இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2

Go down

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2  Empty ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2

Post by ஆனந்தபைரவர் Tue Aug 31, 2010 3:54 pm

[size=12] ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

2. ஹிந்து சமயமே உலகிலுள்ள எல்லா வாழும் கலச்சாரங்களைக் காட்டிலும் முன்தோன்றியது.

உங்களைச் சுற்றி எல்லா திசைகளையும், உற்று நோக்கிப் பாருங்கள். இவ்வாறு நோக்குங்கால், காற்றோடு காற்றாக மறைந்து போகாமல், தண்ணீரில் அமிழ்ந்து போகாமல், அல்லது மண்ணோடு மண்ணாகாது இந்நாள்வரை உறுதியுடன் வாழும், வேத வழி நன்நெறி கலாச்சாரம் போன்று, வேறொரு கலாச்சாரம் ஏதாகிலும் உலகில் தென்படுகிறதா? ஹிந்து கலாச்சாரமோ, குறைந்து, 5000 ஆண்டுகளுக்கும் மேலாக (இன்னமும் அதிகமாகச் சொல்ல வேண்டும்), ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த அதே வீரியம் இன்றும் குன்றாது, வெற்றிகரமாக செழித்தோங்கி, இதற்கிணையில்லை என கூறுமளவிற்கு, இயங்கும் ஆற்றலுக்குரியதாகவும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதே வழி வழியாக மரபு கொண்டு, தழைத்தோங்கி, அந்நாட்களில் செயலாற்றிய அதே திறனுடன், இந்நாட்களிலும் கொள்கையளவில் இல்லாது தற்காலத்திற்கு ஒப்ப மெய்யாக செயலிலும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் சமயம் வேறொன்றுண்டா? மற்ற பழைய கலாச்சாரங்களான, எகிப்திய, இன்கா, மயன்***, அஸ்டெக், (Egyptian, the Inca, Maya, Aztec) ஆகிய இவையெல்லாமே, 5000 ஆண்டுகள் புராதனமானது தான், ஆனால் இதில் ஒன்றுகூட இன்று வரை நிரந்தமாக இல்லையே. இவைகள் எல்லாம் மறைந்து, அந்நாளிலிருந்து இன்றுவரை எஞ்சியுள்ள, அக்கால மனிதர்களால் உண்டாக்கப்பெற்ற சில கட்டங்கள், வடிவங்கள் என நமக்கு அக்கால கலாச்சாரம் எப்படி உண்மையில் செழித்தோங்கி இருக்கவேண்டுமென தெரிந்து கொள்ளும் நம் ஆவலை மட்டுமே தூண்டிவிட்டு, ஆனால், நம்மிடம் மௌன மொழியில்தான் பேசுகின்றன. அவ்வளவுதான். இவைகளைப்பற்றி நிரந்தரமான. உண்மையென தகவல் இதுதான் என நிரூபித்து நமக்கு உறுதியளிக்கவில்லையே! இக்கலாச்சாரங்கள் இருந்தன என நம் கண்ணெதிரே தெரிந்தாலும், அவைகளைப் பின்பற்றுவோர் எப்படி வாழ்ந்தனர், இன்று அக்கலாச்சாரங்களை அனுசரிப்பவர்கள் எங்கேயாவது இருக்கின்றனரா? இருந்தால், எங்குள்ளனர்? என்றோ, அல்லது அவர்களது சமயப் பெயர்கள் தான் என்ன? அவர்கள் சமய சித்தாந்தங்கள் தான் என்ன, என சொல் வழியாகவோ அல்லது எழுத்து வழியாகவோ விவரமாக, முடிவாக, நாம் காண முடியலில்லையே! இவைகளைப்பற்றி எல்லா முடிவுகளும் கற்பனையில், அல்லது ஆராய்ச்சியால், தர்க்க ரீதியில் ஊகித்து சொல்லப் படுபவைகளாகவே இன்று நமக்குக் கிடைகின்றன. இவைகள் எல்லாமே காலத்தின் கோலத்தால் நமக்கு விவரமாகக் கிடைக்க நாம் கொடுத்துவைக்க வில்லை.

*** சிறுவனாக ’சம்ஸ்கிருதம்’ பயின்ற போது, ’ஸ்ரீ ராமோதந்தம்’ எனும் ஸ்ரீமத் ராமாயண சுருக்கப் புத்தகத்தில் இவ்வாறு அன்று படித்ததாக ஞாபகம்:

“मण्डोदरीं मय सुतां परिणीय दशानन: । तेषां उत्पादयामास मेघनाथाह्व्यं सुतम् ||

இதன் பொருள்: மயனுடைய பெண்பிள்ளையான ’மண்டோதரி’யை ராவணன் மணந்து, ’மேகநாதன்’ (இந்திரஜித்) என்பவனைப் பெற்றான்” என படித்திருக்கிறேன்.

இதனால் வேதவழியே, ’மயன்’ நாட்களைக் காட்டிலும், இன்னும் மூத்தது எனத் தெரிகிறது.

ஆனால் ஹிந்து கலாச்சாரமோ, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும், அக்காலத்திலிருந்து இக்காலம் வரை எஞ்சியுள்ளவைகளிலிருந்து நம்மால், அதன் விவரங்களை தொடர்ச்சியாகக் கண்டுபிடிக்க முடிகிறது. இதன் சரித்திரம், புராணங்கள், இதிஹாசங்கள் (history) என்றும், ஏராள ஆய்வுகள் மூலமாகவும், நன்கு ஆவணங்கள் கொண்டது. இதற்கு மேலும் ஆராய்ச்சி செய்யவேண்டியவை இன்னும் அநேக பகுதிகள் உண்டு. என்றாலும், இதுவரை நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படி, வேதகால சமூகம், என்பதே தொன்மை காலத்திய அல்லது வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொடக்கம் கொண்டது என்பதே ஐயமற எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இன்று நம்மிடையே காணும், ”இருக்கும் கலாச்சாரங்களான”, முறையே, இஸ்லாம், கிருஸ்தவம், புத்த சமயங்கள், ஆகியவை எல்லாமே 1400, 2000, 2500 வருடங்களுக்கு முன்னர்தான் பிறந்தவைகள். இருப்பினும், வேதகால கலாச்சாரம் மேற்கூறிய எல்லா கலாச்சாரங்களைக் காட்டிலும், மிக மிகப் புராதனமானது.

அநேக, அறிஞர்கள், வேதகால நாகரிகத்தைப்பற்றிச் சொல்லும் போது அதன் தொன்மையைப்பற்றி மிகச் சிறப்பாகக் கூறியுள்ளனர். உதாரணமாக, பேராசிரியர் Bournouf, பிஃரான்ஸ் கல்லூரியில் (College of France) ”சமஸ்கிருதமும் அதன் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஆற்றிய ஆராய்ச்சி சொற்பொழிவில், ”நாம் வேத கால (ஹிந்து) தத்துவ ஞானம், அதன் புராணக் கதைகள், இலக்கியங்கள், சட்டங்கள், மொழிகளைப் பற்றி எல்லாம் நன்கு அறியவேண்டும். இவைகள் இந்தியா எனும் ஒரு பிரதேசத்தைப் பற்றி மட்டுமன்றி, உண்மையாகவே, உலகத்தின் தொடக்கத்தைப் பற்றியது, அவைகளில், நம் சிற்றறிவுக்கும் அப்பால், எட்டாத மறைபொருட்களைப் பற்றிக் கண்டறிய வேண்டிய, எவ்வளவோ எஞ்சிய ””குழூஉக் குறி”” க்களுக்கு (source codes-மூலாதாரக் குறிகள்) அனைவரும் அறிய வழங்கும் மொழியில் (decipher) பெயர்க்க இன்னமும் கணக்கற்றவைகள் உள்ளன” (it is a page of the origin of the world that we will attempt to decipher) எனக் கூறியுள்ளார்.

இக்கருத்தை ஒட்டியே, திரு. தார்ன்டன் (Mr. Thornton) என்பவரும், தன் வெளியீட்டான, History of British India புத்தகத்தில்,”உலகிலுள்ள எல்லா நவீன நாடுகளைக் காட்டிலும், அல்லது எகிப்திலுள்ள நைல் நதியை எத்தனையோ நூற்றாண்டுகளாக, நித்தம் பார்த்துக் கொண்டே இருக்கும் மிகப் பிரசித்தி பெற்ற பிரமிட்டுகளைப் படைத்த, எகிப்திய நாகரிகங்களைக் காட்டிலும்; மனிதன் படைத்த கலைகளின் பிறப்பிடமாகக் கருதப்படும் கிரேக்க, இத்தாலிய நாகரிகங்கள் போன்ற மற்ற புராதனமாக உள்ள எந்த நாட்டு நாகரிகங்களைக் காட்டிலும், வேத நன்நெறியைச் சார்ந்த இந்தியாவிலுள்ள ஹிந்துக்களின் நாகரிகத்திற்கு, மேலாகவோ, அல்லது குறைந்த பட்சம், ஈடு-இணையாக, செல்வத்திலோ அல்லது மேதகைமையிலோ இருக்கக் கூட இயலாது. இது மறுக்கவும் மறைக்கவும் முடியாத உண்மையும் கூட” என அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார்.

ஜெர்மன் தத்துவ ஞானி, அகஸ்டஸ் ச்லேகெல், (Augustus Schlegel) அவர்கள் எழுதிய ’’புராதன இந்தியர்களின் மதிநலம்’’ எனும் புத்தகத்தில், (Wisdom of the Ancient Indians), தெய்வீகத்தன்மையுள்ள வேதகால நாகரிகத்தின் தொன்மையைக் குறிப்பிடும் போது, “கடவுளிடமிருந்து கிடைத்த அறிவையே, முன்நாள் வேத நன்நெறியுணர்ந்த ஹிந்துக்கள், உடைமையாகப் பெற்று இருந்தனர். இதை எவரும் மறுக்க இயலாது. ஆகவே, இதே அறிவு, மெச்சத்தக்க, மிகத் தெளிவான, மேன்மையான மெய்யுணர்வு பற்றிய, ஹிந்துகளின் எழுத்துக்களில், மொழி, செயல், ஆகிய இவைகளின் நடைகளில் காண்கிறோம். இவைகளைக் காட்டிலும், மற்ற வேறு எந்த மானிட மொழிகளில் பேசப்பட்ட, எழுதப்பட்டவைகளிலோ, இவைகளில் இருப்பது போலக் காணக்கிடைப்பது அரிது”.

இன்னும், ஒருபடி மேலாக, மாக்ஸ் முல்லர், (Max Mueller in his ’’India--What It Can Teach Us‘’ (Page 21) ”இந்தியா நமக்கு எதைக் கற்பிக்க வல்லது?”, எனும் புத்தகத்தில், “”ஆவணங்கள் எனும் தலைப்பில், இந்நாள்வரை உலகில் பாதுகாக்கப்பட்ட எந்த ஆவணங்களைக் காட்டிலும், ஹிந்துக்களின் ஆவணங்கள், மிகத் தெள்ளத் தெரியும் விதத்தில் இருப்பதால், இந்த ஆவணங்களிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள், எவ்வித தொடர்பும் இற்றுப்போகாமல், மிக முழு நிறைவாக, எவ்வித வாதப் பிரதிவாதத்திற்கும் இடமின்றி, யாவும் அடங்கி நமக்குக் கிடைக்கிறது” என கூறுகிறார்.

மேலாக மாக்ஸ் முல்லர் சொல்வது: மிகத் தொன்று தொட்டுள்ள, பழமை நிறைந்த வேத நன்நெறியில் ஈடுபாடுகொண்ட சமூகத்தில், வாழ்க்கை வழி பற்றி அதிலுள்ள அநேக தத்துவங்கள், வாழ்க்கையைப் பற்றிய மனோபாவங்கள், அவைகளை அறிந்துகொள்வதிலும், மென்மேலும் அவ்வறிவில் முதிர்ச்சியடையவும், நாம் ஏன் உலகில் வாழவேண்டும், போன்ற கருத்துகள் எல்லாமே, இதன் ஆரம்ப நாளிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக உள்ளடங்கி இருக்கிறது. இதை விவரிக்கையில், அநேக விளங்காத பகுதிகளுக்கு விளக்கவுரைகள், வாழ்க்கை நெறியின் பற்பல ஒழுங்கு முறைகள், அடிப்படை விழுமியங்களில் (values) உள்ள மதிப்பிட இயலாத, மிக உயர்ந்த கோட்பாடுகள், ஆகியவைகளில் மாறா கவனம், எந்த சூழ்நிலையிலும் மனவலிமை, எப்போதுமே நிதானம், மன அமைதி நிறைந்திருத்தல் என நமக்கு அக் கலாச்சாரத்தைப் பற்றி இன்றும் நமக்குக் கூறிக் கொண்டிருக்கின்றன. வயதாகாக, அறிவு கூர்மையும், மிகத் தெளிவாக சிந்திக்கவும், கண்டுணர்தலிலும், அறிவுத்திறனில் நமக்கு இயற்கையாகவே, முன்பு இருந்ததை விட கூடி இருக்கிறது. வேத விவேகத்தில் பொதிந்து கிடக்கும் உள்ளார்ந்த பண்புகள், கருத்தாழங்கள், இன்று நம்மிடமிருக்கும் எத்துடனும், இதற்கிணையாக ஒப்பீட்டுக்கு ஒவ்வாதது. மெய்யானவற்றில், அக்கறை கொண்டவர்கள் நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்; இவ்வேத அறிவாற்றல் உலகளவாக எல்லோருக்கு, எங்கும் பயன்படத்துவதற்கு உரியது, எனவும் விரிவாகச் சொல்கிறார்.

3. வேத இலக்கியங்களை உலகிலுள்ள எல்லா சமய இலக்கியங்களுடன் ஒப்பிடும்பேது, வேத இலக்கியங்களே மிக பழமைவாய்ந்தது, உயர்ந்தது, முற்றுப் பெற்றது, குறைவற்றது

தொன்று தொட்டு, உள்ள சமய இலக்கியப் படைப்புகளில் எது மிக தொன்மையானது என, சரித்திரத்திலோ, அல்லது சமயங்களில் புலமைவாய்ந்த கற்றறிவாளர்களைக் கேட்டால், ’வேத சம்ஹிதைகளே’ எனவும், அதாவது “ரிக் வேதம்” போன்றவைகள் என எல்லோருமாக தயக்கமின்றி, ஒருமனதாக ஒப்புக்கொள்வர். மாக்ஸ் முல்லர் (Max Mueller) எழுதிய (”History of Ancient Sanskrit Literature“(page 557), ”மிகப் பழமையான சம்ஸ்க்ருத இலக்கியத்தின் சரித்திரம்” எனும் தலைப்பில் எழுதிய புத்தகத்தில், இவ்வாறு உள்ளது. “’எகிப்திய’ அல்லது ’நினேவா’ (Egypt or Ninevah. . .) இவைகளில் காணப்படும் கல்வெட்டுகளில், அல்லது நாணயம் முதலியவற்றில் பொறிக்கப்பெற்ற எழுத்துகளிலிருந்தும் விட, மிக உண்மையான பழங்காலத்தைப் பற்றி, (நமக்கறியக் கிடைக்கும் எல்லா ஆவணங்களை சீர்தூக்கிப்பார்கையில்) ‘ரிக் வேதம்’ தான் மிகத் தொன்மையானது என எளிதில் புலப்பட்டுவிடும். அதே புத்தகத்தில், 63ம் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்: “வேதத்தால் இரண்டு வித நன்மைகள் உண்டு. வேதம், உலக சரித்திரத்திற்கும், இந்திய சரித்திரத்திற்கும் நன்மை பயக்கவல்லது. எந்த மொழிகளிலுள்ள இலக்கியப்படைப்பும் நிரப்ப முடியாதவைகளை, வேதங்களே காலியிடத்தை நிரப்புகிறது. நம்மிடம் அக்காலத்தைப் பற்றிய எவ்வித ஆவணங்கள் இல்லாத போது வேதமே நம்மை அக்காலத்துக்கு நமது கைகளைப் பற்றிக்கொண்டு, (ஒரு தாய் தன் குழந்தையை கவனத்துடன் கூட்டிச் செல்வதைப் போல மிகப் பொறுப்புடன்), கூட அழைத்துச் செல்கிறது”.

எவ்வளவுதான் ’ரிக்வேதமே’ புராதனமானதாகவும், மிக அறிவாழம் மிகுந்து இருப்பினும், இந்த ’ரிக்’ வேதமே, எல்லா வேத நன்நெறிகளின் ஆழ்ந்த கருத்துக்களின் ஒரு சிறு பகுதியைத்தைத் தான், முன்னுதாரணமாக நமக்கு எடுத்துக் காட்டுவதாக விளங்குகிறது. ஆகவே, வேத நன்நெறிகளின் முழுமையான ஆழ்ந்த கருத்துக்களையும், நல்விவேகத்தையும், இன்னும் விரிவாகத் தெளிவு படுத்த, அறிந்து கொள்ள, மற்ற அநேக வேத இலக்கியங்களில் உள்ள பற்பல பகுதிகளைப் படித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். மேலாக, பல்வேறு வகைகளிலும், சாதாரணமாக எங்கும் கிடைக்கக் கிட்டாத அநேக தலைப்புகளில், புராதன வேத வழிகளின் மூல பாடங்களை, இந்நூல்களிலிருந்து, படிப்படியாக நாம் கற்றுக்கொள்ளலாம்.

இன்னும் சுருக்கமாக சொன்னால், நான்கு வேத சம்ஹிதைகளான ரிக், சாம, யஜுர், அதர்வ வேதங்களில் மேற்கூறியவைகள் யாவுமே கிடைக்கின்றன. மேலாக, ’பிராம்ணங்களில்’ (Brahmanas) வேத சடங்குகளைப் பற்றி அநேக தொழில் நுட்ப ஆய்வுக்கட்டுரைகள் (treatises = systematic expositions in writing of subjects) நன்றாக எடுத்துக்காட்டி விளக்குகின்றன. “ஆரண்யகங்களில்’ (Aranyakas), உலகப்பற்றை விட்டொழித்து வனங்களில் வசிப்போரைப் பற்றி விளக்கு கின்றன. அடுத்தாக நூற்றுக்கணக்கான உபநிஷத்துக்களில், அவைகளிலும் சிறந்த 108 எனும் எண்ணிக்கையில், இதிலும் குறிப்பிடத்தக்க மிகப் பிரசித்தமானவைகளான – கதோ, முண்டக, ப்ரஹதாரண்யக, பிரச்ன, சாந்தோக்ய, போன்றவைகளும், மற்ற உபநிஷதங்களும், வேத ஆன்மீக உண்மைகளை நமக்குத் தெளிவுப் படுத்துகின்றன. வேதாந்த சூத்திரங்கள் என்பவைகள், ஆன்மீகத்தில் உள்ள உண்மைகளின் தனித்தன்மையுள்ள உட்பொருள்களை, ஆன்மீக தத்துவங்களில் மிகச் சிறந்த குருவிடம் தான் பயிலவேண்டும். (இதை ’நல்ல வழிவழியாய் வந்த தகுந்த ஆசார்ய பரம்பரையைச் சார்ந்த ஆசார்யரிடம் ’காலக்ஷேபம் செய்தல்’’ என வைணவத்தில் கூறுவர்) இதற்கும் மேலாக இதிஹாசங்கள், இவைகள் சரித்திரங்கள், நடந்வைகளை நடந்தவாறு எழுதப்பட்ட மிகப்பெரிய நூல்கள், அதாவது, ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாரதம் – இதில் ஒரு பகுதியான பகவத் கீதை முதலியன. இவைகளில், மிக மேன்மையான ஆன்மீக விழுமியங்களைத் தழுவிய, நல்லொழுக்க நியதிகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளும் ஏராளமாக உண்டு. இவைகளெல்லாம் நமக்கு வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டி நூல்கள். இதில் ஆன்மீகத்தில் தெளிவுபெற்ற நிலையை அடைய, படிப்படியான அனுபவ செயல்முறைகளை பாமரரும் அறிய தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் கூறி, விளக்குகின்றன. புராணங்களையும் இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம். புராணங்களில், 18 மகா புராணங்களென்றும், மற்ற சிறு அல்லது உப புராணங்களென்று 18ம் இருக்கின்றன. அடுத்தபடியாக, தலபுராணங்கள் எனும் அநேக பிராந்திய புராணங்களும் உண்டு.

இவைகளனைத்தும் நமக்கு உலகின் அல்லது பிரபஞ்சத்தின் பழைய சரித்திரங்களை சித்தரிக்கும் போது, மனித இனத்திற்கே ஏற்றதான, பயனுள்ளதான முக்கிய ஆன்மீக போதனை களையும் நாம் அறிவதற்கு அளிக்கின்றன. இவைகளைத் தவிர பின் சேர்க்கப்பட்ட பற்பல சூத்ரங்களும் அதாவது ஒழுங்கு முறைகளும், ஒவ்வொரு குடும்பத்தலைவர்களுக்கும் உகந்த, முறைப்படுத்தப்பட்ட சட்டத் தொகுப்புகள் (codes), பல தலைப்புகளில் தொகுத்து அளிக்கப் பட்டிருக்கிறது. வேதாங்கத்தில் ஒலியியல், இலக்கணம், வானூல், முதலிய பல அறிவியலுக்கு துணையாக பல நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. இவைகளைத் தவிர, உபவேதங்கள் என்பவைகளில், கலைகள், அறிவியலைப் பற்றியும், நடனம், இசையைப்பற்றிய (Gandharva-veda) ஒழுங்கு முறைகளையும், உடலுறுப்பும் அதன் பாகங்களுக்குத் தேவையான ஒழுங்கு முறைகளும், (Ayur-veda), போர்க்கலைகளைப் பற்றியதும், கட்டடக்கலையைப்பற்றியும் வேதங்கள் உள்ளன. இவைகளையும் தவிர, ஏராள ஆன்மீகத் தலைவர்கள் இயற்றிய மூல வேதங்களிலுள்ள வாசக விரிவுரைகளும் (வ்யாக்யானங்களும்), உள்ளன. இவையனைத்துமே ஹிந்து-வேத ஆன்மீக வழியையே ஒருங்கே முன்னிறுத்திக் காட்டுகின்றன. இவ்வாறாக, ஹிந்து வேத புனித நூல்களில், நன்நெறிகளைத் தவிர, இசை, கலைகள், சிறப்பியல்புள்ள முனிவர்களைப் பற்றி வரலாறுகளும், கதைகளும், அந்தந்த படிநிலைக்குத் தக்க உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன. இவைகளுக்குள் பொருளுலகத்தில் பிறந்தும், அதனின்று முக்தர்களாகி, பிறவின் பயனான ஆன்மீக சிகரத்தை எட்டியவர்களைப்பற்றிய, நற்பாடங்களாலும், கதைகளாலும், நன்நடத்தைக் கோட்பாடுகளும், தத்துவங்களாலும் ஏராளமாக நிறைந்து இருக்கின்றன. இவைகளில் தலைசிறந்ததாக எல்லோராலும் கருதப்படும், பகவத்-கீதையும், வேதங்களுக்கு வேதவ்யாசரே எழுதிய விளக்கவுரைகளும், பாகவத புராணமும் மிக முக்கியமானவை. வேதங்களில் பல முக்கிய மூலபாடங்களின் மூல நூலாசிரியர் வேதவ்யாசரே. பாகவத புராணத்தில், எதெது வேதங்களிலும் விட்டுப்பட்டுப் போனதோ, அவைகனைத்தையும் ஸ்ரீமத் பாகவத புராணம் உள்ளடங்கியது. ஆதலால், ஆன்மீக அறிவை அடைய விரும்புவோர், பாகவத புராணத்தை, எக்காரணம் கொண்டும் புறக்கணிக்க இயலாது.

வேத மூல பாடங்களை புனராய்வு செய்கையில், நமக்கு பிரமிப்பளிப்பவைகள் ஏராளம். இவ்வறிவியல் பாடங்களை, முன்னோர், முற்றிலும் ஐயந்திரிபுற முழு நிறைவாகவும், அதேசமயத்தில் எல்லோராலும் புரிந்து கொள்ளும் வகையிலும், செய்திருக்கின்றனர் என நமக்கு வியப்பளிக்கும்-எண்ணத்தை தானே உருவாக்கிவிடுவார்கள். இதில் ஒளிவு, மறைவு ஒன்றுமே இல்லை. இந்த வேதபாடங்கள், நமக்கு இறைவனின் வெவ்வேறு சமயங்களில் தோன்றும் வெவ்வேறு தோற்றங்களைப் பற்றியும் (விச்வரூபம் முதற்கொண்டு), இறையின் தனிப்பண்புகளும், இறையின் பேரன்பும், போற்றத்தக்க மாட்சிமையையும், அருளிரக்கத்தையும், கருணையும், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவரைப்பற்றி வேறெந்த புனித நூல்களீல் காணக்கிடைக்காத பல தத்துவ விளக்கங்களுடன் நம் மனக்கண் முன்னே நின்று காட்சியளிக்கின்றன, அறிந்தபின், நமக்கு ஆனந்தப்பரவச மூட்டுகின்றன. இவ்வேத நூல்களே, இறையை உணர, நமக்குச் செல்வழித் தடத்தைப்பற்றியும், வேறெந்த புனித நூல்களில் காணாத மிகச்சிறப்பு வாய்ந்த விளக்கங்களுடன், நமக்குக் கிடைக்கின்றன.

சமயங்களில் ஈடுபாடுள்ளவர்களாலும், தத்துவ ஞானிகளாலும், அரசியல்வாதிகளாலும், கலைஞர்களாலும், பிரசித்தமானவர்களாலும், உலகாயதத்தை விட்டொழித்த முற்றும் துறந்தவர் களாலும், தொடர்ந்து இவ்வேத நூல்களில், இலக்கியங்களில் உள்ளவைகளைப் பற்றி சிந்திக்கும் போது இவைகளை மகிழ்ந்து பாராட்டுவதோடு, அவைகளிலிருந்து நற்பயனையும் பெறுவது திண்ணம். ஆகவே, ஹிந்து வேத நன்நெறிகளை தினமும் அனுசரிக்கும் நற்பண்பாளர்கள், இந்நூல்களைத் திரும்பத் திரும்ப ஆய்வோர், இவைகளுள் பொதிந்திருக்கும் தத்துவங்களின் உய்த்து அறியும் திறனையும், உணரும் சக்தியையும் புதுப் புது விதத்தில் உணர்ந்து, இனி இவைகளைத் திருப்பத்திரும்ப ஆய்வு செய்கையில் இதுவரை கிடைக்காத பற்பல புதுப் புது ரகசியங்கள் தங்களுக்குக்காகக் காத்துக் கிடக்கின்றன என எண்ணத்துடன் இந்நூல்களை இனி அணுகுவார்கள் என்பது நிச்சயம்.

இயல்பாகவே, மிகச்சிறந்த (எந்த) புத்தகங்களை ஆழ்ந்து படிக்கும் போது நமது நல்லறிவையும், தெளிவாகப் புரிந்துகொள்ளும் திறனையும் அதிகரிக்கும் என்பது மிக உண்மை. ஆனால், வேத நன்நெறியில் பொதிந்துள்ள அறிவின் ஆழமும், இதற்கும் மேலாக இவைகள் ஒரு நீர்வீழ்ச்சியாகக் கொட்டும் விதமும், இவைகளை உள் உணர்த்த அடுக்கடுக்காக நமக்குள் ஏற்படும் உணர்தல் கைகூடுதலும், உணர்வு நிலை மேம்பாடடைதலும், ஆக, இவைகளுக்குப் பிறகும், நமக்கு இதனால் கிடைத்த அறிவு எல்லாமே, மிகச் சிறிதளவே (ஸ்வல்பமே / கொஞ்சமே) எனவும் தோன்றி விடும். சாதாரணமாக எதையும் உட்கொள்ளும்போது, (intake) உட்கொள்பவருக்கு ஒரு கட்டத்தில் திகட்டிப்பேவது இயல்பு. ஆனால், இது போன்றவைகளில் கவனம் செலுத்தும்போது, திகட்டிப் போவதென்பதற்கு இடமில்லை. ஆனால், இவைகளைப் பற்றி மேலும் கற்றறியும் வேட்கையே அதிகமாகிறதே தவிர, எச்சமயத்திலும் குறைவதில்லை. வேத வாழ்க்கை வழிப் பாணியின் எல்லாவித நோக்கும், ஒவ்வொருவரும், வேத நன்நெறியில் இச்சிறிதளவான மேன்மையையே அடையவே, இத்தனை பலமான ஆழ்ந்த கவனத்தையும் மேற்கொள்ள வேண்டியதின் அவசியத்தையும், பின்னணியையும், நமக்கு வலியுறுத்தி, இன்னும் தேடி அறிய வேண்டியவைகள் ஏராளம் ஏராளம் என எளிதில் புலப்பட்டு விடும்.

இதனால்தான், வேத நூல்களை எப்போதுமே ஆழ்ந்து படிப்போற்கு அவ்வேத நூல்கள் என்றுமே புதியது என உணர்த்திவிடும். இவ்வாறு ஒவ்வொரு தடவையிலும், ஆழ்ந்து படிப்போற்கு புதுப்புது உணர்த்தலையும், நுண்ணறிவுத்திறமும், நல்லறிவையையும் புதிதாக அளித்துக்கொண்டே இருக்கும். ஆக, ஒருவர் தன் வாழ் நாள் அனைத்தையும் வேத நன்நெறி நூல்களை ஆய்வு செய்கையில், படிப்படியாக மேன்மை உணர்தலை முடிவாக அடைந்துவிட்டோம் என அறுதியிட்டுக் கூற இயலாது என அறிந்தோர் ஆலோசனை அளிப்பர்.

[[[நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் கொட்டும் விதத்தில் வேத நன்நெறி ஒரு படிநிலையில் நம்மீது படிப்படியாக, தாரை தாரையாகக் கொட்டும்போது, எப்படி நீர் வீழ்ச்சி யிலிருந்து விழும் நீரை ஒருவர் எவ்வளவுதான் பிடித்து (தம் உபயோகத்திற்கு) வைத்துக்கொள்ள இயலும் என்பது போல, வேத நன்நெறி எனும் தாரை நம் மீது கொட்டோ கொட்டென கொட்டும்போது, உலகில் அணுவிலும் அணு போன்ற நாம், எவ்வளவைத்தான் தேக்கி வைத்துக்கொள்ள இயலும் என பொருள் கொள்ளல் வேண்டும். இத்தனை முயற்சிக்குப் பிறகும் இவ்வளவு தானா பலன் என, நமது இயலாமையைத்தான் இது உணர்த்திவிடும். ஆக இன்னும் கவனம், இன்னும் முயற்சி தேவை என நமக்கு புலப்பட்டு நம்மை இன்னமும் ஆழ்ந்து ஈடுபட வைத்து விடும். இதனால்தான், “கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என உற்ற கலைமடந்தை (யே) ஓதுகிறாளோ”!!]]]

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2 (2)
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3(3)
»  ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4 (1)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum