இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


லலிதோபாக்யானம் கோடா -வெங்கடேஸ்வர சாஸ்திரி

Go down

லலிதோபாக்யானம் கோடா -வெங்கடேஸ்வர சாஸ்திரி Empty லலிதோபாக்யானம் கோடா -வெங்கடேஸ்வர சாஸ்திரி

Post by ஆனந்தபைரவர் Mon Dec 20, 2010 3:47 pm

ஒரு சமயம் முனிஸ்ரேஷ்டரான அகத்தியர் தீர்த்தயாத்திரைகளை மேற்கொண்டு மலைகள், காடுகள், நதிகள், புண்யக்ஷேத்ரங்கள் போன்ற இடங்களில் சுற்றிக்கொண்டு ஆங்காங்கே தேவதைகளைப் போற்றிக் கொண்டு வந்தார். அப்பொழுது ஜனங்கள் உலக வாழ்க்கையிலேயே நாட்டம் கொண்டவர்களாகவும், தங்கள் புலன்களைத் திருப்திப் படுத்துபவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம் அடைந்தார். அவர் அப்படியே வருத்தத்துடன் மிகப்புண்ணிய க்ஷேத்ரமான காஞ்சி நகரை அடைந்தார். அங்கு ஏகாம்பர நாதரையும் கலிதோஷங்களை நீக்கும் காமாக்ஷி தேவியையும் பூஜித்து, உலகத்தில் மனிதர்களின் நலனைக் கருதி வெகுகாலம் தவம் புரிந்தார். அப்பொழுது மஹாவிஷ்ணுவானவர் சங்கு, சக்கரம், ஜபமாலை, புஸ்தகங்களைத் தரித்து ஹயக்ரீவ வடிவமாக சின்மாத்ரமாகவும், தன் ஒளியால் உலகங்களைப் பிரகாசிக்கச் செய்பவராகவும் அவருக்கு முன் தோன்றினார். அகத்தியர் மிகவும் சந்தோஷப்பட்டு பலமுறை வணங்கி வினயத்துடன் துதித்தார்.

ஹயக்ரீவர் அகத்தியரைக் கண்டு “தங்களின் தவத்திற்கு மெச்சினேன். தங்களுக்கு நலமுண்டாகட்டும். வரம் ஏதாவது வேண்டுமென்றால் தாங்கள் கேட்டுக் கொள்ளலாம்” என்று வினவினார். அப்பொழுது அகத்தியர் ஹயக்ரீவரின் பாதங்களைச் சேவித்து, “ஸ்வாமி! இந்தப் பாமர மக்கள் எந்த உபாயத்தினால் முக்தர்கள் ஆவார்கள்? அதைத் தெரிவிக்கவும்” என்று கேட்டார். ஹயக்ரீவர் மிகவும் ஸந்தோஷத்தையடைந்து, “இதே கேள்வி தான் ஒரு காலத்தில் என்னால் பரமேஸ்வரனிடம் கேட்கப்பட்டது. பிறகு ஒரு முறை பிரம்மதேவரும் இதையே கேட்டார். அதே போல் துர்வாஸரும் கேட்டுக் கொண்டார். இப்பொழுது தாங்கள் கேட்கிறீர்கள். இந்தக் கேள்விக்கு என்னால் வழங்கப்படும் பதிலானது உலகங்களுக்கு நன்மையளிக்கட்டும்”

“இவ்வுலகத்திற்கு முதலாகவும், உலகங்களைப் படைத்தவனாகவும், உலகத்தைக் காப்பவனாகவும் மும்மூர்த்திகளுக்கும் அப்பாற்பட்டவனாகவும் உள்ளேன். எனக்கு பிரதானம் என்றும் புருஷன் என்றும் இரண்டு உருவங்கள் உள்ளன. அதில் பிரதானம் எனப்படும் என் உருவம், எல்லா பூதங்களின் குணங்களுடன் கூடியது. மற்றொன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டதும் மிக உயர்ந்ததும் ஆகும். இவற்றில் ஏதாவது ஒன்றை அறிந்தாலே முக்தி கிடைக்குமேயானால் இரண்டையும் அறிந்தால் சொல்லவும் வேண்டுமோ! வர்ணங்கள், ஆச்ரமங்கள் அற்றவர்களுக்கும் பாபிஷ்டரான மனிதர்களுக்கும் இந்த உருவத்தை நினைத்த மாத்திரத்தில் பாபங்கள் அழிந்துவிடும். ஆகையால் அம்பாளின் பூஜையே எல்லா உலகங்களுக்கும் நன்மையைத் தரும்.” என விளக்கினார். அதைக் கேட்ட முனிவர், (ஹயக்ரீவர்) பகவானை “அந்த உருவம் எப்படிப்பட்டது? அதன் பிரபாவம் என்ன? அதை நான் அறிய விரும்புகிறேன்.” என்று பிரார்த்திக்க “இதைத் தங்களுக்கு ஹயக்ரீவ முனிவர் கூறுவார்” என்று கூறி மறைந்துவிட்டார்.

அகத்திய முனிவர் மிகவும் சந்தோஷம் அடைந்து ஹயக்ரீவர் வாயிலாக அம்பாளின் உயர்ந்ததான உருவத்தையும் செயல்களையும் அறிய நமஸ்கரித்து கேட்டுக்கொண்டார். ஹயக்ரீவர், “அகத்தியரே! தாங்கள் மிகவும் புண்ணியம் செய்துள்ளீர், அம்பாளின் அநாதியான உருவம் தியானத்தினால் மட்டும் பார்க்கத்தக்கது. வெகுநாள்கள் கர்மாக்களை அனுஷ்டானம் செய்வதால் மட்டும் அடையக்கூடியது. முதன் முதலில் பிரம்மதேவரின் ஞானத்தினால் ப்ரக்ருதி என்ற பெயரால் தேவர்களுக்கு இஷ்டத்தை அளிப்பவளாகத் தோன்றினாள். பிறகு பாற்கடலைக் கடையும்போது வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாததான எல்லாருக்கும் மோகத்தை அளிக்கும் உருவம் கொண்டாள். அவ்வுருவத்தைக் கண்டு சர்வக்ஞனான பரமேஸ்வரனும் மோஹமடைந்து பார்வதிதேவியை விட்டு அந்த தேவியின் மூலமாக சாஸ்தா எனப்படும் ஐயப்பனை உண்டாக்கினார்.”

இதைக் கேட்ட அகத்தியர், “மன்மதனையே அடக்கிய பரமேஸ்வரன் எப்படி அம்பாளால் மோஹிக்கப்பட்டு ஓரு சிறுவனை உண்டாக்கினார்?” என்று வியப்புடன் கேட்டார். அப்போது ஹயக்ரீவர் பின்வருமாறு பதில் கூறினார்: “ஒரு சமயம் தேவராஜாவான இந்திரன் கயிலாச உச்சிக்கு ஒப்பற்ற யானைமேல் ஏறிக்கொண்டு எல்லாத் தேவர்களால் துதிக்கப்பட்டும் சென்று கொண்டிருந்தான். இந்திரன் மிகவும் கர்வத்துடன் இருப்பதைக் கண்டு பரமேஸ்வரன் துர்வாசரை அவரிடம் அனுப்பினார். அப்பொழுது துர்வாசர் கிழிந்த ஆடைகளுடனும், அழுக்கான உருவத்துடனும் வித்யாதரர்கள் செல்லும் வழியில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு பெண்மணி கைகளில் அம்பாளுக்கு சமர்ப்பித்த மாலையுடன் எதிரானாள். முனிவர் அவளைக் கண்டு “மிகவும் சந்தோஷமாகச் சென்று கொண்டிருக்கிறாயே, இந்த மாலை உனக்கு ஏது?” என்று வினவினார். அப்போது “அம்பாளை நான் பல நாள்கள் துதிக்க அம்பாள் மெச்சி எனக்கு இதை அளித்தாள்.” என்று சந்தோஷமாகக் கூறினாள். துர்வாசர் அந்த மாலையைக் கேட்க, அப்பெண்மணி அவருக்கு அதை அளித்து ஆசிகளைப் பெற்றுத் தன் வழியில் சென்றாள்.

அம்பாளின் பிரசாதத்தை அடைந்த துர்வாசர் நேராக இந்திரனிடம் சென்று அதை அவருக்கு அன்பளிப்பாக அளித்தார். ஆனால் தேவராஜனான இந்திரனோ பணம், பதவி, செல்வாக்கு போன்ற மதத்தையளிக்கும் பொருள்களால் கண்மூடப்பட்டு பிரம்மாதிதேவர்கள் உட்பட அவரவர்களின் வாழ்க்கையை உய்விக்கக்கூடிய ஜகன்மாதாவின் பிரசாதத்தைச் சிரம் வணங்கிப் பெற்றுக் கொள்ளும் பொருளை யானையின் தலையில் வைத்து விட்டான். அந்த யானையும் அதன் மதிப்பை உணராமல் தன் துதிக்கையினால் பூமியில் வீசி காலால் மிதித்து அழித்துவிட்டது. இதைக் கண்ட துர்வாசர் மிகவும் சினமடைந்தார். “ப்ரணம்தும் ஸ்தோதும் வாகதமக்ருத புண்ய ப்ரபவதி” “அம்பாளின் பிரசாதம் புண்ணியம் உள்ளவர்களுக்கே கிடைக்குமல்லவா? நீயோ இந்தப் பிரசாதத்தை அவமதித்தாய். அதனால் நீ ஐஸ்வர்யத்தையும், தேவராஜ்யத்தையும் இழந்து விடுவாய்” என்று சபித்தார். இந்திரன் மிகவும் வருத்தத்தையடைந்து துர்வாசரின் பாதங்களில் விழுந்து வேண்டினார். ஆயினும் துர்வாசர் அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டார். பிறகு இந்திரன் வேறொன்றும் புரியாமல் குருவான ப்ரஹஸ்பதியிடம் சென்று வேண்டினார். தேவ குருவான ப்ரஹஸ்பதி அவருக்கு அம்பாளின் அநேக அவதாரங்களையும், பண்டாசுரனைக் கொல்வதற்காக ஏற்பட்ட லலிதா அவதாரத்தையும், லலிதா ஸ்தவ ராஜ்யத்தையும் அனுக்கிரஹித்து அவருக்கு மறுபடியும் ராஜ்யம் கிடைக்கும்படி அருளினார். இந்தச் சரித்திரம் வருமாறு:

பிரஹஸ்பதி இந்திரனுக்கு பல தர்மங்களை கூறிக்கொண்டு நடுவில் த்விஜ வர்மா என்னும் கிராதனின் கதையை உரைத்தார்.

கிராதோபாக்யானம்

ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஜனங்கள் வியாதியற்றவர்களாகவும் தயையுடன் கூடினவர்களாகவும் எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுகமாக வாழ்ந்து வந்தனர். அப்போது, வஜ்ரன் என்னும் திருடன் பல வீடுகளில் புகுந்து சிறு சிறு அளவில் அவர்களுக்கு அறியாமலேயே பல வீடுகளில் பணத்தை அபஹரித்து வந்தான். அந்தப் பணத்தைக் காட்டில் ஒரு பள்ளத்தில் புதைத்து விட்டான். அந்தப் பள்ளத்தை மூடுவதற்காக ஒரு பெரிய கல்லைத் தேட வெகுதூரம் சென்றான். அப்போது, ஒரு வேடன் அந்தப் புதையலைக் கண்டு அதில் ஒரு பகுதியை எடுத்துச் சென்றான். பிறகு வஜ்ரன் ஒரு கல்லால் அந்த இடத்தை மூடி தானும் வீட்டிற்குச் சென்றான். இப்படி பல முறை அந்தப் புதையலில் வஜ்ரன் பணத்தை நிரப்பிக்கொண்டிருந்தான். கிராதனும் வீட்டுக்குச் சென்று பணத்தை நான் வழியில் கண்டேன் எனச் சொல்லிக் கொண்டு தன் மனைவிக்கு அளித்தான். அவளோ அதை வைத்துக்கொண்டு இப்படி சொன்னாள்: “வேடன், நடிகன், கீழ் ஜாதி மக்களுடன் மஹாலக்ஷ்மி வெகுநாள் தங்க மாட்டாள். இது வால்மீகியின் சாபமாகும். இருப்பினும் முயற்சியால் வந்த பணம் வெகு காலம் நிற்கலாம். தாமாக வந்த பணத்தை நல்ல விஷயங்களுக்கே உபயோகிக்க வேண்டும். ஆகையால், இந்தப் பணத்தினால் தாங்கள் கிணறு, குளம் ஆகியவை தயார் செய்ய வேண்டும்” என்று கணவனிடம் கூறினாள். அவனும் அப்படியே அந்தப் பணத்தை ஊழியர்களுக்கு அளித்து வேலையைத் தொடங்கினான். ஆனால், பாதி வேலையில் பணம் தீர்ந்து விட்டது. இதைக் கண்டு “நான் வஜ்ரன் அறியாமலேயே அவன் பின் தொடர்ந்து அந்தப் புதையலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வருவேன். அதனால் குளத்தையும், குளத்தின் நடுவில் மகாவிஷ்ணுவிற்கு ஒரு கோவிலும் கட்டுவேன்.” என நினைத்தான். அவ்வண்ணமே செய்தான்.

அதேபோல் தேவதைகளுக்கும் ப்ராமணர்களுக்கும் வஸ்திரங்களையும் தங்கம் ஆகியவற்றையும் தானம் செய்தான். ஆயினும், அவனுக்கு அந்திம காலம் நெருங்கியது. யமதூதர்களும், விஷ்ணு தூதர்களும், சிவ தூதர்களும் ஒருங்கே வந்தனர். தூதர்களுக்குள் சண்டை மூண்டது. அச்சண்டையைத் தீர்க்க அங்கு நாரதர் தோன்றினார்.

த்வஜவர்மா என்னும் பெயருடையவர் இந்தக் கிராதன். இவன் நற்செயல்கள் செய்த போதிலும் அது திருடனிடம் பெற்ற பணமாகையால் வாயுரூபமான ஆவியுருவம் இவனுக்குத் தகுந்ததே. ஆனால் குளம், கோவில் கட்டிய புண்யத்தால் விஷ்ணு தூதர்களும் சிவ தூதர்களும் அவரை அழைத்து செல்ல வந்தனர்.

ஆகவே தூதர்களுக்குள் கலகம் மூண்டது. அப்போது நாரதர் “பன்னிரண்டு வருடம் இவர் வாயு ரூபத்தை அனுபவிப்பார்” என்றார். அவர் மனைவியை “தங்களுக்கு ஒரு தோஷமும் இல்லாததால் ப்ரம்ஹ லோகத்தையடையலாம்.” என்றார். ஆனால் அவளோ பதி சிச்ருஷையின் பொருட்டு ப்ரம்ஹ லோகத்துக்குச் செல்ல மறுத்தாள். “நான் என் கணவருடனேயே இருப்பேன். அவரில்லாத ப்ரம்ஹ லோகம் எனக்கு வேண்டாம்” என்றாள். நாரதர் மிகவும் மகிழ்ந்து “நான் உனக்கு பரிகாரத்தைக் கூறுவேன். எனச் சொல்லி சதருத்ரீயம் என்னும் சிவமந்திரத்தை உபதேசித்தார்.

“தினந்தோறும் சுத்தமாக ஸ்நானம் செய்து திருநீறு அணிந்து சிவனை பக்தியுடன் பூஜித்து, ஜபிக்கவேண்டும். இப்படி 1008 முறை செய்தால் மஹாபாதகங்களும் அழிந்து விடும்.” என்றார். அவளும் அப்படியே பக்தியுடன் அனுஷ்டிக்க த்விஜ வர்மாவிற்கு வாயு சரீரம் மறைந்து தன் நிஜ ஸ்வரூபத்தையடைந்தான். காலப்போக்கில் வஜ்ரனும் மற்ற அவன் தொண்டர்களும் மரணத்தை அடைய யமதூதர்கள் அவர்களை யமனிடம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் யமன் “தாங்கள் எல்லாரும் செய்த பாப த்ரவ்யம் புண்யமான செயலுக்கு உபயோகிக்கப்பட்டது அதனால் தங்களுக்கு புண்யம், பாபம் இரண்டும் உள்ளன. இதில் எதை முதலில் பெற விரும்புகிறீர்கள்?” என வினவினார்.

அவர்கள் ஒன்றாக “நாங்கள் நற்பலனையே முதலில் விரும்புகிறோம்” எனச் சொல்ல, யமனும் அங்கீகரித்தார். அவர்களும் த்விஜவர்மாவைப் பின் தொடர்ந்து ஸ்வர்க்க லோகம் சென்றனர். த்விஜ வர்மாவோ தன் மனைவியுடன் எல்லா உலகங்களையும் தாண்டி இப்போதும் கயிலாயத்தில் சந்தோஷமாக இருக்கிறார்.


நன்றி அம்மன் தரிசனம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum