Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மகரிஷி யாக்ஞவல்கியர் -கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி
2 posters
Page 1 of 1
மகரிஷி யாக்ஞவல்கியர் -கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி
மகரிஷி யாக்ஞவல்கியர், மகரிஷிகள் பலர் மத்தியில் முதலிடத்தைப் பெற்று அவர்களால் மிகவும் புகழப்பட்டு, சுக்ல யஜுர் வேதம் என்ற ஒரு தனிவேதப் பிரிவை சிருஷ்டித்து உலகுக்கு அளித்து பெரும் மதிப்புடன் வாழ்ந்த வேதபுருஷர். இந்த சுக்லயஜுர் வேதத்துக்கு “வாஜஸநீயம்”, “காண்வம்”, “மத்யந்தினம்” என்ற மற்ற பெயர்களும் உண்டு.
இவ்வளவு புத்திக் கூர்மையும், நுண்ணறிவும் இவர் பெற்றதற்கு முக்கியமான காரணம், அவர் சூரியனை நிகரற்ற முறையில் உபாசித்து அவரிடமிருந்து பெற்ற அருள் மூலமேயாகும்.
சூரியபகவான் குதிரை உருவில் அவருக்குச் சிறந்த உபதேசம் அளித்ததன் காரணமாக இந்த வேதப்பிரிவுக்கு “வாஜஸநீயம்” என்ற பெயர் ஏற்பட்டது. “வாஜாயம்” என்பது குதிரையைக் குறிக்கும் பதமாகும்.
முன்னர் தோன்றிய யஜுர் வேதத்துக்கு “கிருஷ்ண யஜுர் வேதம்” என்றும் “தைத்திரீய சாகை” என்றும் கூறுவர்.
யாக்ஞவல்கியர், வைசம்பாயன மகரிஷியின் சிறந்த சிஷ்யராவார். வைசம்பாயன மகரிஷி, யாக்ஞவல்கியரின் மாமன் என்பர். ஒரு சமயம் குரு சிஷ்யரிடையே பெரும் வேற்றுமை தோன்றவே, யாக்ஞவல்கியர் குருகுலத்திலிருந்து விலகிச் சென்று விட்டார். செல்லுமுன் தன்னிடமிருந்து கற்ற வித்தை (வேதம்) அனைத்தையும் கைவிட்டுச் செல்ல வேண்டுமென உத்தரவிட்டார் வைசம்பாயனர்.
யாக்ஞவல்கியரும் அதன்படியே குருவிடம் கற்ற பாடம் அனைத்தையும் தத்தம் செய்துவிட்டு, “அதை நான் ஒரு பொழுதும் உபயோகிக்க மாட்டேன்” என சத்தியம் செய்து கொடுத்துவிட்டு விரைவாக வெளியேறினார்.
இவ்விதம் வெளியேறிய யாக்ஞவல்கியர் கடும் தவவலிமையால் பின்னர் சுக்ல யஜுர் வேதத்தை உருவாக்கினார்.
இவர் மணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்திய முனிவராவார். இவருக்கு இரு மனைவிகள். அவர்கள் மைத்ரேயி, காத்யாயனி என்பவர்கள்.
மைத்ரேயி பிரம்மஞானம் பெற்ற பிரம்மவாதினி. கணவருடன் அடிக்கடி வாதம் செய்பவள். ஆனால் காத்யாயனியோ உலகப்பற்று அதிகம் கொண்டு, அதில் ஈடுபாட்டுடன் வாழ்ந்தவள்.
மிதிலை மகாராஜாவான ஜனகருடைய சம காலத்தவர் யாக்ஞவல்கியர். அவருடைய ஆசிரியர்களில் ஒருவர். வைசம்பாயனரிடம் சுமார் 26 வித்யார்த்திகள் (மாணவர்கள்) குருகுல வாசம் செய்து வந்தனர். யாக்ஞவல்கியரிடம் சுமார் 15 மாணவர்கள் படித்து வந்தனர்.
ஜனக மகாராஜா ஒரு சமயம் ஒரு யாகம் செய்தார். பல வேதபண்டிதர்கள், பிராமணப் பெருமக்கள் பலரும் அதில் கலந்து கொண்டனர்.
அச்சமயம், அவர்களுள் பிரம்ம வித்தையில் யார் சிறந்தவர் என்பதைக் கண்டுபிடிக்க ராஜா 1000 பசுக்களைப் பரிசாக அறிவித்தார். ஒவ்வொரு மாட்டின் கொம்பிலும் ஒரு சிறு பொற்காசு முடிச்சையும் கட்டச் செய்தார்.
இந்தப் பரிசைப் பெற யாரும் முன்வரவில்லை. இதைக் கண்ட யாக்ஞவல்கியர் தன்னுடைய மாணவர்களிடம் எல்லாப் பசுக்களையும் தன் ஆச்ரமத்துக்கு ஓட்டிச் செல்ல உத்தரவிட்டார். உடனே பலர் இதைப் பலமாக எதிர்த்தனர். அவர்களில் சிலர் யாக்ஞவல்கியரிடம் பல கேள்விகளைக் கேட்டு அவற்றுக்குச் சரியான விடையை அவரிடமிருந்து பெற்றனர். யாக்ஞவல்கியர் அவற்றுக்கெல்லாம் சரியான பதிலைக்கூறி மன்னனின் பரிசை வென்றார்.
ரிஷிகஹோலர் “ஜீவிக்கும் ஒவ்வொரு பிராணியிடமும் காணும் பிரம்மன் என்பது எது?” என்றார். யாக்ஞவல்கியர் “ஆத்மா” என்பது தான் அந்த பிரம்மன்; அதற்குப் பசி, தாகம், துன்பம், இன்பம், மரணம் என்பது ஒன்றும் கிடையாது. தன்னை யார் என்று அறிந்து அதிலிருந்து பெறும் சாச்வத அறிவு. அதிலிருந்து உருவாகும் மனோதிடம், மரணத்துக்கு அஞ்சாமை முதலியவற்றை அறிந்து ஜீவிப்பவனையே ரிஷி என்பர்.” என பதிலளித்தார். இப்பதிலைக் கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்த கஹோலர் மேலும் கேள்விகள் கேட்பதை நிறுத்தினார். மேலும் சில ரிஷிகள் கேட்ட கேள்விகளுக்கு சரியான விடையை அளித்த யாக்ஞவல்கியர், மன்னனின் பெரும் பரிசை வென்றார்.
யாக்ஞவல்கியர் ஜனக மகாராஜாவுக்கு ஒரு பெரும் ஆஸ்தான ஆலோசகராக இருந்தாலும் குரு ஸ்தானத்தையும் அவர் வகித்து வந்தார். ஜனகர் தன் ராஜ்யத்தில் ஸர்வசுதந்திரத்தையும் யாக்ஞவல்கியருக்கு அளித்து அவரை கௌரவித்தார்.
யாக்ஞவல்கியர் சுக்லயஜுர் வேதத்துக்குத் தனி பிராமணத்தையும் எழுதினார். இதற்கு “சதபதபிராமணம்” எனப் பெயர். இது மிகவும் புகழ் பெற்ற நூலாகும். இத்துடன் அவர் ஒரு “ஸ்மிருதி” யையும் இயற்றினார். இதற்கு “யாக்ஞவல்கிய ஸ்மிருதி” எனப் பெயர். இப்பெரும் நூலுக்கு விஞ்ஞானேச்வரர் என்ற அறிஞர் “மிதாக்ஷரா” என்ற புகழ் பெற்ற ஒரு விரிவுரை நூலை இயற்றினார். இது ஹிந்து தர்மசாஸ்திரம், சட்டம் முதலியவற்றை நன்கு விவரிக்கிறது. இந்த “மிதாக்ஷராவே” இன்றும் நீதி மன்றங்களில் எடுத்துக்காட்டாகப் பயன்படுகிறது. சட்டப் படிப்புக்கும் ஒரு பாடநூலாகும் இது.
இந்த விஞ்ஞானேச்வரர் என்ற அறிஞர் ஆறாம் விக்ரமாதித்யன் (கல்யாணி மன்னன்) அரண்மனை ஆஸ்தான வித்வானாவார். இந்நூலை இவர் அம்மன்னனின் ஆதரவில் எழுதினார். இது 1070 முதல் 1100 வரையிலான காலத்திற்குள் எழுதப்பட்டது.
யாக்ஞவல்கியர் எந்த நெருக்கடியையும் சமாளித்து வெற்றி காண்பதில் சமர்த்தர். மனோதிடம், புத்திக் கூர்மை, சத்யம், தர்மம் ஆகியவற்றில் ஈடுபாடு முதலிய பல நற்குணங்கள் அவரிடம் பிரகாசித்தன.
தன் கணவருடன் அடிக்கடி பிரம்மவாதம் புரிந்த மைத்ரேயியின் கேள்விகளை மைத்ரேயி சம்வாதம் என இன்றும் நன்கு போற்றப்படுகிறது.
யாக்ஞவல்கியர் நாதோபாஸனா ஒரு மோக்ஷ மார்க்கம் எனக் கூறி வந்தார். இவர் வீணை வாசிப்பதில் வல்லவர். யோகத்திலும் திறமை உடையவர். ஆகையால் இவரை யோகி யாக்ஞவல்கியர் என்பர். எனவே இவரது பெருமைகளைப் போற்றும் வகையில் ஒவ்வோராண்டும் இவரது ஜயந்தி நாள் சிறப்பாகக் கொண்டாடப் பெற்று வருகிறது.
நன்றி அம்மன்தரிசனம்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

» கர்ம வினை தீர்க்கும் மகாளய பட்சம் -தங்கம் கிருஷ்ணமூர்த்தி
» ஸ்ரீ ரமண மகரிஷி
» நான் யார்? - ரமண மகரிஷி
» ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி
» ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி
» ஸ்ரீ ரமண மகரிஷி
» நான் யார்? - ரமண மகரிஷி
» ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி
» ஆழ்நிலை தியானம் - மகரிஷி மகேஷ் யோகி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum