இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சூரிய வழிபாடு

Go down

சூரிய வழிபாடு Empty சூரிய வழிபாடு

Post by ஆனந்தபைரவர் Tue Jan 25, 2011 2:58 pm

சூரிய வழிபாடு Akshaya-patra

ஆவணி மாதம் என்றதும் எல்லோர் மனதிலும் வருவது ஆவணி ஞாயிறு விரதம் ஆகும். சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. சிந்துவெளி நாகரிகம் திளைத்து இருந்த காலம் முதல் இவ் வழிபாடு உள்ளது. ஏன்? நாம் நமது இரு கண்களாலும் பிரத்தியட்சமாகக் காண்பது சூரியனையேயாகும். சிவாலயங்களில் சூரிய பகவான் தனித்தும், நவக்கிரகங்களுக்கு நாயகனாகவும் வீற்றிருக்கின்றார். ஏனைய ஆலயங்களில் நவநாயகர்களுக்கு நடுநாயகனாக வீற்றிருப்பதை நாம் காண முடியும்.

சூரியன் எமக்கு வெளிச்சம், வெப்பம், சூடு, உஷ்ணம் ஆகியனவற்றைத் தருகின்றார். அதேபோன்று சூரிய வெப்பத்தால் கடல், ஆறு, குளம் முதலானவற்றின் நீர் ஆவியாக மேலெழுந்து பின்னர் மழையாகப் பொழிகின்றது. இதனால் விவசாயம் மேம்படுகின்றது. நீர் விசையால் மின்சாரம் கிடைக்கின்றது. எனவே நமது வாழ்வுக்கு நன்மைகள் கிடைக்கின்றன.

நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் காண்கின்றது. எனவே தான் பன்னெடுங்காலமாக நமது முன்னோர் சூரியனை வழிபட்டு வந்தார்கள்.

சூரியன் யார்? அவர் சிவசூரியன். சிவபெருமானின் அஷ்ட மூர்த்தங்களில் ஒருவர். சிவபெருமானின் முக்கண்களில் ஞானக் கண்ணாக உள்ளவர்.

இதனால் சூரியனைச் சிவரூபமாக கொண்டு வழிபட்டு வருகின்றோம். சிவாலயங்களில் சிவசூரியனுக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

இச் சூரியனுக்குப் பூஜைகள் செய்த பின்னரே ஏனைய பூஜைகள் செய்யப்படுகின்றன. அதேபோல எல்லா ஆலயங்களிலும் நவக்கிரக சந்நிதானத்தில் நடுநாயகனாக உள்ளவர் சூரியனே ஆவார்.

ஆவணி மாதத்தில் சூரியன் சிங்க ராசியிற் பிரவேசிக்கின்றார். இதனால் ஆவணி ஞாயிறு சூரியனுக்கான விரத நாளாகின்றது. இதனாலலேயே புலவர்கள் “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” எனப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

ஒருவரின் ஜாதகப்படி அவருக்கு ஆயுள், வீரியம், இருதய பலம், துணிவு, தலைமைத்துவத் தன்மை என்பனவற்றைக் கொடுப்பவர் சூரியனேயாவார். ஒருவரின் தந்தையினுடைய நிலைப் பாங்கை அவரின் ஜாதகத்திலிருந்தே அறிந்து கொள்ள முடியும். ஆகவே ஜாதகத்தில் சூரியனின் நிலை முக்கியமானதாகும்.

சிவசூரியனுக்கு ஒரு முகம். இரு கைகளில் வெண்டாமரையை வைத்திருக்கின்றார். ஏனைய இரு கரங்களும் அபய, வரத ஹஸ்தங்களாக உள்ளன. சூரியன் ஏழு குதிரைகளைப் பூட்டிய குதிரை வண்டியில் சஞ்சாரஞ் செய்வார் என்பது வேதவாக்கு. அவர் மாதுளம் பழ நிறத்தவர்.

இவ்வாறு விக்கிரக வடிவில் சூரியனை வழிபடும் நாம் தினமும் எமது இரு கண்களாலும் பார்க்கும் சூரியனை விரத அநுட்டானங்களுடன் வழிபடுவது வழக்கம்.

வேதியர்கள் அதாவது பிராமணர்கள் காலை, மத்தியானம், மாலை வேளைகளில் சந்தியாகாலமான இக் காலங்களில் சந்தியா வந்தனஞ் செய்வர். இங்கே சூரிய தர்ப்பணம் சிறப்பம்சங் கொண்டது. அத்தோடு 108, 1008 என்ற வகையில் காயத்திரி மஹா மந்திரங்களை அவர்கள் ஜபஞ் செய்வது மூவேளைச் சந்தியாகாலங்களிலேயாம். அதேபோன்று தினமும் ஹோமஞ் செய்து அக்கினியில் சூரியனைக் கண்டு வழிபாடுகள் தினமும் இவர்களாற் செய்யப்படுகின்றது. எனவே சூரிய வழிபாடு முதன்மையானது. எல்லோருக்குமே நன்மை பயக்கக் கூடியது. சிவ தீட்சை பெற்றோரும் சந்தியாகாலங்களில் இவ்வாறு வழிபடுவது வழக்கம்.

சூரிய தோஷம் உடையோர் யாது செய்ய வேண்டும்? ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி “சூரிய பகவானே எனது சூரிய தோஷத்தைப் போக்கியருளும்” என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 16,36, 108 தடவைகள் இதனைச் செய்யலாம்.

கோவிலில் சூரியனுக்கு அபிஷேகஞ் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானங் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு, சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத் தரும்.

இப்பொழுது ஆவணி மாதம் ஆகும். ஆனமையின் எமது விரத அநுட்டானங்களை ஆவணி மாதத்தில் ஆரம்பிப்போம்.

ஆவணி மாதத்தில் எல்லோருமே விரதம் இருந்து சூரிய பகவானை வழிபடுவது வழக்கம்.

வீட்டிலே சர்க்கரைப் பொங்கல் சமைத்து அதனைச் சூரியனுக்கு அர்ப்பணித்து வணங்கும் முறையும் உள்ளது.

சூரிய வழிபாட்டால் தேக ஆரோக்கியம், உத்தியோகம், உத்தியோக உயர்வு, நன் மதிப்பு முதலானவற்றை நாம் பெற்று மங்கள வாழ்வு வாழ முடியும்.

“மங்கள சூரியனே நமக்கருள்வாய்”

நன்றி தினகரன்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum