இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நாகநர்த்தனம்!

2 posters

Go down

நாகநர்த்தனம்! Empty நாகநர்த்தனம்!

Post by ஆனந்தபைரவர் Wed Jan 26, 2011 11:44 pm

நாகநர்த்தனம்! Shiva_dance_with_ganeshaகயிலயங்கிரியில் சிவபெருமானின் ஆனந்த நர்த்தனம் நடந்து கொண்டிருக்கிறது. மயிலின்மேல் அமர்ந்தபடி குமரனும், துறுதுறுவென்று தனது தும்பிக்கையை ஆட்டியபடி கணேசனும் இருபுறமும் இருக்க, நடன சபேசனின் தாண்டவத்தைத் தாளமிட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார் உமையாள்.

நந்தி மத்தளம் கொட்ட, நாரதர் வீணை மீட்ட, பூத கணங்கள் ஈசனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாவிட்டாலும், உடனாடக் கயிலயங்கிரியே ஆனந்தக் களிப்புடன் இருக்கும் நேரம். கயிலையில் ஈசன் ஆனந்த நடனம் ஆடும் சேதி கேட்ட திருமால், தனது கருட வாகனத்தில் ஏறி கைலாயம் வந்தடைகிறார். அவருக்கும் அண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைக்கும் பரமனின் ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்கிற ஆர்வம்.

கயிலாயத்தில் கருடனிலிருந்து இறங்கி நடன சபைக்குள் நுழைகிறார் திருமால். தனித்து விடப்பட்ட கருடனைப் பார்த்து, பரமசிவனின் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டதாம் - "கருடா செüக்கியமா!'

கருடனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. "ஈசனின் கழுத்தில் இருக்கும் ஆணவம் இந்த நாகத்தை இப்படிப் பேச வைக்கிறது. எனது நிழல் பட்டாலே நடுங்கும் நாகத்துக்கு இவ்வளவு அகங்காரம் இருக்கலாகாது'' என்று மனதுக்குள் நினைத்தபடி, தனது பார்வையாலேயே நாகத்துக்கு பதில் சொல்லியதாம் கருடன்- ""யாரும் இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செüக்கியமே!''

மகாவிஷ்ணு, வந்தமர்ந்து பரமனின் ஆனந்த நர்த்தனத்தை ரசிக்கத் தொடங்கினார். கணேசப் பெருமானுக்கும் மாமனைப் பார்த்ததும் ஒரே குஷி. மகிழ்ச்சியுடன் தனது துதிக்கையை வேக வேகமாக ஆட்டித் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் திடீரென ஒரு அசம்பாவிதம் நடந்தது. நாகநர்த்தனம்! Kaalinga-nardhana-krishnar-1bதன்னை மறந்து பரமேஸ்வரன் அதிவேகமாக நடனமாடத் தொடங்கியபோது, அவரது கழுத்தில் இருந்த சர்ப்பம் எதிர்பாராத விதத்தில் வழுக்கிக் கீழே விழுந்து விட்டது. எங்கேயாவது ஓடி ஒளியலாம் என்று பார்த்தால், ஒருபுறம் உமையவளின் வலப்புறமாகக் குமரன் அருகில் நின்று கொண்டிருக்கும் மயில். சர்ப்பம் கீழே விழுந்ததுதான் தாமதம், சட்டெனத் தனது கழுத்தைத் திருப்பி, ஜென்ம விரோதியான பாம்பைத் தனது அலகுக்கு இரையாக்க மயில் தயாராகிவிட்டது.

பயந்துபோன பாம்பு உமையவளின் இடப்பக்கமாக ஓடி ஒளியலாம் என்று பார்த்தது... அங்கே தன்னை, ஏளனம் செய்த நாகத்தைத் தனது நகத்தால் கீறத் தயாராக கருடன் சிறகடிக்கத் தொடங்கிவிட்டது. பார்த்தது பாம்பு... தனது கதை முடிந்துவிட்டது என்று நினைத்த நேரத்தில், அதற்கு ஓர் உபாயம் தோன்றியது. ஆனந்த நடனத்தைத் தலையாட்டி ரசித்துக் கொண்டிருந்த பிள்ளையாரின் துதிக்கையில் நுழைந்து விட்டது அந்த சர்ப்பம்...

துதிக்கையில் பாம்பு நுழைந்ததும் பிள்ளையார் என்ன செய்வது என்று தெரியாமல் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டார். பாம்பு நுழைந்த விஷயம் கருடனையும், மயிலையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால், எல்லோரும், அப்பாவைத் தொடர்ந்து இப்போது பிள்ளையும் நடனமாடத் தொடங்கிவிட்டார் என்றுதான் நினைத்தார்கள். பிள்ளையாரின் நடனத்தைப் பார்த்துக் கைலாயமே ரசித்துக் களித்தது. பரமனின் நடனம்கூட சோபிக்கவில்லை.

"இது என்ன நடனம்?' என்று கேட்ட மாமன் மகாவிஷ்ணுவிடம் கணேசப் பெருமாள் விரக்தியாகச் சொன்ன பதில்- ""இது கூடவா தெரியவில்லை உங்களுக்கு? இதற்குப் பெயர்தான் நாக நர்த்தனம்''.

தனது தர்ம சங்கடம் பிறர்க்குத் தெரிய வேண்டாம் என்று நினைத்துக் குலுங்கிக் குலுங்கி ஆடியபடியே விநாயகர் நாட்டியம் நடக்கும் இடத்தில் இருந்து அகன்றார். நாகமும் இதுதான் சாக்கு என்று தும்பிக்கையிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறி, ஒரு பாறையின் இடுக்கில் ஒளிந்து கொண்டுவிட்டது.

வழக்கமான குசலங்களுக்குப் பிறகு, தனது வாகனமான கருடனில் ஏறி வைகுண்டத்துக்குத் திரும்பினார் மகாவிஷ்ணு. அவருடைய சிந்தனை எல்லாம் இப்போது நடனத்தைப் பற்றியதாகவே இருந்தது. அதிலும் குறிப்பாகத் தனது மருமகன் விநாயகர் ஆடிய அந்த நாக நர்த்தனம் அவரது சிந்தையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தனக்கும் அதுபோல நாக நர்த்தனம் ஆட வேண்டும் என்று ஒரு வாய்ப்புக்காக அதுமுதல் காத்திருக்கத் தொடங்கினாராம் திருமால். நாகநர்த்தனம்! Kaaleeyanஅப்படி ஒரு வாய்ப்பு, மகாவிஷ்ணுவுக்கு கிருஷ்ணாவதாரத்தில் கிடைத்தது. காளிங்கன் என்கிற நாகத்தை அடக்க யமுனையில் குதிக்கும் ஸ்ரீகிருஷ்ணன் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி அதன் தலையில் ஏறி நடனமாடியபோது, மகாவிஷ்ணுவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. அவரும் மருமகன் விநாயகர்போல நாக நர்த்தனம் ஆடி மகிழ்ந்தார்.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள திருத்தலம் ஊத்துக்காடு. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்குக் காட்சிதரும் வேதநாராயணப் பெருமானின் ஆலயம் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலில் குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு இப்போது ஆலயத்தில் இருக்கும் இரண்டரை அடி உயரமுள்ள காளிங்க நர்த்தனப் பெருமானின் பஞ்சலோக விக்ரகம், இந்தத் திருத்தலத்தின் பெருமையை மேலும் அதிகரித்திருக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணன் காளிங்கம் என்கிற பாம்பின் வாலைத் தனது இடது கையால் பிடித்தபடி, வலது கையில் அபய முத்திரை காட்டுகிறார். வேடிக்கை என்னவென்றால் ஸ்ரீகிருஷ்ணரின் பாதம் சர்ப்பத்தின் தலையில் தொடுவதில்லை என்பதுதான். காளிங்கன் என்கிற சர்ப்பத்தின் தலைப்பகுதிக்கும் ஸ்ரீகிருஷ்ணனின் பாதத்துக்கும் இடையில் ஒரு காகிதத்தைப் போட்டு எடுக்கலாம். ஸ்ரீகிருஷ்ணனின் விக்கிரகத்தின் முழு பாரமுமே அந்தப் பஞ்சலோக சிலையின் இடது கையில் இருப்பதுபோல சிலை செய்யப்பட்டிருப்பதுதான் இதன் சிறப்பு.

ராகு தோஷம், சர்ப்ப தோஷம் போன்றவற்றுக்குப் பரிகார ஸ்தலமாகக் கருதப்படும் ஊத்துக்காடு, பிரபல கர்னாடக சங்கீத சாகித்ய கர்த்தாவான வெங்கடகவி பிறந்த ஊரும் ஆகும். சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோருக்கு முற்பட்டவரான ஊத்துக்காடு வெங்கடகவி இயற்றிய, "தாயே யசோதா', "அலைபாயுதே...', "ஆடாமல் அசங்காமல் வா கண்ணா' போன்ற தமிழ்ப் பாடல்கள் அமரத்துவம் பெற்றவை.

அட்டைப் படத்துக்காக யோசித்தபோது சட்டென விநாயகரின் நாக நர்த்தனம் கதை நினைவுக்கு வந்தது. கூடவே, ஊத்துக்காடு காளிங்க நர்த்தனக் கிருஷ்ணனும்! தமிழக ஸ்தபதிகளின் தொழில்நுட்பச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தப் பஞ்சலோக விக்ரகத்தை ஊத்துக்காடு சென்றால் மறக்காமல் பார்த்துவிட்டு வரவும்.

நன்றி தினமணி
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

நாகநர்த்தனம்! Empty Re: நாகநர்த்தனம்!

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 1:41 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum