இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


அம்பலத்தில் ஆடிய பாதங்கள்

Go down

அம்பலத்தில் ஆடிய பாதங்கள்  Empty அம்பலத்தில் ஆடிய பாதங்கள்

Post by ஆனந்தபைரவர் Mon Dec 20, 2010 3:53 pm

அம்பலத்தில் ஆடிய பாதங்கள்  Nataraj-3
தெற்கு திசையைப் பார்த்துக் கொண்டு இந்த உலகத்தை ஆளும் ராஜாக்கள் இருவர். ஒருவர் படுத்துக் கொண்டே உலகைப் பரிபாலனம் செய்கிறார். மற்றவர் ஆடிக்கொண்டே உலகை ஆட்டுவிக்கிறார். ஸ்ரீரங்கத்தில் அவர் கோயில் கொண்டார் என்றால், சிதம்பரத்தில் இவர் அரசோச்சுகிறார். அவர் ரங்கநாதர்; இவர் நடராஜர்.பாண்டிய நாட்டு சிவத்தலங்களில் அநேகமாய் எல்லா கோயில்களிலும் நடராஜர் கற்றளி உள்ளது. அவற்றில் சில:

உத்திரகோசமங்கை:

‘மண் முந்தியதோ, மங்கை முந்தியதோ’ என்ற சொற்றொடர் இத்தலத்தின் தொன்மையினைக் குறிக்கும். ‘உத்திரகோசமங்கைக்கு அரசே’ என்று மாணிக்கவாசகர் பாடிய தலம். இத்தலத்து இறைவன் சந்நதிக்குப் பக்கத்தில் மரகத நடராஜர் ஐந்தரை அடி உயரத்தில் சந்தனப் பூச்சுடன் காட்சி அளிக்கிறார். ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் பழைய கபாளம் எடுக்கப்பட்டு இத்திருமேனிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன.

சிவபுரம்:

இத்தலத்து நடராஜர் கலையழகு மிக்கவர். வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டு மீண்டு வந்த இந்த அரிய நடராஜர், திருவாரூர் பெட்டகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

கோனேரிராஜபுரம்:

இத்தலத்திற்கு திருநல்லம் என்ற பெயர் உண்டு. இக்கோயில் நடராஜர் சிலை சிற்பக்கலையின் அற்புதங்களில் ஒன்று.

திருவாசி:

திருச்சியை அடுத்துள்ள இத்தல நடராஜர், விரிஞ்ச செஞ்சடை இன்றி, முயலகனும் இன்றி ஒரு சர்ப்பத்தில் மேல் ஆடும் கோலத்தில் உள்ளார்.

நெய்வேலி:

இங்குள்ள நட ராஜர் சிலை உலகிலேயே மிகப்பெரியது என்பர். ஒன்பது மீட்டருக்கும் சற்று அதிகம். சமீபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது.

திருவெண்காடு:

இத்தலம் காசிக்கு வீசம் அதிகம் என்று போற்றப் படுகிறது. இதுவே ஆதி சிதம்பரம் என்று அழைக்கப் படுகிறது. சிவபெருமான் இத் தலத்தில் ஒன்பது வகை தாண்டவங்களை ஆடியுள்ளார் என்கிறது தலபுராணம்.

தீர்த்தனகிரி:

இங்குள்ள நடராஜர் ஐம்பொற்சிலை பேரழகு வாய்ந்தது. நடராஜப் பெருமானின் கீழ் திருமால் சங்கு ஊதுவது போலவும், பிரம்மன் வாத்தியம் வாசிப்பது போலவும் மூர்த்தங்கள் உள்ளன. அற்புத கலை படைப்பு.

திருப்புன்கூர்:

திரிபுரம் எரிபட்டபோது, எஞ்சிய மூவரில் ஒருவன் நடனமாடும்போது ‘மணிமுழு முழக்குவன்’ என்று சுந்தரர் இத்தலப் பதிகத்தில் சொல்லியதுபோல, நடராஜரின் தென்மேற்கில் ஓர் உருவம், மணி முழு முழக்கும் அற்புத காட்சியை இன்றும் காணலாம்.

ஓமாம்புலியூர்:

வியாக்ரபாதர் வழிபட்ட புலியூர் தலங்களில் ஒன்று. இதற்கு பிரணவ வயாக்ரபுரம் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் ஈசனுக்கும், அம்பாளுக்கும் இடையில் கம்பீரமாக, கொள்ளை அழகுடன் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். நடராஜர் பொதுவாக இடம்பெறும் பகுதியில் தட்சிணாமூர்த்தியும், கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியின் இடத்தில் நடராஜரும் உள்ளனர். இது பிற தலங்களில் காணப்படாத அமைப்பு.

குடந்தை நாகேஸ்வரர்:

வேறு எந்த கோயிலிலும் இல்லாத புதுமை கொண்டது இங்குள்ள நடராஜர் சந்நதி. உயர்ந்த மேடையில் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய தேர் உருவங்கொண்ட மண்டபத்தின் இருபுறமும் கல் சக்கரங்கள். ஆனந்த தாண்டவமூர்த்தியின் ஆட்டத்தைக் காண இந்திராதி தேவர்கள் இங்கே வந்ததாய் ஐதீகம். அம்பாள் தாளம் போட, வேணுகோபாலன் குழல் இசைக்கிறான்.

சுசீந்திரம்:

தாணுமாலயன் திருக்கோயிலில் நடராஜப் பெருமாள் சித்திர வடிவில் இருப்பதால், அவர் இருக்கும் பகுதி சித்திரசபை என்று அழைக்கப்படுகிறது. இந்திர சபையின் உள்ளே ருத்திர தாண்டவம்!
ஆடிய பாதத்து அம்பலத்தானை ஆருத்ரா திருநாளில் அடிபணிந்து அனைத்து அருளும் பெறுவோம்.


நன்றி தினகரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum