Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
எருமை வடிவில் இறைவன்
இந்து சமயம் :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
எருமை வடிவில் இறைவன்
அங்காடிபுரம் என்ற கிராமத்தில் பூந்தானம் என்ற நம்பூதிரி வசித்தார். அதிகம் படிக்காத இவர் குருவாயூரப்பன் பக்தர். இவரது குழந்தைக்கு அன்னப்பிரசானம் (முதல் சோறூட்டும் நிகழ்ச்சி) செய்ய ஏற்பாடு செய்தார். பூந்தானம் குளிக்கச் செல்லுமுன் தனது மேலாடையை வீசி எறிந்தார். அது அங்கு படுத்திருந்த குழந்தையின்மீது போய் விழுந்து மூடிவிட்டது. இதை அறியாத சிலர் கனமான சில பொருட்களை குழந்தை மீது வைத்து அடுக்கி விட்டனர். அதற்குள் சிக்கி குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறந்த விபரம் தெரிந்து, அவர் அழுது புலம்பினார். அவரது புலம்பல் இப்போதும்கூட ஞானப்பான என்ற பெயரில் புகழ்மிக்க மலையாள கவிதையாக இருக்கிறது. ஞானப்பான என்றால் ஞானப்பாட்டு என பொருள். இந்த கவிதையை புத்தகமாக்க விரும்பினார் பூந்தானம். இவர் காலத்தில் நாராயண பட்டத்ரி என்பவர் குருவாயூரப்பன் மீது நாராயணீயம் என்ற காவியம் பாடினார். கல்வி அறிவுமிக்க இவருக்கு கர்வமும் அதிகம். இவரிடம் தனது கவிதையை கொடுத்து திருத்தித் தரும்படி கேட்டார் பூந்தானம்.
அதைபடித்த பட்டத்ரி,இது அபத்தம் மிகுந்தது என அகந்தையுடன் சொல்லிவிட்டார். பூந்தானம் வருத்தத்துடன் சென்றுவிட்டார். அந்நேரத்தில் பட்டத்ரியின் வீட்டுக்கு ஒரு இளைஞன் வந்தான். அவனிடம் தனது பாண்டித்யத்தை காட்டுவதற்காக நாராயணீயம் நூலில் உள்ள ஒரு லோகத்தை கூறிவிட்டு இளைஞனின் முகத்தை ஏறிட்டு பார்த்தார். அந்த இளைஞன் அவரிடம், இந்த ஸ்லோகம் பக்திமயமாக உள்ளது. ஆனால் சொற்பிரயோகத்தில் பிழை உள்ளது என்றான். பட்டத்ரிக்கு கோபம் வந்துவிட்டது. ஆனாலும் இளைஞன் பொறுமையுடன் பிழையை சுட்டிக்காட்டினான். பட்டத்ரியும் அதை ஒப்புக்கொண்டார். எனது பாட்டில் பிழை கண்ட நீ யார் என கேட்டார். அப்போது தோள் வளைகள், மகர குண்டலங்கள், மேகலைப்பட்டு பீதாம்பரத்துடன் குருவாயூரப்பன் காட்சியளித்தார். அவரிடம், பட்டத்ரியே! நான் என்ற வித்யாகர்வத்துடன் எனது பக்தனான பூந்தானத்தை அவமதித்தீர். என்னைப்பற்றி ஒரு நூலையே எழுதியிருந்தாலும் உமது பக்தியை ஏற்க முடியாது. ஆனால், பூந்தானம் கல்வி அறிவற்றவனாயினும்கூட மிகச்சிறந்த கவிதை எழுதியுள்ளான். எனவே பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என கூறி மறைந்தார். தனது பிழையை எண்ணி வருந்திய பட்டத்ரி பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்டார். சில காலம் சென்றது. மீண்டும் பட்டத்ரியின் மனதில் வித்யா கர்வம் தலைவிரித்தது. ஒருமுறை பூந்தானம் அவரிடம், கிருஷ்ண பரமாத்மாவை தியான நேரத்தில் என் மனதிற்குள் முழுமையாக கொண்டுவர விரும்புகிறேன். அதற்கு வழி சொல்லுங்கள் என்றார்.அதற்கு பட்டத்ரி, கிருஷ்ணன் தான் உனக்கு மிகவும் வேண்டியவனாயிற்றே. அவரை எருமைமாடு உருவத்தில்கூட நீ தியானம் செய்யலாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
பட்டத்ரி கேலியாக சொல்கிறார் என்பதை புரிந்துகொள்ளாத அப்பாவியான பூந்தானம் பகவானை எருமைமாடு வடிவத்தில் சிரத்தையுடன் தியானம் செய்து வந்தார். பகவானும் அதே வடிவத்தில் வந்து காட்சி அருளினார். ஒருநாள் குருவாயூரப்பன் கோயிலில் திருவிழா நடந்தது. சுவாமியை ஊர்வலத்திற்காக வெளியே எடுத்துவந்தனர். ஓர் இடத்தில் வாகனம் இடித்தது. பூந்தானம் சற்று சத்தமாக, எருமைமாட்டின் கொம்பு சுவரில் இடிக்கிறது. சற்று சாய்த்து கொண்டு செல்லுங்கள் என்றார். எல்லோரும் அவரைப்பார்த்து சிரித்தனர். அப்போது குருவாயூரப்பன் எருமைமாடு வடிவத்தில் தோன்றி, பக்தர்களே! பூந்தானம் என்னை பட்டத்ரியின் சொற்படி எருமைமாடு வடிவத்தில் தரிசித்து வந்தான்.அதே வடிவத்திற்கு நானும் மாறியிருக்கிறேன் என்று விளக்கமளித்தார்.
பூந்தானத்தின் பக்தியின் பெருமையை அனைவரும் உணர்ந்து அவரையும் வழிபட்டனர்.

Similar topics
» விநாயகர் பெருமை ஒலி வடிவில்
» இறைவன் எப்போது அழுகிறார்?
» இறைவன் எதுவும் செய்வான்
» புத்தரின் வாழ்க்கை வரலாறு - ஓவிய வடிவில்!
» கவியரசு அமரர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ஒலி வடிவில்
» இறைவன் எப்போது அழுகிறார்?
» இறைவன் எதுவும் செய்வான்
» புத்தரின் வாழ்க்கை வரலாறு - ஓவிய வடிவில்!
» கவியரசு அமரர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ஒலி வடிவில்
இந்து சமயம் :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum