இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


காலத்தை நில் என்று சொன்ன மாயம்: நோய் தீர்க்கும் தாய்

Go down

காலத்தை நில் என்று சொன்ன மாயம்: நோய் தீர்க்கும் தாய் Empty காலத்தை நில் என்று சொன்ன மாயம்: நோய் தீர்க்கும் தாய்

Post by ஆனந்தபைரவர் Wed Jan 26, 2011 11:02 pm

காலத்தை நில் என்று சொன்ன மாயம்: நோய் தீர்க்கும் தாய் Pic
அக்கிரமங்களையும் அநீதியையும் அழித்து, தீமைகளைக் களைந்து, மக்களின் தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் அன்னை மாரியம்மன் சமயபுரத்தில் அற்புத அம்மனாகக் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

அம்பாள் வழிபாட்டில் முதன்மை பெற்று விளங்கும் இந்தத் திருக்கோயில் காவிரியின் வடகரையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் கிருஷ்ணர் அவதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த அவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரிக்கின்றனர். அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தால் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். ஆனால் இவ்விரு குழந்தைகளும் இடமாற்றம் செய்யப் பட்டிருப்பதை அறிய இயலாத கம்சன் வழக்கம் போல் அந்தக் குழந்தையைக் கொல்லத் துணிகிறான்.

நேராக தேவகியின் அறைக்குச் சென்று குழந்தையைத் தூக்க முற்படுகின்றான். ஆனால், அருகில் நெருங்க முடியாதபடி அந்தக் குழந்தை தன் உண்மையான அவதாரத்தைக் காட்டி நின்றது. அன்னையின் அற்புதத் தோற்றத்தைக் கண்ட கம்சன் பின் அதிர்ச்சி அடைந்து, ஒன்றும் செய்ய இயலாதவ னாகிறான்.

மகா சக்தியாகத் தோன்றிய அம்பாள், தனது எட்டுக் கரங்களிலும் எண்ணணற்ற ஆயுதங்களைத் தாங்கி இவ்வுலகைக் காக்க அவதரித்தாள். இந்த தேவியே மகாமாரி என்னும் மாரியம்மனாக, கண்கண்ட தெய்வமாக மக்களால் பூஜிக்கப்படுகிறாள்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதரின் திருத்தலத்தில் இருந்த அம்மனின் திருமேனி உக்கிரம் மிகுந்து இருந்தமையால், அங்கு அப்போது இருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்தார்.

அதன்படி பணிவிடை புரிவோர் அந்தத் திருவுருவத்தை எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கிச் சென்று ஓர் இடத்தில் இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினர். அவர்கள் இளைப்பாறிய அந்த இடம் இப்போது இனாம் சமயபுரம் என்ற பெயரில் உள்ளது.

அதன் நினைவாகவே இப்போதும் இந்தத் திருக்கோயில் திருவிழாவில் எட்டாம் நாள் அம்மன் அங்கே சென்று ஓர் இரவு ஓய்வு எடுக்கும் வைபவம் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அங்கே இளைப்பாறிய அப்பணியாளர்கள் அங்கிருந்து தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் அன்னையின் திருவுருவத்தை வைத்துவிட்டுச் சென்று விட்டனர். அவ்வாறு அவர்கள் வைத்த இடத்திலேயே இன்று அன்னை மாரியின் திருக்கோயில் அருளாலயமாக எழுந்தது. மேலும், அன்னை மாரி இங்கே கண்ணனூர் மாரியம்மன் என்னும் திருப்பெயர் கொண்டு எழுந்தருளி அருள் வழங்குகிறாள்.

திருத்தலத்தின் சிறப்பு: திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மனின் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கிணங்க மாயாசூரனையும், அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கவள் இந்தத் தல இறைவியான தாய் மாரியம்மன்.

தங்க விமானத்தின் எழில் மிகு தோற்றம்

இன்றும் கருவறையில் உள்ள அம்பாளின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். இன்றும் இத்திருக்கோயில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.

உத்ஸவ அம்பாளுக்கு தினமும் 6 கால பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. காலை 7.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் வடக்குப் பிராகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறுகின்றனர்.

தல விருட்சம்: இத்திருக்கோயிலின் தல விருட்சமாக விளங்கி வருவது வேம்பு. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இம்மரம், தற்போது திருக்காப்பு விண்ணப்பச் சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மை இடமாகத் திகழ்கிறது.

அம்பாளுக்கு பூஜைகள் நடைபெறும்போது தல விருட்சத்துக்கும் பூஜைகள் நிகழ்த்துவது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

மூர்த்தி: அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கருவறையில் அம்பாள் வீற்றிருப்பது வழக்கமானதாக இருப்பினும், மற்ற கோயில்களை விட இங்கு மாறுபட்ட வடிவம் கொண்டு அன்னை அருளாட்சி வழங்குகிறாள். மூலவரின் திருவுருவம் மரத்தால் ஆனதுஎன்றாலும், அதன்மேல் சுதை வேலைப்பாடுகள்

மேற்கொள்ளப்பட்டிருப்பது புதுமையானது.

தங்க ஜடாமகுடம் மற்றும் குங்கும நிற மேனியுடன் நெற்றியில் அழகிய வைரப்பட்டைகள் மின்ன, கண்களில் அருளொளி வீச, வைரக் கம்மல்களுடனும், மூக்குத்தியுடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் சமயபுரம் மாரியம்மன்.

ஆதிசக்தியான அம்மன் தனது எட்டுக் கரங்களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம் மற்றும் வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு, உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளார்.

இடதுகாலை மடக்கி வைத்து வலது காலைத் தொங்கவிட்ட நிலையில், சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள் வழங்கிக் கொண்டுள்ளார் மாரியம்மன்.

திருவிழாக்கள்: இந்தத் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா, மாசி மாதத்தில் பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள்.

தை மாதத்தில் 11 நாள்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது.

பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சித்திரைத் தேர்த் திருவிழாவுக்கான கொடியேற்றமும், சித்திரை முதல் செவ்வாய்க்கிழமை சித்திரைப் பெருந் திருவிழாவும் நடைபெறுகிறது.

பூஜைக் காலங்கள்: காலை 6 மணிக்கு உஷத் கால பூஜையும், காலை 8 மணிக்கு கால சந்தி, பிற்பகல் 12 மணிக்கு உச்சிக் காலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். திருவிழாக் காலங்களில் மாறுதலுக்குள்பட்டு இருக்கும்.

மேலும், விவரங்கள் தேவைப்படுவோருக்கு... திருக்கோயில் அலுவலகத் தொலைபேசி எண்கள் -0431-2460670, 2670557, உள்துறை அலுவலகம் - 0431-2670907.
நன்றி தினமணி
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum