இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சித்தர் சிந்தனை

Go down

சித்தர் சிந்தனை Empty சித்தர் சிந்தனை

Post by ஆனந்தபைரவர் Sun Aug 01, 2010 3:59 pm

சித்தர் சிந்தனை
முனைவர், பேராசிரியர் தண்டாங்கோரை நடேச கணபதி

பத்ரகிரியாரின் மெய் ஞானப் புலம்பல்

புலம்பல் 161
மனத்தை ஒரு வில்லாக்கி, வான் பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி எய்துவது இனி எக்காலம்?

பொழிப்புரை: மனம், புலன்கள், அறிவு இவை அலைந்து திரியாமல், அவற்றைக் கட்டுப்படுத்தி உண்மை நிலையை அறிவது எக்காலம்?

விளக்கவுரை: மனம், புலன்கள், அறிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சாதனம் யோகம் ஒன்றுதான். யோகம் என்பது புறப்பார்வையைக் கடந்து அகப்பார்வை பெறுதலாகும். சிவவாக்கியர் இதனை “நோக் கொணாத நோக்கு” (பாடல் 288) என்று குறிப்பிடுகிறார். யோகம் என்பது ஒரு முகச் சிந்தனை; மிக உச்சக்கட்டத்தை அடைந்து விட்ட நிலை. இங்கு விழிப்புநிலை உணர்வு மிகவும் தூய்மையுற்று விளங்குகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஆத்மாவுக்குள்ளேயே பரமாத்மாவை உணரும் முயற்சி இது. இதுவே தியானம்; இதுவே உள்ளார்ந்த உணர்வு ஆகும். யாவற்றிலிருந்தும் விட்டு விலகிநிற்கும் நிலை என்பதே இந்த முயற்சியின் செயல்முறை. இது ஒரு திட்பம் நிறைந்த ஒருமுக நோக்கு - (ஏகாக்ரதா). இதனால் புலன்களின் செயல்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எல்லாவிதமான யோகங்களுக்கும் உள்ள அடிப்படை நோக்கம், ஒன்றோடொன்று இணைகின்ற, ஐக்கியமேயாகும். யாக்கையுள் கட்டுப்பட்ட ஆத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் இடையே ஏற்படும் ஐக்கிய பாவமே யோகம் என்று குலார்ணவ தந்திரம் கூறுகிறது. முழுமையான ஒன்றுபடும் முயற்சிக்கான உணர்வே எல்லா யோகங்களும் கையாளும் சாதனம் என்று கூறலாம். “யோகம் என்பது தெய்வத் தன்மையோடு-ஒன்றுபடல் ஆகும். அது முற்றும் கடந்ததாகவும் இருக்கலாம்; அண்டத்திற்கு உட்பட்டதாகவும், இருக்கலாம், தனிநிலைப்பட்டதாகவும் இருக்கலாம். அல்லது இவை மூன்றும் சேர்ந்ததாகவும் இருக்கலம்.” என்று அரவிந்தர் கூறுகிறார்.

பகவத்கீதை யோகத்தைச் சமத்துவம் என்றே வற்புறுத்துகிறது. எல்லாம் கடந்த நிலையில், யாவும் சமம் என்ற உணர்வை அடைவதற்கு, அத்தகைய யோக நிலையைக் கைக்கொள்ள வேண்டும். யோகத்தை மோட்ச சாதனமாகவே தமிழ்ச்சித்தர்கள் பயன்படுத்துகிறார்கள். மலரில்லாமலே தேன் எடுக்கும் தனிவழி என்றே யோகம் கருதப்பட்டு வருகிறது. யார் யோகத்தில் வாழ்கிறார்களோ, யார் யோகத்தின் வழியாக தெய்விக சக்தியையும் ஒளியையும் காண்கிறார்களோ அவர்களே சித்தர்கள் என்பார் திருமூலர்.

யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே
(திருமந்திரம் பா.1490)

பிரபஞ்சம் அனைத்தையும் யோகமாகக் கண்டவரே சித்தர் என்று கூறுகிறார் காரைச்சித்தர்.

லோகமெலாம் யோகமெனக் கண்டார்
(காரைச்சித்தர் பா. 161)

குலார்ணவ தந்திரம் கூறுவதுபோல மனிதனிடம் காணப்படும் அமைப்புகளான பிராணன், மனம், சித்தம், சக்தி ஆகிய நான்கும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு உகந்தவழி யோகமே ஆகும். அவரவர் தத்தமக்குரிய மனோசக்தியை வளர்த்துக்கொள்ள யோக சாதனம் சிறப்பாகப் பயன்படுகிறது. அதனால் அது பக்தி, கடவுட்பற்று இவற்றிலிருந்து மாறுபட்டு விளங்குகிறது. யோகம் துறவிகளின் செயல் நுட்பம். அகமுக வளர்ச்சியின் வழிமுறை. குர்த்ஜீஃவ் என்பவர் கூறுவது போல் யோகம் “துறவிகளின் வழி” என்று கூறலாம்.

மனம், புலன்கள் அறிவு ஆகியவற்றை அவற்றின் விருப்பப்படி அவற்றின் செயல்களில் ஈடுபடாமல், திசை திருப்பி அவற்றைச் சரியான வழியில் நடத்துவதே “கட்டுப்பாடு” ஆகும். இதற்கு யோகத்தில் பிரத்தியாகாரம் என்று பெயர். பிரத்தியாகாரம் என்பது “அடக்குதல்” அல்ல. மனத்தையும் புலன்களையும் “அடக்க” ஆரம்பித்தால் அவை திமிறிக் கொண்டு மேலும் மோசமாகச் செயல்படும். அவற்றை “அடக்காமல்” அவற்றின் செயல்களைத் திசை திருப்பவேண்டும். இதையே திருமூலர் “மடைமாற்றம்” செய்தல் என்கிறார். இதுபற்றி திருமூலர் “ஐந்திந் திரிய மடக்கு மருமை”, ஐந்திந் திரியம் அடக்கும் முறைமை” என்று இரு பகுதிகளில் விரிவாகப் பேசியுள்ளார் (மந்திரம் 2023-2043). இந்திரியங்கள், மனம் ஆகியவற்றை “அடக்குவது” முடியாத காரியம்; அவற்றை “ஒடுங்கச்” செய்வதே பிரத்தியாகாரம் எனப்படும். திருமூலர் கூறுவது போல்:

அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந்தோனோ
-(மந்திரம் 2043)

ஐந்தில் ஒடுங்கில் அகலிடமாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவமாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதமாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடையாரே
-(மந்திரம் 2035)

குற்றாலக் குறவஞ்சி எனும் பாடல் அவர்கள் நாட்டில் “ஒடுங்கக் காண்பது” யோகியர் உள்ளம் என்று கூறும். ஆகவே பிரத்தியாகராம் என்பது அடக்குவது அன்று; அது மடைமாற்றுவது; ஒடுங்குவது. மனம், புலன், அறிவு ஆகியவை எப்பொழுது ஒடுங்கும் என்று புலம்புகிறார் பத்திரகிரியார்.

புலம்பல் 162
என்னை இறக்க எய்தே என்பதியை ஈடழிந்த
உன்னைவெளியில் வைத்தே ஒளித்து நிற்பது எக்காலம்?

பொழிப்புரை: “நான்” என்னும் என்னை இறக்கச் செய்து, என் இருப்பிடமாகிய இப்பிரபஞ்சத்தையும் ஒன்றுமில்லை என்றாக்கி, உன்னுடன் (சிவத்துடன்) வெட்ட வெளியில் ஒளியுடன் ஒன்றியிருப்பது எக்காலம்?

விளக்கவுரை: “நான்” என்னும் நிலை மாறி, இப்பிரபஞ்சம் “உண்மை” என்ற நிலைமாறினால் தான் வெட்டவெளியில் ஒளிதோன்றும். நான் என்னும் நிலைமாறித் தன்னை உணர்தலே முக்தி. இது பற்றி முன்னமேயே கூறியுள்ளோம். “நான்” என்பதை மறந்து தன்னுணர்வு நிலை பெறுதலே வீடு.

தன்னுணர்வு நிலையில் வேறுபாட்டு உணர்ச்சி மறைந்து ஒருமை உணர்ச்சி மேலோங்குகிறது அந்த நிலையில் “நான்” “மற்றதை” எனக்குள் உணர, “நான் அல்லாத அந்த மற்றது” என்னைத் தனக்குள் உணர்கிறது. பவுல் ஒருவர் பாடுகிறார்: “நான் என்பது மறுபடியும் எனக்குள் தலைதூக்க முடியாது” இங்கே நான் என்ற அகவுணர்ச்சி மறுதலிக்கப்படவில்லை; மாறாக, தாண்டிக் கடக்கப்படுகிறது. இந்த அடிப்படையில், வீடுபேறு என்பது தனிநிலையைத் தாண்டிக் கடந்து போதல் என்று ஆகிறது. அதுவே வெட்டவெளியாகும்.

புலம்பல்163
கடத்துகின்ற தோணி தனைக் கழைகள் குத்திவிட்டாற் போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான் அறிவது எக்காலம்?

பொழிப்புரை: கடலில் செலுத்தப்படுகிற தோணியின் பாய் மரத்தை அதனுடைய மூங்கில்களே (கழைகள்) குத்திக் கிழித்துவிட்டதுபோல், என்னுடைய வினைகளே (கழைகள்) கெடுத்துவிட்ட விசித்திரமான நிலையை (சித்திரத்தை) நான் அறிந்து கொள்வது எப்போது?

விளக்கவுரை: கடலில் தோணி சென்று கொண்டிருக்கும் பொழுது எப்படி பாய் மரத்திலுள்ள மூங்கில் ப்ளாச்சுகள் அந்தப் பாய்மரத்தில் ஓட்டைகளை உண்டாக்கி அந்தப் படகு மேற்கொண்டு கரை சேரவிடாமல் செய்கின்றனவோ, அதேபோல் என் கர்ம வினைகள் என்னைத் தடுத்து முக்தி என்னும் கரைக்குப் போகவிடாமல் தடுக்கின்றன. இங்கு “சித்திரம்” என்ற சொல்லை “விசித்திரமான செயல்” என்றும் “மனித வாழ்க்கை” என்றும் பொருள் கொள்ளலாம். மனிதனை முக்தி பெறாமல் தடுப்பது அவனது கர்மவினைகள்தான். இந்தக் கர்மவினைகளின் கட்டுப்பாட்டினின்று வெளிவந்து எப்படி முக்தி அடைவது என்பது தான் கீதையில் கூறப்பட்டுள்ள கர்மயோகம் ஆகும்.

புலம்பல் 164
நின்றநிலை பேராமல், நினைவில் ஒன்றும் சாராமல்
சென்ற நிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்?

பொழிப்புரை: தியானத்தில் மெய்மறந்து நின்று, மனம் கட்டுக்கு அடங்கி நிர்மலமாக இருக்கும் நிலைதான் முக்தி என்று அறிவது எக்காலம்?

விளக்கவுரை: மனமானது ஒருநிலைப்பட்டு, சலனமின்றி இருப்பதற்கு ஒரு வழி தியானப் பயிற்சி தான். தியானத்தில் மனமானது ஒன்று மில்லாத வெற்றிடமாக மாறுகிறது. சமாதிநிலை அடையப்பெறுகிறது. இது ஓர் அக-விழிப்புணர்வு; அகப்பார்வை; இதுவே தன்னை அறியும் நிலை. இந்த நிலையே வீடு பேறு எனப்படும் முக்தி.

புலம்பல் 165
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தை உள் அமைத்து
மின்னும் ஒளி வெளியே விட்டு அடைப்பது எக்காலம்?

பொழிப்புரை: இது சித்தர் குறியீட்டுப் பாடலுக்குச் சிறந்த சான்று.

விளக்கவுரை: மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பொன்னும், வெள்ளியும் ஆகிய சிலம்புகளைத் தரித்த சிவனை மனத்தில் தியானம் செய்து நிறுத்தி அதன்மூலம் தோன்றுகிற ஒளியாகிய சோதியுடன் கலப்பது எக்காலம் என்று பொருள் தோன்றும். உண்மையில் இங்கு ‘பொன்’ என்பது சந்திரனைக் குறிக்கும். அதாவது சந்திரகலையாகிய இடகலையைக் குறிக்கும் ‘வெள்ளி’ என்பது சூரியனைக் குறிக்கும், அதாவது சூரிய கலையாகிய பிங்கலையைக் குறிக்கும். இதன் உட்பொருள் இடகலை, பிங்கலை ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டும் என்பது. இடகலை, பிங்கலை இரண்டும் சுழுமுனைகளின் இடப்புறத்திலும், வலப்புறத்திலும் செல்கின்றன. இடகலை, பிங்கலையைப் பிராணாயாமத்தினால் கட்டி நிறுத்த வேண்டும்.

இடகலை, பிங்கலை என்ற முக்கிய நாடிகள் மெய்ப்பொருளின் இருதுருவக் கூறுபாடுகள். சுழிமுனை என்ற நாடி அந்தர்யாமியாக நடுவில் நின்று இரண்டென்ற பேதமற்ற மெய்ப்பொருளின் உண்மை நிலையை விளக்கி நிற்கிறது. ஆகையால்தான் திருமூலர் தன் திருமந்திரப் பாடல் 2747இல் இந்த மூன்று முக்கிய நாடிகளையும் சிவபூமி என்றே அழைக்கிறார். ஆக்ஞா சக்கரத்திலிருந்து புறப்பட்டு இடகலையும் பிங்கலையும் முறையே வல, இட மூக்குத் துளைகளைச் சென்றடைகின்றன. சுழிமுனையோ சகஸ்ராரத்தைச் சென்றடைகிறது. மூலதாரத்திலிருந்து ஆக்ஞாசக்கரம் வரை உள்ள ஆதாரங்கள் அனைத்திலும் அத்தகைய சூட்சுமமான நாடிகள் சென்று சேர்கின்றன. நாடிகளின் மூலமாகப் பாய்ந்து வரும் பிராணசக்தி, சக்கரங்களில் சூட்சமமாக நிலவியிருக்கிறது.

இப்படிச் செய்வதன் மூலம் குண்டலினி சக்தி (மின்னும் ஒளி) எழுச்சியுறுகிறது (வெளியேவிட்டு அடைப்பது). குண்டலினி எழுச்சியுற்று சுழுமுனை வழியாக சஹஸ்ராரத்தைச் சென்றடைகிறது. அப்பொழுது முக்தி கைகூடுகிறது. இப்படி முக்தி கைகூடுவது எக்காலம் என்று ஏங்குகிறார் பத்ரகிரியார்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum