இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வேப்பிலையை இனிப்பாக்கி, இன்னலை தனதாக்கிக் காக்கும் மத்தூர் மகிஷாசுரமர்த்தினி!

Go down

வேப்பிலையை இனிப்பாக்கி, இன்னலை தனதாக்கிக் காக்கும் மத்தூர் மகிஷாசுரமர்த்தினி! Empty வேப்பிலையை இனிப்பாக்கி, இன்னலை தனதாக்கிக் காக்கும் மத்தூர் மகிஷாசுரமர்த்தினி!

Post by ஆனந்தபைரவர் Fri Dec 17, 2010 3:41 pm


பக்தர்கள் துன்பம் என வந்தால் அதைத் தன்னுள் வாங்கிக் கொண்டு இன்பத்தை வழங்குபவள்; மலர்ந்த முகம் கொண்டவள்; மலரினும் மென்மை உடையவள்; மாபெரும் உன்னதம் படைப்பவள்; அண்டம் ஆள்பவள் என பக்தர்களால் பரவசத்துடன் துதிக்கப்படும் அந்த அன்னைதான் மத்தூர் மகிஷாசுரமர்த்தினி!

ஆறுபடை தலங்களில் ஒன்றான திருத்தணிக்கு (திருவள்ளூவர் மாவட்டம்) அருகில், பத்து கிலோமீட்டர் தொலைவில் மத்தூர் கிராமம் உள்ளது. இங்கு வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைதியான இடத்தில் அமைந்துள்ளது மகிஷாசுர மர்த்தினி அம்மன் திருக்கோவில்.

ஆதிகாலத்தில் மகிஷ உருவம் (மகிஷம்- எருமை) கொண்ட மகிஷாசுரன் என்ற அரக்கன் மகாவிஷ்ணு, சிவன், பிரம்மா ஆகியோரை வேண்டி கடும் தவம் செய்து பலவிதமான வரங்களைப் பெற்றான். அப்போது இறவா வரம் கேட்ட மகிஷாசுரனிடம், ""பூமியில் மனிதனாகப் பிறந்தால் இறப்பு என்பது நிச்சயம். அதனால் அந்த வரத்தைத் தர முடியாது'' என மறுத்தனர். ""அப்படி யானால் ஒரு பலசாலி பெண்ணால்தான் நான் மரணிக்க வேண்டும். வேறு யாராலும் நான் மரணிக்கக்கூடாது'' என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.

வரங்கள் பல பெற்ற அசுரன் தேவர் களுக்குப் பலவிதமான கொடுமை களைச் செய்தான். கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் தேவர்கள் அம்பிகையை வணங்கி முறையிட் டனர். அவர்களின் குறைகளைக் கேட்ட அம்பிகை, மகிஷனை அழிக்க அவதாரம் எடுத்தாள். பெண் பித்த னான மகிஷாசுரன் பராசக்தியைப் பார்த்து, ""என்னை அழிக்க வந்த பெண்ணே! என்னை உன்னால் அழிக்க முடியாது. அதனால் என்னைத் திருமணம் செய்து கொண்டால் இந்த உலகத்துக்கே மகாராணி ஆகலாம்'' என ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான். கோபமுற்ற பராசக்தி அவன்மீது பாய, போர் உக்கிரமாக நடந்தது. போரில் பல வித்தைகளைக் காட்டினான் மகிஷாசுரன். சக்தியால் அவனைக் கொல்ல முடியவில்லை. அதன்பின் ஒன்பது நாட்கள் விரதமிருந்து, தன்னுடன் துணைத் தெய்வங்களையும் சேர்த்துக் கொண்டு, எட்டு கரங்களுடன் சிம்ம வாகனத்தில் திரிசூலம் ஏந்தி வந்த அம்மன், ஒரே சக்தியாக அவனுடன் மோதி மகிஷாசுரனை அழித்தாள். அதன் பின்னும் கோபம் தணியாத அவள் அவன்மீது தாண்டவம் ஆடினாள்! "கோபம் தணிய வேண்டும்' என தேவர்கள் வேண்ட, தன் கோபத் தைக் குறைத்துக் கொள்ள திருத்தணி பகுதிக்கு வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

அம்பாளின் இத்திருக்கோலத்தைப் பற்றி "அபிராமி அந்தாதி' அருளிய அபிராமி பட்டர்,

"சுந்தரி எந்தை துணைவி என பாசத் தொடரை யெல்லாம்

வந்தரி இந்துர வண்ணத்திளாள் மகிடன் தலைமேல்

அந்தரி நீலி அழியாத தன்னிகை ஆரணத்தோன்

சுந்தரி, கைத்தலத்தாள் மலர்ந்தாள் என் கருத்தனவே'

எனப் பாடியுள்ளார்.

தேவர்களையும் மக்களையும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாக்கிய மகிஷாசுரனை பராசக்தி அழித்தாள். அதில் சந்தோஷமடைந்த தேவர்கள் அம்பாளை வாயாரப் புகழ்ந்து பாடி மகிஷாசுரமர்த்தினி என புதிய பெயர் சூட்டி வணங்கினர்.

இத்தகைய சக்தி வாய்ந்த மகிஷாசுரமர்த்தினிக்கு மத்தூர் கிராமத்தில் ஆலயம் அமைந்தது எப்படி?

1954-ஆம் ஆண்டு, அரக்கோணம்- ரேணிகுண்டா இடையே இரண்டாவது ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மத்தூர் எல்லையில்- மக்களால் போக பயப்படும் இடமாகப் பார்க்கப்பட்ட சக்திமேடு என்னுமிடத்தில் இருப்புப் பாதைக்கான பணி நடைபெற்ற போது, பள்ளம் தோண்டும் பணி செய்த ஒரு தொழிலாளியின் கடப்பாரையில் ஏதோ தட்டுப்பட்டது. அந்த சத்தத்தைக் கேட்டு பலரும் என்னவோ, ஏதோ என பயந்து வந்து பார்த்தனர். அப்போது பல ஆண்டுகளுக்குமுன் புதைந்து போன எட்டடி உயர மகிஷாசுரமர்த்தினி சிலை தட்டுப்பட்டது. பக்திப் பரவசத்துடன் கவனமாகத் தோண்டி, மகிஷாசுர மர்த்தினி சிலையை மேலே எடுத்தனர். அதன்பின் பத்து ஏக்கர் பரப்பளவில் நிலம் வாங்கி கோவில் எழுப்பினர்.

முன்பு சாதாரணமாக இருந்த கோவில் தற்போது நாற்பது தூண்களை அமைத்து, கலை வேலைப்பாடுகளோடு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஏக்கர் பரப்பளவில் கட்டப் பட்டுள்ள கோவிலின் உள்ளே இடப்பக்கம் விநாயகர் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னால் துர்க்கை அம்மன் சந்நிதியுள்ளது. அதன்முன் சிம்ம வாகனம் நிற்கிறது. துர்க்கையம்மனின் கோபத் தைத் தணிப்பதற்காக எலுமிச்சைப் பழம் வாங்கி வந்து அதன் சாற்றை சிம்ம வாகனத்தின்மீது பக்தர்கள் விடுகின்றனர். அந்தப் பழத்தையே விளக்காக்கி அம்மனுக்கு வைக்கின்றனர். இதன் மூலம் அம்பா ளின் கோபம் தணிந்து பக்தர்கள் வேண்டியதைக் கொடுப்பாள் என்பது நம்பிக்கை.

துர்க்கை சந்நிதியை அடுத்து மகிஷாசுரமர்த்தினி சந்நிதி. எட்டு கரங்களுடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, கேடயம், கத்தி, திரிசூலம் ஏந்தி, கபால மாலையைத் தரித்துக் கொண்டு மகிஷாசுரனை காலில் மிதித்து ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி, முகத்தில் புன்னகை பூத்தவளாக எட்டு அடி உயரத்தில் கம்பீரமாகப் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறாள். கோவில் வளாகத்தில் அம்மன் வரலாறு ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

கோவில் குருக்களான பூபதி நம்மிடம், ""ஒரு காலத்துல சக்திமேடுங்கற இந்தப் பகுதியில் கிராம மக்கள் மதிய நேரத்திலயோ, இரவுலயோ போனா மயங்கி விழுந்துடுவாங்க. இதனால பேய் இருக்குதுன்னு யாரும் இந்தப் பக்கம் வராம இருந்தாங்க. அம்மன் சிலையைக் கண்டுபிடிச்ச துக்கப்புறம் யாருக்கும் எதுவும் நடக்கறதில்ல. எங்க மகிஷாசுரமர்த்தினி அம்மன் 64 சக்தி பீடத் துக்கு இணையான சக்தியுடையவளா இருக்கா. தூய அன்போடும் பக்தியோடும் வழிபடும் பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைக் களைந்து அவர்களுக்கு இன்பத்தை வழங்குவாள். வேண்டியதை வேண்டியவர்களுக்குத் தரும் அம்பாள் சந்நிதிக்கு யாரும் வந்து பசியோட போகக்கூடாதுன்னு மதிய நேரத்துல உணவு வழங்கறோம்'' என்கிறார்.

கோவில் நிர்வாக அதிகாரியாக உள்ள சுதாகர், ""அம்மனோட சக்தியைக் கேள்விப்பட்டு தமிழகம் முழுக்கவிருந்து பக்தர்கள் வந்து போறாங்க. பலருக்குத் தீராத வியாதிகளைத் தீத்து வச்சிருக்கா. இவளோட மகிமையே மகிமை!'' என மனமுருகிக் கூறினார்.

இனிக்கும் வேப்பிலை!

கோவிலில் உள்ள அம்மனுக்கு நேர் எதிரே தலவிருட்சமான வேப்பமரம் உள்ளது. இதுதான் இத்தலத்தின் சிறப்பம்சமே. பக்தர்கள் தங்களது குறைகளை நினைத்து அம்பாளை வேண்டிக் கொண்டு வேப்பிலையை உண்டால், நமது குறைகளை அம்பாள் எடுத்துக் கொள்வாள். அதனை, வேப்பிலையின் கசப்பை எடுத்துக் கொண்டு இனிப்பை நமக்கு வழங்கி உணர்த்துவாள் என்பது ஐதீகம். அதன்படி பக்தர்கள் கோவிலில் தரும் வேப்பிலையை உண்கின்றனர். தீராத வியாதியையெல்லாம் இந்த வேப்பிலை சரிசெய்கிறது.

இக்கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதிதாகத் திருமணம் ஆகும் ஜோடிகள் தாலி கட்டுதல் முடிந்ததும் நேராக இக்கோவிலுக்கு வந்து அம்மனைத் தரிசித்து விட்டுச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினங்களாகும். இத்தினங்களில் நடத்தப்படும் ராகுகால பூஜை சிறப்பானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மதியம் 12.00 மணிக்கு 108 பால் குட அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதோடு பௌர்ணமி தினத்தன்று இரவு 9.00 மணி முதல் 12.00 மணி வரை நடத்தப்படும் நவகலச யாக பூஜைகளும் 108 சங்காபிஷேகமும் விசேஷமானது. அசுரனை அழிக்க அம்பாள் தவம் செய்த நாளை இன்று நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். அதன்படி ஆண்டுக்கு ஒரு முறை வரும் நவராத்திரி நாட்களில் காலை, இரவு இரண்டு காலத்திலும் சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, விபூதி அலங்காரம், மலர் அலங்காரம் என விதவிதமான அலங்காரத்துடன் அம்பாள் பக்தர்களுக்குக் காட்சியளிப்பாள்.

திருத்தணியிலிருந்து மத்தூர் கோவில் முகப்பு வரை செல்ல பஸ் வசதி உண்டு. காலை 6.45 முதல் மதியம் 1.00 மணி வரையிலும்; மாலை 3.00 மணி முதல் 8.45 மணி வரையிலும் கோவில் திறக்கப்பட்டிருக்கும். செவ்வாய்க் கிழமை மட்டும் முழுநேரமும் நடை திறந் தேயிருக்கும்.

அந்த நேரங்களில் பக்தர்கள்,

"சக்தி உந்தன் உக்ரம் தணிந்து

ரத்தம் சிந்தும் யுத்தம் முடித்து

நித்தம் சாந்தி தேகம் தந்தாய்

துர்காதேவி சரணம் சரணம்'

என ராகத்தோடு பாடுகிறார்கள்!
-து. ராஜா
நன்றி நக்கீரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum