மை உடையவன்; பழிகள் எதுவும் இல்லாதவன் சூரன்; பழியாகிய கடலில் மூழ்கியவன் உன் கணவன் இந்திரன்; பெருந்துன்பங்களை அனுபவிப்பவன் இந்திரன். சூரன் மனக்களிப்பில மிதப்பவன்; பலரையும் வணங்குபவன் இந்திரன். எவரையும் வணங்காதவன் என் அண்ணன் சூரன்!” என்று அசமுகி விளக்கினாள். “நீ சூரனுக்கு மனைவியானால், பதுமகோமளை என்ற பட்டத்தரசியையும் அவன் வெறுத்து ஒதுக்கி விடுவான். எனவே, நீ என்னுடன் வீரமகேந்திரபுரத்திற்கு வருக!” என்று இந்திராணியை அழைத்தாள் அசமுகி.

“இந்திரனைத் தவிர வேறு எவரிடத்திலும் சிந்தை வைத்திடேன்! தீதில்லாத கற்புடையவள் நான்!" என்று பதிலளித்தாள் இந்திராணி. தனக்குத் தகுந்த காவல் உள்ளதென்று கூறி, அசமுகியை அப்பால் செல்ல எச்சரித்தாள் இந்திராணி.

எதற்கும் அஞ்சாத அசமுகி இந்திராணியின் கரத்தைப் பற்றி இழுத்துச் செல்ல முற்பட்டாள். தன்னை விடுவித்துக் கொள்ள இயலாத இந்திராணிக்கு, இந்திரன் குறிப்பிட்ட ஐயனார் நினைவில் வந்தார். அவரே தன்னைக் காக்க வல்லவர் என்பதால் ஐயனாரை அழைத்து ஓலமிட்டாள்.

“நச்சுப் பையை உடைய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், சிவபெருமானும் பெற்ற ஐயனே! உனக்கு அபயம்! தேவர்களுக்கு ஆதியானவனே! அபயம்! கையில் மலர்ச்செண்டை உடையவனே! அபயம்! எங்கள் தெய்வமே! அபயம்! உண்மைப் பொருளானவனே! அபயம்! பழம் பெருமை உடைய வீரனே அபயம்!

ஒருபுறம் வேதங்கள் உருத்திரன் என்று புகழும் சிறப்புடையவனே! அபயம்! மூலகாரணக் கடவுளே! அபயம்! கடல் போன்ற நீலநிறத் திருமேனி உடையவனே! அபயம்! பூரணாதேவிக்கு இறைவனே! அபயம்! புஷ்கலாதேவிக்குக் கணவனே! அபயம்! வெள்ளை யானையின் மீது வரும் பெருமானே! அபயம்!” என்று கூவினாள் இந்திராணி.

ஓலம் என்று கூறி, ஐயனாரை இந்திராணி அழைத்த அனைத்தையும் வேடர் உருவத்தில் இருந்து கவனித்து வந்த ஐயனாரின் படைத் தலைவர் வீரமாகாளர் உடனே வெளிப்பட்டார்.

விரைவாக வந்த வீரமாகாளர், கூவியழைத்த இந்திராணியிடம், "அம்மா! அழுதல் வேண்டாம்; அசமுகி என்ற இக்கொடியவளுக்கு இம்மியளவும் அஞ்ச வேண்டாம்; தங்களைத் தீண்டிய இவளுடைய கரத்தை யான் முறைப்படி வெட்டித் தங்களை விரைவில் விடுவிப்பேன்!" என்றார்.

ஊர்க்காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர் என்ற முறையிலும், அத்துமீறி நுழைந்து, ஒரு பெண்ணைத் துன்புறுத்தியவளைத் தண்டிக்க வேண்டிய முறையிலும், தவறு செய்யும் அங்கத்தினை வெட்டுதல் என்ற நீதி முறைப்படியும், பகைவர் நாட்டைச் சேர்ந்த பெண்களைக் கொல்லாது, அங்கங்களைச் சிதைத்து அனுப்புதல் என்ற இராஜநீதிப்படியும் அசமுகியின் கரத்தைத் துண்டிப்பேன் என்றார் வீரமாகாளர். இராமாயணத்தில் இலட்சுமணனும் இந்த அரசநீதி முறைப்படியேதான் சூர்ப்பனகையின் அங்கங்களைச் சிதைத்து அனுப்பினான்.

வீரமாகாளருடன் சிறிது நேரம் போரிட்ட அசமுகி, அவரை வெல்லுவது அரிது என்று உணர்ந்தாள். அதனால், விரைவாக இந்திராணியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினாள்.

வீரமாகாளர், அசமுகி இந்திராணியை இழுத்துச் செல்வதைக் கண்டார். "ஓடுகிறாய் போலும்! நில்!" என்றார். தனது செங்கையால் அசமுகியின் கூந்தலைப் பற்றியிழுத்து, தம் அரையில் செருகியிருந்த உடைவாளை எடுத்தார். மயில் போன்ற இந்திராணியைத் தொட்ட கையை வெட்டினார். அதனைக் கண்ட விண்ணவர்கள் துள்ளினர். அசமுகி அழுதபடி கீழே வீழ்ந்தாள். அவளுடன் சேர்ந்து இந்திராணியின் கையைப் பிடித்த துன்முகியின் கரத்தையும் வெட்டினார் வீரமாகாளர். இந்திரன் இந்திராணியிடம் கூறியிருந்த படி, மகா சாஸ்தா என்ற ஐயனார் இந்திராணியைக் கைவிடாது காத்தார். சீர்காழியில் ஐயனார் கோயில் இருக்கும் பகுதி இன்றும், "கைவிடான்சேரி" என்றே அழைக்கப்படுகிறது.

ஐயனார் சம்சாரி! ஐயப்பன் பிரம்மச்சாரி!

ஐயனாருக்குப் பூரணாம்பாள், புஷ்கலாம்பாள் என்ற இரு மனைவியர் உள்ளதாகக் கந்த புராணம் உரைக்கிறது. பல கிராமங்களிலும் ஐயனார், தேவியர் இருவருடன் வீற்றிருக்கிறார். தனியே இருக்கும் ஐயனாரை, "பால சாஸ்தா" என்றும், தேவியருடன் வீற்றிருக்கும் ஐயனாரை, "தர்மசாஸ்தா" என்றும் குறிப்பிடுவார்கள்.

ஐயப்பன் பிரம்மச்சாரி என்பது அனைவரும் அறிந்த செய்தி. இது முரண்பாடா? இல்லை! மூலமூர்த்தியையும், அவதார மூர்த்தியையும் வேறுபடுத்தி அறிந்தால் முரண்பாடு தோன்றாது.

மூலமூர்த்தியான திருமாலுக்கு, ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று தேவியர் உள்ளனர். அவர் (விஷ்ணு) வாமன அவதாரத்தில் பிரம்மச்சாரியாகத் திகழ்ந்தார். இராமாவதாரத்தில் ஒரு மனைவியுடன் வாழ்ந்து காட்டினார். கிருஷ்ணாவதாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன் வாழ்ந்தார்.

அதுபோல், மூலமூர்த்தியான ஐயனார் (சாஸ்தா) பூரணை, புஷ்கலை என்ற இரண்டு சக்திகளுடன் வீற்றிருக்கிறார். அவரே பந்தள நாட்டில் மணிகண்டன் (ஐயப்பன்) என்ற பெயருடன் அவதாரம் செய்தார். அந்த அவதாரத்தில் அவர் நித்திய பிரம்மச்சாரியாக விளங்கினார். அதாவது, ஐயப்பன் என்ற மணிகண்டன் அவதாரமூர்த்தி ஆவார். மூலமூர்த்தி ஐயனார் ஆவார். மூலமூர்த்தியாகிய ஐயனார் இரண்டு பெண்களை மணந்த சம்சாரி! அவதாரமூர்த்தி மணிகண்டன் என்ற ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரி!

அண்ணனும் தம்பியும் அவரே!
ஐயனார் அவதாரம் முருகன் தோற்றத்திற்கு முன்னரே நிகழ்ந்தது! ஆகவே, ஐயனார் முருகனுக்கு அண்ணன் ஆவார். மணிகண்டன் முருகன் தோற்றத்திற்குப் பிறகு அவதரித்ததால் ஐயப்பனை தம்பி என்று கூறுகின்றனர்.

பிடவூர் சாஸ்தா
சுந்தரருடன் திருக்கயிலைக்குச் சென்ற சேரமான் பெருமாள் நாயனார், "திருக்கயிலாய ஞான உலா" என்ற நூலை, சிவபெருமான் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார். திருக்கயிலையில் ஈசன் முன்னிலையில் அரங்கேறிய தமிழ் நூலாகிய திருக்கயிலாய ஞான உலாவை, அங்கிருந்து கேட்ட சாஸ்தா, பூவுலகிற்குக் கொணர்ந்தார். பிடவூர் என்ற தலத்து ஐயனார் கையில் அந்தச் சுவடியைத் தாங்கியுள்ளார். ஞான உலாவைக் கொணர்ந்த சாஸ்தா, தீய சக்திகளின் ஈன உலாவைத் தடுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.






ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum