இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஆரியர் - திராவிடர் பிரிவு கட்டுக்கதையே: விஞ்ஞானிகள் தகவல்

2 posters

Go down

ஆரியர் - திராவிடர் பிரிவு கட்டுக்கதையே: விஞ்ஞானிகள் தகவல் Empty ஆரியர் - திராவிடர் பிரிவு கட்டுக்கதையே: விஞ்ஞானிகள் தகவல்

Post by ஆனந்தபைரவர் Tue Aug 03, 2010 3:26 pm

"நமது அரசியல்வாதிகளின் பிரபல முழக்கமான ஆரியர் - திராவிடர் கொள்கை வெறும் கட்டுக் கதையே' என்று, விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.இந்தியர்களின் மரபுவழி உண்மை குறித்து, செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானிகள் குமாரசாமி தங்கராஜன், லால்ஜி சிங் இருவரும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், இந்தியாவின் 13 மாநிலங்களைச் சேர்ந்த 132 பேர்களின் மரபணு சோதனை செய்யப் பட்டது.

ஆறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், 25 வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் உயர்வகுப்பினரும், தாழ்த் தப்பட்டவரும், பழங்குடியினரும் அடங்குவர். இவர்களின் மரபணுக்களில், ஐந்து லட்சம் மரபணு மாற் றங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவுக்குள் ஆரியர் நுழைந்து இங்குள்ள மக்களுடன் கலந்தனர் என்பதை, இந்த மரபணு மாற்றங்கள் காட்டவில்லை. மாறாக, இந்தியச் சமூகத்துக் குள்ளேயே, கலப்பு ஏற்பட் டுள்ளது என்பதைத்தான் அறுதியிட்டுக் கூறுகின்றன.

மேலும், இன்றைய ஜாதிமுறைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த பல்வேறு இனக் குழுக்களிலிருந்து வந்தவைதான் என்றும், இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது குறித்து, விஞ்ஞானி லால்ஜிசிங் கூறுகையில்," இந்த ஆராய்ச்சி வரலாற்றை மாற்றி எழுதப் போகிறது. நமக்குள் வடக்கு - தெற்கு என்ற பிரிவினை இருந்ததில்லை என்பதை இது நிரூபித்துள்ளது,' என்றார்.விஞ்ஞானி குமாரசாமி தங்கராஜன் கூறியதாவது:

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இங்குள்ள திராவிடர் எனப்பட்ட மக்களுடன் கலந்தனர் என்பதில் எவ்வித உண்மையும் கிடையாது. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்தமான் மற்றும் தென் மாநிலங்களில் தான், மனித இனம் குடியேறி வாழ ஆரம்பித்தது. 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் வடபகுதி மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக ஆரம்பித்தனர். ஒரு நிலையில், தென் மாநிலங்களில் இருந்தவர்களும், வடமாநிலங்களில் இருந்தவர்களும் ஒன்றாக கலக்க ஆரம்பித்தனர்.

இதன் விளைவாக புதிய இனங்கள் உருவாகி, மக்கள் தொகை பெருகியது. இதனால் தான் இன்றைய மக்களிடையே மரபணு ரீதியில் எவ்வித வித்தியாசமும் காணப்படுவதில்லை. இந்தியச் சமூக உருவாக்கத்தின் போது, நிலவி வந்த பல்வேறு இனக் குழுக்களிடமிருந்துதான் ஜாதிகள் தோன்றின. ஜாதிகளுக் கும் பழங்குடியினருக்கும் இடை யே முறையான வேறுபாடுகள் இல்லாததால், அவர்களை வேறுபடுத்திக் காட்டுவது என்பது மிகவும் கடினமே. இவ்வாறு தங்கராஜன் தெரிவித்தார். ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்டு பொது சுகாதாரப் பள்ளி, பிராட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹார்வர்டு மற்றும் எம்.ஐ.டி., ஆய்வு மையங்களுடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஆரியர் - திராவிடர் பிரிவு கட்டுக்கதையே: விஞ்ஞானிகள் தகவல் Empty Re: ஆரியர் - திராவிடர் பிரிவு கட்டுக்கதையே: விஞ்ஞானிகள் தகவல்

Post by கணேஷ் Tue Mar 13, 2012 11:40 pm

என்னதான் சொல்லுங்க தூங்கரவங்களை எழுப்பலாம் தூங்கரமாதிரி நடிக்கரவங்களை என்னசெய்வது..

கணேஷ்

Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum