இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பிராணனை உய்விக்கும் பிராணநாதேஸ்வரர் மாங்கல்ய பலன் கொடுக்கும் மங்களாம்பிகை.

Go down

பிராணனை உய்விக்கும் பிராணநாதேஸ்வரர் மாங்கல்ய பலன் கொடுக்கும் மங்களாம்பிகை. Empty பிராணனை உய்விக்கும் பிராணநாதேஸ்வரர் மாங்கல்ய பலன் கொடுக்கும் மங்களாம்பிகை.

Post by ஆனந்தபைரவர் Tue Nov 23, 2010 2:53 pm

கும்பகோணம்- மயிலாடுதுறை பேருந்துச் சாலையில் உள்ள ஆடுதுறை என்ற ஊரிலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரத்தில், சூரியனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது குரங்காடு துறை எனப்படும் ஆடுதுறை தலம். (திருவாவடு துறை என்பது வேறு.) இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரில் இறைவி பவளக்கொடியம்மையுடன் அருள்புரிகிறார். இந்தத் திருத்தலத்திலிருந்து வடக்கே இரண்டு கி.மீ. தூரத்தில் அமைந்திருப் பதுதான் "பஞ்ச மங்கலத் தலம்' என்று சிறப்பித் துப் போற்றப்படும் திருமங்கலக்குடி திருத்தலம். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்கள தீர்த்தம், மங்கலக்குடி, மங்களாம்பிகை ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது.

நவகிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டுப் போக்கிக் கொண்டமையால், நவகிரக கோவில் களுக்குத் தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டுமென்பது நியதி!.

இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும்; மாங்கல்ய பலம் நீடிக்கும்; ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம். அப்பர், சம்பந்தர் ஆகியோர் பாடிய திருத்தலம் இது. கார்த்திகை மாத முதல் ஞாயிறு தொடங்கி, தொடர்ந்து 11 ஞாயிற்றுக் கிழமைகள்- தயிர் சாதத்தை வெள்ளெருக்கு இலையில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து அதை உண்ண, நோய் குணமடைவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்து பிணிகள் விலகியோர் பலருண்டு..

ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு திசை நோக்கியுள்ளது. முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும் நடராஜ சபையும் உள்ளன. இரண்டு நடராஜ உற்சவ மூர்த்தங்கள் இங்கு காணப்படுவது சிறப்பு. ஒருவர் ஆனித் திருமஞ்சன நாளிலும் மற்றொரு வர் ஆருத்ரா தரிசன நாளிலும் திருவீதி உலா வருகின்றனர்..

கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் உள்ளார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன..

சூரியன், திருமால், காளி, பிரம்மன், அகத்தியர் முதலானோர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. வடமொழியில் கோங்கிலவம் எனப் படும் வெள்ளெருக்கு தல விருட்சமாக விளங்கு கிறது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஆலயம் இது..

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கன் காலத்தில், அலன வாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப் பணத்தை ஆலயம் எழுப்பச் செலவிட்டாராம். இதையறிந்த மன்னன் அவரை அழைக்க, அவரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தாராம்..

இறக்கும்போது அவர், "நான் இறந்தவுடன் என் உடலைப் பல்லக்கில் திருமங்கலக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கமும் செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். .

அவ்வாறு அவரது இறந்த உடலை எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்ய பாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள். பல்லக்கு ஊர் எல்லையருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. அனைவரும் திகைத்துப் போய் நிற்க, பல்லக்கிலிருந்து கீழே குதித்த அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று, பிராணநாதரைக் கட்டித் தழுவி, "பிராணனைக் கொடுத்த பிராண நாதா' என்று போற்றி வழி பட்டாராம்..

(அன்று முதல் இறைவன் பிராண னைக் கொடுத்த அருள்மிகு பிராண நாதேஸ்வரர் என்றும்; மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அன்னை மாங்கல்யம் கொடுத்த அருள்மிகு மங்களாம்பிகையென்றும் போற்றப்படுகின்றனர்.) அப்போது அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர்- மங்களாம்பிகையிடம், "எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்' என்று வேண்ட அவ்வாறே அருளினர். அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது..

வடமொழியில் சிவா என்ற சொல்லுக்கு மங்களம் என்று பொருள். "சிவசிவ', "நமசிவாய' என்று சொல்லும் பொழுதெல்லாம் "பொங்கும் மங்களம் எங்கும் தங்குக' என்பதே பொருளாகும்..

நாம் வாழ்க வளமுடன் என்று சொல்வதும் இதைத்தான். திருமங்கலக்குடியென்ற பெயரே மங்களங்கள் நமக்குக் கிட்ட வேண்டுமென் பதைத்தான் குறிப்பிடுகிறது..

சோழநாட்டு வடகரைத்தலமான திருமங்கலக் குடியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத பிராணநாதேஸ்வரரைத் தொழுதால் மங்களங்கள் நம்மை நாடி வரும் என்பதில் சந்தேகமே இல்லை..
-விஜயலட்சுமி சுப்பிரமணியம்

நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum