இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2 (2)

Go down

 ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2 (2) Empty ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2 (2)

Post by ஆனந்தபைரவர் Tue Aug 31, 2010 3:57 pm

4. வேத நெறியே, முதிர்ச்சியும், முழுமையும் அடைந்த நெறி.

மேற்கூறிய விவரங்களிலிருந்து, புனித வேத நூல்களில், உள்ளிருக்கும் உட்பொருட்கள், போன்று வேறெங்கும் இல்லை என்பற்கு ஏற்ப, மிகச் சிறப்பாக உள்ளது. இதில் ’பொருள்’ என்றும், (material), ஆன்மீகம் என்றும் (spiritual), ஒன்றுக்கொன்றுடன் முற்றிலும் மாறான மனக்கருத்து கொண்டவைகளைப்பற்றி, வேறெந்த சித்தாந்தங்களிலோ, அல்லது வாழ்க்கைப்பாணிகளிலோ பார்க்க முடியாவைகளை, வேத நெறிகளில் காணலாம். இவ்வாறாக, வாழ்க்கையைப் பற்றியும் பல்வேறு கருத்துக் கோணங்களில், வெளிப்படையாகப் பெருட்களைப் பற்றியும், அதேசமயத்தில், முன் விவரித்த இறைவனின் ஆன்மீக இயல்புகளைப் பற்றியும், இதிலுள்ள உட்பகுதிகளை தனித்தனியாக ஐயமற ஆய்ந்தும், அவ்வாய்வின் முடிவுகளைத் தொடர்பு படுத்தித் தொகுத்துக் கொடுத்துள்ளனர். இதிலில்லாதவை வேறெங்குமே இல்லை என உலகோர் வியக்கும் வண்ணம், மிக அக்கறையுடன் நம் நலனுக்காக பூர்த்தியான நிலையில், மேற்கூறிய யாவையும் தந்துள்ளனர். வேத நெறி இவ்வாறு இருப்பதால்தான், உலகிலுள்ள எல்லா சிந்தனையாளர் களையும், மெய்யறிஞர்களையும் எந்நேரத்திலும், வேத நன்நெறிகளில் உள்ளவைகள், தன்பால் வசீகரிக்கிறது. மேலும், இன்நன்நெறிகள் நிரந்தர உண்மைகளென உறுதிப்படுத்துகிறது. அனுபவ அறிவு சார்ந்த ஆன்மீக அறிவுரைகளுக்காக, மேலை நாடுகளிருக்கும் கிருஸ்த, யூத வழிபாடு தலங்கள், (churches or synagogues) அளிக்க இயலாதவைகளை, ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளோர், ஹிந்துஸ்தானை எதிர்பார்த்து தான் என்றும், (இன்று கூட) உள்ளனர். (practical spiritual guidance)

இதிலடங்கியவை:

• ஒவ்வொருவரிடத்தில் உள்ளிருக்கும் இறைவனை உணர்ந்து, கண்டுபிடித்துக் கொள்ளுதல்.

• உலகப் பகுதிகளை இணைத்து நிறைவாக்கும் உள்நோக்கத்தில் நேர்மை, (மத வெறியோ, மூடபக்தியோ இல்லது இருத்தல்)

• ஆன்மீகம், மன எழுச்சி ஆகியவைகளுக்குத் தேவையானதை நிறைவேற்றிக்கொள்ளுதல்,

• மனித அறிவுக்கெட்டாத மறைபொருளில், ஆழ்ந்த உட்பொருளில் உள்ளவைகளிலும், ஆன்மீகத்திலும் உண்மையான அனுபவங்கள்

பெரும்பாலான சமய அடிப்படை நம்பிக்கையின், எண்ணமும், அதன் எல்லையும், இறுதியில் இறைவனின் உறைவிடமான சுவனத்தையடைய (heaven = சுவர்கம்) வேண்டும் எனும் வரம்புக்குட்பட்டது, அதற்கு சமய நம்பிக்கை மட்டும் ஒரே வழி, அச்சமய நம்பிக்கையுடன், சமயம் சொல்லும் இறைவனிடம் தாம் இழைத்த பாபங்களை மன்னிக்க தொழுவது மட்டுமே தான் அச்சமய மரபுகளின் எல்லை என இருக்கிறது. இயல்பாகவே நாம் இறைவன் என்றவுடன், உடனே மிக பணிவுடன்தான் நடந்துகொள்கிறோம். ஆனால், வேத வழி சார்ந்த ஆன்மீக செயல் முறைகள், எப்போதும் சமயங்கள் பற்றி எவருக்கும் உள்ள மிக சாதாரண மரபொழுக்கங்களுக்கும் எட்டாத ஓரிடத்திற்கப்பால், இட்டுச் செல்கின்றன. இப்படி இந்நிலையை அடைவதற்குத் தான், வேத வழி, பொறுப்புடன் இத்தடத்தை தெரிந்தெடுத்துச் செல்வோரை உற்சாகப் படுத்தி, இவ்வழியில் முதிற்சியடைய, படிப்படியாக தனக்குத் தானே முன்னேற்றிக் கொள்ளச் செய்கிறது.

வேத வழியில் செல்ல விரும்புவோருடைய மன உணர்வை நனவாக்க, நேசபாவம் மிக்க பக்தியூட்டுகிற வழியை பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்து, வேத போதனைகளில் கூறப்பட்ட ஆன்மீகப் பயிற்சிகளால், மன-மாசுகளை அகற்றி, இதில் பலனையடைய, எவ்வளவோ காலம் எடுத்துக்கொண்டாலும், மனப்பூர்வமாக, நேர்மையுடன் தன்னை இவ்வழிக்கே, அர்ப்பணம் செய்துகொள்ள ஆலோசனை வழங்குகிறது. ஒருவர் மெய்யுணர்வுடன் இறையை அடைய, தங்களுக்குத் தாங்களே அமைத்துக் கொள்ளும், வேத வழி அல்லாத வேறு வழிகளைக் கடைபிடித்தாலும் அவ்வழிகளை, அதைரியப்படுத்தி, அல்லது நம்பிக்கை இழக்கச் செய்வது கிடையவே கிடையாது. இறையை அடைய வேறெவ்வழியானாலும், அவ்வழி நல்வழியே என வேத நெறி சொல்கிறது.

ஆனால், மற்ற சமயத்தோர், தங்கள் சமயங்கள் கூறும் வழிகளைத் தவிர்த்து, வேறு வழிகளில் செல்வதை கடுமையான விமர்சித்து, மாற்று வழிகளைக் குறைத்துக் கூறி; ஆதலால் புறக்கணிக்கக் கூறி விடுகிறது. கிருஸ்தவ ’சர்ச்’கள் தங்கள் சமயத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு, ’சர்ச்சே’ கடவுளிடம் தொடர்பு கொள்ள வல்லது, மற்றவழிகளல்ல என அழுத்தமாகப் போதிக்கிறது.

ஆனால், வேத வழிகள், மாந்தர் யாவரும், முழுமையான இறைவனின் ஆன்மீகத் துகட்களே (மிகப்பெரிய சுடரொளியின், சிற்ரொளி) என நமக்கு போதிக்கின்றன. இறைவன் ஒரு தாய் போல, தான் படைத்த ஒவ்வொரு ஜீவராசியுடன், குழந்தை / குஞ்சுகளைப் பேணிக்காக்கக் கூடவே இருக்கவேண்டும் என்ற அன்புள்ளத்தோடு, நம்மையும் நமக்குள் உள்ளிருந்து செயல்படுத்தி (activate), நம் கண்ணால் காணமுடியாத, ஆனால் புலனால் மட்டுமே உணரமுடிந்த உயிர்த் துடிப்பாக, ஒரு துகளாக, பொறியாக, சிற்ரொளியாக, அணுவாக, சிறு பாகமாவே நம்முடன் இருக்கிறார். சேயைப் பிரிந்து தாய் இருப்பாரா? இருக்கத்தான் அவரால் முடியுமா? (அத் துகள், துண்டு, ஒளி, பொறி, அணு, சிறு பாகம் நீங்கிவிட்டால், உயிர் துடிப்பற்ற, பிண்மாகி விடுகிறோமல்லாவா?) ஆகவே, நாம் யாவரும் உயிருடன் இருக்கும் வரை, இறைவனின் இயற்கையான, பிரிக்க முடியாத நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள் (குருதித் தொடர்புள்ள உறவுமுறைபோல) எனக் கொள்ளல் வேண்டும்.

ஒருவருடைய மனவிழிப்பு நிலையை மேலும் உயர்த்திக் கொள்வதற்கு இவ்வெற்றி வழியை விட வேறு வழியை மனதிற்கொள்ள வேண்டிய அவசியம் எவருக்காவது ஏற்படுமா? அல்லது வேண்டுமா? இறைவனே ’என் உறவல்லவா’?

[[[வைணவ 12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் ஒவ்வொன்றும், தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. உதாரணத்திற்காக, இரு ஆழ்வாரைப்பற்றி மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.

பெரியாழ்வார், (மொத்தம் இவர் இயற்றியது 473 பாசுரங்கள்), திருவாய் மொழி ஆரம்பத்தில் இருக்கும் பாசுரங்கள், இவர்தான் ஒருவேளை அவ்விறையின் உண்மைத் தாயோ என வியக்கும் வண்ணம் அதி அற்புதமாக, பக்தியில் எல்லைக்கே போய், பக்தி என்றால் என்ன என நமக்குப் புகட்டி (தாய் தன் குழந்தைக்குச் சிறு பாலோடையில் பால் புகட்டுவது போல), இப்பாசுரங்களால் இறைவனை அனுபவித்து, மனதால், மலரால் பாமாலைகலைத் தொடுத்து, அலங்கரித்தார். இவர் இயற்றிய பாசுரங்களைச் சொன்னால் வாய் மணக்கும், நினைந்தால் இறையின்ப மழையில் நனைந்து, மனங்கனிந்துருகி கண்ணீர் தானே சுரக்கும். ஒரு குழந்தையை தாய் எவ்வாறு பேணிக்காப்பாரோ, அவ்வாறே, இறையை அனுபவித்தார். இறையாகிற குழந்தையை பெரியாழ்வார் அனுபவிக்குங்கால், அவரே, இறைவனின் தாயாக, தன் குழந்தைக்கு, பிறர் சுடும்கண் சுட்டுவிடுமோ என பயந்து, ‘பல்லாண்டு பாடி வாழ்த்துகிறார், குழந்தைக்குத் ’தாலேலோ’ தாலாட்டு பாடினார், விளையாட்டுகளை செல்லிக் கொடுக்கொடுக்கிறார். குழந்தையின் தளர் நடையழகைப் பார்த்துப் பார்த்துப் பரவசப் பட்டார், தன் குழந்தை தன்னை (தாயை) இறுக்கக் கட்டித் தழுவ அழைத்தார், பூச்சி காட்டி விளையாடினார், தாய்ப்பால் அருந்த அழைத்தார், குழந்தைச் சடங்கான காதுகுத்துதல் செய்வித்தார், தன் கையாலேயே நீராட்டினார், தலை முடியை வாரும் போது காக்கையை அழைத்தார், பூச்சூட்டி மகிழ்ந்தார், (அதி அற்புதப் பாசுரங்கள்-உண்மையில் அனுபவித்தால் நம் கண்ணீர் தன்னாலே சுரந்தோடும்) அமுது ஊட்டினார், குழந்தை வீட்டில் செய்யும் குறும்புகளைக் கண்டும், பிறர் சொல்லும் குற்றச்சாட்டுகளைக் கேட்டு, கோபிப்பதுபோல, ரசித்தார். குழந்தைக்குத் தண்டனையும், (மற்றவர்களைத் திருப்தி செய்ய) அளித்துத் தாயாகி நின்றார். இவருடைய மகளோ, ஸ்ரீ ஆண்டாள், இவர் வேறு எவ்வாறாக இருந்திருக்க முடியும்!! ஸ்ரீ ஆண்டாள், சூடிக்கொடுத்த சுடர்க்கொடையாக, அவ்விறையையே மணாளனாக வரித்து., ”எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னொடு உற்றொமே ஆவோம், உமக்கே நாம் ஆட்செய்வோம்” எனக் கூறி, நம் எல்லோரையும் பேரின்ப வீட்டுக்கு / பறைக்குச் இட்டுச் செல்ல நம்மை ஊக்குவித்து இன்றும் ’திருப்பாவை’ பாசுரங்களால், வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்).

’’என்னப்பனல்லவா, எந்தாயுமல்லவா, பொன்னப்பனல்லவா, பொன்னம்பலத்தவா’’ – என்றிசைத்த நந்தனார் போல,

இறைவனே -- என் தாய் போலவும், என் தந்தை போலவும், என் தோழன், ””தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை, நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை”” என்று சொன்ன என் சேவகன் போலவும், என் அரசன் போலவும், என் சீடன் போலவும், என் சற்குரு போலவும், என் குழந்தை போலவும், என் விளையாட்டுப் பிள்ளை போலவும், என் காதலன் போலவும், என் காதலி போலவும், என் ஆண்டாள் போலவும், என் குலதெய்வம் போலவும் -- என பல்வேறு விதத்தில் இறைவனை அனுபவித்து, மகாகவி, இந்திய தேசீயக் கவி, சுப்பிரமணிய பாரதியார் பூரித்து, நெகிழ்ந்து பாடி, எழுதி வைத்தாற் போல.]]]

ஒவ்வொருவருடைய எண்ணங்களும், சொற்களும், செயல்களும், மேலாக, நம்மைச்சுற்றியுள்ள புலனால் அறியப்பெறும் பொருட்கள், நடவடிக்கைகள், பிம்பங்கள், ஒலிகள், ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவைகளாதலால், இவைகள் யாவும் எதிரொலி போன்று, நம் மன உள்ளுணர்வு நிலையில், அவ்வப்போது பிரதிபலித்து விடுகிறது. தக்க மனப்பயிற்சிகளைப் பயின்று, அதனால் நல்ல திறமும் கைவரப்பெற்று, அனுபவத்தால் ஒருவர் ஆன்மீகத்தில், எந்த நிலையை அடைய வேண்டுமோ அந்த மன உணர்வு நிலையை கட்டாயம் அடைய முடியுமென வேதவழிகள் திறப்பட நன்கு வழிகாட்டுகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு ஆன்மீகத்தில் தாங்களுக்கு ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டு விடுகிறதோ, எவரும், அந்த மேலான இறையுடன் நெருங்கி இருக்கும் நிலையை மனதால் உணர முடியும். நாம் ஒவ்வொருவரும் தங்கள் ஆன்மீக அடையாளங்களையும், இறைவனுடன் நெருங்கிய உறவை அடைந்துவிட வேண்டுமென்று தான் இதன் பின்னணியில் உள்ள வேத வழியின் சாராம்சம். இவ்வாறு, ஒருவருக்கு இந்நிலையை அடையும் நோக்கம் ஈடேறப்பெற, அல்லது முறைப்படி அமைத்துக்கொள்ள, தனிச்சிறப்பு வாய்ந்த ஆன்மீக குருவின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம். இந்த செயல்முறை எங்கு குறைவற்று நிறைவு பெற வில்லையோ, அல்லது இவ்வழியில் மாணாக்கர் மிக்க அக்கறை கொண்டு பின்பற்ற வில்லையோ, இதனால் எதிர்பார்க்கும் பயனை என்றும் அடையவே முடியாது. இது அசைக்க முடியாத உறுதியாக. இருப்பினும், மேற்கூறியவாறு ஆன்மீக செயல்முறை நல்ல முறையில் நடந்துவிட்டால், மாணாக்கர் எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் நேர்மையுடன் ஈடுபட்டுவிட்டால், இதன் பயனை கட்டாயம் காணலாம். இந்த ஒரே காரணத்திற்காக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, உலகிலுள்ள தத்துவஞானிகளும், ஆன்மீகத்தில் விருப்பமுள்ளோர்களும் வேத ஆன்மீக ஒழுங்கு முறைகளைக் கசடறக் கற்க, இந்தியாவை நோக்கி, வந்த வண்ணம் உள்ளனர். மேற்கூறிய நல்வழிகளைப் பின்பற்றினால், எவருக்கும் நடைமுறையில் பலன் கிடைக்கிறது. இது திண்ணம்.

{{{ [[[நம்மைப்பற்றி நாமே பீற்றிக்கொள்வதை விட, எதிலும் (முக்கியமாக நமக்குத்) தொடர்பில்லாத, அகில உலகப் புகழ் பெற்ற அறிஞர்களாலேயே, அங்கீகரிக்கப்பட்ட இலக்கியங்களிலிருந்தும், ’பேரறிஞர்’ என ஏற்றுக்கொள்ளப் பட்டவர்களுடைய. மனப் பூர்வமான, சுய நலமில்லாத, அபிப்பிராயங்களை எவரும் மறுக்க இயலாதல்லவா? கீழே கொடுத்துள்ளவை இக்கட்டுரைக்குத் தொடர்புடவைகள். வேத நெறிகளில் உள்ளவைகளை, இந்தியரில்லாதவர் சொன்னால், பலருக்கு பெருமையாகவும், மேலும் பலருக்கு நம்பிக்கை ஊட்டுகிறதாக இருக்கிறதல்லவா!? எப்படி ஆனாலும், எனது நோக்கம் வேத நெறியைப்பற்றி அதில் உள்ளவைகளை உள்ளபடி யாவரும் அறியவேண்டும். அவ்வளவுதான். மறைப்பதற்கு ஒன்றுமில்லையே! இருப்பதைத்தான் எழுதுகிறேன்.

அரேபியாவை இஸ்லாம் விழுங்குவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக, அரேபியர் இந்தியாவைத் தங்கள் ஆன்மீக, கலாச்சார தாயகமாகவே நினைத்து வாழ்ந்திருந்தனர். இதற்கு சான்றாக அரேபிய மொழியில் இயற்றப்பட்ட கவிதைகளை அதன் ஆங்கில மெழிபெயர்ப்புடன், கீழே தமிழாக்கமும் (Translation) செய்யப்பட்டுள்ளத அரேபிய மொழியில் இருப்பதையும் ஆங்கிலத்தில் எழுத்துப் பெயர்ப்பு செய்து, (Transliteration) செய்யப்பட்டுள்ளது இதில் ஹிந்துக்களின் (1) ரிக், (2) யஜுர், (3) சாம, (4) அதர்வ, என நான்கு வேதங்களைப் பற்றி, மிகவும் போற்றி எழுதப்பட்டுள்ளது. இக்கவிதை, 1860 B.C. யில், அதாவது, முகம்மது, இஸ்லாமை அரேபியாவில் நுழைத்ததற்கு 2460 (1860+600) வருடங்களுக்கு முன், லபி-இப்னு-ஏ-அக்தாப்-இப்னு-டர்ரஃபா (Labi-Bin-E- Akhtab-Bin-E-Turfa) என்பவரால் இயற்றப்பட்டது. இப்பாமாலைகள், ஷாயர்-உல்-ஓகுல் (Sair- Ul-Okul) என்னும் பண்டைகால அரேபிய கவிதைத் திரட்டில் உள்ளது. இக் கவிதைத்திரட்டு 1742 AD இல், துருக்கிய நாட்டு சுல்தான் சலீம் ஆணையால், மிக்க முயற்சியுடன் சேகரிக்கப்பட்டது. வேத கலாசாரமே முகம்மது தோன்றுவதற்கு முன்னரே அரேபியாவில் பரவி இருந்ததற்கு மேலும் சான்றுகளை அதே ஷாயர்-உல்-ஓகுல் (Sair- Ul-Okul) என்னும் பண்டைகால அரேபிய கவிதைத் திரட்டிலிருந்தே நாம் அறிந்து கொள்ளலாம்.

1.. Aya muwarekal araj yushaiya noha minar HIND-e Wa aradakallaha manyonaifail jikaratun"

"Oh the divine land of HIND (India) (how) very blessed art thou!

Because thou art the chosen-of God blessed with knowledge

’ஹிந்த்’ என்னும் ஆன்மீக பூமியே! நீ எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமானவள்!! ஏனெனில், இறையே உன்னைத் தேர்ந்தெடுத்து நுண்ணறிவனைத்தையும் உன்னிடம் மட்டுமே அளித்திருக் கிறார்.

2.. "Wahalatijali Yatun ainana sahabi akha-atun jikra

Wahajayhi yonajjalur -rasu minal HINDATUN "

"That celestial knowledge which like four lighthouses shone in such

brilliance – through the (utterances of) Indian sages in fourfold abundance.”

வானுலகைச் சேர்ந்த கலங்கறை விளக்கங்கள் போன்று மிகப் பொலிவான பூர்ணத்வமுள்ள ஹிந்து ஞானிகளால் அளிக்கப்பட்ட நான்குவித அபூர்வ அறிவை, வேதம் நான்கையும்) உன்னிடமே அளிக்கப்பட்டு இருக்கிறது. [[[வேறெங்கும் இதைப் போல இல்லை]]]

3.. "Yakuloonallaha ya ahal araf alameen kullahum

Fattabe-u jikaratul VEDA bukkun malam yonajjaylatun"

"God enjoins on all humans, follow with hands down

the path the Vedas with his divine precept lay down."

வேறெங்கும் தேட வேண்டாது, நான்கு வேதங்களில் உள்ள மிக உன்னத வழிகளையே பின்பற்ற எல்லா பிறவிகளுக்கும் தெய்வமே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது..

4. "Wahowa alamus SAMA wal YAJUR minallahay Tanajeelan

Fa-e-noma ya akhigo mutiabay-an Yobassheriyona jatun"

"Bursting with (Divine) knowledge are SAMA & YAJUR bestowed on creation,

Hence brothers! Respect and follow the Vedas, the guides to salvation"

இறைவனே தான் படைத்த பிறவிகள் மேன்மையடைய ஸாம, யஜூர் வேதங்களில் பீரிட்டெழும் நுண்ணறிவு அனைத்தும் உள்ளடக்கி இருக்கிறார். ஆக சகோதரர்களே! பவசாகரத்தைக் கடக்க வேதங்களையே ஓடமாக பாவித்து அவைகளைப் பின்பற்றுங்கள்

5.. "Wa-isa nain huma RIG ATHAR nasayhin Ka-a-Khuwatun

Wa asant Ala-udan wabowa masha -e-ratun"

"Two others, the Rig and Athar teach us fraternity,

Sheltering under their lustre dispels darkness till eternity"

நம் போன்ற மானிடர்களுக்கு, தஞ்சமடையும் புகலிடமாக, நம்முள் இருக்கும் இருளை அகற்றிட, அதனால் உண்டாகும் பேரொளியால், உலகம் உள்ள வரையில் சகோதரத்வத்தை கற்ப்பிக்க இன்னும் இரு ரிக், அதர்வ என்னும் வேதங்களை நமக்களித்து இருக்கிறார்.

மற்றொரு மேற்கோளையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

முகம்மதுவின் தாய் மாமன், உமர்-பின் (இப்னு)-ஏ-ஹஷம் (Umar-Bin-E-Hassham) என்பவர் ஒரு ஹிந்துமத தீவிர பக்தர்; இவர் சிவபெருமானின் மீது அநேக பாமாலைகளைப் புனைந்துள்ளார். இவரும் ஒரு பிரசித்த கவிஞர், அவர் அன்று எழுதிய, பரமேஸ்வரனைப்பற்றிய கவிதைகள், இன்றும், ஸைர்-உல்-ஓகுல் (page 235 of Sair-Ul-Okul) இல் உள்ளது. இந்த அரேபிய பாமாலையின் சொற்களை ஆங்கிலத்தில் (transliteration) கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் ஆங்கிலத்தில் பொழிபெயர்த்து, தமிழாக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Kafavomal fikra min ulumin Tab asayru Kaluwan amataul Hawa was Tajakhru

We Tajakhayroba udan Kalalwade-E Liboawa Walukayanay jatally, hay Yauma Tab asayru Wa Abalolha ajabu armeeman MAHADEVA Manojail ilamuddin minhum wa sayattaru Wa Sahabi Kay-yam feema-Kamil MINDAY Yauman Wa Yakulum no latabahan foeennak Tawjjaru Massayaray akhalakan hasanan Kullahum Najumum aja- at Summa gabul HINDU

The above is translated into English as:

The man who may spend his life in sin and irreligion or waste it in lechery and wrath

If at least he relent and return to righteousness can he be saved? If but once he worship Mahadeva with a pure heart, he will attain the ultimate in spirituality. Oh! Lord Shiva exchange my entire life for but a day's sojourn in India where one attains salvation. But one pilgrimage there secures for one all merit and company of the truly great.

தமிழாக்கம்

எவரொருவர் தன் வாழ்நாள் அனைத்தும் பாப காரியங்களில், (ஹிந்து) மதக் கோட்பாடு களுக்கு முரணாக செயல்பட்டு, துன்மார்க்கமான சிற்றின்ப வாழ்வில் ஈடுபட்டு, மிக கடுங்கோபி யாக இருந்த போதிலும், அவனே, பின் மனம் வருந்தி, நல் வாழ்வில் திருந்தி, சிவ சன்மார்க்கத்திற்கு வந்து தன்னை காத்துக்கொள்ள முடியும்! மஹேஸ்வரான பரமேஸ்வரனை தூயமனத்துடன் அவனே ஒரு தடவை உள்ளூர வணங்கினால் போதும்; அவனுக்கு இறுதியான பேரின்பமான ஆன்மீகானுபவம் ( மெய்ஞானம்) உண்டாவது திண்ணம். ”ஓ! பரமேஸ்வரா!! – ஹிந்து சத்சங்கதில் கூட இருந்து, ஒரே ஒரு தடவை மட்டும், இந்தியாவுக்கு யாத்திரை செய்தால், மேல் குறிப்பிட்ட அனைத்தும் எனக்குக் கட்டாயம் கிட்டுமே! இது போதும் ஸ்வாமி!!! ஆக, பவசாகரத்தைக் கடக்க, பேரின்பப்பதவி அடைய, என் பூரண வாழ்க்கை வருடங்களுக்கு) ஈடாக, மிகச் சிறிது காலமாவது ஹிந்தில் ( இந்தியாவில்) வாசிக்க எனக்கு ஆசி அருளுமைய்யா!!” அங்கு ஆன்மீக வழிகளில் இன்னும் கற்கவேண்டியவை ஏராளம் எனக் கூறுகிறார்

முதலாவதாக, வேத வழிகளை வகுத்தோருக்கு, சில இயக்கத்தை, அல்லது சமயத்தை வகுத்தோர் போலல்லாமல், வேறெந்த தாழ்ந்த நோக்கமோ, சுய நல எண்ணங்களோ கிடையாது. மானிட ஜன்மங்களை எப்பாடுபட்டாவது இறைவனிடம் கடைத்தேறச் செய்ய வேண்டும். அவ்வளவு தான். நம் நல்வினை தீவினைக்கேற்றவாற்று, அடுத்தபிறப்பில், எந்த ஜென்மம் எடுப்போமோ யாருக்குத் தெரியும். ஆகையால், ஆழ்ந்து சிந்தனை செய்யும் திறனுள்ள மானிடராகப் பிறந்த இந்நல்ல தருணத்தை வழுவ விடாமல், ஒரு நல்வழியை தேர்ந்தெடுத்தாக வேண்டும். அவ்வழி வேத வழியானாலும் சரி, அல்லது அவரவர்களே தேர்ந்தெடுத்த சொந்த வழியானாலும் சரி. இறுதியில் யாவரும் நற்கதியடைய வேண்டும். அவ்வளவே தான். உன்னத இறையிடத்தை அடைய நல் வழி எதுவாக இருந்தாலும் அவ்வழி நல்வழியே என வேத நெறி கொள்கிறது. எல்லா நதிகளும் சமுத்திரத்தை நோக்கியே செல்கின்றன = All the rivers go the ocean = नदीनां शागर: गति: = (நதீனாம் சாகர: கதி :). என வேத நெறி கூறுகிறது.

आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरं ।

सर्व देव नमस्कार: केशवं प्रति गच्छति ॥

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம் |

சர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி ||

“ஆகாயத்திலிருந்து பொழியும் மழை நீர் வெவ்வேறு ஆறாகளாக மாறி, சமுத்திரத்தை நோக்கியே செல்வதுபோல, நேர்மையான நோக்கங்கொண்டு வெவ்வேறு கடவுள்களை நாம் தேர்ந்தெடுத்து செய்யும் வித வித நமஸ்காரங்களும், பரம்பொருளான ஒரே இறைவனுக்கே அர்ப்பணிக்கப் படுகின்றன”. வழிகள் பல்வேறாக இருக்கலாம். ஆனால் போகுமிடம் ஒன்றே தான்!.

அடுத்ததாக வேத வழிகளில், எவ்வித நிர்பந்தமும், பயமுறுத்தலும், சுயநலத்திற்காக, இல்லாததை மிகைபடுத்திக் கூறுதலும், மற்ற சமயங்களில் உள்ள நல்லவைகளை வேண்டுமென்றே குறை கூறி, மதிப்பைக்குறைத்துக் கூறுவதும், கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், கட்டயப்போர் எனவும், சுவன கேளிக்கை, மது-மாது என கிளர்ச்சிக் கவர்ச்சியூட்டி, மயக்கி, சிக்கவைப்பதும் கிடையாது. ஆக வேத நெறி எப்போதுமே எல்லோரையும் ஒருங்கிணைக்கிறது, வேத ஒழுங்கு முறையில் எதையும், எவரையும் அழிக்கவோ, அல்லது ஒழித்துக் கட்டவோ, புனித நூலைக்காட்டிக் காட்டி பயமுறுத்துவதும் கிடையாது. மேலாக வேதவழிகளைத் தொகுத்தோர் அதிலுள்ள தத்துவங்களில் உறுதியான (தன்) நம்பிக்கை கொண்டர்களாகவும் இருந்தனர். மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும்! வேத வழி, மானிடர்களை இணைத்து உருவாக்கும் ஒழுங்கு படுத்தப்பட்ட முறை; இருக்கும் நல்லவைகளையும் இடித்துத் தள்ளி, நிர்மூலமாக்கும் பயனற்ற, பண்பாடற்ற, கிறுக்குத்தனமான முறையே அல்ல. காலம் சென்ற, அன்வர் ஷேக், முன்னாள் முஸ்லிம், பாகிஸ்தானில் பிறந்து, 1947இல், ஹிந்து-முஸ்லிம் தேசப்பிரிவினையின் போது, இவரே தன் கையாலேயே, ஹிந்து-சீக்கியர்களைக் கொன்றவர். (காந்தி, நேரு, முகம்மது அலி ஜின்னா, ஆங்கிலேயர்களுடைய, கூட்டு முயற்சியால் ஆன தேசப்பிரிவினை), தன் கையால் ஹிந்து-சீக்கியர்களுக்கு தான் இழைத்த அக்ரமங்களை நினைத்து, மிக வருந்தி, பின் நாட்களில் தன் பெயரையும் “அநிருத் கியான் சீக்கா” என பெயர் மாற்றிக்கொண்டு, “Wonders of Rg Veda” ’ரிக்’ வேத அற்புதங்கள்’ எனும் சிறந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்: (இவர் முன்னோர் காஷ்மீர் பண்டிட் வகுப்பைச் சேர்ந்தவர்கள்-வேத விற்பன்னர்கள்) இவர் அந்நூலில் கூறுவது:: ”இந்தியாவை இடர்களிலிருந்து மீட்க்கப் போவது வேதவழி ஒன்றே தான், ஏனெனில் வேதவழி, மற்ற எல்லா சமயங்களில் உள்ள மத வெறி, மூடபக்தி இல்லாதது. ஆகவே, இந்தியாவிலுள்ள எல்லோரும், இந்தியாவை ஒரு நாடாக ஒன்றிணைக்க இந்த தத்துவத்தை காலங்கடத்தாமல், உணரவேண்டும்” என்றார். ””The salvation of India lies in following the Vedic way of life, which is far above religious bigotry. It is high time that Indians of all shades realised this fact to unify as one nation.”” – by (Late) Anwar Shaikh, ex- Muslim of Pakistan, who later changed his name as Aniruddha Gyan Shikha]]].}}}
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3(3)
»  ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4 (1)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum