இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


காகபுஜண்டர் நாடி சோதிடம்

Go down

காகபுஜண்டர் நாடி சோதிடம் Empty காகபுஜண்டர் நாடி சோதிடம்

Post by ஆனந்தபைரவர் Mon Dec 27, 2010 10:42 pm

[You must be registered and logged in to see this image.]
நாடி வரும் ஆன்மாவிற்கு உபதேசிக்கப்படும் வாழ்க்கைப் பலன்கள் நாடி சோதிடம் எனப்படும். ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிரதான சுவாச நிலைகல் இருவகைகளாகப் பிர்க்கப்பட்டுள்ளது. அவைகள் இடகலை (சூரிய கலை) மற்றும் பிங்கலை (சந்திர கலை) எனப்படும். இடகலை என்பது வலது நாசியின் வழியாக செல்லும் சுவாசத்தைக் குறிப்பதாகும். பிங்கலை என்பது இடது நாசியின் வழியாக செல்லும் சுவாசத்தைக் குறிப்பதாகும். மேற்கண்ட இரண்டு சுவாசக்கலைகளோடு மூன்றாவதாக ஒரே நேரத்தில் வலது மற்றும் இடது நாசிகளின் வழியாக சுவாசக்கலை நடத்துதல் சுழிமுனை எனப்படும். முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள் மற்றும் யோகிகள் மூன்றாம் கலையான சுழிமுனைக்கலையை நடத்தி உயிர் வாழ்பவர்களாவார்கள்

சுழிமுனைக்கலையை நடத்துபவர்களுக்கு முக்கால ஞானத்தைப் பெறும் சித்தி ஏற்படும். சுழிமுனை நாடியை அடிப்படையாகக் கொண்டு அதன் உட்பிரிவுகளாகிய ஏழு சுவாசக்கலைகளையும் வெவ்வேறு சதவீத நிலைகளில் நடத்தலாம். சப்த நாடிகலைகளாவது அத்தி, அலம்புடை, காந்தாரி, சங்கினி, சிங்குவை, புருடன் மற்றும் குரு ஆகிய உட்பிரிவுக் கலைகளாகும். முனிவர்கள் தாங்கள் சுவாசிக்கும் பிரதான மற்றும் உட்பிரிவு நாடிகலைகளின் வழியாக அவர்களிடம் நாடி வரும் ஆன்மாக்களின் நல்வினை மற்றும் தீவினைப் பலன்களை ஞானத்தில் உணர்ந்து உலகத்திற்கு உணர்த்துவார்கள். எனவே, சப்த நாடிகளின் ரகசிய பிம்பங்களை ஆதாரமாகக் கொண்டு நவகிரகங்களின் சூட்சும ரகசியங்களோடு ஒப்பிட்டு உலகிற்கு அளிக்கும் சோதிட உபதேசம் நாடி சோதிடமாகும்.
காகபுஜண்டர் நாடி சோதிடம் - உயர்வுகள்

நாடி சோதிடம் பல்வேறு முனிவர்களால் பல்வேறு காலங்களாக இவ்வுலக ஆன்மாக்களுக்கு உபதேசிக்கப்பட்டு வருகின்றது. அண்டசராசரங்களுக்கும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய அருள்குரு ஸ்ரீ காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய அருள்குரு ஸ்ரீ கோரக்கருக்கு உபதேசம் செய்த நாடிநூல் உலகப்பிரசித்தி பெற்றதாகும். தேவேந்திரனால் நடத்தப்படும் தேவசபையை காகபுஜண்டர் நாடி சோதிடம் நிர்ணயம் செய்கிறது. நாடி சோதிடம் மூலம் இவ்வுலத்தில் உள்ள அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களின் பலன் களையும் தெரிந்து கொள்ளலாம். உலத்தில் ஒரு மனிதனை சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் வழிகாட்டும் குருநூல் நாடி சோதிடம் ஆகும். மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளை உரைக்கும் நாடிநூல் அந்த தனிப்பட்ட மனிதனின் உயிர் ரேகைகளான நவரேகைகளிலொன்றை மையமாகக் கொண்டு சுழிமுனை நாடியை மையமாகக் கொண்ட நவநாடிகளில் ஒரு நாடியால் நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகத்தைப் பற்றிய பிற சூட்சும ரகசியங்கள் சுழிமுனை நாடியை மையமாகக் கொண்ட நவ நாடிகளில் ஒரு நாடியாலும் கால நிலையை மையமாகக் கொண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

நாடி சோதிடத்தின் மூலநூல் செய்யுள் வடிவத்தைக் கொண்டதாகும், "தமிழ்" ஓர் உயிருள்ள மொழியாகும். எனவே, தமிழில் உயிர் எழுத்துக்கள் என்றும்; உடல் (மெய்) எழுத்துக்கள் என்றும்; உயிருடல் எழுத்துக்கள் (உயிர்மெய் எழுத்துக்கள்) என்றும்; மேற்கண்ட அனைத்தையும் இயக்கும் ஆயுத எழுத்து ஒன்றுமாக தமிழ்மொழி வடிவமைக்கப்பட்டுள்ளதாலும்; மேற்கண்ட நான்கு பிரிவுகள் மட்டுமல்லாமல் தேவரகசியமாக ஐந்தாவது பிரிவான ஆண் எழுத்துக்கள் மற்றும் பெண் எழுத்துக்கள் என்னும் சூட்சுமப் பிரிவு தமிழ்மொழியில் உள்ளதால் ஆண் எழுத்துக்களையும் பெண் எழுத்துக்களையும் சமமான ஆற்றலோடு பாடல் வகையில் பிணைத்து பலன்களை முறைப்படுத்தி பாடல் வடிவில் பலன்களை இவ்வுலகத்திற்கு சொல்கின்றபடியினால் எவ்வாறு ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சமமாக முழுமையாக புணர்ச்சி செய்தால் அதன் விளைவாக ஒரு முழுமையான உயிர்ப்பொருள் இவ்வுலகத்தில் படைக்கப்படுமோ அவ்வாறே நிலையுடன் நாடி சோதிடப்பலன் கள் "அறம்பாடல்" என்னும் சூட்சுமக்கயிற்றால் பிணைக்கப்பட்டு வெளியிடப்படுவதால் உலகத்தில் வாழும் அனைத்து சோதிட சாஸ்திரத்தினும் உயர்வுள்ளதாய் "தாய்" சாஸ்திரமாக நாடி சோதிட சாஸ்திரம் விளங்குகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய அருள்குரு கோரக்கருக்கு உலகத்தின் பல்வேறு ரகசியங்களைப் பற்றி போதித்து வருகையில் அருள்குரு கோரக்கர் தன்னுடைய குருவாகிய காகபுஜண்டரிடத்திலே இவ்வுலக மானிடர்களின் வாழ்க்கை நிலைகளைப் பற்றிய சூட்சுமங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டபடியினால் அருள்குரு காகபுஜண்டரும் அதற்கு இணங்கி இந்திந்த காலத்தில் இன்னவயது கொண்ட இன்ன பிறப்பு விவரங்களைக் கொண்ட இந்த மானிடர் நாடிநூல் சுருதியை வேண்டிக் கேட்பார், அப்போது அந்த மானிடருக்கு இன்னன்ன பலன்கள் நடக்கும் எனப் பாடல் வடிவில் தன் சீடரிடத்திலே திருவாய் மலர்ந்தருளினார். அருள்குரு காகபுஜண்டரால் திருவாய் மலர்ந்தருளப் பெற்ற தேவரகசியங்களை ஓலைச்சுவடியில் எழுதி அருள்குரு கோரக்கர் தன்னுடைய ரகசியப் பேழையில் வைத்து அவரின் ரகசிய இடமாகிய கொல்லிமலை கோரக்கர் குண்டத்தில் வைத்து பாதுகாத்து வைத்தார். அருள்குரு காகபுஜண்டர் மற்றும் அருள்குரு கோரக்கரின் குருவருளால் மேற்படி குருமார்களின் கலியுக வாரிசான பாஸ்கரமகரிஷி அவர்களுக்கு புதையலாக கோரக்கரால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் கிடைக்கப் பெற்று இவ்வுலகோருக்கு குருவருள் ஆணைப்படி விரித்துரைக்கப்படுகின்றது. எனவே, முனிவர்களால் நேரடியாக வழங்கப்படுகின்ற நாடி சோதிட சாஸ்த்திரம் பிற சாஸ்திரத்தினும் தலையானதாகும்.
காகபுஜண்டர் நாடி சோதிடம் - சாந்தி பரிகாரங்கள்

ஒரு மனிதன் இவ்வுலகில் பிறக்கும் பொழுது அவனது ஆன்மா வினைகளை மட்டுமே சுமந்து கொண்டு செல்கிறது. பல்வேறு விதமான நல்வினைகளையும் தீவினைகளையும் சுமந்துகொண்டு சூட்சும ரகசியங்களுடன் ஆன்மா இவ்வுலகில் பிறப்பு எடுக்கின்றது. ஓர் ஆன்மா முற்பிறவிகளில் பெற்ற நல்வினைகளின் அடிப்படையில் உயர்வான நற்பலன்களையும் அவ்வாறாகவே முற்பிறவிகளில் பெற்ற தீவினைகளின் அடிப்படையில் தாழ்வான தீயபலன்களையும் இவ்வுலகில் அனுபவிக்கின்றது. எனவே, ஓர் ஆன்மாவிற்கு ஏற்படும் நன்மையும் தீமையும் அவ்வான்மாவாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே, ஓர் உயர்ந்த ஆன்மாவின் நோக்கம் தீவினைகளை செய்யாமல் நல்வினைகளை செய்வதேயாகும். மாயத்திரையினால் முற்பிறப்பு ரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளதால் மானிடருக்கு தான் அனுபவிக்கும் நன்மை தீமைகளுக்குண்டான காரணங்கள் தெரிவதில்லை. எந்த ஓர் ஆன்மா, வினையின் உண்மை சூட்சுமத்தை உணர்ந்து தர்மத்தின் வழியே வாழ்க்கையை நடத்துகின்றதோ அந்த ஆன்மா எல்லா உயர்வுகளையும் பெறும் என்பது திண்ணம்.

நாம், நிலத்தில் என்ன விதைக்கின்றோமோ அவைதான் பயிராக செழித்து வளர்ந்து அறுவடையைக் கொடுக்கும். அவ்வாறாகவே நாம் எத்தகைய வினையை விதைக்கின்றோமோ அதற்குண்டான அறுவடையைத் தான் நாம் பெறமுடியும். ஆகவே, உலகத்தின் இயற்கை விதிகளின்படி வினைகளின் அடிப்படையில் இவ்வுலகை இறைவன் ஆட்சி செய்து கொண்டிருக்கிறான்.

"வினைக்கு வினை" என்கிற தத்துவத்தின் அடிப்படையில் நாம் நல்வினைகளை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நம்வாழ்வில் நன்மைகளைப் பெறமுடியும். தீவினைகளை தீர்த்துக் கொள்ள மூன்று உயர்வான மார்க்கங்கள் சொல்லப்பட்டுள்ளது.
காகபுஜண்டர் சாந்தி பரிகாரம் - முதல் வழி

முதல் வழிமுறைப்படி குருநூலின் வழியில் நாம் என்ன துன்பங்களைப் பெற்றிருக்கின்றோமோ அதற்குண்டான நேரெதிர் நல்வினைகளை செய்வதின் மூலம் நம் துன்பங்களை இன்பங்களாக மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக நீண்டநாட்களாக திருமணமாகாமல் ஒருவர் தீவினைகளின் வீரியத்தால் துன்பப்படுகின்றார் எனின், அவர் ஓர் ஏழைக்கு இலவசத் திருமணம் செய்து வைத்து இறைவனை வழிபட்டால் அவ்வினைக்கு எதிர்வினையாக உடனடியாகத் திருமணம் கண்டு இன்பம் பெறலாம்.
காகபுஜண்டர் சாந்தி பரிகாரம்- இரண்டாம் வழி

இரண்டாம் வழிமுறைப்படி பலபேருக்கு தர்ம சிந்தனையை ஊட்டுகின்ற தேவாலய பிரதிட்டை வினையை போக்கிக் கொள்ள முடியும். உதாரணமாக சர்பதோடத்தின் விளைவாக திருமணத்தடை ஏற்பட்டால் அரிச்சந்திரன் திருக்கோயில் ஏற்படுத்தி திருக்குட நன்னீராட்டு விழா செய்தால் வினைகள் தீர்த்து திருமணம் நடக்கும். திருக்கோயில் அமைப்பதின் மூலமாக பல பேர்களின் வினைகளும் தீர்வதற்கு வழி அமைவதால் இரண்டாம் நிலை வழிமுறை மிகவும் உயர்ந்ததாகும்.

அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சாந்தி காண்ட நூலின் வழியாக தேவாலயத் திருப்பணிகள் மூலம் தீவினைகளை நீக்கி நல்வினைகளை பெருக்கிக் கொள்ளும் தேவரகசிய மார்க்கங்கள் பலவற்றை உணர்த்திக் கொண்டிருக்கின்றார். எனவே, குருவின் பொன்னான வார்த்தைகளைக் கேட்டு சாந்தி காண்டப்படி ஒழுகி நடந்தால் உயர்வான மாற்றங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஏற்பட்டு மனதில் தர்ம சிந்தனைகள் ஓங்கி எதிர்காலத்தில் தீவினைகள் செய்யாமலிருக்க ஆன்மா வழிவகுக்கும்.


காகபுஜண்டர் சாந்தி பரிகாரம் - மூன்றாம் வழி

மூன்றாம் வழிமுறைப்படி மனதுருகி இறைவனை ஆத்மார்த்தமாக உரிய மூலமந்திரங்களை செபித்து தினமும் தர்மசிந்தனையுடன் வழிபாடு செய்வதின் மூலமாகவும் வினையை படிப்படியாக்க் குறைக்கலாம். இத்தகைய மூன்றாம் வழிமுறை பக்தி மார்க்கமான படியினால் உண்மையான பக்தியின் மூலமும் தர்ம ஒழுக்கத்தின் மூலமும் இம்முறையில் வினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். பொய்யான பக்தியும், கபட்டுச்சிந்தனையும் இந்த முறையை பின்பற்றுபவர்களுக்கு நல்வினைகளை அளிப்பதற்கு பதிலாக தீவினைகளையே அளிக்கும். எனவே, மேற்கண்ட மூன்று வழிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டால் அவைகள் ஆன்மாக்களுக்கு நிறைந்த நற்பலன்களை நிச்சயம் கொடுக்கும் என்று அருள்குரு காகபுஜண்டர் தன்னுடைய சீடராகிய கோரக்கருக்கு உபதேசிகின்றார்.

பரிகாரம் செய்வதின் பலன்கள் ஒரு சில ஆன்மாக்களுக்கு ஒரு சில நாட்களிலும், மாதங்களிலும், ஆண்டுகளுக்கும் வினையின் வீரியத்தை அடிப்படையாகக் கொண்டும்; செய்யும் பரிகாரத்தை மதித்தொழுகும் வினையை அடிப்படையாகக் கொண்டும்; பரிகாரம் செய்த பின் வாழும் வாழ்க்கையை அடிப்படையாக் கொண்டும் திண்ணமாகக் கிடைக்கும். ஊழ்வினையிலேயே பரிகாரம் செய்வதற்குண்டான உள்ளூழ் இருப்பவர்கள் மட்டுமே பரிகாரம் மூலம் ஊழ்வினையை நீக்க முடியும், மற்றவர்களால் ஊழ்வினையைப் பற்றி அறிந்து கொள்ளவும் முடியாது, அதை நீக்கவும் முடியாது. குருமுகாந்திரமாக முறையாகப் பரிகாரம் செய்தால் நிச்சயம் தீவினைகள் நீங்கி நல்வினைகல் விளையும் என்பது உறுதி.
காகபுஜண்டர் நாடி சோதிடம் - தீட்சை பரிகாரங்கள்

தீட்சை என்றால் ஞான உபதேசம் என்பது பொருள். ஞான உபதேசம் இரண்டு வகைப்படும். முதல்நிலை ஞான உபதேசம்: ஒரு மனிதன் வினைகள் நீங்கி பூரண ஞானம் பெற்று பிறவியில்லா நிலையாகிய முக்தியை அடையும் மார்க்கத்தினை சொல்வதாகும். இம்முறை உபதேசம் ஞானகாண்டம் வாயிலாக குருவருள் உபதேசிகப்படும்.

நவகிரகங்களின் கதிர்வீச்சினால் மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்களை தெய்வீக பலத்தால் குறைத்துக் கொள்வதற்காக பல்வேறு வழிமுறைகல் தீட்சைப் பரிகாரங்கள் மூலம் சொல்லப்படும். எந்த தெய்வத்தை வழிபாடு செய்யவேண்டும்; என்ன மந்திரங்கள் செபித்து வழிபாடு செய்யப்பட வேண்டும்; எத்தகைய முறைகளில் வழிபாடு செய்யப்பட வேண்டும்; எத்தகைய மந்திரங்களின் ஆற்றல்கள் சேமிக்கப்பட்ட ரட்சகளை (யந்திரங்களை) அணிந்து கொள்ள வேண்டும்; மந்த்ரங்களின் ஆற்றல்கள் யார் மூலம் சேமிக்கப்பட்டு கொடுக்கப்பட வேண்டும்; ரட்சைகள்(யந்திரங்கல்) எந்த உலோகத்தால் செய்யப்படவேண்டும்; அவற்றின் அளவு என்ன?எந்த காலத்தில் அணியப்பட வேண்டும்? உடலின் எந்த பாகத்தில் அணியப்பட வேண்டும்? எத்தகைய சூட்சும விதிப்படி யந்திரங்கள் எழுதப்பட்டு மந்திர ஆற்றல் சேமிக்கப்பட வேண்டும்? எப்படி குருபாகம் என்னும் குரு தீட்சையால் ரட்சை மற்றும் எந்திரங்கள் முழுமை படுத்தப்பட வேண்டும் போன்ற முறைகளைக் கையாண்டு இறையருளாலும் குருவருளாலும் வாழ்க்கையின் துன்பத்தைக் குறைத்துக் கொள்ள வழிவகை செய்யும் பரிகாரமே தீட்சைப் பரிகாரம் எனப்படும். தீட்சைப்பரிகாரங்கள் துன்பத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படும் தற்காலிக தெய்வீக மார்க்கமாகும்.
காகபுஜண்டர் நாடி சோதிடம் - ஆகம சாஸ்திரம்

தமிழ் எழுத்துக்களெல்லாம் எப்படி " அகரம் " என்னும் " அ " என்கிற உயிரெழுத்தை அடிப்படையாக் கொண்டு இயங்குகின்றதோ அவ்வாறாகவே இவ்வுலகம் ஆதிமுதற்கடவுளாகிய ஆதிசிவனை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. ஆதிசிவனை பிரதம அமைச்சராகக் கொண்டு பிரம்ம, விஷ்ணு மற்றும் சிவன் என்னும் மும்மூர்த்திகளும் மூன்று பிரதான தொழில்களை செய்யும் பொறுப்பேற்று இவ்வுலகை ஆள்கின்றனர். மும்மூர்த்திகளுக்குக் கீழாய் மிகப்பரந்து விரிந்துள்ள தேவ குடும்பம் இவ்வுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

பரமாத்மாவான இறைவன் எப்படி தன் சொரூபமாக இவ்வுலகில் பல்வேறு விதமான ஜீவாத்மாக்களைப் படைத்து அவற்றுள் பல்வேறு விதமான வேற்றுமைகளையும் படைத்து ஆனாலும் அவற்றினுள்ளும் ஒரு விதமான ஒற்றுமையையும் படைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கின்றானோ அவ்வாறாகவே பரமாத்மாவான இறைவன் பல்வேறு விதமான தேவர்களையும் படைத்து அவர்களுக்குள் பல்வேறு விதமான வேற்றுமைகளையும் படைத்து ஆனாலும் அவர்களுக்குள்ளும் ஒரு விதமான ஒற்றுமையையும் படைத்து இவ்வுலகை ஆள அவர்களுக்கும் பங்களித்து மேன்மையாக இவ்வுலகை ஆண்டு கொண்டிருக்கின்றான்.

பலகோடி யுகங்களையும் பலகோடி கற்பகாலங்களையும் கடந்த இவ்வுலகில் இறைவன் பலகோடி தேவர்களையும் படைத்து அவர்களுக்கும் இவ்வுலக ஆட்சியில் பங்களித்து இவ்வுலகை ஆண்டு கொண்டிருக்கின்றான். பலகோடி ஆண்டுகள் வயதுடைய இவ்வுலகம் பலகோடி விதமான ஆகம சாஸ்திரமுறைகளையும் (தேவாலய நிர்மாண விதிகள்); தேவ பிரத்ட்டை முறைகளையும் (தெய்வச்சிலைகளின் நிர்மாண விதிகள்); வழிபாடு முறைகளையும் அதன் பலன்களையும் பெற்றிருக்கின்றது. எனவே, ஆதிசிவ தேவகுடும்பம் மிகப்பெரிய ஒன்றாகும்.

காலதேசவர்த்தானத்தால் தற்காலம் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் தான் ஆகமசாஸ்த்திரமுறைகளும் (தேவாலய நிர்மாண விதிகள்); தேவபிரதிட்டை முறைகளும் (தெய்வச்சிலைகளின் நிர்மாண விதிகள்); தேவாலய உருவ நிர்ணய முறைகளும்; வழிபாட்டு முறைகளும் அதன் பலன்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆதிபரம் பொருளின் அடிப்படை விதிகளின் படி உலகில் எப்பொருளும் அழிவதில்லையாதலால் தற்காலம் நடைமுறையில் இல்லாத பலகோடி விதமான ஆகம சாஸ்திரமுறைகளும் (தேவாலய நிர்மாண விதிகள்) தற்காலத்திலும் ஞானக்கல்வி ரூபத்தில் வெவ்வேறு விதமான பலகோடி ஆன்மாக்களின் சிந்தனைகளில் அழியாத கல்வியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது. கனவு முகாந்திரமாகவும், நினைவு முகாந்திரமாகவும், குரு நூல் முகாந்திரமாகவும் பலகோடி ஆன்மாக்களுக்கும் பல்வேறு விதமான தெய்வீகக் கல்விகள் இறைவனால் கொடுக்கப்பட்ட போதிலும் அவைகளை ஒன்று சேர்த்து உலகத்தில் பயன்படுத்தி உயர்வு சேர்க்க ஊழ்வினை தடை செய்வதால் பலகோடி தேவரகசியங்கல் இவ்வுலகில் முடங்கி மறைந்து கிடக்கின்றன. மேன்மையான தவதாலும்; தர்ம வாழ்வினாலும்; பரிபூரண குருகடாட்சத்தினாலும் பலகோடி தேவரகசியக் கல்வியை எந்த ஆன்மாவும் ஊழ்வினை வழிவகுத்தால் அறிந்து கொள்ளலாம்.

அண்டசராசரங்களுக்கும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய ஸ்ரீபகுளாதேவி உடனுறை காகபுஜண்ட முனிவர் கற்பகவிருட்ச சிரஞ்சீவிச்சித்தர் ஆதலால் அவர்தம் நாடிநூல் வழியாக ஆயிரத்தெட்டு வகையான சிவாலய, பிரம்மாலய மற்றும் விஷ்ணு ஆலய அமைப்பு முறைகளை இவ்வுலகத்திற்கு உபதேசித்துள்ளார். தேவாலயம் கட்ட விருப்பம் உள்ளவர்கள் குருவை அணுகி நாடிநூல் மூலம் ஆகம விளக்கங்களைப் பெற்று ஆலயம் அமைத்து வழிபட்டால் இவ்வுலகில் பல இன்பங்கள் கற்பக விருட்சமாய் வளரும் என்பது திண்ணம்.
காகபுஜண்டர் நாடி சோதிடம் - காண்ட விவரங்கள்

ஒரு மனிதரின் வாழ்க்கை ரகசியங்கல் பதினெட்டு பகுதிகளைக் கொண்ட பதினெட்டு காண்டங்களைக் கொண்டதாகும். அது மட்டுமல்லாமல் சிறப்புக் காண்டமாக பிரசன்ன காண்டமும் உண்டு. நாம் இப்பொழுது காண்ட விவரங்களைக் காண்போம்.

1. பொதுக் காண்டம் (உதய காண்டம்)

ஒரு மனிதனின் பெருவிரல் ரேகையைக் கொண்டு அல்லது பிறப்பு விவரங்களைக் கொண்டு கீர்த்தி, புகழ், கௌரவம், வசதிகள் பல்வேறு விதமான யோகங்கள் மற்றும் தெய்வீக வழிபாடுகள் போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றிய பொதுப் பலன்களை சுருக்கமாகஸ் சொல்லும் குருநூல் பொதுக் காண்டமாகும். பிற காண்ட பலன்களை அறிந்து கொள்ள இந்த காண்டத்தை கட்டாயம் பார்த்து பலன்களை அறிந்து கொள்ள வேண்டும்.

2. கல்வி மற்றும் குடும்ப காண்டம்

கல்வி நிலை, குடும்பநிலை, வருமான வாய்ப்புகள், வாக்கு, செல்வம், தானம், கண், பல் மற்றும் ஆபரணச்சேர்க்கை முதலிய அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

3. சகோதர காண்டம்

வெற்றிகள், அக்கம்பக்கத்தவர்கள், சகோதரர் மற்றும் சகோதரிகள் அவர்களால் சாதகர் அடையும் நன்மை தீமைகள் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

4. தாய்வழி சுகக்காண்டம்

தாயார், மனை, நிலம், சொத்து, சுகம். வாகனயோகம், எந்திர யோகம், புதையல், மகிழ்ச்சி, ஆபரண சேர்க்கை மற்றும் தெய்வீக சுகங்கள் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

5. புத்திர காண்டம்.

குழந்தைகள், பூர்வ புண்ணியம், ராஜயோகம், தாய் மாமன் மற்ரும் தர்மகர்ம சிந்தனைகள் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

6. சத்துரு காண்டம்

விரோதி, வியாதி, கடன், வழக்கு, பிரச்சினைகள், மனக்கலக்கம், சிறைதண்டனை, களவு, குற்றம், பொறாமை மற்றும் விபத்து போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

7. திருமண காண்டம்

திருமணவாழ்வு, எதிர்கால வாழ்க்கைத் துணைவரின் வரலாறு, வாழ்க்கைக் துணைவரின் பலன்கள் மற்றும் நட்பு போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

8. ஆயுள் காண்டம்.

ஆயுள் காலம், கண்டம், விபத்து, மற்றும் மரணத்தின் தன்மைகள் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

9. பிதாபாக்கியம் காண்டம்

தந்தை, செல்வம், பணச்சேர்க்கை, பரிசு, தெய்வ தரிசனம், ஆலயம் கட்டுதல், குரு உபதேசம், முக்தி மார்க்கம், தெய்வீக மந்திரம், தெய்வீகப் பொருள், தர்மம், அறப்பணி, யாகம், ஓமம், தந்தைவழி மூதாதையர் சொத்துக்கள் மற்றும் திடீர் பொருள் வரவு போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

10. தொழிற்காண்டம்.

தொழில், தொழில் வாய்ப்பு, வியாபாரம், தொழிலுயர்வு, நீண்ட பொருள் வரவு, கர்மம், சமூக சேவைகள் மற்றும் பொது வாழ்வு போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

11. லாப காண்டம்

லாபம், இளைய களத்திரம் (இரண்டாம் திருமணம்), தகாத உடலுறவு இன்பங்கள் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

12. விரைய காண்டம்.

விரையம், அடுத்த பிறவி, மோட்சம், வெளிநாட்டு பிரயாணம், படுக்கை சுகம், ஆண்மைக்குறைவு மற்றும் உடலுறவு இன்பம் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

13. சாந்தி காண்டம்.

முற்பிறவியில் பிறந்த இடம், செய்த நன்மை தீமை, முற்பிறப்பில் செய்த பாவங்களால் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பம் மற்றும் துன்பத்தை நீக்குவதற்குண்டான தெய்வீக பரிகாரங்கல் போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

14. தீட்சை காண்டம்

தெய்வீக ஆற்றலைப் பெறுவதற்குண்டான மந்திரமுறைகளையும்; எதிரிகளின் தொல்லைகளிலிருந்து மீண்டு வாழ்வில் ஏற்றம் பெறுவதற்காக உடலில் அணிந்து கொள்ள வேண்டிய தெய்வீக எந்திரங்கள் மற்றும் இல்லத்தில் வைத்து பூசை செய்யவேண்டிய சித்தர் குளிகைகள் (ரசமணிகள்) போன்ற அம்சங்களின் பலன்களை சொல்லும் குருநூல்.

15. ஔடதக் காண்டம்.

நோய்கள், நோய்களைத் தீர்க்கும் மூலிகை மருந்துகள், மருந்துகளை உட்கொள்ளும் விதங்கள் மற்றும் சித்த மருந்துகளை தயாரிக்கும் முறைகள் போன்றவைகளின் பலன்களை சொல்லும் குருநூல்.

16. திசாபுக்தி காண்டம்.

நவகிரக திசைகள் மற்றும் புக்திகளின் காலங்களில் ஏற்படும் நன்மை தீமைகளின் பொதுப் பலன்களை சொல்லும் குருநூல்.

17. பொதுவாழ்வு (அரசியல்) காண்டம்.

சமூக சேவை மற்றும் அரசியல் வாழ்க்கைப் பற்றிய பலன்களை சொல்லும் குருநூல்.

18. ஞானகாண்டம்.

யோக ஞான மார்கங்கள், முக்தி மார்கங்கள், தெய்வீக உபதேசங்கள், தெய்வீக தரிசங்கள் மற்றும் தெய்வீக உதவிகள் பற்றிய பலன்களை சொல்லும் குருநூல்.

சிறப்புக் காண்டம் 19. பிரசன்ன பிரச்சனை காண்டம்

இக்காண்டத்தின் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் பல்விதமான பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும், கேள்விகள் மூலம் விடைகள் பெறலாம். ஒரு பிரசன்ன பிரச்சனை காண்டத்தில் அதிகபட்சம் மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கிடைக்கும்.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 37
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum