இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 5 (1)

Go down

 ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 5 (1) Empty ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 5 (1)

Post by ஆனந்தபைரவர் Tue Aug 31, 2010 4:11 pm

இருந்தபோதிலும், தங்கள் கோட்பாடுகளை ஒரு தலையாய் அதிகாரத் தோரணையில் கூறும் கிருஸ்தவமும், இஸ்லாமும் தங்களிடம் கணக்கிலடங்காத குற்றங்களையும், குழப்பங்களையும், வைத்துக்கொண்டே, ஹிந்துக்களைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு, இடை விடாமல், குற்றங்காணும் ஒரே எண்ணத்துடன் அநாவசியமாகச் செய்யும் விமர்சனங் களால், ஒரு சமயம் இல்லா விட்டாலும் மற்றொரு சமயத்தில், இந்த அதீதமான குற்றச்சாட்டு களை, முதற்படி எதிர்வினை யாக, மற்ற மதத்துடன் கொள்கைப் பிணக்குக்கும், சண்டைக்கும் வித்திடாமல், ஹிந்து கலாச்சாரத்திற்கு ஆதரவாக நேர்மையான விளக்கங்கள் அளிக்கவும், வீண் விமர்சனங்களை மறுத்துக் கூற விழைவதும், மனித இயல்புதானே. வேறொரு விதத்தில் சொன்னால், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர் தரத்திற்கு ஹிந்துக்களும் தங்களைத் தாழ்த்திக்கொண்டு, மனிதருக்குள் மனிதர்கள் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படையாக தங்களைத் திட்டிக்கொள்வது போல (man to man abusing each other publicly) ஹிந்து-வேத நூல்களில் இவ்வாறு இல்லாது போனாலும், இவர்கள் உதிர்த்த அதே பொன்மொழிகளை – exact words as they have used – nothing more nothing less - (அதிகமாகச் சேர்த்துகூட அல்ல) அவர்கள் மீதே அதே செயல் திற வேகத்திலும், உபயோகித்தால், இச்சொற்களை கேட்டு ஹிந்துக்கள் போல இவர்களால் வாளா இருக்க முடியுமா? இத்தனைக்கு பிறகும், ஹிந்துக்களுக்கு எதிராக, கிருஸ்தவமும், இஸ்லாமும், வலிந்து அக்கிரம ஆக்கிரமிப்பை தொடர்ந்து, ஹிந்துக்களின் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவைகளால் மிகத் துணிவு பூண்டு, மீண்டும் மீண்டும் தொடர்ந்துத் தங்கள் முடிவில்லா அநாவசிய தாக்குதல்களை வேண்டுமென்றே நடத்தி, அல்லது மத மாற்றுக் செயல்பாட்டினால் ஹிந்து கலாச்சாரத்தை தாக்கிக்கொண்டே இருப்பதற்கும், ஒரு எல்லை உண்டல்லவா? இதற்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட, எவ்வித எதிர்ப்பு எங்கிருந்து வந்தாலும் தகர்த்தெறிய, கூடிய சீக்கிரமே ஹிந்துக்களால் ’’பொறுத்தது போதும் என, பொங்கி எழு’’ எனவோ, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற மூதுரைக் கேற்றவாறு எதிர் விளைவு உண்மையாக கூடிய சீக்கிரம் ஏற்பட்டால்...........!! (conflagration) பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?’ தற்கால, வருங்கால சூழ்நிலையில் ஹிந்து இளைஞர்களும், தங்கள் முன்னோர்கள் போல பொறுமைப் பதுமைகளாக, அப்படியே, இருப்பார்கள் என யார்தான் வருவதுரைக்க முடியும்? ஹிந்துக்களின் பொறுமை எனும் எல்லையைத் தாண்டத் தூண்டுவது யார்? (Who started all these? Certainly not Hindus) நிச்சயமாக ஹிந்துகளே அல்ல. அதே சமயம், ஹிந்து ஆன்மீகத் தத்துவங்களும், வேத வழி கலாச்சரங்களும், மிகப்பரந்த மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது எனவும், மதமாற்றம் செய்துதான் தங்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கவோ அல்லது ஆட்களை அறுவடை செய்யத் தேவையில்லை என இன்னும் மிகச் சிறப்பாக’’ஜாடிக்கு மூடி’’ எனும் தக்க மொழிகளிலும், எடுத்துரைக்க வேண்டும். ஹிந்துக்கள் எடுத்த எடுப்பிலேயே, முதலில் வன்முறையில் இறங்குபவர்களல்ல, என்பதை உலகில் எல்லோரும் மனப் பூர்வமாக அறிவார்கள். ஹிந்துக்களின் இப் பொறுமையே ஹிந்துக்களுக்கு எதிரியாகி, மேலும் இப்பொறுமையே இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் துணிவு கொடுத்து, ஹிந்துக்கள் மீது தாக்குதல்களை அதிகரிக்கத் தூண்டுகிற தல்லவா? எக்காலத்திலும் வன்முறையாளர்களான, இஸ்லாமியர், கிருஸ்தவர்கள் போல, ஹிந்துக்களும் அன்றே வன்முறையில் இறங்கி இருந்தால், குறைந்தது 1400 வருடங்களாக முஸ்லிம்களும், பிற்காலத்தில் கிருஸ்தவர்களும், இந்திய மண்ணில், கனவில் கூட ஒரு காலடி வைத்திருக்க முடியாமல் போயிருக்குமே! விளைவு என்ன ஆயிருக்கும்? இந்திய சரித்திரத்தை நடந்தது நடந்தபடி படித்தறிந்தவர்களுக்கு, இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் இந்தியாவில் எவ்வாறு படிப்படியாக நுழைந்து, இந்திய நாடு முழுவதையும் அடிமையாக்கினர் என தெளிவாக அறிந்திருப்பார்கள். (இருவர்களில் ஒருவர் கூட நேர்வழியில் நுழைந்தவரல்ல அல்லது மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்துடனும் அல்ல. அப்படி ஏதாகிலும் நல்லது நடந்திருந்தால், அது கட்டாய நிலையில் தவிர்க்க முடியாமல், அந்தரங்க நோக்கத்துடனே செய்ய நேர்ந்ததாகும். அல்லது உள்நோக்குடன் இன்று தெரிவிக்கப்படும் இலவசத்திட்டங்கள் போல ஆகும் (according to comparative cost theory). ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியாவை அடியோடு சுரண்ட, என்றுமே எவ்விதத்திலும் இவ்விருவரும் தயங்கியதில்லை என தீர்மானமாகக் கூறிவிடலாம்.) மேலாக, ஹிந்து-இந்தியா எந்நாட்டுடனும் இதுவரை வலிய சண்டைக்குச் வென்றதில்லை. ஒரு சிறு ஆதாரத்தையாவது உலகில் எவராவது கூறமுடியுமா? ஆதாரமும் தேவையில்லை எனலாம். ஏனெனில் இது உலகறிந்த உண்மை. (The whole world knows this universal truth). ஆனால் வந்த சண்டையையும் இனி சகித்துச்செல்ல வருங்காலத்திலும் முடியுமா? அது, இதுவரையிலும் நடக்காதற்குக் காரணம், இது அவர்கள் வழி வழியாக பாரம்பரியமாகப் பின்பற்றிவரும் சாத்வீக வேத வழி இயல்புதான். ஆனால், தற்போதுள்ள நிலைமை, மகா பாரதத்தில் அன்று நடந்தவாறு இன்று, நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் நடக்கிறதல்லவா?. மகா பாரத யுத்ததில் அன்று முடிவுற்றவாறு இந்தியாவிலும் (உலகத்திலும்) அப்படி நேர்ந்து விடுமா? அப்படி ஒரு நிலைமை உண்டாகிவிடுமா? இதில் யார்தான் வெற்றிபெற்றவர், தோல்வியடைந்தவர் என ஆவார்கள்? இதுவரை தெரிந்த விஷயங்களிருந்து வருவதை ஊகித்தால் இப்பயங்கரத் தோற்றமே மனதில் உண்டாகிறது. (extrapolation) எவ்வாறு இருப்பினும், இஸ்லாமிய கிருஸ்தவ சமயப் பிரசாரகர்கள் தொடர்ந்து வேத வழியைப் பற்றி அவதூரான பொய் பிரசாரங்களில் ஈடுபடும் போது ஹிந்துக்கள் இச்செய்கைகளுக்குத் தக்க தற்காப்பு நடவடிக்கை எடுத்தால், இதில் என்ன தவறு இருக்க முடியும்? இம்மாதிரி வேண்டுமென்றே ஹிந்துக்கள் மீது அபவாதமாக இஸ்லாமிய, கிருஸ்தவ போதனைகள் அதிகரிக்கும்போது, ஹிந்துக்களும் தங்களையும் தங்கள் புராதன கலாச்சாரதையும் தற்காத்துக் கொள்ளத் தானே வேண்டும். இது தானே நியாயம் கூட.

தற்காலத்தில், குறிப்பாக, கிருஸ்தவ மத பிரசாரகர்கள் கீழ்த்தர விபரீதமான எண்ணங் கொண்டு, இந்திய நகரங்களில் பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து, கிராமங்கள் நிறைந்த பழங்குடி மக்களிடையே, பிரசாரங்களை நடத்துகின்றனர். நகரங்களில் உள்ளது போல, கிராமங்கள் நிறைந்த பழங்குடி மக்கள் நிறைந்த பகுதிகளில், நகரத்து நன்மைகள் அனைத்தும் நாட்டுப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அல்லது இவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்லெண்ணங்கொண்டு அல்லவே அல்ல. இதற்குக் காரணம், நகரத்தில் உள்ள பொது மக்களால் உண்டாகும் பலதரப்பட்ட இடர்பாடுகள், மேலும் அங்கு கற்றறிந்த பொதுமக்கள் அதிகம், இவர்கள் நடவடிக்கைகளில் விவரங்களை அறிய, கிருஸ்தவர்களுக்கு பற்பல அசௌவுகரியமான கேள்விக்கணைகளை விடுக்கும் போது அவைகளை சமாளிக்க முடியாதுதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால், பெரும்பான்மையாக படிப்பறிவில்லாத கிராம மக்களிடமிருந்து இம்மாதிரி தொந்திரவு கிடையாது, கிராமப் பகுதிகளில், ”கொடுப்பதைக் கொடுத்து பெறவேண்டியதைப் பெற” என (ஒரு அறிஞர் அன்றே சொல்லிக் கொடுத்தது போல) எல்லாவித லஞ்ச லாவண்யத்தைக் காட்டி சமாளிப்பதும், பல பகுதிகளைக் கொண்ட சட்ட திட்டங்களை எப்படியாவது ஏதாவது செய்து ஏமாற்றுவது அல்லது அங்கு சட்டங்களை வளைப்பதும் கிராமங்கள் நிறைந்த பழங்குடி மக்கள் நிறைந்த பகுதிகளில், மிக சுலபம். ஆகவே தான் கிருஸ்தவ மத பிரசாரகர்கள், இம்மாதிரி, வற்புறுத்தலுக்கு எளிதில் பணிகிற, மென்மையான இலக்குகளில் தான், தங்கள் கிருஸ்தவப் பணியாற்றும் திறத்தைக் (கைவரிசையைக்!) காட்ட, முழு மூச்சுடன் செயல் படுகிறார்கள்.

உலகிலும், குறிப்பாக, இந்தியாவிலும். எங்கும் அமைதி நிலவ ஓரே ஒரு சந்தர்ப்பம் உண்டு. இந்த அமைதியைப்பெற, கிருஸ்தவர்களும், முஸ்லிம்களும், தற்போது நடத்தும் மத மாற்றம், வன்முறை, வெடிகுண்டு கலாச்சார நடவடிக்கைகள் இல்லாமல் போனால் தான் முடிவாக அமைதி நிலவ முடியும். இல்லாவிடில் அமைதியை என்றும் காணவே முடியாது. இந்த பிரச்சனைக்கு இது தான் நியாமான தீர்வு: இதற்கு மற்றொரு மாற்று வழி: இவர்களைப் பற்றிய உண்மை ரகசியங்களை, உலகிலுள்ள எல்லோரும் அறிய, இவர்கள் புனித நூல்களில் உள்ளது உள்ளபடி, தற்கால நடப்புகளைத் தொடர்வு படுத்தி, முற்றிலும் வெளியிட்டு மக்களுக்கு ஒரு மன விழிப்பு நிலையை உருவாக்குவது ஒன்றில் தான் உள்ளது. இரண்டாவது தான் நடப்புக்கு சாத்தியமானது. உடனடியாக செயலாற்ற வேண்டியது. இது மிகவும் இன்றியமையாது.

[[[ அம்பேத்கர், சொன்னது போல, ”முஸ்லிம்களுக்கு, அகில உலக சமூக சகோதரத்துவ ஒற்றுமை/ தோழமை எனும் உணர்ச்சி எனபது கிடையாது; அவர்களுக்கு சகோதர ஒற்றுமை எனபதே முஸ்லிம்களுக்குள் சகோதர தோழமை ஒன்றுதான்” என்றார். (Dada Saheb Ambedkar wrote: “Muslims do not have anything to do with universal brotherhood; their brotherhood is limited only to Muslims”) இது கிருஸ்தவர்களுக்கும் மிகப் பொருந்தும்.

உலகப் புகழ் பெற்ற சிந்தனையாளர், சீர்திருத்தவாதி, பெட்ர்ட்ராண்ட் ரஸ்ஸல் கூறுகிறார்: “ஆழ்ந்த ஆராய்வுக்குப்பிறகு, இதைத் தெளிவாகக் கூறுகிறேன். ’சர்ச்’ ஏற்பாடு செய்யும் கிருஸ்தவ சமயமே (கிருஸ்தவ பிரசாரங்களே), உலகளவில், நல்லொழுக்க மேம்பாட்டுக்கு முக்கிய விரோதி” "I say quite deliberately that the Christian religion, as organised in its Churches, has been and still is the principal enemy of moral progress in the world." - Bertrand Russell

ஸ்ரீ சீதாராம் கோயல், கூறுகிறார், “கிருஸ்தவ சமய பிரசாரகர்கள், கிருஸ்தவ (மதம் மாற்றும்) இயக்க சரித்திர ஆரம்பத்திலேயே, தங்கள் காரியத்தை முழுதுமாக சாதித்துக்கொள்ள மனித உள்ளங்களுக்கு மோசடி செய்யும் கலையில் மிக திறம்பட முற்று பெற்ற நிலையை என்றோ அடைந்து விட்டனர்” "Christian missionaries had perfected the art of manipulating human minds quite early in the history of their cult" - Sita Ram Goel]]]

19. ஆன்மீகத்தில் தெளிவு பெற்ற நிலையையும், பேரின்பப் பேறு பெறும், (ஜீவன் முக்தி அடையும்) முயற்சியில், தங்களுக்குகந்த வழியைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டென ஹிந்து சமயம் உடன்பாடு கொண்டது.

உதாரணமாக, இங்கே 2001 இல், அலஹாபாதில் நான் கண்ட கும்ப மேளா எனும் விழாவைப்பற்றி கட்டாயம் கூறத் தான் வேண்டும். அங்கே 7 கோடியே, 10 லட்சம் (71 million people) பொதுமக்கள் கும்ப மேளா விழா நடைபெற்ற நாட்களில், 5000 பற்பல ஹிந்து ஆன்மீக தத்துவங்களைப் பின்பற்றும் அநேக ஆச்ரமங்களிலிருந்து வந்திருந்தனர். இதில் குறிப்பிடும் அம்சம் யாதெனெல், தங்களுக்குள் ஒத்த தத்துவத்தைச் சார்ந்தவர்கள் அநேகமாக நிறைந்திருந்தும், தெளிவாகத் தெரியும் தத்துவ வேறுபாடுகளுடைய ஆச்ரமவாசிகளும் வந்திருந்தனர். இருந்தும், அங்கே வந்திருந்த ஒவ்வொருவரும் பொது நலனுக்காக ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, தக்க மதிப்பளித்து, மரியாதையுடன் நடந்துகொண்டு, இப்புனித விழாவில் பங்கேற்றனர்.

இஸ்லாமிய சமயத்தில், 72 உட்பிரிவுகள் உண்டு, கிருஸ்தவத்திலும், அநேக வித இனங்களைச் சார்ந்த கிருஸ்தவர்கள் உண்டு, இவைகள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் உள்ள பற்பல வித்தியாசங்களையும், விமர்சனங்களையும் பொது மேடைகளில் மிக பண்பற்ற தன்மையில், மிக அசிங்கமாக போட்டுடைத்துக் கொண்டு, ஒருவர் மற்ரொருவரை பரஸ்பரம் குற்றங்களைச் சாட்டி, திட்டித் தீர்த்து, கண்டனம் செய்வதையும், அன்றாடம் காண்கிறோம். இஸ்லாமியம் என்பது ஒரே சமய மாக இருந்து கொண்டு, அதே புனித நூல்களை ஆதாரமாகக் கொண்டு, சில வேறு காரணங்களுக்காக, அநேக உட்பிரிவுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு, மிகக் கொடுமையாக பரஸ்பர கொலை வரை நீண்டு, தூக்கிலிட்டு, அப்படித் தூக்கிலிட்டு கொல்லப்பட்டவர் புகைப்பட, காணொளிப் படங்களை, பத்திரிக்கை, தொலைக் காட்சிகளிலும், ஒவ்வொரு நாளும் உலக மக்களுக்குத் திகட்டிப் போகுமளவுக்குக் காணக் கிடைக்கிறது. (ஈரானில் பஹாய்கள் படு கொலை, பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்யும் அக்ரம வன்முறைச் செயல்கள், பாகிஸ்தானில் அஹமதீயர்கள் படு கொலை, ஆப்கானிஸ்தானில், முன்நாள் பிரதம மந்திரியே கொல்லப்பட்டு, அவர் பிணத்தை, ஒற்றைக் காலைமட்டும் தலை கீழாக மின்சார வெளிச்சக் கம்பத்தில் தொங்கவிட்டு, பிணத்தைக் கூடக் கத்தியால் குத்திச் சீண்டிக் கண்டு களிக்கும் வெறிக் கூட்டம், முஸ்லிம் பெண்களைக் கல்லால் அடித்தே கொலை செய்யும் கொடூரப் படங்கள் முதலியன சர்வ சாதாரணக் கிடைக்கும் சில இஸ்லாமிய உதாரணங்கள்). பல பிரிவுகளுள்ள இஸ்லாமியர் நம்புவதும் ஒரே கடவுள் - ’அல்லாஹ்’, எல்லோரும் பின்பற்றுவதும் அதே புனிதல் நூல்களான், குரான், ஹடிஸ், சுன்னா, சுரா ஆகியவைகள்தான். இருப்பினும்?............

கிருஸ்தவ மதத்திலோ, கத்தோலிகர்கள், ப்ராடஸ்டண்ட் என்றும் இவர்களுக்குள்ளும் அப்பப்பா! கணக்கிலடங்காத, உட்பிரிவுகள் பிரிவுகளும் உண்டு. இவர்களுக்குள், ஏராள வேற்றுமைகள், பரஸ்பர விமர்சனங்கள், முழு நீளப்போர் என அநேக நூற்றாண்டுகளாக இடைவிடாது இன்றுவரை ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. இதில் மிக திகைப்புக்கு உறியது என்னவென்றால், இவர் எல்லாரும் ஒரே கிருஸ்துவையே பின்பற்றுபவர்கள், பைபிளே தங்கள் உயிர் என சொல்லிக் கொள்பவர்கள், இவர்களுக்குள், மற்ரொருவரைத் தாக்கியும் தங்களுக்குள் மதமாற்றுவதில் பரஸ்பரம் நிலை குலைந்து, மற்ரொருவரைத் துன்புறுத்திக் கொள்வதில் தன்னிறைவு அடைந்து கொள்கின்றனர். கிருஸ்தவ, இஸ்லாமியருக்கும் இடையே நடக்கும் நிரந்தர கொடூர சண்டைகள் என்பதே ஒரு மிகப்பெரிய தனிப் பிரச்சனை. உதாரணமாக, பாகிஸ்தானில் இது இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.

ஒரே கடவுளெனும் கருத்துப்படிவத்தில், அந்த ஒரே கடவுளையே பல உருவங்களாகத் (சிலைகளாகத்) தொழும் ஹிந்து வேத வழியிலுள்ளவர்கள், பரஸ்பரத்தில், (கிருஸ்தவர், இஸ்லாமியர்கள் போல) வெட்டிக் கொலை புரிந்து கொள்வதை எங்காவது யாராவது பார்த்ததுண்டா? சற்று சிந்தியுங்கள். இது தான் வேத வழிக்கும் மற்ற இஸ்லாமிய கிருஸ்தவ வழிகளுக்கும் உள்ள மற்றொரு முக்கிய வித்தியாசம். ஹிந்துக்களுக்கும் ஒரே கடவுள், ஹிந்துக்களின் புனித பெட்டக நூல்களின் ஆதாரம் (Source Books) ஒன்றே தான்.

20. மற்ற சமயங்கள் போலல்லாமல், ஹிந்து சமயம் ஒன்றில்தான் எல்லா உலகத்துக்கும் ஒரே கடவுள் எனவும், அவரை மனதார உணரும் நிலையை அடைவதற்கு, வழியையும், காட்டுகிறது.

பொதுவாக நாம் காண்பது, ஒவ்வொரு சமயமும், ஒரு நிலப்பரப்பைச் சார்ந்த மக்களுடைய சரித்திரம், பின்னணி, அல்லது முன்னேற்றம் ஆகியவகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஹிந்து சமய கலாச்சாரமோ, பிரபஞ்ச அடிப்படையில், இந்திய மக்களைச் சார்ந்ததாக மட்டுமில்லாமல், உலகிலுள்ள எல்லா பிராந்தியங்களுக்கும் சார்ந்ததாகி, அநேக உருவளவைச் சார்ந்த பிரபஞ்சத்திலிருக்கும், பலதரப்பட்ட கிரகங்களையும் சார்ந்து, ஒரு முன்னறியும் திறனுடனுடன், தூய்மையான பார்வையுடன், எந்த அம்சத்தையும் மிகைப்படுத்திக் கூறாமல், அதே தருணத்தில் ஒன்றையும் புறக்கணிக்காமல், மிகப் பொருத்தமான உருவமைப்பு, தொலைவு, ஆகியவற்றைக் குறித்துச் சரியான கருத்தைத் தோற்றுவிப்பதாகவும் காணப்படுகிறது. ஆகையால்தான், வேத வழி ஆன்மீக தத்துவங்கள் பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் உகந்ததாக, தக்க போதனைகளை அளிக்க முடிகிறது.

வேதவழி கடவுளைப்பற்றி கண்மூடித்தனமான அபிப்பிராயங்களைத் தழுவியதல்ல அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் சரித்திரத்தைச் சார்ந்ததுமல்ல. வேத தத்துவங்கள், படைப்பு ஆரம்பித்த நாளிலிருந்து இருக்கும் இயற்கையின் விதிகள், செயல் ஒழுங்கு முறைகளை, அடிப்படையாகக் கொண்டது. இதனால் தான், பிரபஞ்ச விதிகளும், வரையறுத்துக் கொண்ட பிரபஞ்ச ஒழுக்க நியதிகளும் எல்லாருக்கும் பொதுவான சட்ட திட்டங்களும் வேதவழி செயல் முறைகளில் உள்ளடங்கியது. வேத பாடங்களில் உள்ள இவ்வேத வழிக ளைப் பின்பற்றும்போது, இதன் விளைவாக, ஆன்மீகத்தில் ஒருவர் இயற்கையின் ஒழுக்க நியதிகளை தங்கள் புலனாற்றலால் கூர்ந்து கவனித்து, மிகுந்த உயர் நிலையான மன-விழிப்பு-நிலையில், (consciousness) இறையை நன்கு புரிந்து கொண்டு, அவ்விறையே நம் ஒவ்வொருவருள்ளும் சுடரொளியாக, (சிறு துகளாக) உள்ளார் என்பதை நேரிடையாகவே அறிந்து, அகத் தெளிவு பெற முடியும். இம்முறையில் ஒருவர் தங்களுடைய ஆன்மீக அடையாளங்களை மனதால் உணர்ந்து கொண்டு, படைப்புகளில் உள்ள ஒற்றுமைகளையும் அறிந்து கொள்ள முடியும். இதனால்தான் வேத தத்துவங்கள் அனைத்திலும் பிரபஞ்ச அணுகுமுறையையே அடிப்படையாகக் கொண்டது என வேத வழி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள்.

வேத வழி ஒரு பிராந்திய அறிவாற்றலால், கடவுளைப்பற்றி கண்மூடித்தனமான அபிப்பிராயங்களைத் தழுவியதல்ல என முன்பத்தியில் கூறி இருக்கிறோம். அக்கருத்தை மீண்டும் வலியுறுத்த, வேதவழி என்பது ‘இந்தியர்களையும், இந்திய பிரதேசத்திற்கு மாத்திரமே உரியதும் அல்ல, சார்ந்ததும் அல்ல. ஆனால், இதில் குறிப்பிட்ட அநேக நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடந்தபோதும், இந்திய காப்பியங்களான மகாபாரதத்தையும், மற்ற புராணங்களைச் சார்ந்து இருந்தும் கூட, அல்லது இதில் கூறப்பட்டுள்ள ஏராள வேதகால ஆட்களும், அவதாரங்களும், ஆங்கே சித்தரிக்கப்பட்ட பற்பல செயல்கள் (போர், சமாதானம், உறவுக்குள் சண்டை, சச்சரவு, நல்லது, கெட்டது, விளையாட்டு, ஓய்வு நேர பொழுது போக்கு முதலியன), இருந்தபோதிலும், இக்காப்பியங்களில், (மகாபாரதம், மற்ற புராணங்களில்) இந்தியாவுக்கு வெளியில், அநேக கிரஹங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும், அக்காப்பியங்களில் கூறும் போதனைகள், தத்துவங்கள், யாவுமே, ஆன்மா சம்பந்தப்பட்ட அறிவியலைச் சார்ந்ததேயாகும். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். உலகில் உயிருடன் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் ’ஆன்மா’ என்பதைச் சார்ந்தது. ஆகையால், ஆன்மாவைப்பற்றிய அறிவு, தெரிந்துகொள்ளல், எந்த ஒரு பிராந்தியத்தையோ, அல்லது ஒரிடத்தில் வாழும் மக்களையோ, சார்ந்ததல்ல. இது எல்லாவற்றிற்கும் உரிய, பாதிக்கிற, உள்ளடக்கிய, எங்கும், எல்லா நிலைகளிலும் உள்ள, மனித இனம் முழுதுக்குமே ஏற்றது. ( It is universal).

மேற்கூறிய யாவுமே, கடவுளைப் பற்றிய அனுபவ அறிவைச் சார்ந்தது. வேத மனோபாவத்தில் கடவுள் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு உரியதோ, அல்லது ஓரினத்தைச் சார்ந்ததாகவோ, அல்லவே அல்ல அல்லது இதில் குறிப்பிட்ட ஒழுங்கு முறைகள், தொழுகைகள், ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக, செய்யப்பட்டதும் அல்ல அல்லது ஓரின மக்கள் தான், தனிப்பட்ட முறையில் இவைகளைச் செயல்படுத்தப்பட வேண்டியது என்பதுமல்ல. இக்கடவுள், யூதர்களுக்கோ, ஹிந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, அல்லது எந்த சமயத்தாருக்கோ தனித்தனியாகப் பொறுக்கி எடுத்து அவர்கள் தான் பிரத்யேகமாக, செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரையறுக்கப் பட்டதும் அல்ல. இக் கட்டுப்பாடுடன் கூடிய குறுகிய மனோபாவம் வேத வழிக்குள்ளும், வேத மரபுக்குள்ளும், இல்லவே இல்லை. வேதபாட நூல்களில், கடவுளைப் பற்றி விவரமாக குறிப்பிட்டபடி, கடவுள் தாம் படைத்த எல்லாவற்றிடமும் அன்புள்ளவர், தாம் படைத்த ஒவ்வொன்றின் மீதும் (விதி விலக்கில்லாமல்) அக்கறை கொண்டவர், படைத்தவைகள், மானிடர் மட்டுமின்றி, எல்லா ஜீவ ராசிகளிடமும் பற்று உற்றவர், படைத்த பூவுலகம் எனும் ஒரு கிரஹத்தில் மட்டுமின்றி, மற்ற எல்லா கிரகங்களில் உள்ளவைகள் எல்லாவற்றிலும் (புழு, பூச்சி, பூண்டு ஆகியவைகள் மீதும் அக்கறை கொண்டவர் என்றுதான் வேத வழி நூல்கள் கற்பிக்கின்றன. கடவுளால் படைக்கப் பட்டவைகள் எங்கிருந்தாலும், எவ்வித உருவங்கொண்டிருந்தாலும், கடவுள் மிக்க அக்கறை கொண்டு, எல்லாவற்றிலும் பற்றுடன் உள்ளார் என, தான் படைத்தவைகளும் உணரவேண்டும் எனும் நல்லெண்னமும் உடையவர், இக்காரணங்களுக்காகவே தான், அவ்வப்போது தானாகவே, அவதாரம் எடுத்துக் கொண்டு நம் முன் தோன்றுகிறார்.

இன்னும் மேலாக, ஹிந்து சமயம், உலகத்திற்குத் தலைமை ஆசிரியரையோ, அல்லது தனி ஒரு மனிதரையோ அடையாளங்காட்டி, அதன் அடிப்படையில் செயலாற்றுவது இல்லை. கத்தோலிக்க கிருஸ்தவ சமயத்திலுள்ளபடி, ஒரே ஒரு “போப்” என்பவர் மட்டும் தான் கத்தோலிக்க கிருஸ்தவர்கள் மீது ஏக போக உரிமை பெற்றவர், தன் அதிகரம் (எதுவானாலும்) செலுத்தத்தத் தக்கவர், ஆக உலகிலுள்ள எல்லா கத்தோலிக்க கிருஸ்தவர்கள் அனைவரும் “போப்” எதெது ஆணையிடுகிறாரோ, அவைகளுக்கு மறுப்பு, வெறுப்பின்றி, கீழ்ப்படியவேண்டும் என்பது போல, வேத வழிகளில் கிடையவே கிடையாது.

எந்த மாணவர் / சீடர், எந்த குறிப்பிட்ட ( ரிக், யஜுர், சாம வேத வழி) ஆன்மீக ஆசிரியரிடம் முறையாக தீட்சைபெற்று வேத பாடங்களைக் கற்று இருந்தாலும், அவரவர் ஆசிரியர் கற்றுக்கொடுத்த வேத வழி, மரபுகள் மட்டுமல்லாது, மற்ற வேத வழியில் மிகச்சிறந்த ஆசான்கள் காட்டிய வழிகளிலும் தக்க பயிற்சிபெற்று மிகச் சிறந்த தேர்ச்சியையும் பெறவேண்டும் எனவே செயல்படுகிறது. வேதவழியைப் பின்பற்றும் போது ஒவ்வொருவருவரும் சரியான தடத்தில் செல்கிறார்களா அல்லது இல்லையா, எல்லா நற்போதனைகள் நன்கு பின்பற்றப் படுகின்றனவா என பற்பல இடங்களில், ஒழுங்குமுறைத் தராசுக்கோலால் சமநிலையில் உள்ளதா என பரிசோதிப்பதையும் வேத (மரபு) வழக்கங்கள் பரிந்துரைக்கின்றன. இதற்கான தேர்வுத்திட்டங்கள் பல குறிப்பிட்ட இடங்களில், தக்க ஆன்மீக குருக்களாலும், சாதுக்களாலும் (ஆன்மீகத்தில் குண நலன்களால் நிரூபிக்கப்பட்ட நிபுணர்களாலும்), பரீட்சை அதிகாரிகளாக (examiners) - வருடாவருடம் அநேக பொது இடங்களில் ஆன்மீக-மாணாக்கர்களை தேர்வு செய்கிறார்கள். இவைகளைத் தவிர வேத நூல்களில் தகவல் நிறைந்த நிர்ணயிக்கப்பட்ட பாடங்களும் உண்டு. இந்நூல்களில் உள்ளவை வேற்றுமையில்லா போதனைகளக் கொண்டதால், எங்கும் எதிலும் இடர்பாடில்லை. சில இடங்களில் பாட-விளக்கங்களில் வேற்றுமைகள் எழும்போது, நன்கு விவாதித்து, விசாரணைசெய்து, ஏற்றவர்களால், நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், எல்லாமே தெளிவாக எல்லாராலும் ஏற்கும்படியாகவும் உள்ளது. இதனால், வேத வழி மாணாக்கர்கள் செல் தடம் சரியாக உள்ளதா எனவும் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் மற்றொரு விளைவு. அதாவது மாணாக்கர்களும், நல்லாசிரியரிடம் தங்கள் பாடங்களை முரண்பாடற்ற முறையில் கற்றுக் கொள்கிறோம் எனவும் (சுய) திருப்தியையும் அவர்களுக்கு அளிக்கிறது.

21. ஹிந்து தத்துவங்கள், எல்லா உயிரினங்களிலும் கடவுளைக் காண ஊக்கமளிக்கிறது:

கடவுளைப்பற்றி வேண்டிய விரிவுரைகளுடன், ”கடவுள் எல்லா உயிரினம் ஒவ்வொன்றின் உள்ளும் உறைந்துள்ளார்” என வேத புனித நூல்கள், எடுத்துரைத்து நம் முன்னுணர்வை ஐயமற, அதிகரித்துக் கொள்ள, தேவையானவற்றை சேகரித்துக் கொடுக்கின்றன. வேத நூல்களில் உள்ள பாடங்களை ஆர்வமுடன் ஆழ்ந்து ஆராய்ந்த பின், நமக்குள் முன் இருந்த கடவுள் உணர்வு இன்னும் அதிகரித்த்து, பரமாத்மாவான கடவுள் (Supersoul), ஜீவாத்மாவான (individual soul) நம் ஒவ்வொருவரிடம் உள்ளார் என வித்தியாசமான உணர்வு நமக்குத் தன்னால் ஏற்பட்டுவிடும். இம்மாதிரியாக விளக்கிப் பொருள் கூற, வேத நூல்களில் உள்ளது போன்று வேறு எந்த நுல்களிலும், எந்த இடத்திலும் காண இயலாது. இத்தகவல் கொண்டு, உயிர் வாழும் ஒவ்வொரு ஜீவனுள்ளும், (நாம் எல்லோரும் உள்பட), அப்பரம்பொருளின் ஒரு சிறு பகுதி எனவும், மிகச்சிறிய அத்தெய்வத்தன்மை நமக்குள் இருப்பதையும் காணலாம். இந்த முன்னுணர்வுள்ள மன உணர்வால் கடவுளால் உருவாக்கப்பட்ட உயிர்வாழும் ஒவ்வொரு பிராணி மீதும், இயல்பாகவே, நமக்கு மரியாதையும் அக்கறையும் அதிகரித்து விடுகிறது. ஆக, நம்முள் கடவுள் உள்ளார் என்றவுடன், நம் மனதைத் தெளிவாக்கி, ஒவ்வொரு உயிரும் நமக்குப் புனித உறவுமாகிவிடுகிறது. இந்த அறிவால், நாம் கடவுள் படைத்த எதையும் யாவரையும் நேசிக்கவும், மற்றவர்களோடு ஒத்துழைத்து பரஸ்பரம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் எண்ணம் உருவாகிக் கொள்ளலாம். வேத வழி வந்த ஹிந்து தத்துவங்கள்தான் எல்லா உயிரினங்களிலும் கடவுளைக் காண ஊக்கமளிக்கிறது. (இதனால் வெறுப்பு, அதன் தொடர்ச்சியாக மதப்போர், சுவர்க்க உத்திரவாதம், புனித ஏமாற்றல், கொலைகளேது?)

[[[ஒவ்வொரு ஹிந்து வேத வழித் தொழுகை முடிவில்,

”உலகெங்கும் உள்ள யாவும் (கடவுள் படைத்தவை அனைத்தும்) சுகமாக வாழ வேண்டும், எல்லாவற்றிகும் (எல்லோருக்கும்) எல்லாவித மங்களங்களும் உண்டாகட்டும்” –

“லோகா: ஸ்மஸ்தா: சுகின: பவந்து; |

சமஸ்த சன் மங்களானி சந்து|| ”

लोका: समस्ता: सुखिन: भवन्तु ।

समस्त सन् मंगळानि सन्तु॥

– என வாழ்த்துக் கூறி முடிப்பது வழக்கம்]]]

. நன்றி திண்ணை
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
»  ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2 (2)
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3(3)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum